பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, November 14, 2020

இஸ்லாத்தை அறிந்த - 104

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய  மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 104 👈👈👈* 
 

*📚📚📚 தலைப்பு  10  குர்ஆன் வசனம் இறங்கிய காரணம் 📚📚📚* 

 *6. 🕋🕋🕋சபித்து🕋🕋 குனூத்📚📚 ஓதிய📚📚 போது 🕋🕋வசனம் 📚📚இறங்கியதா❓🕋🕋🕋* 


 *7. ⚫⚫⚫மற்றவை⚫⚫ அனைத்தும்🟣🟣 வந்த🟠🟠 போது🟡🟡 பிறகு 📚📚ஹதீஸ்⚫⚫⚫* 


 *8. 🛑🛑🛑இரு🟣🟣 சாரார்⚫⚫ சண்டையிட்டால்♥️♥️ சமாதானம்🧶🧶 சமாதானம் 🟡🟡செய்து🟠🟠 வையுங்கள்⚫⚫ என்ற👹👹 போது🛑🛑🛑* 


 *9. 🕋🕋🕋கிப்லா🕋🕋 மாற்றப்படுதலின்📚📚 போது🕋🕋🕋* 


 *10. 🧕🧕🧕ஹிஜாப்📚📚 பற்றிய சட்டம்📚📚 வசனம்📚📚 இறங்குதல்🧕🧕🧕* 


*6. 🕋சபித்து🕋 குனூத்📚 ஓதிய📚 போது 🕋வசனம் 📚இறங்கியதா❓🕋* 


 *👉கீழ்காணும் ஹதீஸ் ஏற்புடையது அல்ல👇* 

 *✍️✍️✍️நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத்தின் போது தமது தலையை உயர்த்தி, “அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து” என்று சொல்லி விட்டுப் பிறகு, “இறைவா! இன்னாரையும் இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். உடனே மகத்துவமும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், “(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்” என்ற (திருக்குர்ஆன் 3:128) வசனத்தை அருளினான்.✍️✍️✍️* 

 *அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)* 

 *நூல்: புகாரி 7346* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதை அல்லாஹ் 3:128 வசனத்தை அருளி, தடை செய்து விட்டதாகக் கூறப்படுகின்றது.  எனவே இதன் அடிப்படையில் எவருக்கும் எதிராகப் பிரார்த்தனை செய்து குனூத் ஓதுவது கூடாது என்று சிலர் வாதிக்கின்றனர்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️*  


 *✍️✍️✍️நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதுவது பற்றித் தான் மேற்கண்ட வசனம் அருளப்பட்டது என்று ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் முஸ்லிம் மற்றும் பல நூல்களில் கூறப்படும் காரணமான, “உஹதுப் போரின் போது அருளப்பட்டது’ என்பது தான் ஏற்புடையதாக உள்ளது.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மேலும் குனூத் பற்றியே இவ்வசனம் அருளப்பட்டது என்ற ஹதீஸ் இப்னு ஷிஹாப் எனும் ஸுஹ்ரி வழியாகவே அறிவிக்கப் படுகின்றது. அவர் நபித்தோழரிடம் கேட்டு அறிவிப்பது போல் புகாரியின் வாசக அமைப்பு இருந்தாலும், முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இதே ஹதீஸின் வாசக அமைப்பு ஸுஹ்ரி அவர்கள் நபித்தோழர்கள் வழியாக இல்லாமல் சுயமாக அறிவிக்கின்றார் என்று தெளிவுபடுத்துகின்றது. “நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட கொலையாளிகளைச் சபித்து குனூத் ஓதினார்கள். மேற்கண்ட வசனம் அருளப்பட்டவுடன் குனூத்தை விட்டு விட்டார்கள் என்று நமக்குத் தகவல் கிடைத்துள்ளது” என்று ஸுஹ்ரி கூறியதாக முஸ்லிம் 1082வது ஹதீஸ் கூறுகின்றது. இவ்வசனம் குனூத் குறித்துத் தான் அருளப்பட்டது என்ற விபரத்திற்கு நபித்தோழர்கள் வழியான சான்று ஏதும் ஸுஹ்ரியிடம் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️இதனால் தான் “ஸுஹ்ரியின் கூற்றுடன் ஹதீஸ் கலந்து விட்டது” என்று ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது ஃபத்ஹுல் பாரியில் கூறுகின்றார்கள்.* 
 *எனவே நபி (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதாகக் கூறப்படும் செய்தி மட்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது.* 
 *அதைத் தடை செய்து வசனம் இறங்கியதாகக் கூறப்படும் செய்திகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக இல்லை✍️✍️✍️* 


 *7. ⚫மற்றவை⚫ அனைத்தும்🟣 வந்த🟠 போது🟡 பிறகு 📚ஹதீஸ்⚫* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️புகாரி ஹதீஸ்கள்* 
 *ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உஹதுப் போருக்குப் புறப்பட்டபோது அவர்களின் தோழர்களிடையே கலந்துவிட்டிருந்த (நயவஞ்சகர்கள்) சிலர் (போரில் பங்கெடுக்காமல்) திரும்பலானார்கள். அப்போது (போரில் பங்கெடுத்தவர்களில்) ஒரு பிரிவினர் ‘இவர்களைக் கொல்வோம்!’ என்றனர். அப்போது ‘நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இரண்டு வகையான (அபிப்பிராயங் கொண்ட) பிரிவினராக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது?’ (திருக்குர்ஆன் 04:88) என்னும் வசனம் இறங்கியது. ‘நெருப்பு இரும்பின் துருவை அகற்றுவது போல் இந்நகரம் தீயவர்களை வெளியேற்றிவிடும்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *(புகாரி 1884)* 


 *✍️✍️✍️அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் மினாவிலுள்ள ஒரு குகையிலிருந்தோம். அப்போது ‘வல்முர்ஸலாத்’ எனும் அத்தியாயம் அவர்களுக்கு இறங்கியது. அவர்கள் அதை ஓதிக் காட்டினார்கள். நான் அவர்களின் திருவாயிலிருந்து (கேட்டு) அதை மனனம் செய்து கொண்டிருந்தேன். அதை ஓதியதால் அவர்களின் வாய் ஈரமாக இருந்தது. அப்போது ஒரு பாம்பு எங்களை நோக்கிச் சீறியது. உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அதைக் கொல்லுங்கள்!’ என்றார்கள். நாங்கள் அதைக் கொல்ல விரைந்தபோது அது சென்றுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அதன் தீங்கிலிருந்து நீங்கள் தப்பித்ததுபோல் உங்கள் தீங்கிலிருந்து அது தப்பித்தது!’ என்று கூறினார்கள்✍️✍️✍️.* 


 *(புகாரி 1830)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்பவன் (மறுமையில்) தன் மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, ‘அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகிறவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது’ (திருக்குர்ஆன் 03:77) என்னும் குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான்.(இதை நான் மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்த போது) அஷ்அஸ்(ரலி) வந்து (மக்களை நோக்கி, ‘அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்) உங்களிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்? இந்த வசனம் என் விவகாரத்தில்தான் இறங்கியது. என் தந்தையின் சகோதரர் மகனுடைய நிலத்தில் எனக்குக் கிணறு ஒன்று இருந்தது. (அந்தக் கிணறு தொடர்பாக) எனக்கும் என் ஒன்றுவிட்ட சகோதரருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டது. (அதற்காகத் தீர்ப்புக் கேட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன்.) அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘(உன் வாதத்தை நிரூபிக்க) உன்னுடைய சாட்சிகள் (எங்கே)?’ என்று கேட்டார்கள். நான், ‘என்னிடம் சாட்சிகள் இல்லை’ என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், பிரதிவாதி (‘அந்த நிலம் என்னுடையது தான்’ என்று) சத்தியம் செய்யவேண்டும்’ என்றார்கள். நான், ‘அப்படியென்றால் அவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே’ என்று கூறினேன்.(அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் உங்களுக்கு அறிவித்த) இந்த ஹதீஸைக் கூறினார்கள். உடனே, அல்லாஹ் நபியவர்களின் கூற்றை உண்மைப்படுத்தி (மேற்சொன்ன 3:77 ஆம்) குர்ஆன் வசனத்தை அருளினான்’ என்று கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *(புகாரி 2357)* 


 *✍️✍️✍️4572 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *நான் என் சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா (ரலி) அவர்களிடம் (ஒரு நாள்) இரவு தங்கி னேன். நான் தலையணையின் அகல வாட்டில் (தலைவைத்துப்) படுத்துக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர் களுடைய வீட்டாரும் அதன் நீள வாட்டில் (தலைவைத்துப்) படுத்துக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடு இரவு நேரம் வரை,அல்லது அதற்குச் சற்று முன்பு வரை, அல்லது அதற்குச் சற்றுப் பின்பு வரை உறங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்தெழுந்து தம் முகத்திலிருந்து தம் கரத்தால் தூக்க(க் கலக்க)த்தைத் துடைக்க லானார்கள். பிறகு ஆலுஇம்ரான் அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை(3:190-200) ஓதினார்கள். பிறகு (கட்டித்) தொங்கவிடப் பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே எழுந்து சென்று (அதைச் சாய்த்து) அதிலிருந்து உளூ (அங்கசுத்தி) செய்தார்கள். தம் உளூவை அவர்கள் செம்மையாகச் செய்து கொண்டு தொழுவதற்காக நின்றார்கள்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அவர்கள் செய்தது போன்றே நானும் செய்து விட்டுப் பிறகு அவர்களுக்குப் பக்கத்தில் நின்று கொண்டேன். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வலக்கரத்தை என் தலை மீது வைத்து என் வலக் காதைத் திருகலானார்கள்.* 
 *(பிறகு) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழ லானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள்4577 ஜாபிர்( ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் அவர்களும் (எனது) பனூச-மா குலத் தாரிடையே நான் (நோயுற்றுத்) தங்கியிருந்த போது நடந்தே வந்து என்னை நலம் விசாரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நான் (நோயின் கடுமையால்) எதையும் விளங்க முடியாமல் இருந்த நிலையில் என்னைக் கண்டார்கள். ஆகவே, சிறிது தண்ணீரைக் கொண்டுவரச் சொல்லி அதிலிருந்து உளூ செய்து என் மீது தெளித்தார்கள். நான் மூர்ச்சை தெளிந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் என் செல்வத்தை என்ன செய்யவேண்டு மென்று எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்! என்று கேட்டேன். அப்போது தான் அல்லாஹ் உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடு கின்றான்:🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️ஓர் ஆணிண் பங்கு இரு பெண்ணின் பங்கிற்குச்சமமானது. (இறந்து போன வருக்கு) இரண்டுக்கு மேற்பட்ட பெண் மக்கள் இருந்தால் இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இருபங்கு அவர்களுக்குரியதாகும். ஒரு மகள் மட்டும் இருந்தால் (சொத்தில்)பாதி அவளுக்குரிய தாகும்.* 
 *இறந்து போனவருக்குக் குழந்தைகள் இருப்பின் அவருடைய பெற்றோரில் (தலா) ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கு உண்டு.* 
 *அவருக்குக் குழந்தைகள் இல்லாமல் பெற்றோர் மட்டுமே வாரிசுகளாக இருப்பின், தாய்க்கு மூன்றில் ஒரு பங்கு அளிக்கப்பட வேண்டும்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அவருக்கு சகோதர சகோதரிகளு மிருந்தால், தாய் ஆறிலொரு பங்கிற்கு உரிமை பெறுவாள்.* 
 *இறந்து போனவர் செய்த வஸிய்யத் (மரணசாசனம்) நிறைவேற்றப்பட்ட பின்பும் (அவர் மீதுள்ள) கடன் அடைக்கப்பட்ட பின்பும்தான்(சொத்துகள் பங்கீடு செய்யப்பட வேண்டும்).* 
 *உங்களுடைய பெற்றோர்களிலும், உங்களுடைய பிள்ளைகளிலும் உங்க ளுக்கு நன்மை செய்வதில் யார் மிக நெருக்கமாக இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.* 
 *(இப்பங்குகளை) அல்லாஹ்வே நிர்ணயம் செய்துள்ளான்.* 
 *திண்ணமாக அல்லாஹ்(உண்மை நிலைகள் யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் (பயன்களை) நன்கு புரிந்த வனாகவும் இருக்கின்றான் (ஆகையால், அவன் நிர்ணயித்த பிரகாரமே பாகப் பிரிவினை செய்து கொள்ளுங்கள்) என்னும் (திருக்குர்ஆன் 4:11-ஆம்) வசனம் இறங்கியது.* 
 *தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு வித்ர் தொழுதார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️பிறகு பாங்கு சொல்பவர் ளதொழுகை அறிவிப்புச் செய்பவரான பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லிவிட்டுத்ன தம்மிடம் வரும் வரை ஒருக்களித்துப்படுத்திருந்தார்கள். (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு வெளியே புறப்பட்டுச் சென்று சுப்ஹுத் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள்.* 
 *இறை நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீராக! (அவ்வாறே) அவனுடைய தூதருக்கும், உங்களில் பொறுப்பு உள்ளோருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீராக! (எனும் 4:59ஆவது வசனத் தொடர்.)✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️4584 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீராக! (அவ்வாறே) அவனுடைய தூருக்கும், உங்களில் பொறுப்பு உள்ளோ ருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீராக எனும் (4:59ஆவது) வசனம், நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா பின் கைஸ் பின் அதீ (ரலி) அவர்களை (தளபதியாக்கி) ஒரு படைப் பிரிவினருடன் அனுப்பிய போது இறங்கியது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️4589 ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் 4:88ஆவது இறைவசனம் குறித்துக் கூறியதாவது:* 
 *(உஹுதுப் போருக்காக) நபி (ஸல்) அவர் களுடன் (சென்று) இருந்தவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) உஹுதிலிருந்து (வழியிலேயே) திரும்பி வந்து விட்டனர். இவர்கள் விஷயத்தில் (என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடு கொண்டு) மக்கள் இரு பிரிவினராக ஆகிவிட்டனர். ஒரு பிரிவினர், (நயவஞ்சகர்களாகிய) அவர்களைக் கொன்றுவிடுங்கள் (அல்லாஹ்வின் தூதரே!) என்று கூறினர். மற்றொரு பிரிவினர் (வெளிப் படையில் முஸ்லிம்களாகிய அவர்களைக் கொல்ல) வேண்டாம்என்று கூறினர். அப்போது தான் , உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு (வேறு கருத்துகள் கொண்ட) குழு வினராய் ஆகிவிட்டீர்களே! அல்லாஹ்வோ அவர்களை, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(தீய)வற்றின் காரணத்தால் தலைகுனியச் செய்து விட்டான் எனும் (4:88ஆவது) இறைவசனம் இறங்கிற்று.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️4596 முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான் அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:* 
 *மதீனாவாசிகள் ஒரு படைப் பிரிவை அனுப்பிடவேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டனர். அந்தப் படைப் பிரிவில் என் பெயரும் பதிவுசெய்யப்பட்டது. அப்போது தான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான இக்ரிமா (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் இதைப் பற்றித் தெரிவித்தேன். அவர்கள் என்னை வன்மையாகத் தடுத்தார்கள். பிறகு தமக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்ததாகக் கூறினார்கள்:* 
 *நபி (ஸல்) அவர்களது காலத்தில்ன முஸ்லிம்களில் சிலர் இணைவைப்பாளர் களுடன் இருந்தனர். அவர்கள் (பத்ருப் போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கெதிராக இணைவைப்பாளர்களின் கூட்டத்தை அதிகப்படுத்தி(க் காட்டக் காரணமாக இருந் த)னர். ஆகவே, (முஸ்லிம்களின் அணியிலிருந்து அவர்களை நோக்கி) எய்யப்படும் அம்பு செல்லும். அது அவர்களில் ஒருவரைத் தாக்கிக் கொன்றுவிடும்; அல்லது அவர் (வாளால்) அடிபட்டுக் கொல்லப்படுவார். (இது தொடர் பாகவே) அல்லாஹ் இவ்வசனத்தை (4:97) அருளினான்: (மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்றமுடியாதவாறு இறை மறுப்பாளர்களின் ஊரில் இருந்து கொண்டு) தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண் டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது (அவர்களை நோக்கி இந்த ஊரில்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்? என வினவுவார்கள். அதற்கு அவர்கள், பூமியில் நாங்கள் பலவீனர்களாய் இருந் தோம் என பதிலளிப்பார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்க வில்லையா? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா? என வானவர்கள் வினவுவார்கள். இவர் களின் இருப்பிடம் நரகம்தான். மேலும், அது மோசமான இருப்பிடமாகும்.* 
 *இதை அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்களிட மிருந்து ஸைத் பின் சஅத் (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள்* 
 *(ஆயினும்,) மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அல்லது நீங்கள் நோயுற்றவர்களாயிருந்தால் ஆயுதங் களைக் கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது தவறேதுமில்லை. ஆனாலும் எச்சரிக்கை யாகவே இருங்கள் எனும் (4:102ஆவது) இறைவசனம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *✍️✍️✍️4599 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:* 
 *இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (ஆயினும்,) மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால்,அல்லது நீங்கள் நோயுற்றவர்களாயிருந்தால் ஆயுதங்களைக் கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது தவறேதுமில்லை எனும் (4:102 ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது,அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் காயமுற்றுக் கிடந்தார்கள். (அப்போது இந்த வசனம் அருளப்பட்டது) என்று சொன்னார்கள்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️4601 ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *ஆயிஷா (ரலி) அவர்கள், ஒரு பெண் தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டான் என்றோ, புறக்கணித்து விடுவான் என்றோ அஞ்சினால், கணவன்-மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக் கொரு வர் விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறேது மில்லை எனும் (4:128ஆவது) வசனம் குறித்துக் கூறுகையில், தம்மிடம் இருந்துவரும் மனைவியுடன் முறையாக இல்லறம் நடத்த விரும்பாத ஓர் ஆண் அவளைப் பிரிந்து விட விரும்புகிறான். (இந்நிலையில் கணவனிடம்) அவள் எனது (செலவுத் தொகை உள்ளிட்ட) உரிமையை உனக்கு நான் விட்டுக் கொடுத்து விடுகிறேன்; (என்னை விவாகரத்துச் செய்து விடாமல் தொடர்ந்து மனைவியாகவே இருக்க அனுமதிக்கவேண்டும்) என்று கோருகிறாள். இது தொடர்பாகவே இவ்வசனம் (4:128) இறங்கிற்று என்று குறிப்பிட்டார்கள்.* 
 *நரகத்தை நோக்கி எவர் தம் முகங்களால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படவிருக்கின் றார்களோ அவர்களின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும்; அவர்களின் வழியும் மிக மிகத் தவறானதாகும் எனும் (25:34 ஆவது) இறைவசனம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *✍️✍️✍️4760 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *ஒருமனிதர் அல்லாஹ்வின் தூதரே! இறைமறுப்பாளன் மறுமை நாளில் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச்செல்லப்படுவானா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் இந்த உலகில் அவனை இருகால் களினால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா? என்று (பதிலுக்குக்) கேட்டார்கள்.* 
 *(இதை அறிவித்த அறிவிப்பாளர்) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் ஆம்! (முடியும்.) எங்கள் இறைவனின் வ-மையின் மீதாணையாக! என்று சொன்னார்கள்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️4761 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகப் பெரியது? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்,அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைவைப்பது தான் (பெரும் பாவம்) என்று பதிலளித்தார்கள். நான், பிறகு எது? என்று கேட்டேன். அவர்கள், உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது என்று சொன்னார்கள். நான் பிறகு எது? என்று கேட்க, அவர்கள் உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், மேலும்,அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக்கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும் விபசாரமும் செய்வதில்லை. யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற்கான) தண்டனையைப் பெற்றே தீருவான் எனும் இந்த (25:68ஆவது) இறை வசனம் இறங்கிற்று.* 
 *அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ‘(நபியே!) நீங்கள் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உங்களின் உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டிருந்தீர்கள்.’ எனும் இந்த (திருக்குர்ஆன் 33:27 வது) வசனம் (நபி(ஸல்) அவர்களின் அத்தை மகளான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) மற்றும் நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான) ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களின் விஷயத்தில் அருளப்பெற்றது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *(புகாரி 4787)* 


 *✍️✍️✍️4788 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டி ருந்தேன். மேலும் நான், ஒரு பெண் தம்மைத் தாமே (ஓர் ஆணுக்கு) கொடையாக வழங்கவும் செய்வாளா? என்று சொல்லிக் கொண்டேன். (நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை,) உங்களுடன் இருக்க வைக்கலாம். நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகின்றீர் களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்கள்மீது குற்றம் ஏதுமில்லை எனும் (33:51ஆவது) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய போது, நான் உங்கள் இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன் என்று (நபியவர்களிடம்) சொன்னேன்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️4790 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *நான், அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். ஆகவே, தாங்கள் (தங்களுடைய துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே! என்று சொன்னேன். அப்போது அல்லாஹ் பர்தா (சட்டம்) தொடர்பான வசனத்தை அருளினான்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️4882 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:* 
 *நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அத்தவ்பா எனும் (9ஆவது) அத்தியாயம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், அது (நயவஞ்சகர்களை) அம்பலப்படுத்தக்கூடிய அத்தியாயமாகும். அவர்களில் இத்தகையோர் உள்ளனர்; அவர்களில் இத்தகையோர் உள்ளனர் என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் இறங்கிக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால்,தங்களில் ஒருவரைக் கூட விட்டுவைக்காமல் (அனைவரையும்) இது குறிப்பிட்டுவிட்டது என (நயவஞ்சகர்கள்) எண்ணினார்கள் என்று கூறினார்கள்.* 

 *நான் அவர்களிடம், அல்அன்ஃபால் எனும் (8ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், பத்ருப் போர் குறித்து அது அருளப்பெற்றது என்று பதிலளித்தார்கள். நான் அல்ஹஷ்ர் எனும் (59ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், பனூநளீர் குலத்தார் குறித்து அருளப் பெற்றது என்று பதிலளித்தார்கள்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️4884 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புவைரா எனுமிடத்திலிருந்த பனூ நளீர் குலத்தாருடைய சில பேரீச்ச மரங்களை (அவர்களின் தேசத் துரோகக் கொடுஞ் செயல்களுக்காக) எரித்தார்கள். இன்னும் (சிலவற்றை) வெட்டினார்கள். அப்போது அல்லாஹ், நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதோ,அல்லது அவற்றின் அடி மரங்களின் மீது அவற்றை நிற்கும்படி விட்டுவிட்டதோ எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன்தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்திவிடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்) எனும் (59:5ஆவது) வசனத்தை அருளினான்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️4916 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர் அனைவரும் சேர்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்து கொண்ட போது, நபி (ஸல்) அவர்கள் உங்களை விவாக விலக்குச் செய்து விட்டால் உங்களைவிடவும் சிறந்த துணைவியரை உங்களுக்கு பதிலாக இறைவன் அவர்களுக்குத் தர முடியும் என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறு) இந்த (66:5ஆவது) இறைவசனம் இறங்கிற்று.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️4517 அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:* 
 *நான் இந்தப் பள்ளிவாச-ல் – அதாவது, கூஃபா நகரின் பள்ளிவாச-ல் – கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் அருகே அமர்ந்தேன். அவர்களிடம் (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரமாக நோன்புகள் நோற்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொட்டிக் கொண்டிருக்க,நான் நபி (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். அவர்கள், உங்களுக்கு இந்த அளவிற்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை என்று கூறிவிட்டு, உங்களுக்கு ஓர் ஆடு கிடைக்குமா? என்று கேட்டார்கள். நான், இல்லை என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், மூன்று நாட்கள் நோன்பு வையுங்கள்! அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை ஸாவு உணவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளியுங்கள்; உங்கள் தலையை மழித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். ஆகவே, இந்த (2:196ஆவது) வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பட்டது. ஆனால், (அதன் சட்டம்) உங்களுக்கும் பொதுவானதாகும் என்று சொன்னார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️4528 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்திலிருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லிவந்தார்கள். எனவே, உங்கள் பெண்கள் உங்களுக்குரிய விளை நிலம் ஆவர். ஆகவே, உங்கள் விளை நிலத்திற்கு நீங்கள் விரும்பியபடி செல்லுங்கள் எனும் (2:223ஆவது) இறைவசனம் இறங்கியது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️4542 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்றபோது அவற்றை நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச-ல் வைத்து (மக்களுக்கு) ஓதிக் காட்டினார்கள். மேலும், மது வியாபாரத்தைத் தடைசெய்தார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️4567 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நயவஞ்சகர்கள் சிலர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புனிதப் போருக்குப் புறப்பட்டுச் சென்றால், அவர் களுடன் செல்லாமல் ஊரிலேயே தங்கி விடுவார்கள். (அவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல் தாம் தங்கிவிட்டதைப் பற்றி மகிழ்ச்சியும் அடை வார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பி வரும் போது அவர்களிடம் (போய், தாம் கலந்து கொள்ளாமல் போனதற்குப் பொய்யான) சாக்குப் போக்குகளைக் கூறி, (பொய்ச்) சத்தியம் செய்வார்கள். தாம் செய்யாத (நற்) செயல்களுக்காகத் தாம் புகழப்பட வேண்டு மென்றும் விரும்புவார்கள் அப்போது தான் தாம் செய்த(தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒரு போதும் நீர் எண்ண வேண்டாம்;அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு எனும் (3:188ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️4606 தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:* 
 *யூதர்கள் உமர் (ரலி) அவர்களிடம், நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓதுகிறீர்கள், அந்த வசனம் மட்டும் எங்களிடையே இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்என்று கூறினர். உமர் (ரலி) அவர்கள், அது எப்போது இறங்கியது? எங்கே இறங்கியது? அது இறங்கிய வேளையில் அரஃபா (ஃதுல்ஹஜ்-9ஆம்) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அப்போது அரஃபாவில் இருந்தோம்.* 
 *நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்கு வதில்லைஎனும் (5:89ஆவது) வசனத் தொடர்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️4613 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்குவதில்லைஎனும் (5:89ஆவது) இறை வசனம் லா வல்லாஹி (இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக!) என்றும்,பலா வல்லாஹி (ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக!) என்றும் (பொருள் கொள்ளாமல் பழக்கத்தின் காரணமாக சத்தியம் செய்யும் சொற்களைக்) கூறுகின்றவரின் விஷயத்தில் அருளப்பெற்றது.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️4648 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *(குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூஜஹ்ல் இறைவா! இது (-குர்ஆன்-) உன்னிடமிருந்து வந்த சத்தியம் தான் என்றிருப்பின் எங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்பு றுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டு வா! என்று சொன்னான். அப்போது (நபியே!) நீர் அவர்களுக் கிடையே இருக்கும் போது அல்லாஹ் அவர்கள் மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனைசெய்யப் போவதில்லை. அவர்கள் (கஅபா உள்ளிட்ட) மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருக் கிறார்கள். இந்நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனைக்குள்ளாக்காமல் இருப்பதற்கு அவர்களிடம் என்ன காரணம் உள்ளது? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆகமுடியும்! அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிய மாட்டார்கள் எனும் வசனங்கள் (8:33, 34) அருளப்பெற்றன.* 
 *அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *உஹுதுப் போரன்று நபி (ஸல்) அவர்கள் காயப்படுத்தப்பட்டார்கள். அப்போது தம் நபியையே காயப்படுத்திவிட்ட ஒரு சமூகம் எப்படி வெல்லும்? என்று (மனமுடைந்த வர்களாக) நபிகளார் கூறினார்கள். அப்போது தான் (நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை… என்ற (3:128-வது) வசனம் இறங்கிற்று.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *(புகாரி 4648 )* 


 *✍️✍️✍️ஸஃபிய்யா பின்த் ஷைபா(ரஹ்) கூறினார் ”(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள் மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்” எனும் (திருக்குர்ஆன் 24:31 வது) வசனம் அருளப்பட்டபோது பெண்கள் தங்கள் கீழ் அங்கிகளின் ஓரத்தைக் கிழித்து அதனைத் துப்பாட்டா ஆக்கி (மறைத்து)க் கொண்டார்கள்.✍️✍️✍️* 


 *(புகாரி 4759)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீராக! (அவ்வாறே) அவனுடைய தூருக்கும், உங்களில் பொறுப்பு உள்ளோருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீராக’ எனும் (திருக்குர்ஆன் 04:59 வது) வசனம், நபி(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா இப்னு கைஸ் இப்னி அதீ(ரலி) அவர்களை (தளபதியாக்கி) ஒரு படைப்பிரிவினருடன் அனுப்பியபோது இறங்கியது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *(புகாரி 4584)* 


 *✍️✍️✍️194. ‘நான் நோயுற்றிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். நான் மயநிலையில் இருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்துவிட்டு அந்தத் தண்ணீரை என் மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கத்திலிருந்து (தெளிந்து) உணர்வு பெற்றேன். அப்போது நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! என்னுடைய சொத்துக்கு வாரிசு யார்? என்னுடன் உடன் பிறப்புகள் மட்டுமே எனக்கு வாரிசாகும் நிலையில் நான் உள்ளேனே?’ என்று நான் கேட்டபோது பாகப்பிரிவினை பற்றிய (திருக்குர்ஆன் 04:176-வது) வசனம் அருளப்பட்டது’ என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️1200. ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) காலத்தில் நாங்கள் தொழுகையில் பேசிக் கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். இந்நிலையில் ‘தொழுகைகளில் பேணுதலாக இருங்கள்’ என்ற (திருக்குர்ஆன் 02:238) வசனம் அருளப்பட்டது. அதன்பின்னர் பேசக் கூடாது என்று கட்டளையிடப்பட்டோம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* .


 *✍️✍️✍️1461. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். அபூ தல்ஹா(ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரின் செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ன்னபவி)க்கு எதிரில் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம். ‘நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்’ என்ற (திருக்குர்ஆன் 03:92) இறைவசனம் அருளப்பட்டதும். அபூ தல்ஹா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹு தஆலா, ‘நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்’ எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அவனிடம் என்னுடைய மறுமை வாழ்வின் நலனுக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே ‘இறைத்தூதர் அவர்களே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் பொறுத்தமாகக் கருதுகிறேன்’ எனக் கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! நான் அவ்வாறே செய்கிறேன்!’ எனக் கூறிவிட்டு, அத் தோட்டத்தைத் தம் நெருங்கிய உறவினருக்கும் தம் தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளும் பங்கிட்டுவிட்டார்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️2050. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியவை அறியாமைக் காலத்தில் கடைவீதிகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும் அங்கே வியாபாரம் செய்வதை மக்கள் குற்றம் எனக் கருதினார்கள். அப்போது ‘உங்களுடைய இறைவனின் அருளைத் தேடுவது உங்களின் மீது குற்றமில்லை’ என்ற (திருக்குர்ஆன் 02:198) வசனம் அருளப்பட்டது. இவ்வசனத்துடன் ஹஜ்ஜுக்காலங்களில் என்பதையும் சேர்த்து இப்னு அப்பாஸ்(ரலி) ஓதியிருக்கிறார்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️4534. ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார்.(ஆரம்பக் காலத்தில்) நாங்கள் தொழுகையில் பேசிக்கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். ‘அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகைகயையும் பேணி(த் தொழுது) வாருங்கள். மேலும், நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வணங்குங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 02:238 வது) வசனம் அருளப்படும் வரை (நாங்கள் இவ்வாறே தொழுகையில் பேசிவந்தோம்). இந்த வசனம் அருளப்பட்டவுடன் பேசாமலிருக்கும் படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️4681. முஹம்மத் இப்னு அப்பாத் இப்னி ஜஅஃபர்(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) இந்த (திருக்குர்ஆன் 11:5 வது) வசனத்தை ‘அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸுதூருஹும்’ என ஓத கேட்டேன். அவர்களிடம் அது குறித்து நான் (விளக்கம்) கேட்டதற்கு அவர்கள் ‘மக்கள் சிலர், இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்று (ஆடையை நீக்கிடத் தம் பிறவு உறுப்பு) வானத்திற்குத் தெரியும்படி உட்காருவதையும், இவ்வாறே தம் மனைவிமார்களுடன் உறவு கொள்ளும்போது (தம் ஆடையை நீக்கிப் பிறவி உறுப்பு) வானத்திற்குத் தெரிந்து விடுவதையும் எண்ணி வெட்கப்பட்டு (அதை மறைக்க முயன்று தலைகுனிந்து) கொள்வார்கள். அவர்களைக் குறித்தே இந்த வசனம் அருளப்பட்டது’ என்று கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️4687. இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார். ஒருவர் (அன்னியப்) பெண் ஒருத்தியை முத்தமிட்டுவிட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைக் கூறினார். அப்போது ‘பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்துவிடுகின்றன.அல்லாஹ்வை நினைவு கூர்கிறவர்களுக்கு இது ஒரு நினைவூட்டி ஆகும்’ எனும் (திருக்குர்ஆன் 11:114 வது) இறைவசனம் அருளப்பட்டது. அந்த மனிதர், ‘இது எனக்கு மட்டுமா? (அல்லது அனைவருக்குமா?)’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தினரில் இதன்படி செயல்படும் அனைவருக்கும்தான்’ என்று பதிலளித்தார்கள்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️4782. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் ‘வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே, அல்லாஹ்விடம் நீதியாகும்’ எனும் (திருக்குர்ஆன் 33:5 வது) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களை ‘ஸைத் இப்னு முஹம்மத்’ (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️7420. அனஸ்(ரலி) அறிவித்தார். ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்கள் தம் மனைவியின் போக்கு குறித்து (நபி(ஸல்) அவர்களிடம்) முறையிட வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்; உன் மனைவியை (மண விலக்குச் செய்துவிடாமல்) மணபந்தத்தில் நீடிக்கச் செய்’ என்று கூறலானார்கள். நபி(ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில் குர்ஆன் வசனங்களில்) எதையேனும் மறைப்பவர்களாக இருந்திருந்தால் (பின்வரும் 33:37 வது வசனமான) இதைத்தான் மறைத்திருப்பார்கள். இதன் காரணத்தால் ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக் கொள்வார்கள். ‘உங்களை (நபி(ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத்தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி(ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தான்’ என்று சொல்வார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘(நபியே!) நீங்கள் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உங்களின் உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 33:37 வது) இறைவசனம், (தம்பதியராயிருந்த) ஸைனப்(ரலி) அவர்களுக்கும் ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களுக்குமிடையே நடந்த பிரச்சினையில் (நபி(ஸல்) அவர்கள் கருத்து தெரிவித்தபோது) தான் அருளப்பபெற்றது’ என்று அனஸ்(ரலி) அவர்கள் சொன்னார்கள்.✍️✍️✍️* 


 *8. 🛑இரு🟣 சாரார்⚫ சண்டையிட்டால்♥️ சமாதானம்🧶 சமாதானம் 🟡செய்து🟠 வையுங்கள்⚫ என்ற👹 போது🛑* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம், ‘தாங்கள் அப்துல்லாஹ் இப்னு உபையிடம் வந்தால் நன்றாயிருக்கும்’ என்று கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நபி(ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது.* 
 *அவனை நபி(ஸல்) அவர்கள் சென்றடைந்தபோது அவன், ‘தூர விலகிப் போ! அல்லாஹ்வின் மீதாணையாக! உன் கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்திவிட்டது’ என்று கூறினான்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️அப்போது அவர்களிடையே இருந்த அன்சாரி (தோழர்) ஒருவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய கழுதை உன்னை விட நல்ல வாசனையுடையதாகும்’ என்று கூறினார்.*  *அப்துல்லாஹ்வுக்காக அவனுடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரியை ஏசினார். அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். தங்களுக்கிடையே ஈச்சங் (கிளையின்) குச்சியாலும், கைகளாலும் செருப்புகளாலும் அடித்துக் கொண்டார்கள்.* 
 *அப்போது, ‘மேலும், இறைநம்பிக்கையாளர்களில் இரண்டு குழுவினர் தங்களுக்குள் சண்டையிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள்’ (திருக்குர்ஆன் 49:09) என்னும் வசனம் அருளப்பட்டிருக்கிறது என்னும் செய்தி எங்களுக்கு எட்டியது✍️✍️✍️.* 

 *(புகாரி 2691)* 


 *9. 🕋கிப்லா🕋 மாற்றப்படுதலின்📚 போது🕋* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️”நீங்கள் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும்வேளையில்) உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்புங்கள். இது உங்கள் இறைவனிட மிருந்து வந்த உண்மை(யான கட்டளை) யாகும். அல்லாஹ் நீங்கள் செய்கின்றவை பற்றிக் கவனமற்றவன் அல்லன்” (எனும் 2:149ஆவது இறைவசனம்).* 
 *இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *மக்கள் குபாவில் சுப்ஹுத் தொழுகையிலிருந்த போது, ஒரு மனிதர் வந்து, சென்ற இரவு•ளநபி (ஸல்) அவர்களுக்குன குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (அதில் இனி தொழுகையில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் கஅபாவை நோக்கித் தொழுங்கள் என்று சொன்னார். உடனே மக்கள் தாம் இருந்த அதே நிலையிலேயே வட்டமிட்டு கஅபாவை நோக்கி முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். (அதற்கு முன்) மக்களின் முகம் (பைத்துல் மக்திஸின் திசையில்) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 
*(புகாரி 4493)* 


‘ *✍️✍️✍️இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென ஆசைப்பட்டார்கள். அப்போது ‘நீர் வானத்தை நோக்கி உம்முடைய முகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருப்பதை அறிவோம்’ (திருக்குர்ஆன் 02:144) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே கஅபாவை முன்னோக்கித் தொழ ஆரம்பித்தார்கள். ‘(யூதர்களின் சில அறிவீனர்கள்) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவைவிட்டுத் திருப்பிவிட்டது எது? என்று கேட்கின்றனர். ‘கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியோரை அவன் நேர்வழியில் நடத்துவான்’ என்று (நபியே!) கூறும்!’ (திருக்குர்ஆன் 02:142) என்ற வசனம் அருளப்பட்டதும் ஒருவர் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டு வெளியே வந்து அன்ஸாரிக் கூட்டத்தாரிடம் சென்றார். அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி அஸர் தொழுது கொண்டிருந்தபோது, ‘நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தொழுதேன். அவர்கள் கஅபாவை முன்னோக்கித் தொழுதார்கள் என்று நான் சாட்சி சொல்கிறேன்’ என்று அவர் அவர்களிடம் கூறினார். உடனே தொழுது கொண்டிருந்தவர்கள் கஅபாவை முன்னோக்கித் திரும்பினார்கள்’ என பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்✍️✍️✍️.* 


 *(புகாரி 399)* 


 *10. 🧕ஹிஜாப்📚 பற்றிய சட்டம்📚 வசனம்📚 இறங்குதல்🧕* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நபி(ஸல்) அவர்களின் மனைவியர் கழிப்பிடம் நாடி வெட்ட வெளிப் பொட்டல்களுக்கு இரவு நேரங்களில் (வீட்டைவிட்டு) வெளியே செல்லும் வழக்கமுடையவர்களாயிருந்தார்கள். வெட்ட வெளி பொட்டல் என்பது விசாலமான திறந்த வெளியாகும். நபி(ஸல்) அவர்களிடம், ‘உங்கள் மனைவியரை (வெளியே செல்லும் போது) முக்காடிட்டு மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்’ என உமர்(ரலி) சொல்லிக் கொண்டிருந்தார். ஆயினும் நபி(ஸல்) அவர்கள் அதைச் செயல்படுத்தவில்லை. நபி(ஸல்) அவர்களின் மனைவி ஸவ்தா(ரலி) இஷா நேரமான ஓர் இரவில் (கழிப்பிடம் நாடி) வீட்டைவிட்டு வெளியே சென்றார். நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் அவர்களே உயரமான பெண்மணியாக இருந்தார்கள்.* 
 *அவர்களைப் பார்த்த உமர்(ரலி), ‘ஸவ்தாவே! உங்களை யார் என்று புரிந்து கொண்டோம்’ என்றார். (அப்போதாவது பெண்கள்) முக்காடிடுவது பற்றிய குர்ஆன் வசனம் அருளப்படாதா என்ற பேராசையில் உரத்து அழைத்தார். அப்போதுதான் பெண்கள் முக்காடு போடுவது பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான்’ ஆயிஷா(ரலி) அறிவித்தார்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *(புகாரி 146)* 


 *11. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அனஸ்🙋‍♀️ பின்🟣 நள்ர்🟡 பற்றிய⚫ இறைவசனம்📚📚 இறங்கிய🧶🧶 போது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 105* 


 *🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰வ

No comments:

Post a Comment