*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️*
*🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕*
*🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹*
*❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤*
*🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋*
*🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*
*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*
*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*
*👉👉👉 தொடர் பாகம் 102 👈👈👈*
*📚📚📚 தலைப்பு 9 வாரிசுரிமைச் சட்டங்கள் 📚📚📚*
*18. 🧶மரண🧶 சாசனம்📚📚 வஸிய்யத் 🧶என்றால்🧶 என்ன❓🧶*
*19. 📚📚📚சொத்துப்பங்கீடு🧶🧶 உதாரணம் 1📚📚📚*
*20. 🕋🕋🕋இறைதூதர்களின்🟣🟣 சொத்துக்கு🧶🧶 யார்♥️ வாரிசு♥️♥️♥️*
*21. 🙋♂️🙋♀️🙋♂️கலாலா - சந்ததி🙋♀️🙋♂️🙋♀️ இல்லாதவர்🛑🛑🛑*
*22. ☪️☪️☪️பாதிப்பு ஏற்ப்பாடத🧶🧶🧶 வையில்🟣🟣🟣 என்றால்♥️♥️♥️ என்ன❓☪️☪️☪️*
*23. 🙋♂️🙋♂️🙋♂️ஆண்🧕🧕🧕 பெண்🧕🧕🧕 பிள்ளைகளின்🙋♀️🙋♀️🙋♀️ பங்கு🙋♂️🙋♂️🙋♂️*
*24. 🙋♀️🧕🙋♀️பெற்றோரைக் கவனிக்கதவருக்கு சொத்துரிமை உண்டா❓🙋♂️🧕🙋♀️*
*18. 🧶மரண சாசனம்📚 வஸிய்யத் என்றால் என்ன❓🧶*
*✍️✍️✍️வஸிய்யத் என்றால் இறந்தவர் இறக்கும் முன் அல்லது இறக்கும் தருவாயில் சொத்துரிமைப் பங்கீடு பெறாதவர்களுக்கு அல்லது ஏதாவது தர்ம காரியத்திற்கு அல்லது மத்ரஸா, பள்ளிவாசல், அறக்கட்டளை போன்றவற்றிற்கு தனது சொத்தை சாஸனம் செய்தல் ஆகும்.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️வாரிசுரிமைப் பங்கு பெற்றவர்களுக்கு அறவே வஸிய்யத் செய்யலாகாது. பங்கு பெறாதவர்களுக்கு வஸிய்யத் செய்யலாம்.🙋♀️🙋♀️🙋♀️*
*⚫⚫⚫வாரிசுதாரர்களுக்குத் தீங்கிழைக்கக் கூடாது:⚫⚫⚫*
*✍️✍️✍️(மரண சாஸனத்தின் மூலம் வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது என அல்லாஹ் குறிப்பிடுகிறான். (அல்குர் ஆன் 4:12) எனவே வாரிசுகளுக்குக் கிடைக்க வேண்டிய பாகத்தில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாதவாறு வஸிய்யத்து செய்ய வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது✍️✍️✍️✍️.*
*🟣அதை🟣 எப்படி🟣 செய்வது❓🟣*
*☪️☪️☪️நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜுடைய ஆண்டில் நான் நோய் வாய்ப்பட்டிருந்த போது, என்னை நோய் வினவுவதற்காக ரஸுல் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நான் கடுமையாக நோய் வாய்ப்பட்டு விட்டேன் என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள். எனக்கு ஏராளமான பொருட் செல்வம் உள்ளது. எனக்கு ஒரே ஒரு மகள் மட்டும் தான் வாரிசு. எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தானமாக வழங்கிடட்டுமா? எனக் கேட்க, “வேண்டாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள். “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது சொத்தில் பாதியை தானமாகக் கொடுத்து விடவா?” எனக் கேட்க அதற்கும் மறுத்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தர்மம் செய்து விடவா? என நான் மீண்டும் கேட்க, “மூன்றில் ஒரு பங்கு என்பது அதிகம்”, என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள் “மக்களிடம் கையேந்திப் பிழைக்கும் ஏழைகளாக உமது சந்ததியினரை விட்டுச் செல்வதை விட பணக்காரர்களாக விட்டுச் செல்வது மிக நல்லது” என நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கூறியதாக ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அறிவிக்கிறார்☪️☪️☪️.*
*புகாரி: 3936, 4409, 5668, 6373*
*🙋♂️🙋♂️🙋♂️எனவே வஸிய்யத்து செய்யும் போது மூன்றில் ஒரு பங்கை விட அதிகம் வஸிய்யத்து செய்து சொத்துரிமை உள்ளவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாகாது. மூன்றில் ஒரு பங்குக்கு மேல் வஸிய்யத்து செய்திருந்தால் அது செல்லாது எனவும் அறிய முடிகிறது. மேலும் சொத்துரிமை பெறத்தக்கவர்களுக்கும் வஸிய்யத் செய்திருந்தால் அதுவும் செல்லாது என்று அறியலாம்.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️செத்துப் பங்கீடு செய்வதற்கு முன் வஸிய்யத்தையும், கடனையும் நிறைவேற்ற வேண்டும்* .
*இறந்தவர் ஏதேனும் வஸிய்யத் எனும் மரண சாசனம் செய்திருந்தால் அதை சொத்து பங்கீடு செய்வதற்கு முன் நிறைவேற்றிட வேண்டும்.*
*இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே.✍️✍️✍️*
*அல்குர்ஆன் 4 11*
*☪️சுருக்கமாக☪️*
*🙋♂️🙋♂️🙋♂️மரணசாசனத்திற்கு நில நிபந்தனைகள் உண்டு. இறந்தவர் (சொத்துரிமைப் பங்கீடு பெறாதவர்களுக்கு அல்லது ஏதாவது தர்ம காரியத்திற்கு தரவேண்டும் என்று) செய்த வஸிய்யத் மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பங்கை விட அதிகமாகி விடக்கூடாது.*
*அவ்வாறு அதிகமாகி இருந்தால் அந்த வஸிய்யத் செல்லாது. செய்திருப்பினும், மூன்றில் ஒரு பங்கு என்ற அளவே செல்லுபடியாகும். மேலும் இறந்தவரின் சொத்தில் யார் பங்குதாரர்களாக வாரிசுதாரர்களாக வருகிறார்களோ அவர்களுக்கு வஸிய்யத் செய்திருந்தால் அதுவும் செல்லாது. அவர்கள் தங்களுக்குரிய பங்கின் அளவை மட்டுமே பெற்றுக் கொள்வார்கள்.🙋♀️🙋♀️🙋♀️*
*19. 📚சொத்துப்பங்கீடு🧶 உதாரணம் 1📚*
*✍️✍️✍️தாய், தந்தைக்கு தனித்தனியாக 6ல்1*
*இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தரப்பட வேண்டும்.* *அவருக்கு(இறந்தவருக்கு)ச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு✍️✍️✍️.*
*அல்குர்ஆன் (4: 11)*
*🙋♂️🙋♂️🙋♂️மனைவிக்கு 8ல்1*
*இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் மனைவிமார்களுக்கு எட்டில் ஒரு பாகம் தரப்பட வேண்டும்.*
*உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் உங்கள் மனைவியர்களுக்கு உண்டு🙋♀️🙋♀️🙋♀️.*
*அல்குர்ஆன் (4: 12)*
*✍️✍️✍️மீதமுள்ளது பிள்ளைகளுக்கு*
*மீதமுள்ள சொத்துக்கள் மகனுக்கு இரண்டு பங்கு மகளுக்கு ஒரு பங்கு என்ற அடிப்படையில் பங்கிடப்பட வேண்டும்.*
‘ *இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு’ என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.✍️✍️✍️*
*அல்குர்ஆன் (4: 11)*
*20. 🕋இறைதூதர்களின்🟣 சொத்துக்கு🧶 யார்♥️ வாரிசு♥️*
*🙋♂️🙋♂️🙋♂️இறைத்தூதர்களாகிய) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.6*
*6725 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:*
*நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்ன ஃபாத்திமா (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தங்களுக்குச்*
*சேர வேண்டிய சொத்தைக் கேட்டனர். அப்போது அவர்களிருவரும் ஃபதக்’ பகுதி யிலிருந்த தமது நிலத்தையும் கைபரில் தமக்குக் கிடைத்த பங்கையுமே அவ்வாறு கோரினர்.7🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️6726 அவர்கள் இருவரிடமும் அபூபக்ர்*
*(ரலி) அவர்கள் கூறினார்கள்:*
*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,* *(இறைத்தூதர்களாகிய) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவையாகும். இந்தச் செல்வத்திலிருந்து தான் முஹம்மதின் குடும்பத்தினர் உண்பார்கள் என்று சொல்லக் கேட்டுள்ளேன் என்று கூறிவிட்டு, அல்லாஹ் வின் மீதாணையாக! இந்தச் செல்வத்தின் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு செயல்படக் கண்டேனோ அதில் எதையும் கைவிடாமல் நானும் அவ்வாறே செயல்படுவேன் என்று பதிலளித்தார்கள். இதனால் கோபித்துக் கொண்டு ஃபாத்திமா (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தாம் இறக்கும் வரை பேசவில்லை.8✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️6729.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என் வாரிசுகள் ஒரு தீனாரைக் கூட (வாரிசுப்) பங்காகப் பெறமாட்டார்கள். என் துணைவியருக்கான வாழ்க்கைச் செலவும் என் (பிரதிநிதி மற்றும்) ஊழியரின் ஊதியமும் போக நான்விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமேயாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.10🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️6727 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:* *(இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே.*
*இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.✍️✍️✍️*
*21. 🙋♂️🙋♀️🙋♂️கலாலா - சந்ததி🙋♀️🙋♂️🙋♀️ இல்லாதவர்🛑🛑🛑*
*🙋♂️🙋♂️🙋♂️சந்ததி இல்லாதவர் கலாலா எனப்படுவர். இத்தகையோர் சகோதர, சகோதரிகளை விட்டுச் சென்றால் சொத்துக்களை எவ்வாறு பங்கிட வேண்டும் என்று இவ்வசனம் (திருக்குர்ஆன் 4:12) கூறுகிறது.*
*இறந்தவருக்குப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள் என்று இவ்வசனம் கூறுகிறது.*
*ஆனால் இதே அத்தியாயத்தின் 176வது வசனத்தில் சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்கும் பாகம் வேறு விதமாகக் கூறப்படுகிறது.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும்போது அவனுக்குச் சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழிதவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன் (திருக்குர்ஆன் 4:176) என்று கூறப்படுகிறது✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் சகோதரிக்கு ஆறில் ஒரு பங்கு என்று 4:12 வசனம் கூறுகிறது.*
*ஒரு சகோதரி இருந்தால் மொத்தச் சொத்தில் பாதி என்று 4:176 வசனம் கூறுகிறது.*
*இரண்டும் முரண்படுவதால் பலரும் பலவிதமான விளக்கங்களைக் கூறியுள்ளனர்.*
*சிலர் கலாலா என்ற சொல்லுக்கு இந்த வசனத்தில் ஒரு விளக்கமும், 176வது வசனத்தில் வேறு விளக்கமும் கூறியுள்ளனர். இது தவறாகும்.*
*கலாலா என்ற சொல்லுக்கு சந்ததியில்லாமல் சகோதர சகோதரிகளை விட்டுச் செல்பவர் என்று 176வது வசனத்தில் அல்லாஹ்வே விளக்கம் கூறி விட்டதால் மற்றவர்கள் கூறும் விளக்கத்தை நாம் ஏற்கக் கூடாது.*
*சந்ததிகள் இல்லாமல் சகோதர சகோதரிகளை விட்டுச் செல்பவரைப் பற்றித்தான் இரண்டு வசனங்களும் கூறுகின்றன. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.*
*அப்படியானால் இரண்டு வசனங்களிலும் வெவ்வேறு அளவுகள் ஏன் கூறப்படுகின்றன? இதற்கு புகாரீயில் இடம் பெற்ற ஹதீஸ் விடையளிக்கிறது.*
*திருக்குர்ஆனில் கடைசியாக அருளப்பட்ட வசனம் 4:176 வசனம் தான் என்று பரா பின் ஆஸிப் (ரலி) அறிவிக்கிறார்கள்🙋♀️🙋♀️🙋♀️.*
*(புகாரீ 4605)*
*✍️✍️✍️எனவே 4:176 வசனத்தில் இறுதியாகக் கூறப்பட்ட சட்டம் 4:12 வசனத்தில் கூறப்பட்ட சட்டத்தை மாற்றி விட்டது என்பதே சரியாகும்.✍️✍️✍️*
*22. ☪️பாதிப்பு ஏற்ப்பாடத🧶 வையில்🟣 என்றால்♥️ என்ன❓☪️*
*🙋♂️🙋♂️🙋♂️இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் சிலருக்கு ஆறில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் ஒரு பங்கு, சிலருக்கு நான்கில் ஒரு பங்கு, சிலருக்கு இரண்டில் ஒரு பங்கு, சிலருக்கு எட்டில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் இரண்டு பங்கு என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.*
*பெரும்பாலும் இவ்வாறு பங்கிட்டுக் கொடுத்து விட முடியும் என்றாலும் சில நேரங்களில் இவ்வாறு பங்கீடு செய்ய முடியாத நிலை ஏற்படும்.*
*சொத்தை விட பங்கின் அளவு அதிகமாக இருந்தால் அப்போது ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டிய பங்கில் குறைவு ஏற்படலாம். பங்குகளை விட சொத்தின் அளவு அதிகமாக இருந்தால் அப்போது கிடைக்க வேண்டிய பங்குகளை விட ஒவ்வொருவருக்கும் அதிகமாகக் கிடைக்கும் நிலை ஏற்படக் கூடும்.*
*இதைச் சில உதாரணங்கள் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️ஒரு ரொட்டி இருக்கின்றது. அதை*
*யூஸுஃப் என்பவருக்கு நான்கில் ஒன்று,*
*உமர் என்பவருக்கு எட்டில் ஒன்று,*
*காலித் என்பவருக்கு எட்டில் மூன்று*
*அப்பாஸ் என்பவருக்கு இரண்டில் ஒன்று*
*என கொடுக்கச் சொல்கிறோம். நாம் கூறியபடி அனைவருக்கும் கொடுக்க முடியுமா?*
*எட்டில் ஒன்று, எட்டில் இரண்டு எனப் பிரிப்பதாக இருந்தால் ரொட்டியை எட்டு துண்டாக ஆக்க வேண்டும்.*
*அதில் நான்கில் ஒன்று என்பது இரண்டு ரொட்டித் துண்டுகளாகும்.*
*அதில் எட்டில் ஒன்று என்பது ஒரு ரொட்டித் துண்டுகளாகும்.*
*அதில் எட்டில் மூன்று என்பது மூன்று ரொட்டித் துண்டுகளாகும்.*
*அதில் இரண்டில் ஒன்று என்பது நான்கு ரொட்டித் துண்டுகளாகும்.*
*ஆக மொத்தம் கூட்டினால் பத்து துண்டுகள் ஆகின்றன. இருப்பதோ எட்டுத் துண்டுகள் தான்✍️✍️✍️.*
*🙋♂️🙋♂️🙋♂️மேற்கண்ட நான்கு நபர்களுக்கும் மேற்குறிப்பிட்ட கணக்குப்படி பங்கிட முடியாத நிலை ஏற்படுகிறது.*
*அவரவருக்குக் கிடைத்த துண்டுகளின் எண்ணிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு ரொட்டியை எட்டு துண்டுகளாக ஆக்குவதற்குப் பதிலாக, பத்து துண்டுகளாக ஆக்கினால் எல்லோருக்கும் சமமான அளவில் பாதிப்பு ஏற்படும். அதாவது ரொட்டியை எட்டுத் துண்டுகளாக ஆக்காமல் பத்து துண்டுகளாக ஆக்கி யூஸுபுக்கு இரண்டு, உமருக்கு ஒன்று, காலிதுக்கு மூன்று, அப்பாஸுக்கு நான்கு எனப் பிரித்தால் மீதமில்லாமல் ரொட்டியை நால்வருக்கும் பிரித்துக் கொடுக்க முடியும்.*
*ஆனால் யூஸுபுக்கு எட்டுபாகம் வைத்து அதில் இரண்டு கிடைப்பதற்குப் பதிலாக பத்துபாகம் வைத்து அதில் இரண்டு கிடைக்கிறது. இருபது சதவிகிதம் இவருக்குக் குறைகிறது. இது போல் ஒவ்வொருவருக்கும் இருபது சதவிகிதம் என்ற அளவில் குறைவாகக் கிடைக்கிறது🙋♀️🙋♀️🙋♀️.*
*✍️✍️✍️இப்படி ஒவ்வொருவரின் பங்கும் சமஅளவில் குறைக்கப்படுகின்றது. இதனால் ஒருவர் பாதிக்கப்பட்டு மற்றவர் பாதிக்கப்படாத நிலை ஏற்படாது.*
*இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்திலும் சில நேரங்களில் இவ்வாறு பிரிக்க முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்படும்போது சாத்தியமில்லாத ஒன்றை அல்லாஹ் சட்டமாக்கி விட்டான் என்று விமர்சிக்க வாய்ப்பு உண்டு. அல்லாஹ் சொன்னபடி பிரித்துக் காட்டுங்கள் என்று சவால் விடவும் வாய்ப்பு உண்டு.*
*இந்தச் சட்டத்தை வழங்கிய இறைவனுக்கு அனைத்தும் தெரியும் என்பதால் இதுபோல் விமர்சனங்கள் வரமுடியாத வகையில் இவ்வசனத்தில் உரிய சொற்களைச் சேர்த்துச் சொல்கிறான். இந்தப் பங்கீடுகள் பாதிப்பு இல்லாத வகையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை இவ்வசனத்தில் சேர்த்து விட்டான்.*
*சில நேரங்களில் இவ்வாறு பிரித்துக் கொடுக்க முடியாமல் போகும் என்றும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பாதிப்பு இல்லாத வகையில் பிரித்துக் கொள்ள வேண்டும் எனவும் யாரும் விமர்சிக்க இடம் கொடுக்காமல் அவனே முன்கூட்டி சொல்லி விடுகிறான்✍️✍️✍️.*
*🙋♂️🙋♂️🙋♂️ஒரு பெண் இறக்கும்போது,*
*கணவன்*
*இரண்டு பெண் குழந்தைகள்*
*தாய்*
*தந்தை*
*ஆகியோரை விட்டுச் சென்றால்*
*கணவனுக்கு நான்கில் ஒன்று 1/4*
*இரு பெண் குழந்தைகளுக்கு மூன்றில் இரண்டு 2/3*
*தாய்க்கு ஆறில் ஒன்று 1/6*
*தந்தைக்கு ஆறில் ஒன்று 1/6*
*எனப் பங்கிட வேண்டும் என்பது திருக்குர்ஆன் கூறும் சட்டம்.*
*மூன்றில் ஒரு பங்கும், நான்கில் ஒரு பங்கும் கொடுக்க வேண்டுமானால் இரண்டுக்கும் பொதுவான 12 பங்குகளாக மொத்தச் சொத்தைப் பிரித்தால் தான் இது சாத்தியமாகும்.*
*பன்னிரண்டு பங்கு வைத்து அதில் நான்கில் ஒரு பங்கு (கணவனுக்கு) – 3*
*பன்னிரண்டு பங்கில் மூன்றில் இரு பங்கு (இரு மகள்களுக்கு) – 8*
*பன்னிரண்டு பங்கில் ஆறில் ஒரு பங்கு (தந்தைக்கு) – 2*
*பன்னிரண்டு பங்கில் ஆறில் ஒரு பங்கு (தாய்க்கு) – 2*
*இவ்வாறு பங்கீடு செய்தால் 8+3+2+2 = 15 ஆகும்.*
*பன்னிரண்டு பங்கு வைத்து மேற்கண்டவாறு பிரித்தால் மொத்தம் 15 பங்குகள் தேவை என்பதால் மூன்று பங்குகள் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே மொத்த சொத்தை 12க்கு பதிலாக 15 பங்குகளாக ஆக்கினால் பற்றாக்குறை இல்லாமல் அனைவருக்கும் கொடுக்க முடியும்.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️பன்னிரண்டு பங்கில் இந்தத் தொகையைக் கொடுத்தால் தான் அவரவருக்குரிய சதவிகிதம் கிடைக்கும். ஆனால் இப்போது 15 பங்கிலிருந்துதான் மேற்கண்ட பங்கைக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.*
*இவ்வாறு கொடுக்கும்போது அல்லாஹ் குறிப்பிட்ட பாகம் யாருக்கும் கிடைக்காது. 12ல் 3 கொடுத்தால்தான் அது கால் பாகமாக ஆகும். 15ல் 3 கொடுத்தால் அது கால் பாகமாக ஆகாது.*
*இப்படியே ஒவ்வொருவரின் பங்கும் குறைகிறது. ஒருவர் மட்டும் 12ல் 3 தான் எனக்கு வேண்டும் என்று அடம் பிடித்தால் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்.* *இது போன்ற சூழ்நிலையில் சிலருக்கு மட்டும், உதாரணமாக கணவனுக்கு மட்டும் 12 பங்கில் 3 கொடுத்து விட்டு மற்றவர்களுக்குக் குறைத்தால் அது மற்றவர்களுக்குக் கேடு தரும்✍️✍️✍️.*
*🙋♂️🙋♂️🙋♂️15 பங்கிலிருந்து பங்கிட்டுக் கொடுத்தால் நால்வருக்கும் அவரவர் சதவிகிதத்திற்கேற்ப சிறிது குறையும். ஒருவருக்குக் குறைந்து மற்றவருக்கு நிறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்படாது.*
*இவ்வாறு அவரவர் சதவிகிதத்திற்கேற்ப குறைத்துப் பங்கிட வேண்டும் என்பதற்காகத்தான் “பாதிப்பு ஏற்படாத வகையில்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது* .
*எனவே இழப்பை அனைவரும் சமமான சதவிகிதத்தில் பிரித்துக் கொள்ளும்போது ஒருவருக்கு மட்டும் பாதிப்பு வராது. இது போன்ற நிலைமைகளுக்காகவே “யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில்” என அல்லாஹ் கூறுகிறான்.*
*இவ்வளவு நுணுக்கமாக தேவையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பது இது இறைவனின் வார்த்தை தான் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது🙋♀️🙋♀️🙋♀️.*
*23. 🙋♂️ஆண்🧕 பெண்🧕 பிள்ளைகளின்🙋♀️ பங்கு🙋♂️*
*✍️✍️✍️இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு” என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்✍️✍️✍️.*
*அல்குர்ஆன் (4 : 11)*
*24. 🧕🙋♀️பெற்றோரைக் கவனிக்கதவருக்கு சொத்துரிமை உண்டா❓🙋♂️🧕*
*🙋♂️🙋♂️🙋♂️இறந்த போன கணவரது சொத்தில் பங்கு பிரிப்பது எவ்வாறு?*
*வாரிசுகள் 1 மனைவி,2 மகன்,1 மகள். மகனில் 1மகன் 25 வருடங்களாக தனிக்குடித்தனம் இருக்கின்றார், தாயை கவனிப்பது இல்லை. சொத்து உண்டாக்கியதில் மகனின் பங்கு எதுவும் கிடையாது. மகள் தாயை பராமரித்து வருகின்றார். இந்த நிலையில் இறந்தவரின் வஸிய்யத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது❓🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️தனிக்குடித்தனம் இருப்பது சொத்துரிமையை பாதிக்காது, தாயைக் கவனிப்பதும் கவனிக்காமல் இருப்பதும் சொத்துரிமை சட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.* *சொத்தைப் பெருக்குவதில் ஒருவருக்கு எந்த அளவுக்கு பங்களிப்பு உள்ளது என்பதற்கும் வாரிசுரிமை* *சட்ட்த்துக்கும் சம்மந்தம் இல்லை. குடும்பத்துடன் சேர்ந்து குட்டுக் குடும்பமாக இருப்பவருக்கும் தனிக்குடித்தமாக வாழ்பவருக்கும் சம்மான சொத்துரிமை தான் உள்ளது.* *பெற்றோரைக் கவனிக்கும் பிள்ளைகளுக்கும் கவனிக்காத பிள்ளைகளுக்கும் சமமான உரிமை தான் உள்ளது சொத்தைப் பெருக்குவதில் உழைத்தவருக்கும் உழைக்காதவருக்கும் சமமான பங்குதான் உள்ளது. உயிருடன் இருக்கும் போதே ஒருமகன் கஷ்டப்பட்டு தொழிலைப் பெருக்குகிறான். இனொரு மகன் தறுதலையாகத் திரிகிறன் என்றால் உயிருடன் இருக்கும் போது பாடுபடும் மகனுக்கு சில சொத்துக்களை எழுதி வைத்தால் அது பிள்ளைகள் மத்தியில் பாரபட்சம் காட்டியதாக ஆகாது. உழைப்பவன் உழைக்காதவன் என்ற அடிப்படையில் பாரபட்சம் காட்டினால் அது சரியான நீதியாகும். அப்படி செய்யாமல் சொத்துக்கு உரியவர் இறந்து விட்டால் அனைவருக்கும் இஸ்லாம் வழங்கியுள்ள குறித்த சதவிகிதம் சமமாக கிடைக்கும்✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️தாயை கவனிக்கவில்லை என்பது பெருங்குற்றம் என்பதில் சந்தேகமில்லை. எனினும் இதனால் தந்தையின் சொத்திலிருந்து அவனுக்கு (மகனுக்கு) வந்து சேரவேண்டிய பங்கில் பாதிப்பு ஏற்படாது. தந்தையின் சொத்திலிருந்து அவனுக்குரிய பங்கு அவனுக்கு கிடைத்து விடும்🙋♀️🙋♀️🙋♀️.*
*✍️✍️✍️பெற்றோர்களைக் கவனிக்குமாறும் அவர்களின் மனம் நோகாது நடந்து கொள்ளுமாறு இஸ்லாம் பிள்ளைகளுக்குக் கட்டளையிடுகின்றது. பெற்றோர்களின் மனதை நோவினை செய்வது பெரும்பாவம் என்று நமது மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தாயை கவனிக்கத் தவறிய குற்றத்திற்குரிய தண்டனையை இறைவன் அப்பிள்ளைகளுக்கு வழங்குவான் என்ற எச்சரிக்கையை அவரது மகனுக்கு நினைவூட்டுங்கள். அவர் திருந்தி தனது தாயைக் கவனிக்க கூடும்.✍️✍️✍️*
*📚📚📚 தலைப்பு 10 குர்ஆன் வசனம் இறங்கிய காரணம் 📚📚📚*
*1. 🕋🕋🕋ஸபபுன்னுஸுல் ☪️☪️☪️- 📚📚📚முன்னுரை🕋🕋🕋*
*இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 103*
*🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
No comments:
Post a Comment