பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, November 15, 2020

நாவை* ⤵️ *பேனுவோம் -2

*💐அஸ்ஸலாமு அலைக்கும்*

               *🔥 நாவை*
                                ⤵️
                        *பேனுவோம் 🔥*

                 *✍🏻....தொடர் { 02 }*

*☄️மானத்தின்*
                *முக்கியத்துவம்*

67- حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ : حَدَّثَنَا بِشْرٌ قَالَ : حَدَّثَنَا ابْنُ عَوْنٍ ، عَنِ ابْنِ سِيرِينَ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ ، *عَنْ أَبِيهِ ذَكَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَعَدَ عَلَى بَعِيرِهِ وَأَمْسَكَ إِنْسَانٌ بِخِطَامِهِ ، أَوْ بِزِمَامِهِ- قَالَ أَيُّ يَوْمٍ هَذَا فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ سِوَى اسْمِهِ قَالَ أَلَيْسَ يَوْمَ النَّحْرِ قُلْنَا بَلَى قَالَ فَأَىُّ شَهْرٍ هَذَا فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ فَقَالَ أَلَيْسَ بِذِي الْحِجَّةِ قُلْنَا بَلَى قَالَ فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ بَيْنَكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ فَإِنَّ الشَّاهِدَ عَسَى أَنْ يُبَلِّغَ مَنْ هُوَ أَوْعَى لَهُ مِنْهُ.*

_அபூபக்ரா (நுஃபைஉ பின் அல்ஹாரிஸ்-ரலி) அவர்கள் கூறியதாவது :_

_*🍃 (துல்ஹஜ் 10ஆம் நாள்) நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந் திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், இது எந்த நாள்❓” என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா❓” என்று கேட்டார்கள். நாங்கள் ஆம்’ என்றோம். அடுத்து இது எந்த மாதம்❓” என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம்._

_அப்போது அவர்கள் இது துல்ஹஜ் மாதமல்லவா❓” என்றார்கள். நாங்கள் ஆம்’ என்றோம்._ _*நபி (ஸல்) அவர்கள் உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம், மரியதைகளும் உங்களுக்குப் புனித மானவையாகும்”*_ _என்று கூறிவிட்டு, (இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிடவேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மைவிட நன்கு புரிந்து நினைவில்கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக் கூடும்” என்றார்கள்._

       *📚நூல் : புகாரி (67)📚*

*🏮🍂இஸ்லாம் ஒருவரின் மானத்திற்கும், மரியாதைக்கும் எவ்வளவு முக்கியத்து வம் வழங்கியிருக்கிறது என்பதை இந்த செய்தியை படிப்பவர்கள் விளங்கி கொள்ளலாம்.* அல்லாஹ்வை பயந்த எந்த முஸ்லிமும் பிறமுஸ்லிமை கொள்ள மாட்டார். அல்லாஹ்வை பயந்த எந்த முஸ்லிமும் பிறரின் பொருளை அபகரிக்க மாட்டார். *ஆனால் இன்று முஸ்லிம்கள் சர்வ சாதரணமாக பிறமுஸ்லிம்களின் மானம், மரியாதை விஷயங்களில் விளையாடி விடுகிறார்கள்.*

*🏮🍂பிற முஸ்லிம்களின் மானம் மரியாதையில் விளையாடுவது கஃபதுல்லாஹ்வை இழிவு படுத்தியத்திற்கு சமமானதாகும். அந்த புனித நாட்களை இழிவு படுத்தியதற்கு சமமானதாகும் என்ற கருத்தையும் இந்த நபிமொழியில் நாம் அறியலாம்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment