*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️*
*🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕*
*🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹*
*❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤*
*🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋*
*🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*
*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*
*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*
*👉👉👉 தொடர் பாகம் 103 👈👈👈*
*📚📚📚 தலைப்பு 10 குர்ஆன் வசனம் இறங்கிய காரணம் 📚📚📚*
*1. 🕋🕋🕋ஸபபுன்னுஸுல் ☪️☪️☪️- 📚📚📚முன்னுரை🕋🕋🕋*
*2. 👹👹👹நயவஞ்சகர்கள்🙋♂️🙋♂️ பற்றி🙋♀️🙋♀️ இரு🟡🟡 கர்த்து 🟠🟠கொண்ட🟣🟣 போது👹👹👹*
*3. ♥️♥️♥️இழிந்தவர்களை☪️☪️ வெளியேற்றி🧶🧶 விடுவோம்🥎🥎 என்று🛑🛑 கூறியபோது♥️♥️♥️*
*4. 👹👹👹ஷைத்தான் 👹👹இவரை 🧶விட்டு🧶 விட்டான்🥎🥎 என்று🟣🟣 கூறிய🟡🟡 போது🟠🟠*
*5. ☪️☪️☪️இஸ்லாத்தை☪️☪️ ஏற்றவரை🕋🕋 தடுத்தர்க்காக🟣🟣 இறைவசனம்📚📚 இறங்கியதா❓☪️☪️☪️*
*1. 🕋ஸபபுன்னுஸுல் ☪️- 📚முன்னுரை🕋*
*✍️✍️✍️மனிதருக்கு நல்வழிகாட்டுதலான குர்ஆனை அல்லாஹுதஆலா இருபத்து மூன்று வருடகால இடைவெளியில், விரும்பிய பகுதியை தான் விரும்பும் நேரத்தில் நபியவர்களுக்கு இறக்கிவைத்தான். இப்படித்தான் குர்ஆனின் பெரும் பகுதி இறக்கப்பட்டது.*
*ஆயினும், குர்ஆனின் சில பகுதிகள், குறிப்பிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வாகவோ அல்லது நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாகவோ இறக்கப்பட்டுள்ளன, ஒரு வசனம்(அல்லது சில வசனங்கள்) இறங்குவதற்கு காரணமாயிருந்த பிரச்னையும் கேள்வியும் ஸபபுன் னுஸுல் (இறங்கியதன் காரணம்) என்று கூறப்படும்.✍️✍️✍️*
*☪️☪️உதாரணம்: ஒன்று (பிரச்னை காரணமாகயிருத்தல்)☪️☪️*
*🙋♂️🙋♂️🙋♂️இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “உன் நெருங்கிய உறவினர்களை எச்சரிக்கை செய்” என்ற (சூரத்துஷ்ஷுஅராஃ 214) வசனம் இறங்கியதும் நபி(ஸல்) அவர்கள் ஸஃபா மலை மீது ஏறி நின்று தன் உறவினர்களை சப்தமாட்டு அழைத்தார்கள். எல்லோரும் ஒன்று கூடினார்கள் அப்போது நபியவர்கள், இந்த மலைக்குப் பின்னிருந்து ஒரு குதிரைப்படை (உங்களைத்தாக்க)வருகிறது என்று நான் கூறினால், என்னை நம்புவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கவர்கள் நீங்கள் பொய் சொல்லி நாங்கள் கேட்டதில்லை என்று பதிலளித்தார்கள். அப்போது, கடும் வேதனை வருவதற்கு முன் உங்களுக்கு எச்சரிக்கையாளனாக நான் இருக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூலஹப், “உனக்கு அழிவு உண்டாகட்டும் இதற்குத்தானா எங்களை ஒன்று கூட்டினாய்”, என்று கூறி எழுந்து சென்றான், அப்போது, “தப்பத்யதா அபீலஹபிவ்வதப்” என்ற (சூரத்துல் மஸத்) சூரா இறங்கியது.🙋♀️🙋♀️🙋♀️*
*ஆதாரம்: புகாரி(4971) முஸ்லிம்.*
*✍️✍️✍️அதாவது சூரத்துல் மஸத் இறங்குவதற்கு காரணமாக இருந்தது நபி(ஸல்) அவர்கள் ஸஃபா மலையில் நின்று தம் உறவினர்களுக்கு பிரச்சாரம் செய்த நிகழ்ச்சியாகும். ஆகவே இந்திகழ்ச்சி சூரத்துல் மஸதிற்கு ஸபபுன்னுஸுல் ஆகும்.✍️✍️✍️*
*☪️☪️உதாரணம் இரண்டு: (கேள்வி காரணமாயிருத்தல்)☪️☪️*
*🙋♂️🙋♂️🙋♂️கவ்லா பின்த் ஸஃலபா(ரலியல்லாஹீ அன்ஹா) அவர்களை அவரது கணவர் அவ்ஸ் பின் அஸ்ஸாமித்(ரலி) “ளிஹார்” செய்தார். (அச்சமூகத்தில் ளிஹார் என்பது கணவன் தன் மனைவியைப் பார்த்து, “நீ எனக்கு என் தாயின் முதுகு போல் ஹராம் ஆவாய்” என்று கூறி பிரிவது, இது தலாக்கைப் போல் முழுமையான பிரிவை ஏற்படுத்தாததினால் பெண்ணிற்கு கொடுமை புரிவதாக அமையும்). இந்த ளிஹாருக்க எதிராக நியாயம் கேட்டு தன்னிலையை விளக்கி கவ்லா(ரலி) அவர்கள் நபியிடம் தர்க்கம் செய்தார். அதற்கு தீர்வு கூறி சூரத்துல் முஜாதலாவின்🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்தித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் – மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன், (எல்லாவற்றையும்) பார்ப்பவன்.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️“உங்களில் சிலர் தம் மனைவியரைத் “தாய்கள்” எனக் கூறிவிடுகின்றனர், அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்” (ஆகிவிடுவது) இல்லை இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் – எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் – ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன், மிகவும் மன்னிப்பவன்…*
*எனத் தொடரும் ஆரம்பப்பகுதிகளை அல்லாஹ் இறக்கினான்.(ஹதீஸின் கருத்து) – அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: இப்னுமாஜா, ஹாக்கிம்🙋♀️🙋♀️🙋♀️.*
*✍️✍️✍️கவ்லா(ரலி) தனக்கொரு முடிவைக்கேட்டு நபியிடம் தர்க்கம் செய்த நிகழ்ச்சி, சூரத்துல் முஜாதலாவின் துவக்கம் பகுதிக்கு “ஸபபுன்னுஸுல்” ஆகும்.*
*எல்லா வசனம்களுக்கும் ஸபபுன்னுஸுல் இருக்கிறதா?*
*குர்ஆனின் ஒவ்வொரு வசனத்துக்கும் ஸபபுன்னுஸுல் இல்லை. ஏனென்றால், இஸ்லாமிய நம்பிக்கையையும் இஸ்லாத்தின் கடமைகளையும் நடைமுறைக் கூட்டங்களையும் விளக்குவதற்காக அல்லாஹ் தன் விருப்பத்தின் படி எந்த நிகழ்ச்சியோடும் பிரச்னையோடும் தொடர்பில்லாமலும் எந்தக் கேள்வியும் கேட்கப்படாத நிலையிலும் குர்ஆனின் பெரும் பகுதியை இறக்கிவைத்துள்ளான்* *குர்ஆன் இரண்டு வகையில் இறங்கியது. ஒன்று தானாக இறங்கியது. மற்றொன்று ஏதேனும் நிகழ்ச்சி அல்லது கேள்வியின் பின்னணியில் இறங்கியது என்ற அல்ஜஃபரீயின் கூற்றை இமாம் ஸுயூத்தி அவர்கள் தனது அல் இத்கான் என்ற நூலின் முதல் பாகத்தில் பக்கம் 28ல் குறிப்பிட்டுள்ளார்கள்.✍️✍️✍️*
*☪️☪️ஸபபுன்னுஸுலை அறிவதால் விளையும் பலன்:☪️☪️*
*🙋♂️🙋♂️🙋♂️வசனம் இறங்கியதன் காரணத்தை அறிவது அதனை தெளிவாக புரிந்து கொள்வதற்கு சிறந்த வழியாகும். சில வசனம்க்களில் மூடலாக குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை ஸபபுன்னுஸுலை அறிவதனாலேயே விவரமாக புரிந்து கொள்ள முடிகிறது.*
*உதாரணமாக, “இன்ன ஸஃபா வல் மர்வத்த மின்ஷஆயிரில்லாஹ்” என்று தொடங்கும் சூரத்துல் பக்கராவின் 158வது வசனத்தின் பொருள், “ஸஃபாவும் மர்வாவும்” அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளவை. எனவே யார் ஹஜ்ஜோ அல்லது உம்ராவோ செய்கிறாரோ அவர் அவ்விரண்டிலும் சுற்றிவருவது (ஸஃயி செய்வது) குற்றமில்லை”.*
*இந்த ஆயத்தில் குற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளதின் படி பார்த்தால் ஸஃபா மர்வாவில் ஸஃயி செய்வது அவசியமில்லை என்று புரியமுடிகிறது, ஆனால் அப்படிப் புரிவது தவறு என்பது ஸபபுன்னுஸுலை அறிந்தால் புலனாகும்🙋♀️🙋♀️🙋♀️.*
*✍️✍️✍️உர்வா கூறுகிறார்: நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் “இன்ன ஸஃபா வல் மர்வத்த மின்ஷஆயிரில்லாஹ்” (சூரத்துல் பக்கரா 158) என்ற அல்லாஹ்வின் கூற்றுப்படி, ஒருவர் ஸஃபா மர்வாவில் சுற்றிவராவிட்டால் (அதாவது ஸஃயி செய்யாவிட்டால்) குற்றமாகும் என்று நான் கருதவில்லை என்றேன். அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள், “என் சகோதரியின் மகனே நீ சொல்வது தவறு, நீ கூறுகிற விளக்கம் சரியாக இருக்குமென்றால் அந்த ஆயத்தில் “ஸஃபா மர்வாவில் ஸஃயி செய்யாமலிருப்பது குற்றமில்லை” என்று தான் இடம் பெற்றிருக்கும். எனினும் இந்த வசனம் இறங்கக் காரணம், அன்ஸார்கள் இஸ்லாத்திற்கு முன் மனாத் என்கிற கற்பனை தெய்வத்துக்காக ஸஃயி செய்து கொண்டிருந்தார்கள். அப்படிச் செய்து கொண்டிருந்தவர்கள் முஸ்லிமான பின் ஸஃயி செய்ய சங்கடப்பட்டார்கள். எனவேதான் அல்லாஹ் இந்த ஆயத்தை இறக்கினான்”, என்று விளக்கிய ஆயிஷா(ரலி) அவர்கள் தொடர்ந்து, நபி(ஸல்) ஸஃபா மர்வாவில் ஸஃயி செய்வதை தெளிவுபடுத்தி விட்டார்கள் எனவே அதனை விட்டு விடுவதற்கு யாருக்கும் அனுமதியில்லை என்று கூறினார்கள்.✍️✍️✍️*
*(புகாரி 1643)*
*☪️☪️காரணம் குறிப்பிட்ட ஒன்றானாலும் வழிகாட்டல் பொதுவானதே:☪️☪️*
*🙋♂️🙋♂️🙋♂️ஒரு வசனம் இன்னார் விஷயத்தில் இறங்கியது என்று சொல்லப்பட்டாலும் அதிலிருந்து பெறப்படும் படிப்பினை எல்லோருக்கும் பொதுவானதே.*
*அதாவது குறிப்பிட்ட ஒருவருக்குக் கட்டளையாகவோ அல்லது தடையாகவோ ஒரு வசனம் இறங்கியிருந்தால், அது அந்த குறிப்பிட்ட நபரையும் அவருடைய நிலையிலுள்ள மற்றவர்களையும் உள்ளடக்கும், அதேபோல் குறிப்பிட்ட ஒருவரையோ அல்லது சிலரையோ புகழ்ந்தோ இகழ்ந்தோ ஒரு வசனம் இறங்கியிருந்தால் அவர்களையும் அவர்கள் நிலையிலுள்ள மற்றவர்களையும் உள்ளடக்கும்🙋♀️🙋♀️🙋♀️.*
*✍️✍️✍️உதாரணம், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஹிலால் பின் உமய்யா(ரலி) அவர்கள், தன் மனைவியை ஷரீக் பின் ஸஹ்மாஃ என்பவரோடு தொடர்பு படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் குற்றம் சுமத்தினார்- அதற்கு நபியவர்கள், ஆதாரம் வேண்டும்(சாட்சியை கொண்டுவா) இல்லாவிட்டால் உன் முதுகில் கசையடிவிழும் என்றார்கள். அதற்கு ஹிலால்(ரலி) அல்லாஹ்வின் தூதரே எங்களில் ஒருவர் தன் மனைவி மீது ஒரு ஆணைக் கண்டால் அவர் நடந்துபோய் ஆதாரத்தை(சாட்சியை) தேடவேண்டுமா? என்றார்- அதற்கும் நபியவர்கள் ஆதாரம்! இல்லாவிட்டால் உன் முதுகில் கசையடி! என்றார்கள் அப்போது ஹிலால்(ரலி), உங்களை சத்தியத்துடன் அனுப்பிவைத்தவன் மீது சத்தியமாக நான் உண்மைதான் சொல்கிறேன்- என் முதுகை கசையடியை விட்டு அகற்றிவைக்கும் தீர்வை அல்லாஹ் இறக்கிவைப்பான் என்றார்- அப்போது ஜுப்ரீல்(அலை) இறங்கி சூரத்துன்னூரின் ஆறாவது வசனத்திலிருந்து ஒன்பதாவது வசனம் வரையிலான வசனங்களை நபி(ஸல்) அவர்கள் மீது இறக்கிவைத்தார்கள்✍️✍️✍️.*
*(நூல்: புகாரி 4747)*
*🙋♂️🙋♂️🙋♂️இந்த வசனங்கள் ஹிலால்(ரலி) அவர்களின் பிரச்னைக்குத்தீர்வாக இறங்கினாலும் அவர்களின் சூழ்நிலைக்கு ஆளாகுபவருக்கும் அதுதான் சட்டம் என்பதை எளிதாக புரிகிறோம்.🙋♀️🙋♀️🙋♀️*
*☪️☪️ஸபபுன்னுஸுலைக் குறிக்கும் வாசக அமைப்பு:☪️☪️*
*✍️✍️✍️ஸபபுன்னுஸுலை விளக்கும் அறிவிப்புகளில் சில தெளிவாக இருக்கும் இன்னும் சில மூடலாக இருக்கும். அதாவது ஸபபுன்னுஸுலை அறிவிக்கும் சஹாபி இன்ன நிகழ்ச்சி நடந்தது அப்போது இன்ன வசனம் இறங்கியது என்று குறிப்பிட்டாலோ அல்லது இன்ன கேள்வி நபியிடம் கேட்கப்பட்டது அதற்கு பதிலாக இன்ன வசனம் இறங்கியது என்று குறிப்பிட்டாலோ தெளிவான வாசகமாகும். ஆகையினால் அதனை ஸபபுன்னுஸுல் என்று உறுதியாக குறிப்பிடலாம்.*
*ஆனால் அறிவிக்கும் சஹாபி ஒரு ஆயத்தைப்பற்றி, இன்ன விஷயமாக அந்த வசனம் இறங்கியது என்றோ அல்லது இன்ன வசனம் இன்ன விஷயமாக இறங்கியது என்று தான் நான் கருதுகிறேன் என்றோ குறிப்பிட்டால் அதனை ஸபபுன்னுஸுல் என்று உறுதியாக குறிப்பிட முடியாது. ஸபபுன்னுஸுலாகவும் இருக்கலாம். அல்லது அந்த சஹாபி அந்த வசனத்துக்குக் கூறுகிற விளக்கம் மற்றும் அவர் யூகித்துச் சொல்கிற கருத்து என்றும் எடுத்துக் கொள்ளலாம். முதல் வகையான தெளிவான ஸபபுன்னுஸுலுக்கு உதாரணமாக நாம் இப்பாடத்தில் முன்பு கூறியுள்ள பல்வேறு ஸபபுன்னுஸுல்களை எடுத்துக் கொள்ளலாம்.*
*மூடலான, தெளிவற்ற ஸபபுன்னுஸுல் வாசக அமைப்புக்கு உதாரணம், சூரத்துல் பக்கராவின் 223வது வசனம் பெண்களிடம் பின்பக்கத்தில் அமர்ந்து தாம்பத்ய உறவு கொள்வது பற்றி இறங்கியது என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகிற கூற்று.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️இங்கு இப்னு உமர்(ரலி) அவர்கள் இதுதான் காரணம் என்று புரிகிற விதத்தில் தெளிவாக கூறவில்லை, மேலும் இதே வசனத்துக்கு வேறொரு ஸபபுன்னுஸுல் இன்னொரு ஹதீஸில் தெளிவாக இடம் பெற்றுள்ளது (அது பின்பு வரும்) ஆகையால் இப்னு உமர்(ரலி) அவர்களின் இக்கூற்றை ஒரு விளக்கம் என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்- தவிர ஸபபுன்னுஸுல் அல்ல.*
*மற்றொரு உதாரணம், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.ஸுபைர்(ரலி) அவர்களுக்கும் அவர்களின் பக்கத்து நிலத்துக்காரரான அன்சாரி ஸஹாபிக்கும் பேரீச்சமரங்களுக்கு தண்ணீர் விடுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் இருவருக்கும் நன்மையான ஒரு முடிவை நபி(ஸல்) அவர்கள் கூறியபோது அதை விரும்பாத அன்சாரி சஹாபி நபி(ஸல்) அவர்களைப் பார்த்து, ஸுபைர் உங்கள் மாமி மகன் என்பதாலா இப்படி ஒரு முடிவைக் கூறுகிறீர்கள் என்றார். அப்போது நபி(ஸல்) அவர்களின் முகம் சிவந்தது…*
*இந்த நிகழ்ச்சியை கூறிய ஸுபைர்(ரலி) அவர்கள், “உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்”. என்ற சூரத்துன்னிஸா 65-வது வசனம் இந்த நிகழ்ச்சிக்காகத்தான் இறங்கியதாக நான் கருதுகிறேன் என்றார்கள்.🙋♀️🙋♀️🙋♀️*
*(ஹதீஸ் சுருக்கம் புகாரி 2359)*
*✍️✍️✍️(இந்த ஆயத்தின் பொருள் உம் ரட்சகன் மீது சத்தியமாக, அவர்கள் தங்களுக்கிடையில் ஏற்பட்ட பிணக்கில் உம்மை நீதிபதியாக்கி, பிறகு நீர் தீர்ப்பளித்ததிலே எந்த சங்கடத்தையும் தங்களின் மனங்களில் உணராமல் முழுமையாக கட்டுப்படாத வரை அவர்கள் ஈமான் கொண்டவர்களாக மாட்டார்கள்)*
*இந்த ஹதீஸில் ஸுபைர்(ரலி) அவர்கள், நான் கருதுகிறேன் என்ற வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளதால், இந்நிகழ்ச்சி இந்த ஆயத்தின் ஸபபுன்னுஸுலாக இருக்கவும், இல்லாமலிருக்கவும் வாய்ப்புள்ளது✍️✍️✍️.*
*☪️☪️ஒன்றுக்கு மேற்பட்ட ஸபபுன்னுஸுல் வருதல்:☪️☪️*
*🙋♂️🙋♂️🙋♂️ஒரே வசனத்துக்கு ஸபபுன்னுஸுலாக ஒன்றுக்கு மேற்பட்ட செய்திகளை குறிப்பிடும் வெவ்வேறு அறிவிப்புகள் வருவதுண்டு. கீழ்கண்ட வழிமுறைகளை கையாண்டால் முரண்பாடு வருவதற்கு வழியில்லை.*
*அ) ஒரு வசனம் இறங்கியதற்கு காரணமாக வெவ்வேறு செய்திகளை இருவேறு சஹாபிகள் அறிவித்து அவ்விரண்டு அறிவிப்புகளும் ஆதாரப்பூர்வமானவையாகவும் இருந்தால், அவ்விரண்டில் எது தெளிவாக குறிப்பிடுகின்றதோ அதையே ஸபபுன்னுஸுல் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். தெளிவாக குறிப்பிடாத அறிவிப்பை அந்த ஸஹாபியின் விளக்கம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.*
*இதற்கு உதாரணமாக சூரத்துல் பக்கராவின் 223-வது வசனத்துக்கு கூறப்படும் இரு ஸபபுன்னுஸுல்களை எடுத்துக்கொள்ளலாம்.* *நாஃபிஉ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நான் ஒருநாள் “உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள்” (சூரத்துல்பகரா 223) என்று தொடரும் ஆயத்தை ஓதினேன். அப்போது இப்னு உமர்(ரலி) அவர்கள், இந்த வசனம் எது விஷயத்தில் இறங்கியது என்று அறிவாயா? என்று கேட்டார்கள். அதற்கு தெரியாது என்றேன். பெண்களிடம் பின்பக்கமாக அமர்ந்து தாம்பத்ய உறவில் ஈடுபடும் விஷயத்தில் இறங்கியது என்றார்கள்🙋♀️🙋♀️🙋♀️.*
*(புகாரி 4526, 4527)*
*✍️✍️✍️இப்னு உமர்(ரலி) அவர்களின் இக்கூற்று தெளிவாக இதுதான் இந்த வசனம் இறங்கக்காரணம் என்று குறிப்பிடவில்லை. ஆனால் இதற்க மாற்றமாக காரணத்தை தெளிவாக குறிப்பிடக்கூடிய ஜாபிர்(ரலி) அவர்களின் கூற்று வேறொரு செய்தியில் வந்துள்ளது.*
*யூதர்கள், ஒரு ஆண் தன் மனைவியிடம் பின் பக்கமாக இருந்து தாம்பத்ய உறவு கொண்டால் பிள்ளை மாறு கண் உள்ள பிள்ளையாக பிறக்கும் என்று கூறிக்கொண்டிருந்தார்கள் எனவேதான் “உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள்” என்ற சூரத்துல் பகராவின் 223-வது வசனம் இறங்கியது என்று ஜாபிர்(ரலி) அவர்கள் கூறினார்கள்.✍️✍️✍️*
*(புகாரி 4528)*
*🙋♂️🙋♂️🙋♂️இதில் ஜாபிர்(ரலி) அவர்களின் கூற்றையே ஸபபுன்னுஸுலாக கொள்ளவேண்டும். ஏனென்றால் அதுதான் தெளிவான வாசகத்தைக் கொண்டுள்ளது. எனவே இப்னு உமர்(ரலி) அவர்களின் கூற்றை அவர்களின் விளக்கம் என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.*
*ஆ) ஒரு வசனத்துக்கு இரண்டு ஸபபுன்னுஸுல்கள் அறிவிக்கப்பட்டு அவ்விரண்டுமே தெளிவாக ஸபபுன்னுஸுல்தான் என்று குறிப்பிடுமானால் அப்போது இரண்டு இறிவிப்புக்களுடைய அறிவிப்பாளர் வரிசையை பார்க்கவேண்டும் ஒன்று பலவீனமானதாகவும் மற்றொன்று பலமானதாகவும் இருக்குமானால் பலமான அறிவிப்பாளர் வரிசையை உடைய செய்தியையே ஸபபுன்னுஸுலாக முடிவு செய்யவேண்டும்.*
*இதற்கு உதாரணம், ஜுன்துப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தார்கள். இரண்டு அல்லது மூன்று இரவுகள் நின்று வணங்கவில்லை. அப்போது ஒரு பெண் அவர்களிடம் வந்து, முஹம்மதே உன்னுடைய ஷைத்தான் உன்னை விட்டுவிட்டதாகத்தான் கருதுகிறேன். உன்னை அவன் இரண்டு அல்லது மூன்று இரவுகள் நெருங்கவில்லையே என்றாள். அப்போது அல்லாஹ் “முற்பகல் மீது சத்தியமாக இருள்சூழும் இரவின்மீதும் சத்தியமாக, உம்மை உமது இரட்சகன் விட்டுவிடவில்லை, வெறுக்கவுமில்லை” என்று தொடரும் சூரத்துள்ளுஹாவை இறக்கிவைத்தான்.🙋♀️🙋♀️🙋♀️*
*(ஆதாரம்: புகாரி 4950, முஸ்லிம்)*
*✍️✍️✍️மேற்கூறிய செய்திக்கு மாற்றமாக சூரத்துள்ளுஹா இறங்கியதற்கான காரணம் இன்னொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அது வருமாறு:*
*நபி (ஸல்) அவர்களின் பணியாளராக இருந்த பெண்மனி கவ்லா (ரலி) அவர்கள் கூறினார்கள்:*
*ஒரு நாய்க்குட்டி நபி (ஸல்) அவர்களின் வீட்டில் நுழைந்து கட்டிலுக்கடியில் சென்று செத்துவிட்டது. அதைத்தொடர்ந்து நான்கு நாட்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வஹி இறங்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வஹி இறங்கவில்லை. அப்போது நபியவர்கள் கவ்லாவே அல்லாஹ்வின் தூதரின் வீட்டில் என்ன நடந்தது, ஜிப்ரீல் என்னிடம் வருவதில்லையே என்றார்கள். அப்போது எனக்குள் நான், வீட்டை சரிபடுத்தி கூட்டி சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டேன். அப்போது துடைப்பத்துடன் கட்டிலுக்கு கீழே குனிந்து, அங்கே கிடந்த நாய்க்குட்டியை கண்டு, வெளியே எடுத்துப் போட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் முகம் நடுக்கத்துடன் வந்தார்கள். – அவர்களுக்கு வஹி இறங்கினால் நடுக்கம் எடுக்கும் – எனவே என்னைப் பார்த்து கவ்லாவே, என்னைப் போர்த்திவிடு என்றார்கள். அப்போது அல்லாஹுத்தஆலா, “வள்ளுஹா” என்று தெடங்கி “ஃபதர்ளா” முடிய உள்ள வசனங்களை இறக்கி வைத்தான். (ஆதாரம்: தப்ரானீ, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா)*
*மேற்கூறிய இரண்டு செய்திகளிலும், சூரத்துள்ளுஹா இறங்கியதற்கு காரணமாக இரண்டு வெவ்வேறு செய்திகள் கூறப்பட்டுள்ளன. இரண்டில் முதலாவது செய்தி பலமானதும் இரண்டாவது பலவீனமானதாகும்.✍️✍️✍️*
*☪️☪️ஆகையினால் பலமானதையே ஸபபுன்னுஸுல் என கொள்ள வேண்டும்☪️☪️*
*🙋♂️🙋♂️🙋♂️புகாரியின் விளக்கவுரையில் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள், கூறுவதாவது, “நாய்க்குட்டியின் காரணத்தால் ஜிப்ரீல் வர தாமதமானதாக கூறப்படும் செய்தி பிரபலமானதாகும். எனினும் அதுவே ஸபபுன்னுஸுலாக ஆவதாக கருதுவது விநோதமான கருத்தாகும். மேலும் அதன் அறிவிப்பாளர் வரிசையில் யாரென்று அறியப்படாதோர் இடம் பெறுகின்றனர். எனவே புகாரியிலும் முஸ்லிமிலும் இடம் பெறுவதே ஆதாரப்பூர்வமானதாகும்.*
*(இ) இரண்டு அறிவிப்புகளும் பலமானதாக இருக்குமானால் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுப்பதற்கு ஏதேனும் வழிமுறை இருந்தால் அதை வைத்து அந்த ஒன்றையே ஸபபுன்னுஸுல் ஆக முடிவு செய்ய வேண்டும்.*
*உதாரணமாக ஒரு அறிவிப்பை கூறும் ஸஹாபி அந்நிகழ்வின் போது, தான் அங்கு ஆஜராகி இருந்ததாக கூறினால் மற்றொரு அறிவிப்பை கூறும் ஸஹாபியின் அறிவிப்பையே தேர்ந்தெடுப்பது. இதற்கு உதாரணம்:*
*இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களில் சிலரை நபியவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர், அவரிடம் ஏதேனும் கேள்வியை நீங்கள் கேட்டால் என்ன? என்றார். அப்போது அவர்கள் நபியைப் பார்த்து, ரூஹைப் பற்றி எங்களுக்குத் கூறும் என்றனர். நபியவர்கள் சற்று நேரம் நின்றார்கள் தன் தலையை உயர்த்தினார்கள் அவர்களுக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது என்று நான் அறிந்து கொண்டேன். அடுத்து நபியர்கள் “குல் ரூஃஹு மின் அம்ரி ரப்பி” (சூரத்துல் இஸ்ராஃ: 85) என்று தொடரும் ஆயத்தை ஓதினார்கள்.(புகாரி)*
*மேற்கூறிய வசனத்துக்கு ஸபபுன்னுஸுலாக இன்னொரு செய்தியை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:*
*குரைஷிகள் யூதர்களிடம், இந்த மனிதரிடம் (நபியிடம்) கேட்பதற்கு ஏதேனும் ஒரு கேள்வியை எங்களுக்கு கொடுங்கள் என்று கேட்டனர். அதற்கு யூதர்கள், அவரிடம் ரூஹை(உயிரை)க் குறித்து கேள்வி கேளுங்கள் என்றார்கள். குறைஷயரும் நபியிடம் அதுபற்றி கேட்டார்கள், அப்போது அல்லாஹ்தஆலா, “வயஸ்அலூனக அனிர்ரூஹ் குல் ரூஃஹு மின் அம்ரி ரப்பி” (சூரத்துல் இஸ்ராஃ: 85) என்று தொடரும் ஆயத்தை இறக்கினான். (திர்மிதி)🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️இந்த இரண்டாவது அறிவிப்பாகிய இப்னு அப்பாஸின் செய்தியை விட இப்னு மஸ்வூதின் செய்தியை முன்னிலைப்படுத்துகிறோம். ஏனென்றால் அந்த நிகழ்ச்சியின் போது இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அவ்விடத்தில்தான் இருந்ததாக குறிப்பிடுவதால். மேலும் அந்த அறிவிப்பு புகாரியில் இடம் பெற்றிருப்பது வலுவை கூட்டுகிறது.*
*இங்கு சில அறிஞர்கள் இன்னொரு கருத்தை கூறுவர். அதாவது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றுப்படி முதலில் இதே வசனம் மக்காவிலும், பின்பு மதீனாவில் வைத்து இரண்டாவது தடவையாகவும் (இப்னு மஸ்வூத் கூற்றுப்படி) இறங்கியது என.*
*ஆனால் இது ஏற்றுக்கொள்ள முடியாத கூற்று. ஏனெனில் முதலில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக மக்காவில் வைத்து இறக்கப்பட்டிருந்தால் மதீனாவில் ஐவத்து அதே கேள்வி கேட்கப்படும்போது நபியவர்கள் அதே ஆயத்தை பதிலாக ஓதிக்காட்டியிருக்க வேண்டுமே தவிர அதே வசனம் இன்னொரு முறை இறக்கப்பட வேண்டியதில்லை என்று பதில் சொல்லிவிடலாம்.*
*(ஈ) இரண்டு அறிவிப்புகளும் ஒன்றை விட ஒன்றை முன்னிலைப்படுத்த முடியாத அளவுக்கு வலுவில் சமமாக இருந்தால் இரண்டையும் இணைத்து ஒரு முடிவு செய்வது. இரண்டு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தால் அவ்விரண்டையும் காரணமாக வைத்து அந்த வசனம் இறங்கியதாக முடிவு செய்வது.*
*இதற்கு உதாரணமாக லிஆன் (சாப பிரமாண) வசனங்கள் என்று கூறப்படும் சூரத்துன்னூரின் 6 முதல் 9 வரையிலான வசனம்க்களுக்கு கூறப்படும் இரு ஸபபுன்னுஸுல்களை எடுத்துக்கொள்ளலாம்.*
*இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:ஹிலால் பின் உமய்யா தன் மனைவியை ஷதீத் பின் ஸஹ்மாவோடு தொடர்பு படுத்தி குற்றம் சுமத்தியபோது சூரத்துன்னுரின் 6 முதல் 9 வரையிலான வசனங்கள் இறங்கியது✍️✍️✍️.*
*(புகாரி: 4747)*
*☪️☪️(இச்செய்தியை முழுமையாக முன்பு படித்துள்ளோம்).☪️☪️*
*🙋♂️🙋♂️🙋♂️ஸஹ்ல் பின் ஸஃது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து யாரசூலல்லாஹ், ஒருவர் தன் மனைவியுடன் ஒரு ஆணைக்கண்டு அவனை அவர் கொல்ல அவரை நீங்கள் கொல்வீர்களா? அல்லது அவர் எப்படிச் செய்ய வேண்டும் எனக் கேட்டார். அப்போது, சாபப்பிராணம் பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளவற்றை (சூரத்துன்னூரின் 6 முதல் 9 வரையிலான வசனங்களை) அல்லாஹ் இறக்கிவைத்தான்.🙋♀️🙋♀️🙋♀️*
*(புகாரி 4746)*
*✍️✍️✍️மேற்குறிப்பிட்ட வசனங்கள்:*
*24:6 எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது* *நான்கு முறை சத்தியம் செய்து கூறி 24:7 ஐந்தாவது முறை, “(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்” என்றும் (அவன் கூற வேண்டும்). 24:8* *இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, “நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்”* *என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி 24:9 ஐந்தாவது முறை, “அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).* *ஆக சூரத்துன்னூரின் ஆறு முதல் ஒன்பது வரையிலான வசனங்கள் இறங்க மேற்பட்ட இரண்டு நிகழ்வுகளும் காரணமாக இருந்திருக்கின்றன. இரண்டு நிகழ்வுகளும் அடுத்தடுத்து நடந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது. ஆகவே இரு நிகழ்வுகளையும் அந்த வசனம்களுக்கு ஸபபுன்னுஸுலாகக் கொள்ளலாம்.*
*அடுத்தடுத்த தலைப்புகளில் ஸபபுன்னுஸுல்களை வரிசையாக காணலாம்.✍️✍️✍️*
*2. 👹நயவஞ்சகர்கள்🙋♂️ பற்றி🙋♀️ இரு🟡 கர்த்து 🟠கொண்ட🟣 போது👹*
*🙋♂️🙋♂️🙋♂️ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உஹதுப் போருக்குப் புறப்பட்டபோது அவர்களின் தோழர்களிடையே கலந்துவிட்டிருந்த (நயவஞ்சகர்கள்) சிலர் (போரில் பங்கெடுக்காமல்) திரும்பலானார்கள். அப்போது (போரில் பங்கெடுத்தவர்களில்) ஒரு பிரிவினர் ‘இவர்களைக் கொல்வோம்!’ என்றனர். அப்போது ‘நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இரண்டு வகையான (அபிப்பிராயங் கொண்ட) பிரிவினராக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது?’ (திருக்குர்ஆன் 04:88) என்னும் வசனம் இறங்கியது. ‘நெருப்பு இரும்பின் துருவை அகற்றுவது போல் இந்நகரம் தீயவர்களை வெளியேற்றிவிடும்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.🙋♀️🙋♀️🙋♀️*
*(புகாரி 1884)*
*4:88* فَمَا لَـكُمْ فِىْ الْمُنٰفِقِيْنَ فِئَـتَيْنِ وَاللّٰهُ اَرْكَسَهُمْ بِمَا كَسَبُوْاؕ اَ تُرِيْدُوْنَ اَنْ تَهْدُوْا مَنْ اَضَلَّ اللّٰهُ ؕ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِيْلًا
*✍️✍️✍️நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்; எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா? எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே!) நீர் காணமாட்டீர்.✍️✍️✍️*
*(குர்ஆன் 4:88)*
*3. ♥️இழிந்தவர்களை☪️ வெளியேற்றி🧶 விடுவோம்🥎 என்று🛑கூறியபோது♥️*
*63:8* يَقُوْلُوْنَ لَٮِٕنْ رَّجَعْنَاۤ اِلَى الْمَدِيْنَةِ لَيُخْرِجَنَّ الْاَعَزُّ مِنْهَا الْاَذَلَّ ؕ وَلِلّٰهِ الْعِزَّةُ وَلِرَسُوْلِهٖ وَلِلْمُؤْمِنِيْنَ وَلٰـكِنَّ الْمُنٰفِقِيْنَ لَا يَعْلَمُوْنَ
*🙋♂️🙋♂️🙋♂️திருக்குர்ஆன் 63:8. “நாங்கள் அல்மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர்; ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது; எனினும், இந்நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள். ஜாபிர்(ரலி) கூறினார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பனூ முஸ்தலிக்) புனிதப் போருக்குச் சென்றோம். நபியவர்களுடன் முஹாஜிர்களும் ஒருவர் இருவராகப் புறப்பட்டு நிறையப் பேராகிவிட்டனர். முஹாஜிர்களிடையே விளையாட்டுக்காட்டும் ஒருவர் இருந்தார். அவர் அன்சாரி ஒருவரின் புட்டத்தில் (விளையாட்டாக) அடித்துவிட்டார். எனவே, அந்த அன்சாரி கடும் கோபம் அடைந்தார்.(தகராறு முற்றி) இருவரும் தத்தம் குலத்தாரை உதவிக்கு அழைத்தார்கள். அன்சாரி, ‘அன்சாரிகளே!’ என்றழைத்தார். முஹாஜிர், ‘முஹாஜிர்களே!’ என்றழைத்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வெளியே வந்து, ‘அறியாமைக் கால மக்களின் அழைப்பு இங்கே கேட்கிறதே, ஏன்?’ என்று கேட்டுவிட்டு, ‘அவ்விருவரின் விவகாரம் என்ன?’ என்று கேட்டார்கள். முஹாஜிர், அன்சாரியைப் புட்டத்தில் அடித்தது. நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இந்த அறியாமைக் கால அழைப்பைவிட்டு விடுங்கள். இது அருவருப்பானது’ என்று கூறினார்கள்.(நயவஞ்சகர்களின் தலைவனான) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல், ‘நமக்கெதிராக (இந்த அகதிகளான முஹாஜிர்கள் தம் குலத்தாரிடம்) உதவி கேட்டு அழைத்தார்களா?’ நாம் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால் வலிமையுள்ளவர்கள் நகரத்திலிருந்து இழிந்தவர்களை வெளியேற்றி விடுவார்கள்’ என்று (விஷமமாகச்) சொன்னான். உடனே உமர்(ரலி), ‘இந்தத் தீயவனை நாம் கொன்று விட வேண்டாமா? இறைத்தூதர் அவர்களே!’ என்று அப்துல்லாஹ் இப்னு உபையைக் குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(அவனைக்) கொல்ல வேண்டாம். மக்கள், ‘முஹம்மது தன் தோழர்களை கூட கொல்கிறார்’ என்று பேசுவார்கள்’ என்று பதிலளித்தார்கள்.🙋♀️🙋♀️🙋♀️*
*(புகாரி 3518)*
*4. 👹ஷைத்தான் 👹இவரை 🧶விட்டு🧶 விட்டான்🥎 என்று🟣 கூறிய🟡 போது🟠*
*✍️✍️✍️புகாரி 1125. ஜுன்துப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) சில நாள்கள் வரவில்லை. அப்போது குறைஷீக் கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி ‘இவரின் ஷைத்தான் இவரைவிட்டுவிட்டான்’ என்று கூறினாள். அப்போது ‘முற்பகல் மீதும் இரவின் மீதும் ஆணையாக உம்முடைய இறைவன் உம்மைவிட்டு விடவுமில்லை; உம்மீது கோபம் கொள்ளவுமில்லை’ (திருக்குர்ஆன் 93:1,2,3) என்ற வசனம் அருளப்பட்டது✍️✍️✍️.*
*5. ☪️இஸ்லாத்தை☪️ ஏற்றவரை🕋 தடுத்தர்க்காக🟣 இறைவசனம்📚 இறங்கியதா❓☪️*
*🙋♂️🙋♂️🙋♂️நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் பொருட்படுத்தாது அலட்சியம் செய்து மன்னித்தால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.🙋♀️🙋♀️🙋♀️*
*அல்குர்ஆன் 64:14*
*✍️✍️✍️ஒரு நபித்தோழர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட போது அவரது மனைவி, மக்கள் அவரைத் தடுத்ததாகவும், அதைக் குறிப்பிட்டே இந்த வசனம் அருளப்பட்டதாகவும் திர்மிதி என்ற நூலில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. ஆனால் அது பலவீனமான ஹதீஸாகும்.✍️✍️✍️*
*6. 🕋🕋🕋சபித்து🕋🕋 குனூத்📚📚 ஓதிய📚📚 போது 🕋🕋வசனம் 📚📚இறங்கியதா❓🕋🕋🕋*
*இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 104*
*🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
No comments:
Post a Comment