பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, November 14, 2020

இஸ்லாத்தை அறிந்து - 105

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய  மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 105 👈👈👈* 
 

*📚📚📚 தலைப்பு  10  குர்ஆன் வசனம் இறங்கிய காரணம் 📚📚📚* 


 *11. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அனஸ்🙋‍♀️ பின்🟣 நள்ர்🟡 பற்றிய⚫ இறைவசனம்📚📚 இறங்கிய🧶🧶 போது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *12. 🔥🔥🔥உஹதுப் போரில்🥎🥎 நபி📚📚 காயப்பட்ட போது🕋🕋 இறங்கிய📚📚 வசனம்🔥🔥🔥* 


 *13. 🕋🕋🕋வள்ளுஹா🕋🕋 வல்லைலி📚📚 இதா🥎🥎 சஜா 🧶என்ற🧶 சமயம் ☪️இறங்கிய📚📚 வசனம்🕋🕋🕋* 


 *14. 🟣🟣🟣மனனம்🧶 செய்ய🟡 நாவை🟠 அசைக்காதீர்⚫ என்ற🥎 வசனம்🟣🟣🟣* 


 *15. 🥎🥎🥎போர்த்திக்⚫⚫ கொண்டிருப்பவரே🟡🟡 எச்சரிக்கை🟠🟠 செய்யுங்கள் 🟣என்ற🟣 போது🧶 இறங்கிய📚📚 வசனம்🥎🥎🥎* 


*11. 🙋‍♂️அனஸ்🙋‍♀️ பின்🟣 நள்ர்🟡 பற்றிய⚫ இறைவசனம்📚 இறங்கிய🧶 போது🙋‍♀️* 

 *✍️✍️✍️அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *என் தந்தையின் சகோதரர் அனஸ் பின் நள்ர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்று விட்டார். அவர் (திரும்பி வந்தவுடன்) அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இணை வைப்பவர்களுடன் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ளவில்லை; இணைவைப்பவர்களுக்கெதிரான போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெற வைத்திருந்தால் நான் செய்வதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்த்திருப்பான். பின்பு உஹுதுப் போரின் போது முஸ்லிம்கள் தோல்வி யுற்ற நேரத்தில் அவர், இறைவா! என் தோழர்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணைவைப்பவர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப் போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன் என்று கூறிவிட்டு, பிறகு (போர்க் களத்தில்) முன்னேறிச் சென்றார். சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் அவருக்கெதிரில் வரக் (கண்டு), சஅத் பின் முஆத் அவர்களே! நான் சொர்க்கத்தையே விரும்புகிறேன். என் தந்தை நள்ருடைய இறைவன் மீது சத்தியமாக! நான் சொர்க்கத்தின் வாடையை உஹுது மலையிலிருந்து பெறுகிறேன் என்று கூறினார்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️சஅத (ரலி) அவர்கள் இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு, அவர் செய்த (வீராவேசமான) போரை வர்ணிக்க என்னால் முடியவில்லை, அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். நாங்கள் அவர் உட-ல் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் இருந்த எண்பதுக்கும் மேற்பட்ட காயங்களைக் கண்டோம். மேலும், இணைவைப்பவர்கள் அவரது உடல் உறுப்புகளைச் சிதைத்து விட்டிருந்த நிலையில் அவர் கொல்லப் பட்டிருக்கக் கண்டோம். அவருடைய சகோதரியைத் தவிர வேறெவரும் அவரை (இன்னாரென்று) அறிந்து கொள்ள முடியவில்லை; அவரது சகோதரி கூட அவரது விரல்(நுனி)களை வைத்துத் தான் அவரை அடையாளம் காண முடிந்தது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️அல்லாஹ்விடம் தாம் கொடுத்த உறுதிமொழியை மெய்ப்படுத்தி விட்டவர்களும் இறை நம்பிக்கையாளர் களிடையே உள்ளனர்… என்கிற (திருக்குர்ஆன் 33:23) இறைவசனம் இவர் விஷயத்திலும் இவரைப் போன்ற மற்ற உயிர்த் தியாகிகள் விஷயத்திலும் தான் அருளப்பட்டது என்றே நாங்கள் கருதி வந்தோம்✍️✍️✍️.* 


 *(புகாரி 2805)* 


 *12. 🔥உஹதுப் போரில்🥎 நபி📚 காயப்பட்ட போது🕋 இறங்கிய📚 வசனம்🔥* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:* 
 *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உஹுதுப் போரில் காயப்படுத்தப்பட்ட போது எதிரிகளான) ஸஃப்வான் பின் உமய்யா, சுஹைல் பின் அம்ர், ஹாரிஸ் பின் ஹிஷாம் ஆகியோருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது, அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை (என்ற திருக்குர்ஆன் 3:128-வது வசனம்) அருளப்பட்டது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *(புகாரி 4070)* 


 *13. 🕋வள்ளுஹா🕋 வல்லைலி📚 இதா🥎 சஜா 🧶என்ற🧶 சமயம் ☪️இறங்கிய📚 வசனம்🕋* 


 *✍️✍️✍️ஜுன்துப் பின் அப்தில்லாஹ் பின் சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது இரண்டு இரவுகள் அல்லது மூன்று இரவுகள் (இரவுத் தொழுகைக்காகக் கூட) அவர்கள் எழவில்லை. அப்போது ஒரு பெண் வந்து, முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டு விட்டான் என நினைக்கிறேன். (அதனால் தான்) இரண்டு இரவுகளாக அல்லது மூன்று இரவுகளாக உம்மை ஷைத்தான் நெருங்கி வந்ததை நான் பார்க்கவில்லை என்று கூறினாள்.2 அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், முற்பகளின் மீது சத்திய மாக! மேலும் இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உங்கள் இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை எனும் (திருக்குர்ஆன் 93:1-3) வசனங்களை அருளினான்.✍️✍️✍️* 


 *(புகாரி 4950)* 


 *14. 🟣மனனம்🧶 செய்ய🟡 நாவை🟠 அசைக்காதீர்⚫ என்ற🥎 வசனம்🟣* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மூசா பின் அபீ ஆயிஷா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:* 
 *நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், (நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் எனும் (திருக்குர்ஆன் 75:16ஆவது) இறை வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: தம் மீது வஹீ (வேத அறிவிப்பு) அருளப்படும் போது நபி(ஸல்) அவர்கள் தம்மிரு உதடுகளையும் அசைத்துக் கொண்டி ருந்தார்கள். ஆகவே, (அல்லாஹ்விடமிருந்து) நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படும் போது அவசர அவசரமாக உங்கள் நாவை அசைக்காதீர்கள் என்று உத்தரவிடப்பட்டது. (எங்கே தம் மீது அருளப்படும் வேத வசனங்கள் நினைவில் பதியாமல் மறதியில்,) தம்மைவிட்டு நழுவிப் போய்விடுமோ என்று நபி (ஸல்) அவர்கள் அஞ்சியதே இதற்குக் காரணமாகும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அதை ஒன்றுசேர்த்து, ஓதும்படி செய்வதும் எமது பொறுப்பாகும் எனும் (திருக்குர்ஆன் 75:17ஆவது) வசனத்திற்கு நாமே உங்களது நெஞ்சத்தில் அதனை(ப் பதியச் செய்து,) ஒன்று சேர்ப்போம். நீங்கள் அதனை ஓதும்படி செய்வோம் என்று பொருள்.* 
 *நாம் இதனை ஓதிவிட்டோமாயின்… எனும் (திருக்குர்ஆன் 75:18ஆவது) வசனத்திற்கு, ஜிப்ரீல் மூலமாக உங்களுக்கு என் வசனங்கள் அருளப்பட்டுவிடுமாயின்… என்று பொருள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள். பின்னர் அ(தன் கருத்)தை விளக்குவதும் நமது பொறுப்பாகும் எனும் (திருக்குர்ஆன் 75:19ஆவது) வசனத்திற்கு, உங்களுடைய நாவினால் பிறருக்கு விளக்கிக் கொடுக்கச் செய்வதும் எமது பொறுப்பேயாகும் என்று பொருள்.✍️✍️✍️* 


 *(புகாரி 4928)* 


 *15. 🥎போர்த்திக்⚫ கொண்டிருப்பவரே🟡 எச்சரிக்கை🟠 செய்யுங்கள் 🟣என்ற🟣 போது🧶 இறங்கிய📚 வசனம்🥎* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️யஹ்யா பின் அபீ கஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:* 
 *நான் அபூசலமா (ரஹ்) அவர்களிடம் முதன் முதலாக அருளப்பெற்ற குர்ஆன் வசனம் எது? என்று கேட்டேன். அதற்கு அன்னார், போர்த்தியிருப்பவரே! (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும் (திருக்குர்ஆன் 74:1ஆவது) வசனம் என்றார்கள். அப்போது நான் (நபியே!) படைத்த உங்களுடைய இறைவனின் பெயரால் ஓதுக! (இக்ரஃ பிஸ்மி ரப்பிக் கல்லஃதீ கலக்) எனும் (திருக்குர்ஆன் 96:1ஆவது) வசனம் என்றல்லவா எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது! என்றேன். அதற்கு அபூ சலமா (ரஹ்) அவர்கள், நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம், முதன் முதலாக அருளப்பெற்ற குர்ஆன் வசனம் எது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், யா அய்யுஹல் முத்தஸ்ஸிர் எனும் (திருக்குர்ஆன் 74:1ஆவது) வசனம் என்று கூறினார்கள். உடனே நான், இக்ரஃ பிஸ்மி ரப்பிக்கல்லஃதீ கலக் எனும் (திருக்குர்ஆன் 96:1ஆவது) வசனம்தான் (முதன் முத-ல் அருளப்பட்ட வசனம்) என்று எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதே! என்று கேட்டேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் சொன்னதைத் தவிர வேறெதையும் உங்களுக்கு நான் தெரிவிக்கப்போவதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️:* 

 *✍️✍️✍️நான் ஹிரா மலைக் குகையில் தங்கியி ருந்தேன். நான் என் தங்குதலை முடித்துக் கொண்டு (மலையிலிருந்து) இறங்கி அங்கிருந்த பள்ளத்தாக்கின் நடுவே வந்து சேர்ந்திருப்பேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டேன். உடனே நான் எனக்கு முன்புறத்திலும் எனக்குப் பின்புறத்திலும் எனக்கு வலப்பக்கத்திலும் எனக்கு இடப்பக்கத்திலும் பார்த்தேன். அப்போது அவர் (ஜிப்ரீல்) வானத்திற்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். உடனே நான் கதீஜாவி டம் சென்று எனக்குப் போர்த்திவிடுங்கள்! என் மீது குளிர்ந்த நீரை ஊற்றுங்கள்! என்று கூறினேன். மேலும் எனக்கு, போர்த்திக் கொண்டு (படுத்து) இருப்பவரே, எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். மேலும், உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள் எனும் (திருக்குர்ஆன் 74:1-3) இறைவசனங்கள் அருளப்பெற்றன✍️✍️✍️.* 


 *(புகாரி 4924)* 


 *16. 👹👹👹ஜின்கள்📚📚 குர்ஆனை📚📚 செவியேற்றபோது🕋🕋 இறங்கிய🕋🕋 வசனம்👹👹👹* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 106* 


 *🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰வ

No comments:

Post a Comment