பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, November 14, 2020

இஸ்லாத்தை அறிந்து - 106

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய  மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 106 👈👈👈* 
 

*📚📚📚 தலைப்பு  10  குர்ஆன் வசனம் இறங்கிய காரணம் 📚📚📚* 


 *16. 👹👹👹ஜின்கள்📚📚 குர்ஆனை📚📚 செவியேற்றபோது🕋🕋 இறங்கிய🕋🕋 வசனம்👹👹👹* 


 *17. ☪️☪️☪️நபியே☪️☪️ ஏன்🙋‍♂️🙋‍♂️ ஹராமாக்கினீர் 🙋‍♀️🙋‍♀️என்ற ⚫⚫வசனம்📚📚📚* 


 *18. 📚📚📚அத்தியாயம்📚📚 முனாஃபிகூன்👹👹 என்ற🙋‍♂️🙋‍♀️ வசனம்📚📚📚* 


 *19. 🕋🕋🕋ஜும்மா🕋🕋 அத்தியாயத்தின்☪️☪️ சில🙋‍♂️🙋‍♀️ வசனங்கள்📚📚📚* 


 *20. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அபூதல்ஹா🙋‍♀️🙋‍♀️ விருந்தினரை🟣🟣 கண்ணியப்படுத்திய🧶🧶 போது 🟡வந்த🟠 வசனம்📚📚📚* 


*16. 👹ஜின்கள்📚 குர்ஆனை📚 செவியேற்றபோது🕋 இறங்கிய🕋 வசனம்👹* 


 *✍️✍️✍️இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் உக்காழ் எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்களைத் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது தீப்பந்தங்கள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல் தம் தலைவர்களிடம்) திரும்பி வந்தன. அப்போது தலைவர்கள், உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். ஷைத்தான்கள், வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டு விட்டது; எங்கள் மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டன என்று பதிலளித்தனர். புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்தி ருக்கும். அதுவே உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்தி ருக்கவேண்டும். எனவே நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங் களிலும்) சென்று புதிதாகச் சம்பவித்து விட்ட இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள் என்றனர். உடனே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் பயணம் செய்து தங்களுக்கும் வானுலகச் செய்திக ளுக்கும் இடையே தடுப்பாய் அமைந்த அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயலாயினர்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️திஹாமா எனும் (மக்கா) பகுதியை நோக்கி ஷைத்தான்கள் வந்த போது உக்காழ் சந்தையை நோக்கிச் சென்று கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நக்லா எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு ஃபஜ்ருத் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண் டிருந்தார்கள்.அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்ட போது அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இது தான் என்று கூறிவிட்டு, தம் கூட்டத் தாரிடம் சென்று, எங்கள் கூட்டத்தாரே! திண்ணமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர் வழியைக் காட்டுகின்றது. எனவே நாங்கள் அதை விசுவாசித்தோம். எங்கள் இறைவனுக்கு (இனி) நாங்கள் ஒரு போதும் யாரையும் இணையாகக் கருதமாட்டோம் என்று கூறினர். (இதையொட்டி) மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் தன் தூதருக்கு, (நபியே!) நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியேற்றனர்… என்று தொடங்கும் இந்த (திருக்குர்ஆன் 72ஆவது) அத்தியாயத்தை அருளினான்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *(புகாரி 4921)* 


 *17. ☪️நபியே☪️ ஏன்🙋‍♂️ ஹராமாக்கினீர் 🙋‍♀️என்ற ⚫வசனம்📚* 


 *✍️✍️✍️நபியே உம்முடைய மனைவியரின் திருப்திகளை நீர் நாடி அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை நீர் ஏன் ஹராமாக்கிக் கொண்டீர்? அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன் மிகக் கிருபையுடையவன். (அத்தஹ்ரீம், வசனம் 1)✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம், (அவர்களது அறையில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம்: (தேன் சாப்பிட்ட பின்,) நம்மவரில் எவரிடம் நபி (ஸல்) அவர்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️முதலில் வருவார்களோ அவர், நபி (ஸல்) அவர்களிடம் கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே என்று கூறிட வேண்டும்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️(வழக்கம் போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டுவிட்டு நபி (ஸல்) அவர்கள் வந்த போது நாங்கள் பேசி வைத்திருந்த பிரகாரம் கூறியதற்கு) அவர்கள், இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை). ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் குடித்து வந்தேன். (இனிமேல்,) நான் ஒரு போதும் அதைக் குடிக்க மாட்டேன்; நான் சத்தியமும் செய்து விட்டேன் என்று கூறிவிட்டு, இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே! என்றும் கூறினார்கள். (இது குறித்தே  திருக்குர்ஆன் 66:1ஆவது இறைவசனம் அருளப்பெற்றது.)🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *(புகாரி 4912)* 


 *18. 📚அத்தியாயம்📚 முனாஃபிகூன்👹 என்ற🙋‍♂️ வசனம்📚* 


 *✍️✍️✍️ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *ஒரு புனிதப் போரில் நான் இருந்து கொண்டிருந்தேன்.2 அப்போது, (நயவஞ்சகர் களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை என்பவன் அல்லாஹ்வின் தூதருடன் இருப்ப வர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள் என்று கூறி விட்டுத் தொடர்ந்து, நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தவர்களான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள் என்று கூறினான். அவன் கூறியதை (நான்) என் சிறிய தந்தை(யாக மதிக்கும் ஒருவர்) இடம் அல்லது உமர் (ரலி) அவர்களிடம் கூறினேன். அவர் அதை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். (நான் சென்று அவன் சொன்னதை) நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஆளனுப்பினார்கள். (அவர்கள் தம்மிடம் வந்த போது அது குறித்து நபியவர்கள் வினவினார்கள்.) நாங்கள் அதைச் சொல்லவேயில்லை என்று அவர்கள் சாதித்தார்கள்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் சென்னதை நம்ப மறுத்து விட்டார்கள்; அப்துல்லாஹ் பின் உபை (சத்தியமிட்டுச்) சொன்னதை உண்மையென்று நம்பினார்கள். அப்போது, எனக்குக் கவலை ஏற்பட்டது. அது போன்ற கவலை என் வாழ் நாளில் ஓரு போதும் எனக்கு ஏற்பட்டதில்லை. பிறகு நான் என் வீட்டில் அமர்ந்து கொண் டிருந்தேன். அப்போது என் சிறிய தந்தை என்னிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபம் கொள்ளும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று கூறினார்கள். அப்போது, இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்ற போது என்று தொடங்கும் இந்த (திருக்குர்ஆன் 63:1ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது தம்மீது அருளப்பட்டிருந்த வசனத்தை எனக்கு) ஓதிக்காட்டினார்கள். பிறகு, ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான் (நீ சொன்னதை உண்மை என்று தெளிவுபடுத்திவிட்டான்) என்று கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *(புகாரி 4900)* 


 *19. 🕋ஜும்மா🕋 அத்தியாயத்தின்☪️ சில🙋‍♂️ வசனங்கள்📚* 


 *✍️✍️✍️ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜுமுஆத் தொழுகையில்) இருந்த போது, (வியாபாரத்திற்காக உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு) ஒட்டகக் குழு ஒன்று வந்தது. (அதைக் கண்ட மாத்திரத்தில், நபிகளாரின் முன்னிலையிலிருந்த மக்கள்) கலைந்து சென்றுவிட்டனர். பன்னிரண்டு நபர்களே எஞ்சியிருந்தனர். அப்போது தான் அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கையையோ கண்டுவிட்டால் அவற்றின் பக்கம் விரைந்து சென்றுவிடு கின்றனர் எனும் (திருக்குர்ஆன் 62:11ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.✍️✍️✍️* 


 *(புகாரி 4899)* 


 *20. 🙋‍♂️அபூதல்ஹா🙋‍♀️ விருந்தினரை🟣 கண்ணியப்படுத்திய🧶 போது 🟡வந்த🟠 வசனம்📚* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச்சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை. அப்போது,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான் என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே! என்று சொல்லி (அவரை அழைத்துக் கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கி, (இவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளி. (இவருக்குத் தராமல்) எதனையும் நீ (உன்னிடமே) சேமித்து வைத்துக் கொள்ளாதே! என்று சொன்னார்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️அதற்கு அவர் மனைவி, அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகளின் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லை என்று பதிலளித்தார். அவர், (நம்) குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்து விடு! பிறகு நீ வந்து, (வீட்டிலிருக்கும் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு, விளக்கை ஏற்றிவிடுவது போல் பாவனை செய்து) விளக்கை அணைத்து விடு! (இருப்பதை விருந்தாளிக்குக் கொடுத்து விட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக் கொள்வோம் என்று சொன்னார். அவ்வாறே அவர் (மனைவி) செய்தார். பிறகு, (விருந்தளித்த) அம்மனிதர் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள், இன்னார் இன்னாரை (உங்கள் இருவரை)க் கண்டு மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் வியப்படைந்தான் அல்லது (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண் டான் என்று சொன்னார்கள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், தமக்கே தேவை இருந்தும் கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்கு கிறார்கள்… எனும் (திருக்குர்ஆன் 59:9ஆவது) வசனத்தை அருளினான்.✍️✍️✍️* 


 *(புகாரி 4889)* 


 *21. ☪️☪️☪️நபியின்🕋🕋 முன் 🧶சப்தத்தை🟣 உயர்த்திய🟡 போது🟠 இறங்கிய ⚫வசனம்📚📚📚* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 107* 


 *🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment