பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, November 14, 2020

நாவை பேனுவோம் - 5

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

               *🔥 நாவை*
                                ⤵️
                        *பேனுவோம் 🔥*

                 *✍🏻....தொடர் { 05 }*

            *☄️ அவதூறு { 01 } ☄️*

*🏮🍂ஒருவரின் மானம் மரியாதை கெடுக்க கூடிய காரியங்களில் அவதூறு முக்கிய இடத்தை வகிக்கிறது. ஒரு ஆண் மீது அவதூறு சொல்லும்போது அவன் அடையும் துன்பத்தைவிட ஒழுக்கமுள்ள பெண்ணின் மீது ஒருவன் அவதூறு சுமத்துவானேயானால் அதனால் அந்தப் பெண்ணின் வாழ்க்கையே பாழகிவிடும் என்பதை உணர்ந்த இஸ்லாம்,* ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்துவோ ருக்கு 80 கசையடி கொடுக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றது. பெண்களு டைய மானம், மரியாதை விஷயத்தில் இஸ்லாம் கூடுதல் கவனம்
செலுத்து கின்றது.

*وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌ ۚ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ‏*

_*🍃ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சி யத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.*_

     *📖(அல் குர்ஆன் 24:4)📖*

*🏮🍂ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு சொல்பவர்களுக்கு 80 கசையடி கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பிற காரியங்களுக்காக அவர் சாட்சி சொல்ல வரும் போதெல்லாம் நீ அவதூறு சொன்னவன் உன்னுடைய சாட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மற்றவர்கள் கூறுவது இவ்வாறு அவதூறு கூறியவருக்கு சரியான தண்டனை இதைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. இன்று பெருபான்மையான முஸ்லிம்கள் விபச்சாரம் புரிவது கிடையாது.* ஆனால் பிற ஒழுக்கமுள்ள பெண்கள் மீது விபச்சார பழியை சொல்லி விடுவார்கள். விபச்சாரம் செய்பவர்களை கண்டால் அவர்களை கண்டிப்பார்கள், காரி உமிழுவார்கள், அவரோடு சேர மாட்டார்கள், எவ்விதமான எதிர்ப்பையும் காட்டு வார்கள். *ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு சொல்பவர்களை பார்த்தால் எந்த எதிர்ப்பையும் காட்டமாட்டார்கள். அவனை வரவேற்பார்கள்.*

*🏮🍂எல்லா விதமான ஆதரவையும் தெரிவிப்பார்கள். இன்று அவதூறு கேட்பவர்களில் சிலரை பார்க்கிறோம். இதற்கு காட்டுகின்ற ஆர்வத்தைப் போல  ஒரு மார்க்க சொற்பொழிவை கேட்க முன் வரமாட்டார்கள். அவதூறை கேட்பவர்கள் அதை பரப்ப கடும் குஷியில் இருப்பார்கள்.* அவர்களுக்கு அதை வெளியே சொல்லவில்லையென்றால் தலையே வெடித்து விடும். யாருக்கு சொல்ல வேண்டுமோ அவர் வெளிநாட்டில் இருந்தாலும் அதை போன் மூலம் சொல்லிவிடுவார். *இத்தகைய நபர் சாதரண மற்ற நேரங்களில் வெளி நாடுகளில் இருக்கும் தனது நண்பர்களும் உறவினர்களும் நோயுற்று இருந்தாலும்கூட ஒரு தடவையும் விசாரித்திருக்கமாட்டார். ஆனால் அவதூறுக்காக பல தடவை தொலைபேசியை பயன்படுத்துவார்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment