பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, November 15, 2020

அல்குர்ஆன் வசனமும் - 11

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*📖அல்குர்ஆன்*
                     *வசனமும்📖*
                                  ⤵️
           *📖இறங்கியதற்க்கான*
                             *காரணங்களும்📖*

                    *✍🏻....தொடர் : 11*


*☄️நபித்துவமும்*
               *நபிகளாரின்*
                       *வாழ்க்கையும் { 02 }*

*☄️வஹீ எனும் இறைச்*
               *செய்தியின் துவக்கம்*

*☄️இரண்டாவதாக*
            *இறங்கிய வசனங்கள்*

_*🍃போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக! அசுத்தத்தை வெறுப்பீராக!*_

*📖 அல்குர்ஆன் 74:1-5 📖*

ﺣﺪﺛﻨﺎ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﺑﻜﻴﺮ، ﺣﺪﺛﻨﺎ اﻟﻠﻴﺚ، ﻋﻦ ﻋﻘﻴﻞ، ﻋﻦ اﺑﻦ ﺷﻬﺎﺏ، ﺣ ﻭﺣﺪﺛﻨﻲ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻣﺤﻤﺪ، ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﺮﺯاﻕ، ﺃﺧﺒﺮﻧﺎ ﻣﻌﻤﺮ، ﻗﺎﻝ اﻟﺰﻫﺮﻱ: ﻓﺄﺧﺒﺮﻧﻲ ﺃﺑﻮ ﺳﻠﻤﺔ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ، *ﻋﻦ ﺟﺎﺑﺮ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ، ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﻫﻮ ﻳﺤﺪﺙ ﻋﻦ ﻓﺘﺮﺓ اﻟﻮﺣﻲ، ﻓﻘﺎﻝ ﻓﻲ ﺣﺪﻳﺜﻪ: " ﻓﺒﻴﻨﺎ ﺃﻧﺎ ﺃﻣﺸﻲ ﺇﺫ ﺳﻤﻌﺖ ﺻﻮﺗﺎ ﻣﻦ اﻟﺴﻤﺎء ﻓﺮﻓﻌﺖ ﺭﺃﺳﻲ، ﻓﺈﺫا اﻟﻤﻠﻚ اﻟﺬﻱ ﺟﺎءﻧﻲ ﺑﺤﺮاء ﺟﺎﻟﺲ ﻋﻠﻰ ﻛﺮﺳﻲ ﺑﻴﻦ اﻟﺴﻤﺎء ﻭاﻷﺭﺽ، ﻓﺠﺌﺜﺖ ﻣﻨﻪ ﺭﻋﺒﺎ، ﻓﺮﺟﻌﺖ ﻓﻘﻠﺖ: ﺯﻣﻠﻮﻧﻲ ﺯﻣﻠﻮﻧﻲ، ﻓﺪﺛﺮﻭﻧﻲ، ﻓﺄﻧﺰﻝ اﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ: {ﻳﺎ ﺃﻳﻬﺎ اﻟﻤﺪﺛﺮ} [اﻟﻤﺪﺛﺮ: 1] ﺇﻟﻰ (ﻭاﻟﺮﺟﺰ ﻓﺎﻫﺠﺮ) ﻗﺒﻞ ﺃﻥ ﺗﻔﺮﺽ اﻟﺼﻼﺓ ﻭﻫﻲ اﻷﻭﺛﺎﻥ*

_ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்._

_*🍃நபி (ஸல்) அவர்கள் தமக்கு வஹீ (இறைச்செய்தி) நின்று போயிருந்த இடைக்காலத்தைப் பற்றி அறிவிக்கையில் கூறினார்கள்:*_

_*நான் நடந்து போய் கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு என்னுடைய தலையை உயர்த்தினேன். அங்கே, நான் ‘ஹிரா’வில் இருந்தபோது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து அச்சமேற்பட்டு நான் அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டேன். உடனே நான் (வீட்டிற்குத்) திரும்பி, (என் துணைவியாரான) கதீஜாவிடம், ‘எனக்குப் போர்த்திவிடுங்கள்: என்று சொன்னேன். அவர்களும் என்னைப் போர்த்திவிட்டார்கள்.*_

_*அப்போது அல்லாஹ், ‘போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக! அசுத்தத்தை வெறுப்பீராக!’ எனும் (திருக்குர்ஆன் 74:1-5) வசனங்களை, தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அருளினான்.*_

*📚நூல்: புகாரி (4925, 4922, 4923)*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

நாவை* ⤵️ *பேனுவோம் - 4

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

               *🔥 நாவை*
                                ⤵️
                        *பேனுவோம் 🔥*

                 *✍🏻....தொடர் { 04 }*

*🏮🍂நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மிகவும் திருப்புமுனையாக அமைந்தது அகபா உடன்படிக்கை நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியின்போதுதான் சில ஒப்பந்தங்கள் எடுக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் இந்த மானம், மரியாதை தொடர்பான உடன்படிக்கையும் எடுக்கப்பட்டது.* பத்ருப்போரில் கலந்துகொண்டவரும், இரவில் நடந்த அகபா உடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டு) தலைவர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

18 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ *عَائِذُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عُبَادَةَ بْنَ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَانَ شَهِدَ بَدْرًا وَهُوَ أَحَدُ النُّقَبَاءِ لَيْلَةَ العَقَبَةِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ، وَحَوْلَهُ عِصَابَةٌ مِنْ أَصْحَابِهِ: ” بَايِعُونِي عَلَى أَنْ لاَ تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلاَ تَسْرِقُوا، وَلاَ تَزْنُوا، وَلاَ تَقْتُلُوا أَوْلاَدَكُمْ، وَلاَ تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ، وَلاَ تَعْصُوا فِي مَعْرُوفٍ، فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فِي الدُّنْيَا فَهُوَ كَفَّارَةٌ لَهُ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا ثُمَّ سَتَرَهُ اللَّهُ فَهُوَ إِلَى اللَّهِ، إِنْ شَاءَ عَفَا عَنْهُ وَإِنْ شَاءَ عَاقَبَهُ ” فَبَايَعْنَاهُ عَلَى ذَلِكَ.*

_*🍃(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, அல்லாஹ்வுக்கு எதையும் (எவரை யும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும், திருட மாட்டீர்கள் என்றும், விபச்சாரம் புரியமாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும் புனைந்துகொண்டு வரமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்!*_ _உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும்._

_இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில் இவ்வுலகில் இழைக்கப்படும் அநியாயங்கள்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக் கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனு மொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலக வாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்” என்ற சொன்னார்கள். உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்._

      *📚நூல்; புகாரி (18)📚*

*🏮🍂மேலும் இஸ்லாம் மானம், மரியாதை விஷயத்திற்கு எவ்வளவு முக்கியத் துவம் கொடுத்துள்ளது என்பதை விளங்க வேண்டுமானால் ஒருவரின் மானத்தோடு விளையாடியவருக்கு கொடுத்திருக்கின்ற தண்டனைகளை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

நாவை* ⤵️ *பேனுவோம் - 3

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

               *🔥 நாவை*
                                ⤵️
                        *பேனுவோம் 🔥*

                 *✍🏻....தொடர் { 03 }*

*🏮🍂இஸ்லாம் மானம், மரியாதைக்கு எவ்வளவு முக்கியம் கொடுத்திருக்கிறது என்பதை பின்வரும் நபிமொழியிலும் அறியலாம்.*

6706 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ حَدَّثَنَا دَاوُدُ – يَعْنِى ابْنَ قَيْسٍ – عَنْ أَبِى سَعِيدٍ مَوْلَى عَامِرِ بْنِ كُرَيْزٍ *عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لاَ تَحَاسَدُوا وَلاَ تَنَاجَشُوا وَلاَ تَبَاغَضُوا وَلاَ تَدَابَرُوا وَلاَ يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا. الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لاَ يَظْلِمُهُ وَلاَ يَخْذُلُهُ وَلاَ يَحْقِرُهُ. التَّقْوَى هَا هُنَا ». وَيُشِيرُ إِلَى صَدْرِهِ ثَلاَثَ مَرَّاتٍ « بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ دَمُهُ وَمَالُهُ وَعِرْضُهُ ».*

_அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்துகொண்டி ருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார்._

_*அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்மைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.*_

 *🎙️அறிவிப்பவர் :*   
                *அபூஹுரைரா (ரலி)* 

    *📚நூல்: முஸ்லிம் (5010)📚*

*🏮🍂ஒரு முஸ்லிமின் உயிரை கொல்வது எவ்வளவு குற்றமோ அதே அளவு குற்றத்தை நபிகளார் மான,மரியாதையை கெடுக்கும் விஷயத்திற்கும் கொடுத்துள்ளார்கள்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

நாவை* ⤵️ *பேனுவோம் -2

*💐அஸ்ஸலாமு அலைக்கும்*

               *🔥 நாவை*
                                ⤵️
                        *பேனுவோம் 🔥*

                 *✍🏻....தொடர் { 02 }*

*☄️மானத்தின்*
                *முக்கியத்துவம்*

67- حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ : حَدَّثَنَا بِشْرٌ قَالَ : حَدَّثَنَا ابْنُ عَوْنٍ ، عَنِ ابْنِ سِيرِينَ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ ، *عَنْ أَبِيهِ ذَكَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَعَدَ عَلَى بَعِيرِهِ وَأَمْسَكَ إِنْسَانٌ بِخِطَامِهِ ، أَوْ بِزِمَامِهِ- قَالَ أَيُّ يَوْمٍ هَذَا فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ سِوَى اسْمِهِ قَالَ أَلَيْسَ يَوْمَ النَّحْرِ قُلْنَا بَلَى قَالَ فَأَىُّ شَهْرٍ هَذَا فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ فَقَالَ أَلَيْسَ بِذِي الْحِجَّةِ قُلْنَا بَلَى قَالَ فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ بَيْنَكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ فَإِنَّ الشَّاهِدَ عَسَى أَنْ يُبَلِّغَ مَنْ هُوَ أَوْعَى لَهُ مِنْهُ.*

_அபூபக்ரா (நுஃபைஉ பின் அல்ஹாரிஸ்-ரலி) அவர்கள் கூறியதாவது :_

_*🍃 (துல்ஹஜ் 10ஆம் நாள்) நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந் திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், இது எந்த நாள்❓” என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா❓” என்று கேட்டார்கள். நாங்கள் ஆம்’ என்றோம். அடுத்து இது எந்த மாதம்❓” என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம்._

_அப்போது அவர்கள் இது துல்ஹஜ் மாதமல்லவா❓” என்றார்கள். நாங்கள் ஆம்’ என்றோம்._ _*நபி (ஸல்) அவர்கள் உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம், மரியதைகளும் உங்களுக்குப் புனித மானவையாகும்”*_ _என்று கூறிவிட்டு, (இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிடவேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மைவிட நன்கு புரிந்து நினைவில்கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக் கூடும்” என்றார்கள்._

       *📚நூல் : புகாரி (67)📚*

*🏮🍂இஸ்லாம் ஒருவரின் மானத்திற்கும், மரியாதைக்கும் எவ்வளவு முக்கியத்து வம் வழங்கியிருக்கிறது என்பதை இந்த செய்தியை படிப்பவர்கள் விளங்கி கொள்ளலாம்.* அல்லாஹ்வை பயந்த எந்த முஸ்லிமும் பிறமுஸ்லிமை கொள்ள மாட்டார். அல்லாஹ்வை பயந்த எந்த முஸ்லிமும் பிறரின் பொருளை அபகரிக்க மாட்டார். *ஆனால் இன்று முஸ்லிம்கள் சர்வ சாதரணமாக பிறமுஸ்லிம்களின் மானம், மரியாதை விஷயங்களில் விளையாடி விடுகிறார்கள்.*

*🏮🍂பிற முஸ்லிம்களின் மானம் மரியாதையில் விளையாடுவது கஃபதுல்லாஹ்வை இழிவு படுத்தியத்திற்கு சமமானதாகும். அந்த புனித நாட்களை இழிவு படுத்தியதற்கு சமமானதாகும் என்ற கருத்தையும் இந்த நபிமொழியில் நாம் அறியலாம்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

நாவை பேணு வோம் -1

*💐அஸ்ஸலாமு அலைக்கும்*

               *🔥 நாவை*
                                ⤵️
                        *பேனுவோம் 🔥*

                 *✍🏻....தொடர் { 01 }*

🍂மனிதன், சக மனிதனுக்குச் செய்யும் தீங்குகளுக்கு அந்த மனிதன் மன்னிக்காத வரை இறைவன் மன்னிக்கமாட்டான். எனவே சக மனிதனுக்கு நாம் செய்யும் தீங்குகளுக்காக அவனிடம் மன்னிப்புக் கேட்டு, தவறிலிருந்து மீண்டெழுந்து நம்மை நாமே சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.* இதையே நபிகளார் பின்வரும் ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*🥉தீனாரோ,*
             *திர்ஹமோ*
                          *பயன்தராது🥇*

2449- حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ ، حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ ، *عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لأَحَدٍ مِنْ عِرْضِهِ ، أَوْ شَيْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ ، وَلاَ دِرْهَمٌ إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ. قَالَ أَبُو عَبْدِ اللهِ ، قَالَ : إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ إِنِّمَا سُمِّيَ الْمَقْبُرِيَّ لأَنَّهُ كَانَ نَزَلَ نَاحِيَةَ الْمَقَابِرِ*

_*🍃அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு விஷயத்திலோ இழைத்த அநீதி இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு தீனாரோ, திர்ஹமோ பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (மறுமை நாள்) வருவதற்கு முன்னால் இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும்.*_ _(மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டுவிடும்._

        *📚நூல் : புகாரி 2449📚*

*_இந்த அவல நிலையை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும்._

*🏮🍂இவ்வாறு நபிகளார் கூறியிருக்க இன்றோ முஸ்லிம்களாலேயே பிற முஸ்லிம்கள் பாதிக்கப்படும் அவல நிலை உருவாகியுள்ளது. நாவு எனும் ஆயுதத்தால் பிற மனிதர்களின் மனதை கீறிக்கிழித்து விடுகின்றோம். காயங்களை ஏற்படுத்தாமலேயே காலமெல்லாம் ஆறாத வடுவை ஏற்படுத்துகின்றோம்.*

_ஒருவர் எந்தத் தவறும் செய்யாவிட்டாலும் கூட அவரது குடும்ப உறுப்பினர் யாரேனும் செய்த தவறுக்காக அவரைக் குற்றவாளியாகச் சித்தரிக்கிறோம்._

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

இஸ்லாத்தை அறிந்து - 106

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய  மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 106 👈👈👈* 
 

*📚📚📚 தலைப்பு  10  குர்ஆன் வசனம் இறங்கிய காரணம் 📚📚📚* 


 *16. 👹👹👹ஜின்கள்📚📚 குர்ஆனை📚📚 செவியேற்றபோது🕋🕋 இறங்கிய🕋🕋 வசனம்👹👹👹* 


 *17. ☪️☪️☪️நபியே☪️☪️ ஏன்🙋‍♂️🙋‍♂️ ஹராமாக்கினீர் 🙋‍♀️🙋‍♀️என்ற ⚫⚫வசனம்📚📚📚* 


 *18. 📚📚📚அத்தியாயம்📚📚 முனாஃபிகூன்👹👹 என்ற🙋‍♂️🙋‍♀️ வசனம்📚📚📚* 


 *19. 🕋🕋🕋ஜும்மா🕋🕋 அத்தியாயத்தின்☪️☪️ சில🙋‍♂️🙋‍♀️ வசனங்கள்📚📚📚* 


 *20. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அபூதல்ஹா🙋‍♀️🙋‍♀️ விருந்தினரை🟣🟣 கண்ணியப்படுத்திய🧶🧶 போது 🟡வந்த🟠 வசனம்📚📚📚* 


*16. 👹ஜின்கள்📚 குர்ஆனை📚 செவியேற்றபோது🕋 இறங்கிய🕋 வசனம்👹* 


 *✍️✍️✍️இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் உக்காழ் எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்களைத் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது தீப்பந்தங்கள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல் தம் தலைவர்களிடம்) திரும்பி வந்தன. அப்போது தலைவர்கள், உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். ஷைத்தான்கள், வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டு விட்டது; எங்கள் மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டன என்று பதிலளித்தனர். புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்தி ருக்கும். அதுவே உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்தி ருக்கவேண்டும். எனவே நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங் களிலும்) சென்று புதிதாகச் சம்பவித்து விட்ட இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள் என்றனர். உடனே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் பயணம் செய்து தங்களுக்கும் வானுலகச் செய்திக ளுக்கும் இடையே தடுப்பாய் அமைந்த அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயலாயினர்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️திஹாமா எனும் (மக்கா) பகுதியை நோக்கி ஷைத்தான்கள் வந்த போது உக்காழ் சந்தையை நோக்கிச் சென்று கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நக்லா எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு ஃபஜ்ருத் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண் டிருந்தார்கள்.அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்ட போது அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இது தான் என்று கூறிவிட்டு, தம் கூட்டத் தாரிடம் சென்று, எங்கள் கூட்டத்தாரே! திண்ணமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர் வழியைக் காட்டுகின்றது. எனவே நாங்கள் அதை விசுவாசித்தோம். எங்கள் இறைவனுக்கு (இனி) நாங்கள் ஒரு போதும் யாரையும் இணையாகக் கருதமாட்டோம் என்று கூறினர். (இதையொட்டி) மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் தன் தூதருக்கு, (நபியே!) நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியேற்றனர்… என்று தொடங்கும் இந்த (திருக்குர்ஆன் 72ஆவது) அத்தியாயத்தை அருளினான்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *(புகாரி 4921)* 


 *17. ☪️நபியே☪️ ஏன்🙋‍♂️ ஹராமாக்கினீர் 🙋‍♀️என்ற ⚫வசனம்📚* 


 *✍️✍️✍️நபியே உம்முடைய மனைவியரின் திருப்திகளை நீர் நாடி அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை நீர் ஏன் ஹராமாக்கிக் கொண்டீர்? அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன் மிகக் கிருபையுடையவன். (அத்தஹ்ரீம், வசனம் 1)✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம், (அவர்களது அறையில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம்: (தேன் சாப்பிட்ட பின்,) நம்மவரில் எவரிடம் நபி (ஸல்) அவர்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️முதலில் வருவார்களோ அவர், நபி (ஸல்) அவர்களிடம் கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே என்று கூறிட வேண்டும்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️(வழக்கம் போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டுவிட்டு நபி (ஸல்) அவர்கள் வந்த போது நாங்கள் பேசி வைத்திருந்த பிரகாரம் கூறியதற்கு) அவர்கள், இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை). ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் குடித்து வந்தேன். (இனிமேல்,) நான் ஒரு போதும் அதைக் குடிக்க மாட்டேன்; நான் சத்தியமும் செய்து விட்டேன் என்று கூறிவிட்டு, இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே! என்றும் கூறினார்கள். (இது குறித்தே  திருக்குர்ஆன் 66:1ஆவது இறைவசனம் அருளப்பெற்றது.)🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *(புகாரி 4912)* 


 *18. 📚அத்தியாயம்📚 முனாஃபிகூன்👹 என்ற🙋‍♂️ வசனம்📚* 


 *✍️✍️✍️ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *ஒரு புனிதப் போரில் நான் இருந்து கொண்டிருந்தேன்.2 அப்போது, (நயவஞ்சகர் களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை என்பவன் அல்லாஹ்வின் தூதருடன் இருப்ப வர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள் என்று கூறி விட்டுத் தொடர்ந்து, நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தவர்களான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள் என்று கூறினான். அவன் கூறியதை (நான்) என் சிறிய தந்தை(யாக மதிக்கும் ஒருவர்) இடம் அல்லது உமர் (ரலி) அவர்களிடம் கூறினேன். அவர் அதை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். (நான் சென்று அவன் சொன்னதை) நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஆளனுப்பினார்கள். (அவர்கள் தம்மிடம் வந்த போது அது குறித்து நபியவர்கள் வினவினார்கள்.) நாங்கள் அதைச் சொல்லவேயில்லை என்று அவர்கள் சாதித்தார்கள்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் சென்னதை நம்ப மறுத்து விட்டார்கள்; அப்துல்லாஹ் பின் உபை (சத்தியமிட்டுச்) சொன்னதை உண்மையென்று நம்பினார்கள். அப்போது, எனக்குக் கவலை ஏற்பட்டது. அது போன்ற கவலை என் வாழ் நாளில் ஓரு போதும் எனக்கு ஏற்பட்டதில்லை. பிறகு நான் என் வீட்டில் அமர்ந்து கொண் டிருந்தேன். அப்போது என் சிறிய தந்தை என்னிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபம் கொள்ளும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று கூறினார்கள். அப்போது, இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்ற போது என்று தொடங்கும் இந்த (திருக்குர்ஆன் 63:1ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது தம்மீது அருளப்பட்டிருந்த வசனத்தை எனக்கு) ஓதிக்காட்டினார்கள். பிறகு, ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான் (நீ சொன்னதை உண்மை என்று தெளிவுபடுத்திவிட்டான்) என்று கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *(புகாரி 4900)* 


 *19. 🕋ஜும்மா🕋 அத்தியாயத்தின்☪️ சில🙋‍♂️ வசனங்கள்📚* 


 *✍️✍️✍️ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜுமுஆத் தொழுகையில்) இருந்த போது, (வியாபாரத்திற்காக உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு) ஒட்டகக் குழு ஒன்று வந்தது. (அதைக் கண்ட மாத்திரத்தில், நபிகளாரின் முன்னிலையிலிருந்த மக்கள்) கலைந்து சென்றுவிட்டனர். பன்னிரண்டு நபர்களே எஞ்சியிருந்தனர். அப்போது தான் அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கையையோ கண்டுவிட்டால் அவற்றின் பக்கம் விரைந்து சென்றுவிடு கின்றனர் எனும் (திருக்குர்ஆன் 62:11ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.✍️✍️✍️* 


 *(புகாரி 4899)* 


 *20. 🙋‍♂️அபூதல்ஹா🙋‍♀️ விருந்தினரை🟣 கண்ணியப்படுத்திய🧶 போது 🟡வந்த🟠 வசனம்📚* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச்சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை. அப்போது,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான் என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே! என்று சொல்லி (அவரை அழைத்துக் கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கி, (இவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளி. (இவருக்குத் தராமல்) எதனையும் நீ (உன்னிடமே) சேமித்து வைத்துக் கொள்ளாதே! என்று சொன்னார்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️அதற்கு அவர் மனைவி, அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகளின் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லை என்று பதிலளித்தார். அவர், (நம்) குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்து விடு! பிறகு நீ வந்து, (வீட்டிலிருக்கும் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு, விளக்கை ஏற்றிவிடுவது போல் பாவனை செய்து) விளக்கை அணைத்து விடு! (இருப்பதை விருந்தாளிக்குக் கொடுத்து விட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக் கொள்வோம் என்று சொன்னார். அவ்வாறே அவர் (மனைவி) செய்தார். பிறகு, (விருந்தளித்த) அம்மனிதர் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள், இன்னார் இன்னாரை (உங்கள் இருவரை)க் கண்டு மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் வியப்படைந்தான் அல்லது (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண் டான் என்று சொன்னார்கள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், தமக்கே தேவை இருந்தும் கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்கு கிறார்கள்… எனும் (திருக்குர்ஆன் 59:9ஆவது) வசனத்தை அருளினான்.✍️✍️✍️* 


 *(புகாரி 4889)* 


 *21. ☪️☪️☪️நபியின்🕋🕋 முன் 🧶சப்தத்தை🟣 உயர்த்திய🟡 போது🟠 இறங்கிய ⚫வசனம்📚📚📚* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 107* 


 *🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

ஜும்மா சட்டங்கள்

*🔥🔥மீள் பதிவு🔥🔥* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


*🕋🕋நபிவழியில் ஜும்மா சட்டங்கள்🕋🕋* 

 *👉👉👉இது ஒரு நீண்ட பதிவு👈👈👈* 


 *📚📚📚ஸஹியான ஹதீஸ்களில் இருந்து📚📚📚* 


 *🌐🌐🌐ஜும்மா குத்பா சம்மந்தமான சில தெளிவுகள்🌐🌐🌐* 


📕📕📕 இமாம் இரு குத்பாக்களுக்கிடையில் அமரும் போது முஅத்தின்ஸலவாத்துச் சொல்லுதல்
இமாம் முதலாவது உரையை செய்துவிட்டு சற்று அமா்வார்.மீண்டும்இரண்டாவது குத்பாவுக்காக *எழும்புவார்.இவ்வாறு இருகுத்பாக்களுக்கிடையில் இமாம் அமரும் போது* , அவரை எழுந்து நிற்கச்செய்வதற்காக முஅத்தின் ‘ *அல்லாஹூம்ம ஸல்லிவசல்லிம் வபாரிக்வசல்லிம் அலை’* என்று ஸலவாத்துச் சொல்லும் நடைமுறை பெரும்பாலானபள்ளிகளில் இருக்கிறது.இதுவும் *நபிவழியில் இல்லாத புது வழியாகும்* .நபிகளார் இவ்வாறு அமரும் போது *பிலால் (ரலி)* அவா்கள் ஸலவாத்துச்சொன்னதாக எந்தவொரு செய்தியும் வரவில்லை.எனவே *இதை செய்வதும்பித்அத்தாகும்* .


 *🌎🌎இரண்டாம் குத்பா கிடைத்தால் தான் ஜும்ஆ நன்மை கிடைக்குமா❓🌎🌎* 


 *✍✍✍இமாம் உரையாற்றுவதற்கு முன் ஜும்ஆத் தொழுகைக்கு வருபவர்களுக்கு குர்பானி கொடுத்த நன்மை கிடைப்பதாகப் பின்வரும் செய்தி கூறுகின்றது.✍✍✍* 
 

 *881* حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً فَإِذَا خَرَجَ الْإِمَامُ حَضَرَتْ الْمَلَائِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ رواه البخاري


📘📘📘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பெருந்துடக்கிற்காகக் குளிப்பது போன்று ஜுமுஆவுடைய நாளில் குளித்துவிட்டுப் பள்ளிக்குச் செல்பவர் ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்துவிட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து உபதேசத்தைச் செவியேற்கிறார்கள்.📘📘📘


 *இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.* 

 *நூல் : புகாரி 881* 


 *✍✍✍இமாம் உரையாற்றுவதற்கு முன்பு வந்தவர்களுக்கு குர்பானி கொடுத்த நன்மை கிடைக்கும் என இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.* 
 *இமாம் உரையாற்றிய பின் வருபவருக்கு இந்தச் சிறப்பு கிடைக்காது. ஆனால் அவர் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொண்டதால் ஜும்ஆத் தொழுபவருக்கு ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள மற்ற சிறப்புகள் அவருக்குக் கிடைக்கும்✍✍✍.* 


📙📙📙அதே நேரத்தில் ஒருவர் இமாம் உரையாற்றுவதற்கு முன்பாகவே வர வேண்டும் என நாடுகிறார். ஆனால் சூழ்நிலையின் காரணமாக இது அவருக்குத் தவறிப் போனால் அவர் நல்லதை நாடியதற்காக அதற்குரிய நன்மையை இறைவன் அப்படியே அவருக்குக் கொடுப்பான்.📙📙📙

 

 *3534* حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ فَقَالَ إِنَّ بِالْمَدِينَةِ لَرِجَالًا مَا سِرْتُمْ مَسِيرًا وَلَا قَطَعْتُمْ وَادِيًا إِلَّا كَانُوا مَعَكُمْ حَبَسَهُمْ الْمَرَضُ رواه مسلم


 *✍✍✍நாங்கள் ஓரு போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், “மதீனாவில் சிலர் இருக்கின்றனர். நீங்கள் ஒரு பாதையில் நடக்கும் போதும், ஒரு பள்ளத்தாக்கைக் கடக்கும் போதும் உங்களுடனேயே அவர்களும் இருக்கின்றனர். நோய் தான் அவர்களை (போருக்கு வர விடாமல்) தடுத்து விட்டது” என்று சொன்னார்கள்.✍✍✍* 


 *அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)* 

 *நூல் : முஸ்லிம் 3872* 



 *🌐🌐இமாம் உரையாற்றும் போது பேசக்கூடாது🌎🌎* 


 *934* - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ : حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ عُقَيْلٍ ، عَنِ ابْنِ شِهَابٍ قَالَ : أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ :
إِذَا قُلْتَ لِصَاحِبِكَ يَوْمَ الْجُمُعَةِ أَنْصِتْ وَالإِمَامُ يَخْطُبُ فَقَدْ لَغَوْتَ.


📗📗📗“இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம், ‘வாய் மூடு’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📗📗📗

 *அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),* 

 *நூல்: புகாரி 934* 


 *🌎🌎இமாம் உரையாற்றும் போது விளையாடக்கூடாது🌎🌎* 


 *1419* – و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الْآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَاسْتَمَعَ وَأَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ وَزِيَادَةُ ثَلَاثَةِ أَيَّامٍ وَمَنْ مَسَّ الْحَصَى فَقَدْ لَغَا


 *✍✍✍“யார் (தரையில் கிடக்கும்) கம்பைத் தொ(ட்டு விளையா)டுகின்றாரோ அவர் (ஜும்ஆவை) பாழாக்கி விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍✍✍* 

 *அறி: அபூஹுரைரா (ரலி),* 

 *நூல்: முஸ்லிம் 1419* 


 *🕋🕋🕋ஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா❓🕋🕋🕋*


📒📒📒இமாம் ஜும்ஆ உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் உரை கேட்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. முட்டுக் கட்டி அமர்தல் என்றும் தமிழகத்தில் சில ஊர்களில் குறிப்பிடுவார்கள்.📒📒📒


 *✍✍✍மார்க்க அறிஞர்களில் சிலர் அவ்வாறு உட்காருவதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள் என்று கூறி அதற்கு ஆதாரமாக சில செய்திகளையும் முன்வைக்கின்றனர்* .
 *முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக் காலிட்டு அமரும் முறைக்கு அரபியில் இஹ்திபாவு என்றும் அல்ஹப்வா என்றும் குறிப்பிடுவார்கள்.✍✍✍* 


📓📓📓இவ்வாறு அமரும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளதாக சில செய்திகள் வந்துள்ளன. ஆனால் அந்தச் செய்திகள் அனைத்தும் மிக மிகப் பலவீனமானவையாகவே உள்ளன.
இது தொடர்பான செய்தி முஆத் இப்னு அனஸ் (ரலி), அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி), ஜாபிர் (ரலி) ஆகிய மூன்று நபித்தோழர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அறிவிப்பையும் அது எவ்வாறு பலவீனமானது என்பதையும் காண்போம்.
முஆத் இப்னு அனஸ் (ரலி அறிவிப்பு📓📓📓


 *514* – حدثنا محمد بن حميدالرازي وعباس بن محمد الدوري قالا حدثنا أبو عبد الرحمن المقرئ عن سعيد بن أبي أيوب حدثني أبو مرحوم عن سهل بن معاذ عن أبيه : أن النبي صلى الله عليه و سلم نهى عن الحبوة يوم الجمعة والإمام يخطب (رواه الترمدي)


 *✍✍✍ஜும்ஆ நாளில் இமாம் உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு உட்காருவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.✍✍✍* 

 *அறிவிப்பவர் : முஆத் இப்னு அனஸ் (ரலி)* 

 *நூல் : திர்மிதி (514)* 


 *இந்த அறிவிப்பு அபூதாவூத் (1112), முஸ்னத் அஹ்மத் (15668), இப்னு குஸைமா (1815), தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் (16797), சுனனுல் பைஹகி அல்குப்ரா (5704), முஸ்னத் அபீ யஃலா (1492, 1496) ஹாகிம் (1069), ஷரஹுஸ் சுன்னா (1082) ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.* 


📔📔📔இந்தச் செய்தி பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் ஸஹ்ல் இப்னு முஆத் இப்னு அனஸ் என்பார் இடம் பெற்றுள்ளர். இவருடைய அறிவிப்பை இமாம் இப்னு மயீன் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.📔📔📔


حدثنا عبد الرحمن انا أبو بكر بن ابى خيثمة فيما كتب إلى قال سمعت يحيى بن معين يقول: سهل بن معاذ بن انس عن ابيه ضعيف. (الجرح والتعديل (4/ 203)


 *✍✍✍ஸஹ்ல் இப்னு முஆத் இப்னு அனஸ் தனது தந்தை வழியாக அறிவிப்பை பலவீனமானவை என இமாம் யஹ்யா இப்னு மயீன் விமர்சித்துள்ளார்கள்.✍✍✍* 


 *நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 4, பக்.203)* 


⛱⛱⛱மேற்கண்ட செய்தியை இவர் தனது தந்தை வழியாக அறிவிக்கின்ற செய்தியாகும். எனவே இமாம் இப்னு மயீன் அவர்களின் விமர்சனத்தின் அடிப்படையில் அது பலவீனமானதாகும்.
இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும் இவரை விமர்சித்துள்ளார்கள்⛱⛱⛱.


سهل بن معاذ بن أنس ، يروى عن أبيه روى عنه زبان بن فائد منكر الحديث جدا (المجروحين 1/ *347* )


 *✍✍✍ஸஹ்ல் இப்னு முஆத் இப்னு அனஸ் ஹதீஸ் துறையில் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவர் ஆவார்.✍✍✍* 


 *(நூல் : அல்மஜ்ரூஹீன், பாகம் 1, பக்கம் 347)* 


🌈🌈🌈எனவே ஸஹ்ல் பின் முஆத் இடம் பெற்றுள்ள மேற்கண்ட அறிவிப்பு பலவீனமானது என்பதில் சந்தேகமில்லை.🌈🌈🌈


 *✍✍✍மேலும் மேற்கண்ட செய்தியில் அபூ மர்ஹும் என்பாரும் இடம் பெற்றுள்ளார். இவருடைய பெயர் அப்துர் ரஹீம் இப்னு மைமூன் என்பதாகும். இவரைப் பற்றி அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்✍✍✍.* 


قال ابن أبي خيثمة عن ابن معين ضعيف الحديث وقال أبو حاتم يكتب حديثه ولا يحتج به وقال الذهبي فيه لين


🏵🏵🏵இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர் என இமாம் இப்னு மயீன் விமர்சித்துள்ளார். மேலும் இவருடைய ஹதீஸ்கள் எழுதப்படும். ஆனால் அவை ஆதாரமாகக் கொள்ளப்படாது என இமாம் அபூ ஹாதிம் விமர்சித்துள்ளார்.🏵🏵🏵


 *(நூல் தக்ரீபுத் தஹ்தீப் பாகம் : 2, பக்கம் 354)* 


 *✍✍✍இவர் பலவீனமானவர் என இமாம் தஹபீ அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.✍✍✍* 


 *(நூல்: அல்காஷிஃப், பாகம்: 1, பக்கம் 650)* 


📚📚📚மேற்கண்ட அறிவிப்பில் ஸஹ்ல் இப்னு முஆத் மற்றும் அபூ மர்ஹும் ஆகிய இரண்டு பலவீனமானவர்கள் இடம் பெற்றுள்ளனர். எனவே அது பலவீனமான அறிவிப்பு என்று உறுதியாகிவிட்டது.📚📚📚


 *✍✍✍ஸஹ்ல் பின் முஆத் என்பாரிடமிருந்து ஸப்பான் இப்னு ஃபாயித் என்பவர் வழியாகவும் இதே செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.✍✍✍* 


 *16798* – حَدَّثَنَا بَكْرُ بن سَهْلٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بن يُوسُفَ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ زَبَّانَ بن فَايِدٍ، عَنْ سَهْلِ بن مُعَاذِ بن أَنَسٍ، عَنْ أَبِيهِ، قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الاحْتِبَاءِ يَوْمَ الْجُمُعَةِ ..(المعجم الكبير للطبراني 15/ 108)


📕📕📕ஜும்ஆ நாளில் முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு உட்காரும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.📕📕📕


 *அறிவிப்பவர் : முஆத் இப்னு அனஸ் (ரலி)* 

 *நூல் : அல்முஃஜமுல் கபீர் தப்ரானீ (16798) பாகம் 15, பக்கம் 108* 


 *✍✍✍இதன் அறிவிப்பாளர் தொடரிலும் பல பலவீனங்கள் உள்ளன.* 
 *முதலாவது பலவீனம்: இது ஸஹ்ல் இப்னு முஆத் தமது தந்தை வழியாக அறிவிக்கின்ற அறிவிப்பாகும். எனவே இது பலவீனமானதாகும். இது பற்றிய விபரத்தை முந்திச் சென்ற செய்தியின் விமர்சனத்தில் தெளிவுபடுத்தியுள்ளோம்* .
 *இரண்டாவது பலவீனம் : இதன் அறிவிப்பாளர் தொடரில் ஸப்பான் இப்னு ஃபாயித் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார். இவரைப் பல அறிஞர்கள் குறைகூறியுள்ளனர்.✍✍✍* 


قال أحمد أحاديثه مناكير وقال يحيى ضعيف وقال ابن حبان لا يحتج به .( الضعفاء والمتروكين لابن الجوزي 1/ 292)

قال ابن حبان منكر الحديث جدا يتفرد عن سهل بن معاذ بنسخة كأنها موضوعة لا يحتج به وقال الساجي عنده مناكير (تهذيب التهذيب 3/ 265)


📘📘📘இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை எனக் கூறுகிறார்கள். இவர் பலவீனமானவர் என இப்னு மயீன் கூறியுள்ளார். இவரை ஆதாரமாகக் கொள்ளப்படாது என இமாம் இப்னு ஹிப்பான் விமர்சித்துள்ளார்.📘📘📘


 *நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன் பாகம் 1, பக்கம் 292* 


 *✍✍✍இவர் ஹதீஸ் துறையில் மிகவும் நிராகரிக்கப்பட வேண்டியவர் ஆவார். இட்டுக்கட்டப்பட்டதைப் போன்று இருக்கும் ஒரு பிரதியை இவர் ஸஹ்ல் இப்னு முஆதிடமிருந்து தனித்து அறிவிக்கின்றார். இவர் ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டார் என இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். இவரிடம் மறுக்கத்தக்க செய்திகள் உள்ளன என இமாம் ஸாஜி கூறியுள்ளார்.✍✍✍* 


 *(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 3, பக்கம் 292)* 


📙📙📙மூன்றாவது பலவீனம்: மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இப்னு லஹீஆ என்பார் இடம் பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவர் ஆவார்.📙📙📙


 عبد الله بن لهيعة بن عقبة أبو عبد الرحمن البصري ضعيف – الضعفاء والمتروكين بن لهيعة ضعيف الحديث- (تاريخ ابن معين) سمعت يحيى يقول بن لهيعة لا يحتج بحديثه ( تاريخ ابن معين – رواية الدوري 4 /481) قال عبد الرحمن بن مهدي لا أحمل عن بن لهيعة قليلا ولا كثيرا… قال يحيى بن سعيد قال لي بشر بن السري لو رأيت بن لهيعة لم تحمل عنه حرفا ( المجروحين 2 /12)


 *✍✍✍அப்துல்லாஹ் பின் லஹீஆ என்பவர் பலவீனமானவர் என்று இமாம் நஸயீ கூறினார்கள்.✍✍✍* 

 *நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன் பாகம்: 1, பக்கம் : 64* 


📗📗📗இப்னு லஹீஆ ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று இப்னு மயீன் அவர்கள் கூறினார்கள்.📗📗📗


 *நூல்: தாரீக் இப்னு முயீன், பாகம் 1, பக். 153* 


 *✍✍✍இப்னு லஹீஆ என்பவரின் ஹதீஸ் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படாது என்று யஹ்யா (பின் மயீன்) கூறியதை  நான்  செவியுற்றுள்ளேன்.✍✍✍* 


 *நூல்: தாரீக் இப்னு முயீன், பாகம்: 1, பக். 481* 


📒📒📒இப்னு லஹீஆ வழியாக குறைவாகவோ, அதிகமாகவோ (எதையும்) எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று அப்துர்ரஹ்மான் பின் மஹ்தி கூறுகின்றார்கள். நீ இப்னு லஹீஆவைப் பார்த்தால் அவரிடமிருந்து ஒரு எழுத்தைக் கூட எடுத்துக் கொள்ளாதே என்று பிஷ்ர் என்னிடம் கூறினார் என்று யஹ்யா பின் ஸயீத் கூறுகின்றார்கள்.📒📒📒


 *நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம்: 2, பக்கம் : 14* 


 *✍✍✍மேற்கண்ட விமர்சனங்களின் அடிப்படையில் &ஸப்பான் இப்னு ஃபாயித் என்பாரின் இந்த அறிவிப்பு மிக மிகப் பலவீனமானது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.* 
 *அம்ரு இப்னு ஆஸ் அறிவிப்பு✍✍✍* 


 *1134* – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ وَاقِدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ: قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – عَنْ الِاحْتِبَاءِ يَوْمَ الْجُمُعَةِ، يَعْنِي: وَالْإِمَامُ يَخْطُبُ (سنن ابن ماجه)


📓📓📓ஜும்ஆ நாளில் இமாம் உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு உட்காரும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.📓📓📓


 *அறிவிப்பவர்: அம்ர் பின் ஆஸ் (ரலி)* 

 *நூல்: இப்னு மாஜா 1134* 


 *✍✍✍இதுவும் பலவீனமான அறிவிப்பாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இரண்டு பலவீனங்கள் இடம் பெற்றுள்ளன.* 
 *முதலாவது பலவீனம்: இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் இப்னு வாகித் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென்றே அறியப்படாதவர் ஆவார்.✍✍✍* 


عبد الله ابن واقد شيخ لبقية مجهول (تقريب التهذيب 2/ 328) ولا أدري هو أبو رجاء الهروي ، أو أبو قتادة الحراني. أو آخر ثالث (تهذيب الكمال 16/ 258) قال ابن عدي مظلم الحديث ) المغني في الضعفاء 1/ 362


📔📔📔பகிய்யத் இப்னு வலீத் என்பாரின் ஆசிரியரான அப்துல்லாஹ் இப்னு வாகித் மஜ்ஹுல் யாரென்றே அறியப்படாதவர் ஆவார் என தக்ரீபுத் தஹ்தீப் நூலில் இமாம் இப்னு ஹஜர் குறிப்பிடுகின்றார்.📔📔📔


 *✍✍✍அப்துல்லாஹ் இப்னு வாகித் எனும் இவர் அபூ ரஜா அல்ஹர்வீ என்பவரா அல்லது அபூகதாதா அல்ஹர்ரானீ என்பவரா? அல்லது மூன்றாவதான வேறொருவரா என்பதை நான் அறிய மாட்டேன் என தஹ்தீபுல் கமால் ஆசிரியர் மிஸ்ஸி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.* *மேலும் இவர் ஹதீஸ்களில் இருட்டடிப்பு செய்பவர் என இப்னு அதீ அவர்கள் இவரை தமது முக்னீ ஃபில் லுஅஃபா எனும் நூலில் விமர்சித்துள்ளார்கள்✍✍✍* .


🌈🌈🌈எனவே இந்தச் செய்தியும் பலவீனமானதாகும்.
இரண்டாவது பலவீனம் : இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள பகிய்யா இப்னு வலீத் என்பது தத்லீஸ் செய்யக் கூடியவர் ஆவார்.🌈🌈🌈


بقية ابن الوليد ابن صائد… صدوق كثير التدليس عن الضعفاء (تقريب التهذيب1/ 126)


 *✍✍✍இவர் பலவீனமானவர்களிமிருந்து அதிகம் தத்லீஸ் செய்யக் கூடியவர் ஆவர் என இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தமது தக்ரீபில்✍✍✍* 


 *(பாகம் 1, பக்கம் 126) குறிப்பிட்டுள்ளார்கள்.* 


⛱⛱⛱தத்லீஸ் என்றால் தம்முடைய ஆசிரியரிடமிருந்து அவர் செவியேற்காத செய்திகளையும் செவியேற்றதைப் போன்று பொருள் தரக்கூடிய வாரத்தைகளைப் பயன்படுத்தி அறிவிப்பவர் ஆவார். இத்தகைய அறிவிப்பாளர்கள் நேரடியாகச் செவியேற்றதற்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால்தான் அது ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படும்.⛱⛱⛱


 *✍✍✍ஆனால் மேற்கண்ட அறிவிப்பில் பகிய்யா இப்னு வலீத் தமது ஆசிரியரிடமிருந்து நேரடியாகச் செவியேற்றதற்கான எந்த வார்த்தைகளும் வரவில்லை.* 
 *எனவே இந்த விமர்சனத்தின் அடிப்படையிலும் மேற்கண்ட செய்தி பலவீனமானது. இது ஆதாரமாக எடுப்பதற்கு தகுதியற்றதாகும் என்பது உறுதியாகிவிட்டது.* 
 *ஜாபிர் (ரலி) அவர்களின் அறிவிப்பு✍✍✍* 


ثنا عبد الله بن محمد بن عبد العزيز ثنا احمد بن الأزهر أبو الأزهر النيسابوري ثنا عبد الله بن ميمون القداح عن جعفر بن محمد عن أبيه عن جابر أن النبي صلى الله عليه وسلم نهى عن الحبوة يوم الجمعة والإمام يخطب (الكامل في ضعفاء الرجال 4/ 188)


📚📚📚ஜும்ஆ நாளில் இமாம் உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டிக் கொண்டு குத்துக்காலிட்டு உட்காரும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.📚📚📚


 *அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)* 

 *நூல்: அல்காமில் ஃபீ லுஅஃபாயிர் ரிஜால் பாகம் 4, பக்கம் 188* 


 *✍✍✍இந்தச் செய்தியும் பலவீனமான அறிவிப்பாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் இப்னு மைமூன் அல்கத்தாஹ் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார். இவரைப் பல அறிஞர்கள் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர்✍✍✍* .


قال البخاري ذاهب الحديث وقال أبو زرعة واهي الحديث وقال الترمذي منكر الحديث وقال ابن عدي عامة ما يرويه لا يتابع عليه. .. قلت: وقال النسائي ضعيف وقال أبو حاتم منكر الحديث وقال أبو حاتم يروي عن الاثبات الملزقات لا يجوز الاحتجاج به إذا انفرد وقال الحاكم روى عن عبيد الله بن عمر أحاديث موضوعة وقال أبو نعيم الاصبهاني روى المناكير. عليه. (تهذيب التهذيب 6/ 44)


🕋🕋🕋இவர் ஹதீஸ்களில் சறுகியவர் என்று இமாம் புகாரியும், இவர் ஹதீஸ்களில் மிகப் பலவீனமானவர் என அபூ சுர்ஆ அவர்களும், இவர் ஹதீஸ் துறையில் விடப்பட வேண்டியவர் என திர்மிதி அவர்களும் விமர்சித்துள்ளனர். மேலும் இவருடைய அறிவிப்புகளில் பெரும்பாலானவை மாற்று அறிவிப்புகளாக எடுத்துக் கொள்ளப்படாது என இப்னு அதீ கூறியுள்ளார். இவர் பலவீனமானவர் என நஸாயீ அவர்களும், இவர் ஹதீஸ்களில் நிராகரிக்கப்படவேண்டியவர் என அபூ ஹாதிம் அவர்களும் விமர்சித்துள்ளனர். இவர் நம்பகமானவர்கள் வழியாக இட்டுக் கட்டி அறிவிப்பவர் ஆவார். இவர் தனித்து அறிவித்தால் ஆதாரமாகக் கொள்வது கூடாது என அபூஹாதிம் விமர்சித்துள்ளார். இவர் உபைதுல்லாஹ் இப்னு உமர் என்பார் வழியாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என ஹாகிம் கூறியுள்ளார். இவர் நிராகரிக்கத்தக்க செய்திகளை அறிவித்துள்ளார் என அபூ நுஐம் அல்இஸ்பஹானி விமர்சித்துள்ளார்.🕋🕋🕋


 *(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 6, பக்கம் 44)* 


 *✍✍✍இந்த ஜாபிர் (ரலி) அவர்களை கூறியதாக அறிவிக்கப்படும் இந்த அறிவிப்பு ஆதாரத்திற்கு அறவே தகுதியில்லாத இட்டுக்கப்பட்டது என்ற தகுதியைப் பெறக்கூடிய அளவில் உள்ள மிகமிகப் பலவீனமான அறிவிப்பு என்பது உறுதியாகிவிட்டது.* 
 *இமாமுடைய உரையைக் கேட்கும் போது கைகளால் முட்டுக் கால்களை கட்டிக் கொண்டு அமரக் கூடாது என்று வரும் அறிவிப்புகள் அனைத்தும் மிகப்பலவீனமானவையாக உள்ளன. எனவே இந்தப் பலவீனமான அறிவிப்புகளை வைத்து மார்க்கச் சட்டங்களை வகுப்பது கூடாது.✍✍✍* 


📕📕📕ஒருவர் உரையைக் கேட்கும் போது முட்டுக் கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்தால் அதில் எவ்விதத் தவறுமில்லை.
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு அமர்ந்துள்ளார்கள் என ஸஹீஹான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது📕📕📕


 *6272* حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي غَالِبٍ ، أَخْبَرَنَاإِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَرَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِفِنَاءِ الْكَعْبَةِ مُحْتَبِيًا بِيَدِهِ هَكَذَا.


 *✍✍✍இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:* 
 *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் முற்றத்தில் தமது கையை முழங்காலில் கட்டிக் கொண்டு குத்துக்காலிட்டு இவ்வாறு அமர்ந்திருந்ததைக் கண்டேன்.✍✍✍* 


 *நூல்: புகாரி 6272* 


🏵🏵🏵அதே நேரத்தில் மர்மஸ்தானம் தெரியும் வகையில் இவ்வாறு இருப்பதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.🏵🏵🏵


 *584* حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ ، عَنْ أَبِي أُسَامَةَ ، عَنْ عُبَيْدِ اللَّهِ ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعَتَيْنِ، وَعَنْ لِبْسَتَيْنِ، وَعَنْ صَلَاتَيْنِ : نَهَى عَنِ الصَّلَاةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَعَنِ اشْتِمَالِ الصَّمَّاءِ ، وَعَنْ الِاحْتِبَاءِ فِي ثَوْبٍ وَاحِدٍ يُفْضِي بِفَرْجِهِ إِلَى السَّمَاءِ، وَعَنِ الْمُنَابَذَةِ وَالْمُلَامَسَةِ .


 *✍✍✍மர்ம உறுப்பு வானுக்குத் தெரியும்படி ஒருவர் ஒரே ஆடையை (முழங்காலில்) சுற்றிக் கொண்டு இரு முழங்கால்களையும் நட்டுவைத்துக் கொண்டு (அவற்றைக் கைகளால் கட்டியபடி) உட்கார்ந்திருப்பதற்கும் (இஹ்திபா) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.✍✍✍* 


 *அறிவிப்பவர்  : அபூஹுரைரா (ரலி)* 

 *நூல் : புகாரி 584* 


அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்


 *ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

ஜும்ஆ தொழுகையின் முன் பின் சுன்னத்துகள் எத்தனை❓❓❓📚📚📚*

*🔰🔰🔰மீள் பதிவு🔰🔰🔰* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


*📚📚📚ஜும்ஆ தொழுகையின் முன் பின் சுன்னத்துகள் எத்தனை❓❓❓📚📚📚*


 *👉 👉 👉 ஆதாரப்பூர்வமான நபிமொழியில் இருந்து உங்கள் பார்வைக்கு 👇👇👇👇👇* 


 *✍️✍️✍️என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். என்ற ஹதீஸின் படி ஒவ்வொரு பர்ளான, மற்றும் சுன்னத்தான தொழுகைகளை நபியவர்கள் தொழுது நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். என்பதை நாமெல்லாம் நன்கு அறிவோம்.✍️✍️✍️* 


ஐவேளை பர்ளான தொழுகைகளுக்கு முன், பின் சுன்னத்துகள் எத்தனை என்பது ஹதீஸ்களில் தெளிவாக பதியப்பட்டுள்ளது. அவற்றில் ஜும்ஆ உடைய பர்ளுக்கு பின்னால் சுன்னத்தான தொழுகைகள் எத்தனை ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

 *ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளில் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இன்னாரே! தொழுது விட்டீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர் 'இல்லை' என்றார். 'எழுந்து தொழுவீராக!' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.* 

 *(நூல்: புஹாரி 930)* 

    *👆👆👆இந்த ஹதீஸ் இரண்டு விஷயங்களை சொல்கிறது.👈👈👈* 

    தொழாதவர் ஜும்ஆ உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் தொழுது விட்டுத்தான் அமர வேண்டும் என்பது முதல் விஷயம்.

    *உரைக்கும் முன் தொழுது விட்டிருந்தால் தொழாமல் அமர்ந்து கொள்ளலாம் என்பது இரண்டாவது விஷயம்.* 

    அதாவது உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டு இருக்கும் போது சுன்னத் இரண்டு ரக்அத்துக்களை முன்னரே தொழுது விட்டிருந்தால் நேரடியாக சென்று அமர்ந்து கொள்ளலாம்.

 *இக்கருத்தை இப்னுமாஜாவில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு ஹதீஸ் கூடுதல் விபரங்களோடு விளக்குகிறது.* 

    நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்ஃபானி (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், 'நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?' என்று கேட்க, அவர் 'இல்லை' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'அப்படியாயின் நீர் இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுது கொள்வீராக' என்றார்கள் 

*என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னுமாஜா 1114)* 

    'நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?' என்ற வாசகம் பள்ளியல்லாத மற்ற இடங்களிலும் தொழும் தொழுகையை குறிப்பதை கவனிக்கலாம்.

    *இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தால் பள்ளியின் காணிக்கைத் தொழுகை முக்கியத்துவம் பெறாது. உரையை கேட்பதில் கவனம் செலுத்த வேண்டும், அதுவே முக்கியத்துவம் பெறும்.* 

 *மற்ற தொழுகைகளுக்கு முன் சுன்னத் பாங்கிற்கு பின்பு தான் தொழ வேண்டும். ஆனால் ஜும்ஆவின் முன் சுன்னத்தின் நேரம் பாங்கிற்கு முன்னரே ஆரம்பித்து விடுகின்றது.* அதற்கான ஆதாரம்.
    இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது வீட்டில் ஜும்ஆவுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் ஜும்ஆவுக்கு முன்னுள்ள தொழுகையை நீட்டித் தொழுபவர்களாகவும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு தொழுதிருப்பதாகவும் கூறினார்கள்.

 *(அறிவிப்பவர்: நாஃபிஉ (ரலி), நூல்கள்: அபூதாவூது 1123, இப்னு ஹிப்பான்)* 

இரண்டு ரக்அத்துகள் 
“அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்களும் பின் இரண்டு ரக்அத்களும் தொழுபவர்களாகவும் மஃரிபுக்குப் பிறகு தம் வீட்டில் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இஷாவுக்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர். ஜும்ஆவுக்குப் பின் (வீட்டுக்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர்.

 ( *பார்க்க புகாரீ 937)* 

மேற்சுட்டிக்காட்டிய ஹதீஸின் மூலம் ஜும்ஆவுக்கு பின் இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதை ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது. அதே நேரம் பின் வரும் ஹதீஸ் ஜும்ஆவுக்கு பின் நான்கு ரகஅத்துகள் தொழ வேண்டும் என்பதை தெளிவுப்படுத்துவதை காணலாம்.

 *நான்கு ரம்அத்துகள் மேலும் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஜுமுஆ தொழுத பின் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழட்டும்!* 

 *இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 1597)* 

இரண்டு விதமான ஹதீஸ்கள் வந்துள்ளன. எனவே சந்தர்ப்ப சூழ்நிலைகளை பொருத்து இரண்டையும் வாழ்க்கையில் நடை முறைப்படுத்தலாம். அவசர பயணங்கள் போக இருந்தால் ஜும்ஆக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழுது விட்டு போகலாம். அல்லது நிதானமாக இரண்டு, இரண்டு ரக்அத்துகளாக மொத்தம் நான்கு ரக்அத்துகள் தொழுது விட்டு போகலாம்.

 *இரண்டு சுன்னத்துகளையும் மாறி, மாறி நமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திய பாக்கியம் நமக்கு கிடைக்கும்.* 

நாங்கள் *ஷாஃபி மத்ஹபினர் ஜும்ஆ தொழுகைக்குப் பின் நான்கு ரக்அத்துகள் சுன்னத் தொழமாட்டோம்,* இரண்டு ரக்அத்துகள் தான் தொழுவோம் என்று நபியவர்களால் சொல்லப்பட்ட ஹதீஸை நிராகரித்து விடாதீர்கள்.

அதே போல நாங்கள் *ஹனபி மத்ஹபினர் ஜும்ஆ தொழுகைக்குப் பின் எங்களுக்கு நான்கு ரக்அத்துகள் தான் சுன்னத் தொழ வேண்டும்,* நாங்கள் இரண்டு ரக்அத்துகள் தொழ மாட்டோம் என்று கூறி *நபியவர்களால் சொல்லப்பட்ட ஹதீஸை நிராகரித்து விடாதீர்கள்❓* 

மத்ஹபை காரணம் காட்டி ஹதீஸ்களை நிராகரித்து விடாதீர்கள், *ஹதீஸூக்கு முக்கியத்துவம், முன்னுரிமையும் கொடுங்கள்.* சந்தர்ப்பத்திற்கேற்ப இரண்டு சுன்னாக்களையும் நடை முறைப்படுத்த ஆர்வம் காட்டுங்கள்.

 *பொதுவாக சுன்னத்தான தொழுகைகளை நமது வீடுகளில் தொழுவது தான் சிறப்பாகும். ஆனால் தொழில் ரீதியாக நாம் அடிக்கடி வெளியே இருப்பதால் பர்ளுடைய முன், பின் சுன்னத்துகளை பள்ளியில் தொழுது கொள்ள வேண்டிய நிலை இருந்தாலும், சுப்ஹுடைய சுன்னத்தை வீட்டில் தொழுது விட்டு பள்ளிக்கு போகலாம். ஏன் என்றால் சுப்ஹு தொழுகைக்கு பாங்கு சொல்லி இருபது அல்லது இருப்பத்தி ஐந்து நிமிடங்கள் கழித்து இகாமத் சொல்லப்படுகிறது, எனவே தாராளமான நேரம் இருப்பதால் சுப்ஹு நேரதத்தில் பாங்கு கேட்டவுடன் வீட்டிலேயே உளூ செய்து வீட்டு, சுப்ஹுடைய சுன்னத் இரண்டு ரக்அத்துகளை வீட்டில் தொழுத பின் உளூவுடன் பள்ளிக்குச் சென்று இகாமத் சொல்ல நேரம் இருக்கும் என்றால் பள்ளி காணிக்கை தொழுகையான தஹ்யத்துல் மஸ்ஜித் இரண்டு ரக்அத்துகள் தொழக் கூடிய பழக்கத்தை நடைமுறைப் படுத்த வேண்டும்* .

அந்த வரிசையில் ஜும்ஆவுக்கப் பின் வீட்டில் போய் தொழக்கூடிய சந்தர்ப்பம் இருந்தால் வீட்டிற்கு சென்று சுன்னத்தை வீட்டில் தொழுலாம். அல்லது பள்ளியிலே தொழுது கொள்ள வேண்டும்.

 *எனவே அல்லாஹ்வும் அல்லாஹ்வுடை துாதர் அவர்களும் எந்த அமல்களை நமக்கு எப்படி காட்டித் தந்துள்ளார்களோ அவைகளை அப்படியே நடை முறைப்படுத்த ஆர்வம் காட்டுவோமாக!* 

அல்லாஹுவே மிகவும் அறிந்தவன்

 *ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

இஸ்லாத்தை அறிந்து - 107

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய  மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 107 👈👈👈* 
 

*📚📚📚 தலைப்பு  10  குர்ஆன் வசனம் இறங்கிய காரணம் 📚📚📚* 


 *21. ☪️☪️☪️நபியின்🕋🕋 முன் 🧶சப்தத்தை🟣 உயர்த்திய🟡 போது🟠 இறங்கிய ⚫வசனம்📚📚📚* 


 *22. 📚📚📚தெளிவான 🕋🕋வெற்றி☪️☪️ அத்தியாயம்🔰🔰 இறக்கப்படல்📚📚📚* 


 *23. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️குறைஷிகள்🙋‍♀️🙋‍♀️ இரகசியம்🟣🟣 பேசிய போது🟡🟡 இறங்கியது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 



 *24. 👹👹👹பாவங்களுக்கு🔰🔰 பரிகாரம் 🧶🧶 உண்டா❓🟡🟡 என்று 🟣🟣கேட்ட🟠🟠 போது⚫⚫ இறங்கியது📚📚📚* 


 *25. 🧕🧕🧕பர்தா🧕🧕 எனும் ⚫திரை🟣 சம்மந்தமான🟡 சட்டம்🟠 இறங்கியது📚📚📚* 


 *21. ☪️நபியின்🕋 முன் 🧶சப்தத்தை🟣 உயர்த்திய🟡 போது🟠 இறங்கிய ⚫வசனம்📚* 


 *✍️✍️✍️இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:* 
 *(ஒருமுறை) நல்லவர்களான அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக் கொள்ள இருந்தார்கள். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பயணக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்த போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசினார்கள்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அந்த இருவரில் ஒருவர் (உமர்), பனூ முஜாஷிஉ குலத்தவரான அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களை நோக்கி (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். மற்றொருவர் (அபூபக்ர்), இன்னொருவரை (கஅகாஉ பின் மஅபத்) நோக்கி, (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். அந்த இன்னொருவருடைய பெயர் எனக்குத் தெரியாது என்று அறிவிப்பாளர் களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.- அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், எனக்கு மாறுசெய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கூறினார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️உமர் (ரலி) அவர்கள், தங்களுக்கு மாறுசெய்வது என் விருப்பமன்று என்று சொன்னார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன.* 
 *அப்போது, இறை நம்பிக்கை கொண்டவர் களே! உங்கள் குரலை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! எனும் (அல்குர்ஆன் 49:2ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.2✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:* 
 *இந்த வசனம் அருளப்பெற்ற பின் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இந்த அளவுக்கு மெதுவாகப் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்து கொள்வார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *(புகாரி 4845)* 


 *✍️✍️✍️அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *(அல்குர்ஆன் 49:2ஆவது வசனம் அருளப்பெற்ற நாளிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒரு மனிதர் அவரைக் குறித்த செய்தியை தங்களுக்காக நான் அறிந்து வருகிறேன், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். அவரிடம் அந்த மனிதர் சென்றார். அப்போது அவர் தமது தலையைக் கவிழ்த்தபடி (கவலையோடு) தமது வீட்டில் அமர்ந்து கொண்டிருக்கக் கண்டார். அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், உங்களுக்கு என்ன ஆயிற்று? என்று கேட்டார். அதற்கு ஸாபித் (ரலி) அவர்கள், (எனது நிலை) மோசம்தான். நான் நபி (ஸல்) அவர்களின் குரலுக்கு மேல் எனது குரலை உயர்த்தி(ப் பேசி) வந்தேன். நான் நரக வாசிகளில் ஒருவன்தான் என்று கூறினார். (செய்தியறிந்த) அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஸாபித் பின் கைஸ் இப்படி இப்படிச் சொன்னார் என்று தெரிவித்தார்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அறிவிப்பாளர்களில் ஒருவரான மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:* 

 *அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து,)மகத்தான நற்செய்தியை வாங்கிக் கொண்டு மீண்டும் ஒருமுறை சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸ் அவர்களிடம் சென்று நிச்சயம் நீர் நரகவாசிகளில் ஒருவரல்லர். சொர்க்கவாசிகளில் ஒருவரே என்று சொல்! என்று கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *(புகாரி 4846)* 


 *22. 📚தெளிவான 🕋வெற்றி☪️ அத்தியாயம்🔰 இறக்கப்படல்📚* 


 *✍️✍️✍️அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:* 
 *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களும் நபி அவர்களுடன் சென்று கொண்டிருந்தார்கள்.* 
 *அப்போது உமர் (ரலி) அவர்கள் ஏதோ ஒன்றைக் குறித்து நபி (ஸல்) அவர் களிடம் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை.* 
 *பிறகு (மீண்டும்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. பிறகு (மூன்றாம் முறையாக) உமர் கேட்டார்கள். அப்போதும் நபிகளார் பதிலளிக்கவில்லை. பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தம்மைத் தாமே கடிந்து கொண்டவர்களாக), உம்மை உமரின் தாய் இழக்கட்டும்! மூன்று முறை (கேள்வி கேட்டு) அல்லாஹ்வின் தூதரை வற்புறுத்தினாய். அந்த ஒவ்வொரு முறையும் அவர்கள் உனக்கு பதிலளிக்கவில்லையே என்று கூறினார்கள்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மேலும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதற்குப் பிறகு நான் எனது ஒட்டகத்தைச் செலுத்தி மக்களுக்கு முன்னால் வந்தேன். (அல்லாஹ்வின் தூதரிடம் இப்படி நான் நடந்து கொண்டதற்காக) என் விஷயத்தில் ஏதாவது குர்ஆன் (வசனம்) அருளப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன்.* 
 *சற்று நேரத்திற்குள் என்னை ஒருவர் சப்தமிட்டு அழைப்பதைக் கேட்டேன். நான் நினைத்த படி என் விஷயத்தில் குர்ஆன் (வசனம்) இறங்கிவிட்டிருக்கும் என அஞ்சினேன் என்று சொல்லிக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் சொன்னேன்.* 
 *அப்போது அவர்கள் இந்த இரவு எனக்கு ஒரு (குர்ஆன்) அத்தியாயம் அருளப்பட்டுள்ளது. சூரியன் எதன் மீது உதயமாகிறதோ அ(ந்த உலகத்)தை விட எனக்கு அந்த அத்தியாயம் மிகவும் விருப்பமானதாகும் என்று கூறிவிட்டு, உங்களுக்கு நாம் பகிரங்கமான வெற்றியை அளித்துள்ளோம் என்று (தொடங்கும் திருக்குர்ஆன் 48:1ஆவது இறைவசனத்தை) ஓதினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *(புகாரி 4833)* 

 
 *✍️✍️✍️ஹுபைப் பின் அபீஸாபித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:* 
 *நான் அபூ வாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம் (காரிஜிய்யா எனும் கிளர்ச்சியாளர்கள் குறித்து) கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்:* 
 *நாங்கள் ஸிஃப்பீன் எனுமிடத்தில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது (அப்துல்லாஹ் பின் அல்கவ்வாஎன்றழைக் கப்படும்) ஒரு மனிதர், அல்லாஹ்வின் வேதத்தின்பால் (தீர்ப்புக்காக) அழைக்கப்படு கின்றவர்களை நீங்கள் காணவில்லையா? என்று கேட்டார். அதற்கு அலீ (ரலி) அவர்கள், ஆம். (அல்லாஹ்வின் வேதம் கூறுகின்ற தீர்ப்புப்படி செயல்பட அழைப்புவிடுக்கப் பெற்றால் அதை நான் ஏற்றுக் கொள்வேன்) என்று கூறினார்கள். அப்போது சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️(இப்போரில் கலந்து கொள்ளாததற்காக யார் மீதும் குற்றம் சாட்டாதீர்கள். மாறாக,) உங்களையே குற்றம் சாட்டிக் கொள்ளுங்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை நடை பெற்ற ஹுதைபியா நாளில் எங்களை நான் பார்த்திருக்கிறேன். அன்று, நாங்கள் போர் புரிவது உசிதமென்று கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் இணைவைப்பவர்கள் விதித்த பாதகமான நிபந்தனைகளைக் கூட ஏற்றுக் கொண்டோம்). அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, (அல்லாஹ்வின் தூதரே!) நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா? (சத்தியத்திற்காகப் போராடி) போரில் கொலையுண்டுவிடும் போது நம் வீரர்கள் சொர்கக்கத்திலும் எதிரிகளுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அப்படியிருக்க, நாம் நமது மார்க்கத்தின் விஷயத்தில் எதற்காகத் தாழ்ந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்குமிடையில் தீர்ப்பளிக்காமல் இருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்பிச் செல்ல வேண்டும்?என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கத்தாபின் புதல்வரே! நான் அல்லாஹ்வுடைய தூதராவேன். என்னை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்க மாட்டான் என்று கூறினார்கள். (முஸ்லிம்களை இழிவுக்குள்ளாக்க நினைக்கும் இணை வைப்பாளர்கள் மீது) உமர் (ரலி) அவர்கள் கோபம் கொண்ட நிலையில் திரும்பிச் சென்றார்கள். தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து அபூபக்ர் அவர்களே! நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா? என்று ளநபி (ஸல்) அவர்களிடம் கேட்டது போன்றேன கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் கத்தாபின் புதல்வரே! நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள். அவர்களை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்க மாட்டான் என்று கூறினார்கள். அப்போது அல்ஃபத்ஹ் எனும் (48ஆவது) அத்தியாயம் இறங்கிற்று.13🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *(புகாரி 4844)* 


 *23. 🙋‍♂️குறைஷிகள்🙋‍♀️ இரகசியம்🟣 பேசிய போது🟡 இறங்கியது🙋‍♀️* 


 *✍️✍️✍️அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *(ஒருமுறை) குறைஷியரில் இருவரும் அவர்களுடைய துணைவியரின் உறவினரான ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த ஒருவரும் அல்லது ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், குறைஷிக் குலத்தைச் சேர்ந்த அவர்களுடைய மனைவிமார்களின் உறவுக்காரர் ஒருவரும் (ஆக மூவருமாக) ஒரு வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்தனர்.* 
 *அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் நமது பேச்சை அல்லாஹ் கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? என்று கேட்டார்.* 
 *அவர்களில் ஒருவர், (நமது பேச்சுகளில்) சிலவற்றை மட்டும் அவன் கேட்கிறான் என்று பதிலளித்தார்.* 
 *மற்றொருவர் நமது பேச்சுகளில் சிலவற்றை அவன் கேட்டுக் கொண்டிருப்பதானால் அனைத்தையும் அவன் கேட்கத்தானே செய்வான் என்று கூறினார்.* 
 *அப்போது தான் , ”(உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்த போது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை” எனும் இந்த வசனம் (திருக்குர்ஆன் 41:22) அருளப்பெற்றது✍️✍️✍️.* 


 *(புகாரி 4816)* 


 *24. 👹பாவங்களுக்கு🔰 பரிகாரம் 🧶 உண்டா❓🟡 என்று 🟣கேட்ட🟠 போது⚫ இறங்கியது📚* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:* *இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர்; விபசாரம் அதிக மாகச் செய்திருந்தனர். (ஒரு நாள்) அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் கூறிவருகின்ற(போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்புவிடுக்கின்ற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்து விட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே) என்று கூறினர்.* 
 *அப்போது, (ரஹ்மானின் உண்மை யான அடியார்களான) அவர்கள் அல்லாஹ் வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது) என்று அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி அவர்கள் கொலை புரிவதில்லை; மேலும் விபசாரம் செய்வதில்லை… எனும் (திருக்குர்ஆன் 25:68 ஆவது) வசனம் அருளப்பெற்றது.* 
 *மேலும், (நபியே!) கூறுங்கள்: வரம்புமீறி தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொண்டுவிடாதீர்கள்… எனும் (திருக்குர்ஆன் 39:53ஆவது) வசனமும் அருளப்பெற்றது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *(புகாரி 4810)* 


 *25. 🧕பர்தா🧕 எனும் ⚫திரை🟣 சம்மந்தமான🟡 சட்டம்🟠 இறங்கியது📚* 


 *✍️✍️✍️அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *பர்தா (சட்டம்) தொடர்பான இந்த இறைவசனத்தை மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். ளநபி (ஸல்) அவர்களின் துணைவியாரானன ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மணப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுடன் வீட்டில் இருந்தார்கள்.* 
 *அப்போது நபி (ஸல்) அவர்கள் (வலீமா விருந்துக்கான) உணவைத் தயாரித்து மக்களை அழைத்தார்கள். மக்கள் (சாப்பிட்டு விட்டு) பேசிக் கொண்டே அமர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வெளியே வரவும் திரும்பச் செல்லவுமாக இருந்தார்கள். மக்களோ பேசிக் கொண்டே அமர்ந்திருந்தனர்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அப்போது தான் அல்லாஹ் இறை நம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டா லும், அப்போதும்கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும் போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்ப தில் ஆர்வமாய் இருந்து விடாதீர்கள். நிச்சயமாக உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.* *நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்கவேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள் எனும் (திருக்குர்ஆன் 33:53ஆவது) வசனத்தை அருளினான். இதையடுத்துத் திரை போடப்பட்டது. மக்களும் எழுந்து விட்டனர்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *(புகாரி 4792)* 


 *26. ☪️☪️☪️அபுதாலிஃபிற்கு🟣🟣 பாவமன்னிப்பு🧶🧶 கேட்டபோது⚫⚫ இறங்கியது📚📚📚* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 108* 


 *🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

இஸ்லாத்தை அறிந்து - 108

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய  மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 108 👈👈👈* 
 

*📚📚📚 தலைப்பு  10  குர்ஆன் வசனம் இறங்கிய காரணம் 📚📚📚*  


 *26. ☪️☪️☪️அபுதாலிஃபிற்கு🟣🟣 பாவமன்னிப்பு🧶🧶 கேட்டபோது⚫⚫ இறங்கியது📚📚📚* 

 *27. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அபூலஹபின்🙋‍♀️🙋‍♀️ கரங்கள்☪️☪️ நாசமாகட்டும்🛑🛑 என்ற வசனம்🟠🟠 இறங்கியபோது📚📚📚* 

 *28. 🧶🧶🧶மிஸ்தஹுக்கு♥️♥️ உதவ மாட்டேன் 🟣🟣என்ற போது🔰🔰 இறங்கியது📚📚📚* 

 *29. 🧕🧕🧕அன்னை ஆயிஷா 🧕🧕பற்றிய அவதூறு👹👹 சம்மந்தமான ❤️❤️வசனம்📚📚 இறங்கியது📚📚📚* 

 *30. 🧕🧕🧕மனைவி விபச்சாரத்தில்👹👹 ஈடுப்பட்டால் ☪️☪️ஹிலால்🛑🛑 பின்⚫⚫ உமய்யா❤️❤️ கூறுய 🟡🟡போது📚📚📚* 

 *26. ☪️அபுதாலிஃபிற்கு🟣 பாவமன்னிப்பு🧶 கேட்டபோது⚫ இறங்கியது 📚* 


 *✍️✍️✍️முஸய்யப் பின் ஹஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *நபி (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தைன அபூ தா-ப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே அபூ ஜஹ்லையும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யா பின் முஃகீராவையும் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் பெரிய தந்தையே! லா இலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரு மில்லை) என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதி மொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன் என்று சொன்னார்கள்.* 
 *அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் அபூ தா-பே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்த-பின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்? என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறும்படி அவர்களை வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்கள். அவ்விருவரும் தாம் முன்பு சொன்னதையே சொல்லி (அவரைத் தடுத்து)க் கொண்டேயிருந்தார்கள்* .
 *இறுதியில் அபூ தாலிஃப் கடைசியாக அவர்களிடம் பேசியது, நான் (என் தந்தை) அப்துல் முத்த-பின் மார்க்கத்தில் இருக்கிறேன் என்பதாகவே இருந்தது. லாஇலாஹா இல்லல்லாஹ் எனும் உறுதிமொழியைச் சொல்ல அவர் மறுத்து விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும்வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டேயிருப்பேன் என்று சொன்னார்கள்.* 
 *அப்போது தான் , ”இணைவைப்போருக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத் தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமை இல்லை எனும் (திருக்குர்ஆன் 9:113 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அபூதா-ப் தொடர்பாக (நபியவர்கள் வருந்திய போது) அல்லாஹ் (நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்) நேர் வழியில் செலுத்திவிடமுடியாது. மாறாக, அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்” எனும் (திருக்குர்ஆன் 28:56ஆவது) வசனத்தை அருளினான்.✍️✍️✍️* 


 *(புகாரி 4772)* 


 *27. 🙋‍♂️அபூலஹபின்🙋‍♀️ கரங்கள்☪️ நாசமாகட்டும்🛑 என்ற வசனம்🟠 இறங்கியபோது📚* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள் எனும் (திருக்குர்ஆன் 26:214ஆவது) இறைவசனம் அருள் பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலைக் குன்றின் மீது ஏறிக் கொண்டு, பனூ ஃபிஹ்ர் குலத்தாரே பனூ அதீ குலத்தாரே!என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள்.* *அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர். நபி (ஸல்) அவர்கள், சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா? என்று கேட்க, மக்கள் ஆம்.* *(நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால், நான் கடும் வேதனை யொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன் என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன்னார்கள்.* *(இதைக் கேட்ட) அபூலஹப், நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்? என்று கூறினான். அப்போது தான் அபூலஹபின் கரங்கள் நாசமாகட் டும்! அவனும் நாசமாகட்டும்…… என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *(புகாரி 4770)* 


 *28. 🧶மிஸ்தஹுக்கு♥️ உதவ மாட்டேன் 🟣என்ற போது🔰 இறங்கியது📚* 


 *✍️✍️✍️(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், (அன்னை ஆயிஷா அவர்களை பற்றிய அவதூறு சம்பவந்தில் பெரும் பங்கு வகித்த) மிஸ்தஹுக்கு எந்தப் பயன்தரும் உதவியும் இனி ஒரு போதும் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்தார்கள்.* 
 *அப்போது அல்லாஹ் உங்களில் செல்வம் மற்றும் தாயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) வழங்க மாட்டேன் என்று சத்தியம் செய்யவேண்டாம். (அவர்களால் தங்க ளுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழை களைப்) பொருட்படுத்தாமல்விட்டு விடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப் பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கருணையுடையோனுமாய் இருக்கின்றான் எனும் (திருக்குர்ஆன் 24:22ஆவது) இறைவசனத்தை அருளினான்.* 
 *(இந்த வசனத்தில்) உலுல் ஃபள்ல் (செல்வம் படைத்தோர்) என்று அபூபக்ர் (ரலி) அவர்களையே அல்லாஹ் குறிப்பிட்டான். மஸாக்கீன் (ஏழைகள்) என்று மிஸ்தஹ் அவர்களைக் குறிப்பிட்டான். இதையடுத்து அபூபக்ர் (ரலி) அவர்கள்,* 
 *ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக, எங்கள் இறைவா! எங்களை நீ மன்னிப்பதையே நாங்கள் விரும்புகிறோம் என்று கூறி, தாம் முன்பு செய்து வந்தது போலவே (மிஸ்தஹுக்குப் பொருள் உதவி) செய்து வரத் தொடங்கினார்கள்.✍️✍️✍️* 

 *(புகாரி 4757)* 


 *29. 🧕அன்னை ஆயிஷா 🧕பற்றிய அவதூறு👹 சம்மந்தமான ❤️வசனம்📚 இறங்கியது📚* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு பயணம்) புறப்பட விரும்பினால் தம் துணைவியரிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவது வழக்கம். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு செல்வார்கள்.* 
 *இவ்வாறே அவர்கள் தாம் மேற் கொண்ட (பனூ முஸ்த-க் என்ற) ஒரு போரின் போது எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட் டார்கள். அதில் எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். (இது பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பர்தா எனும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். (அப் பயணத்தின் போது) நான் எனது ஒட்டகச் சிவிகையில் வைத்து சுமந்து செல்லப்படுவேன். அதில் நான் இருக்கும் நிலையிலேயே (கீழே) இறக்கி வைக்கவும்படுவேன்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️நபி (ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து (வெற்றியுடன்) திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் மதீனாவை நெருங்கிய போது இரவு வேளையில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள்.* 
 *அவர்கள் தங்கும்படி அறிவிப்புச் செய்த போது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து (தனியாகச்) சென்றேன். என் (இயற்கைத்) தேவையை நான் முடித்துக் கொண்ட பின் முகாமை நோக்கிச் சென்றேன்.* 
 *அப்போது (என் கழுத்திலிருந்த யமன் நாட்டு) ழஃபாரி நகர முத்து மாலையொன்று அறுந்து(விழுந்து)விட்டது. ஆகவே நான் (திரும்பிச் சென்று) எனது மாலையைத் தேடலானேன். அதைத் துழாவிக் கொண்டி ருந்தது, (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தடுத்து விட்டது.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எனக்காகச் சிவிகையை ஒட்டகத்தில் கட்டும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைத் தூக்கிச் சென்று நான் பயணம் செய்து வந்த ஒட்டகத்தின் மீது வைத்துக்கட்டிவிட்டனர்.* 
 *அந்தக் காலக்கட்டத்தில் பெண்கள் மெ-ந்தவர்களாக இருந்தனர். உடல் கனக்கும் அளவுக்கு அவர்களுக்கு சதைபோட்டிருக்க வில்லை. (அப்போதைய) பெண் சிறிதளவு உணவையே உண்பாள். ஆகவே, அந்தச் சிவிகை யைத் தூக்கிய போது அது கனமில்லாமல் இருந்ததை அம்மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம் பெண்ணாக வேறு இருந்தேன்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️எனவே, அவர்கள் ஒட்டகத்தைக் கிளப்பி (அதில் நானிருப்பதாக நினைத்தபடி) நடக்கலாயினர். படை கடந்து சென்ற பிறகு (காணாமற்போன) எனது மாலை கிடைத்து விட்டது. நான் அவர்கள் முகாமிட்டிருந்த இடத்திற்கு வந்தேன். (அங்கிருந்த அனைவரும் சென்றுவிட்டிருந்தனர்.) அங்கு (அவர்களில்) அழைப்பவரும் இருக்கவில்லை; பதிலளிப்ப வரும் இருக்கவில்லை. நான் (ஏற்கெனவே) தங்கியிருந்த இடத்தை நாடிப் போனேன். நான் காணாமல் போயிருப்பதை அறிந்து படையினர் நிச்சயம் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் எனது இடத்தில் அமர்ந்திருக்க என் கண்ணில் உறக்கம் மே-ட்டுவிட நான் தூங்கிவிட்டேன்.* 
 *படை சென்றதற்குப் பின்னால் (படையினர் முகாமிட்ட இடத்தில் தவறவிட்டுச் சென்ற பொருள்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸுலமி அத்தக்வானீ என்பார் இரவின் பிற்பகுதியில் புறப்பட்டு நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அதிகாலையில் (தவறவிடப்பட்ட பொருள்களைத் தேடுவதற்காக) வந்து சேர்ந்தார்.* 
 *அவர் (அங்கே) தூங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதனின் உருவத்தை (என்னை)ப் பார்த்தார். ஆகவே, என்னிடம் வந்தார். என்னைப் பார்த்ததும் அவர் அடையாளமும் கண்டு கொண்டார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அவர் என்னை அறிந்து கொண்டு இன்னா-ல்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்ல விருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே (உறக்கத்தில் விலகியிருந்த) எனது மேலங்கி யால் முகத்தை மறைத்துக் கொண்டேன்.* 
 *அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் இன்னா-ல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று கூறியதைத் தவிர வேறெதையும் அவரிடமிருந்து நான் செவி யேற்கவுமில்லை. பிறகு அவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக் கொள்வதற்கு ஏதுவாக) அதன் முன்னங் கால்களை (தமது காலால்) மிதித்துக் கொள்ள, நான் அதில் ஏறிக் கொண்டேன். அவர் நானிருந்த ஒட்டகத்தை நடத்திச் செல்லலானார்.* 
 *இறுதியில் படையினர் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கிவிட்ட பின்னர் நாங்கள் அவர்களை வந்தடைந்தோம். இப்போது (எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி என் விஷயத்தில்) அழிந்தவர்கள் அழிந்து போனார்கள். என் மீது அவதூறு(ப் பிரசாரம்) செய்ததில் பெரும் பங்கு எடுத்துக் கொண்டி ருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான்.* 
 *பிறகு நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அங்கு வந்து ஒரு மாதகாலம் நான் நோயுற்று விட்டேன்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த அவதூறு பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது.* 
 *நான் நோயுறும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகின்ற பரிவை (இம்முறை நான் நோயுற்றிருந்த போது) அவர்களிடம் காண முடியாமல் போனது எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு எப்படி இருக்கிறாய் என்று கேட்பார்கள். பிறகு திரும்பிச் சென்று விடுவார்கள். அவ்வளவுதான். இது தான் எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. (என்னைப் பற்றி வெளியே பேசப்பட்டு வந்த) அந்தத் தீய சொல் பற்றி ஒரு சிறிதும் (உடல் நலம் தேறுவதற்கு முன்) எனக்குத் தெரியாது.* 
 *நோயிலிருந்து குணமடைந்த பின் நானும் என்னுடன் மிஸ்தஹின் தாயாரும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த மனாஸிஉ (எனப்படும் புறநகர் பகுதியை) நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு (புறநகர்ப் பகுதிகளுக்கு) சென்று கொண்டிருந்தோம். கழிப்பிடம் நோக்கி வெளியே செல்லும் எங்களது இந்த வழக்கம் முந்தைய அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. அப்போது நாங்கள் எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்கள் அமைப்பதைத் தொந்தரவாகக் கருதிவந்தோம்.* 
 *நானும் உம்மு மிஸ்தஹும் நடந்தோம். அவர் அபூ ருஹ்ம் (பின் முத்த-ப்) பின் அப்தி மனாஃப் அவர்களின் புதல்வியாவார். அபூபக்ர் (ரலி) அவர்களின் தாயின் சகோதரியான (ராயித்தா) பின்த் ஸக்ர் பின் ஆமிர்தான் உம்மு மிஸ்தஹின் தாயாராவார். உம்மு மிஸ்தஹின் புதல்வரே மிஸ்தஹ் பின் உஸாஸா (பின் அப்பாத் பின் முத்த-ப்) ஆவார்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️(இத்தகைய) உம்மு மிஸ்தஹும் நானும் எங்கள் (இயற்கைத்) தேவைகளை முடித்துக் கொண்டு எனது வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்தஹ் தனது ஆடையில் இடறிக் கொண்டார். உடனே அவர், மிஸ்தஹ் நாசமாகட்டும் என்று (தம் புதல்வரைச் சபித்தவராகக்) கூறினார். நான், மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ருப் போரில் கலந்து கொண்ட ஒரு மனிதரையா ஏசுகின்றீர்கள்? என்று கூறினேன். அதற்கு அவர், அம்மா! அவர் என்ன சொன்னார் என்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா? என்று கேட்டார். என்ன சொன்னார்? என நான் வினவ, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை அப்போது அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு எனது நோய் இன்னும் அதிகரித்து விட்டது. நான் எனது வீட்டுக்குத் திரும்பி வந்த போது (என் கணவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எனக்கு சலாம் சொல்லிவிட்டு, எப்படி இருக்கிறாய்? என்று கேட்டார்கள். அப்போது நான் என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா? என்று கேட்டேன். (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகின்றதா என்று விசாரித்து என் மீதான அவதூறுச்) செய்தியை என் பெற்றோரி டமிருந்து (அறிந்து) உறுதிப்படுத்திக் கொள்ள அப்போது நான் விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். உடனே நான் என் பெற்றோரிடம் வந்து(சேர்ந்)தேன்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️என் தாயாரிடம், அம்மா! மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக் கொள்கி றார்கள்? என்று கேட்டேன். என்தாயார், என் அன்பு மகளே! உன் மீது (இந்த விஷயத்தைப்) பெரிதுபடுத்திக் கொள்ளாதே! அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, தம் கணவரிடம் பிரியத்துக் குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத் தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும் என்று கூறினார்.* 
 *உடனே நான், சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்.) இப்படியா மக்கள் பேசி விட்டார்கள்! என்று (வியப்புடன்) சொன்னேன். அன்றிரவு காலை வரை நான் அழுதேன். என் கண்ணீரும் நிற்கவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலை நேரம் வந்த போதும் அழுதேன்.* 
 *(இதற்கிடையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (அதாவது என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீ தா-ப் அவர்களையும், உஸாமா பின் ஸைத் அவர்களையும் அழைத்தார்கள். அத்தருணத்தில் வஹீ (வேத அறிவிப்பு- தாற்கா-கமாக) நின்றுபோயிருந்தது.* 
 *உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களோ நான் நிரபராதி எனத் தாம் அறிந்துள்ளதையும் நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தில் (குடும்பத்தார் மீது) இருந்த பாசத்தில் தாம் அறிந்துள்ளதையும் வைத்து ஆலோசனை கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! தங்களுடைய துணைவியாரிடம் நல்ல (குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை என்று அப்போது உஸாமா சொன்னார்கள்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அலீ அவர்களோ ளநபி (ஸல்) அவர்களின் மனவேதனையைக் குறைக்கும் விதமாகன அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்க ளுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்த வில்லை. ஆயிஷா அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப்பெண் (பரீரா) இடம் கேட்டால், அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள் என்று கூறினார்கள்.* 
 *ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, பரீராவே! (ஆயிஷாவிடம்) உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது நீ பார்த்திருக்கிறாயா? என்று கேட்டார்கள். அதற்கு பரீரா, தங்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர், தம் வீட்டாரின் குழைத்த மாவை அப்படியே விட்டுவிட்டு உறங்கிப் போய்விடுவார். (வீட்டிலுள்ள) ஆடுவந்து அதைத் தின்றுவிடும். அத்தகைய (விபரமும்) வயது(ம்) குறைந்த இளம்பெண் என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக் கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை என்று பதில் கூறினார்.* 
 *அன்றைய தினம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலுக்கு எதிராக உதவி கோரி எழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை மேடையில் (மிம்பரில்) இருந்தவாறு முஸ்லிம் மக்களே! என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனுக்கெதிராக எனக்கு உதவிபுரிபவர் யார்? ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! என் வீட்டாரி டம் நல்லதையே நான் அறிவேன். அவர்கள் (அவதூறு கிளப்பிய நயவஞ்சகர்கள்) ஒரு மனிதரை (என் வீட்டாருடன் இணைத்து) அவதூறு கூறியுள்ளனர். அவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன். நான் இருக்கும் போது தான் அவர் என் வீட்டிற்கு வந்திருக்கின்றார். (தனியாக வந்ததில்லை) என்று கூறினார்கள்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உடனே (பனூ அப்தில் அஷ்ஹல் கூட்டத்தைச் சேர்ந்த) சஅத் பின் முஆத் அல் அன்சாரி (ரலி) அவர்கள் எழுந்து நின்று, அல்லாஹ்வின் தூதரே! அவனுக்கெதிராகத் தங்களுக்கு நான் உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் அவனது கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக அவன் இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் செய்து முடிக்கிறோம் என்று கூறினார்கள்.* 
 *உடனே சஅத் பின் உபாதா எழுந்தார். இவர் கஸ்ரஜ் குலத்தின் தலைவராவார். இவர் அதற்கு முன் நல்ல மனிதராகத் தான் இருந்தார். ஆயினும், குலமாச்சர்யம் அவரை உசுப்பிவிடவே, அவர் சஅத் பின் முஆத் அவர்களைப் பார்த்து, அல்லாஹ்வின் மீதணையாக! தவறாகச் சொல்லிவிட்டீர்! அவனை நீர் கொல்லமாட்டீர். அவனைக் கொல்ல உம்மால் முடியாது என்று கூறினார்.* 
 *உடனே உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து நின்றார். இவர் (அவ்ஸ் குலத்தைச் சேர்ந்த) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் ஆவார். அவர் சஅத் பின் உபாதா அவர்களிடம் நீர்தாம் தவறாகப் பேசினீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றேதீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். அதனால்தான் நயவஞ்கர்களின் சார்பாக வாதிடுகின்றீர்! என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை மேடைமீது நின்று கொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட்டுக் கொள்ளத் தயாராகிவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மேடையிலிருந்து இறங்கி) அவர்கள் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். பிறகு தாமும் அமைதியாகி விட்டார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️அன்றைய நாள் முழுவதும் நான் அப்படியே இருந்தேன். என் கண்ணீரும் ஓய வில்லை; என்னை உறக்கமும் தழுவவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகே இருந்தார்கள். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) தூக்கம் என்னைத் தழுவாமலும் கண்ணீர் ஓயாமலும் அழுது விட்டிருந்தேன். என் ஈரல் பிளந்து விடுமோ என்று என் பெற்றோர் எண்ணிக் கொண்டிருந்தனர்.* 
 *நான் அழுது கொண்டிருக்க, என்னருகில் என் தாய் தந்தையர் அமர்ந்து கொண்டிருந்த போது, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து என்னிடம் (உள்ளே வர) அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னுடன் சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்து கொண்டாள்.* 
 *நாங்கள் இவ்வாறு இருக்கையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சலாம் கூறிவிட்டு, அமர்ந்தார்கள். (என்னைப் பற்றி) அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. ஒரு மாதகாலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விட மிருந்து தீர்ப்பு எதுவும்) அவர்களுக்கு வஹீயாக அருளப்படாமலேயே அவர்கள் இருந்து வந்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதி மொழி கூறி, இறைவனைப் புகழ்ந்து விட்டு, ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்தது. நீ நிரபராதியாக இருந்தால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று (வஹீயின் மூலம்) அறிவித்து விடுவான். (ஒருக்கால்) நீ குற்றமே தும் செய்திருந்தால், அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு! ஏனெனில், அடியான் தனது பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்புக் கோரினால், அவனது கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான் என்று சொன்னார்கள்.* 
 *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்த போது எனது கண்ணீர் (முழுவதுமாக) நின்றுபோய்விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் (எஞ்சியிருப்பதாக) நான் உணரவில்லை.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அப்போது நான் என் தந்தையார் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதற்கு பதில் கூறுங்கள்! என்று சொன்னேன். அதற்கு என் தந்தையார், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள். பிறகு நான் என் தாயார் (உம்மு ரூமான்) இடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பதில் கூறுங்கள்! என்று சொன்னேன். அதற்கு என் தாயார், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள். அதற்கு நான், நானோ வயது குறைந்த இளம் பெண். குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவள். இந்நிலையில் (மக்கள் என்னைப் பற்றிப் பேசிக் கொண்ட) இந்தச் செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனங்களில் பதிந்து போய் அதை உண்மை என்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதை அல்லாஹ்வின் மீதாணையாக நான் அறிவேன். ஆகவே, உங்களிடம் நான் குற்றமற்றவள் என்று கூறினால், -நான் குற்றமற்றவள்என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்- அதை நீங்கள் நம்பப் போவதில்லை. நான் (குற்றம்) ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால், -நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்- நான் சொல்வதை அப்படியே (உண்மை என்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️அல்லாஹ்வின் மீதாணையாக! (எனக்கும்) உங்களுக்கும் நபி யூசுஃப் (அலை) அவர்களின் தந்தை (நபி யாகூப் -அலை) அவர்களையே உவமானமாகக் காண்கிறேன். (அதாவது:) (இதைச்) சகித்துக் கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் நான் பாதுகாப்புக் கோரவேண்டும் (திருக்குர்ஆன் 12:18) என்று கூறினேன். பிறகு (வேறு பக்கமாகத்) திரும்பிப்படுத்துக் கொண்டேன். அப்போது நான் குற்றமற்றவள் என்பதையும் மேலும், அல்லாஹ் நான் குற்றமற்றவள் என நிச்சயம் அறிவிப்பான் என்பதையும் நன்கறிவேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! ஓதப்படுகின்ற வஹீயை (வேத அறிவிப்பை) என் விஷயத்தில் அல்லாஹ் அருள்வான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. அல்லாஹ் என் தொடர்பாக ஏதேனும் ஓதப்படுகின்ற ஒன்றைச் சொல்கின்ற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்ல என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, அல்லாஹ் என்னைக் குற்றமற்றவள் என அறிவிக்கும் ஒரு கனவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உறக்கத்தில் காண்பார்கள் என்றே நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (எங்கள் வீட்டில் அமர்ந்திருந்த இடத்திலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்திருக்கவுமில்லை. வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை. அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது (குர்ஆன் வசனங்கள்) அருளப்படத் தொடங்கிவிட்டன. உடனே அவர்களுக்கு (வேத அறிவிப்பு வருகின்ற நேரங்களில்) ஏற்படும் கடுமையான சிரம நிலை அவர்களைப் பற்றிக் கொண்டது. அது கடுங்குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து வேர்வைத் துளிகள் சிறு முத்துகளைப் போல் வழியத் தொடங்கி விட்டன. அவர்களின் மீது அருளப்பட்ட இறைவசனத்தின் பாரத்தினால்தான் (அவர்களுக்கு வியர்வை அரும்பி வழியுமளவுக்கு) இந்தச் சிரமநிலை ஏற்பட்டது. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு விலகியவுடன் (மகிழ்ச்சியுடன்) சிரித்தவாறே அவர்கள் பேசிய முதல் வார்த்தை ஆயிஷா! மாண்பும் மகத்துவமுமிக்க அல்லாஹ் உன்னை குற்றமற்றவள் என்று அறிவித்து விட்டான் என்பதாகவே இருந்தது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உடனே என் தாயார் அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்! என்று (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் செல்ல மாட்டேன். மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்வையே புகழ்(ந்து, அவனுக்கே நன்றி செலுத்து)வேன் என்று சொன்னேன்.* 
 *(அப்போது) அல்லாஹ், அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தாம் என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11-20) பத்து வசனங்களை அருளியிருந்தான். என் குற்ற மற்ற நிலை தொடர்பாக அல்லாஹ் இதை அருளிய போது (என் தந்தை) அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து மிஸ்தஹ் (அவதூறு) கூறிய பின்பு ஒரு போதும் அவருக்காக நான் சிறிதும் செலவிடமாட்டேன் என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதாலும், அவர் ஏழை என்பதாலும் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டுவந்தார்கள். அப்போது அல்லாஹ் உங்களில் செல்வம் மற்றும் தாயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) வழங்க மாட் டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழைகளைப்) பொருட்படுத்தாமல் விட்டுவிடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கருணையுடை யோனுமாய் இருக்கின்றான் எனும் (திருக்குர்ஆன் 24:22ஆவது) வசனத்தை அருளினான்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️அபூபக்ர் (ரலி) அவர்கள், ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்தமாட்டேன் என்றும் சொன்னார்கள்.* 
 *(குர்ஆனில் எனது கற்பொழுக்கம் குறித்த வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் விஷயத்தில் (தம்முடைய இன்னொரு துணைவியாரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் விசாரித்திருந்தார்கள். ஸைனபே! நீ (ஆயிஷா குறித்து) என்ன அறிந்திருக்கிறாய்? அல்லது பார்த்திருக்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், அல்லாஹ்வின் தூதரே! என் காதையும் என் கண்ணையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) நான் பாதுகாத்துக் கொள்கிறேன். ஆயிஷாவைக் குறித்து நான் நல்லதையே அறிவேன் என்று கூறினார்கள். ஸைனப் அவர்கள்தாம் நபியவர்களின் துணைவியரில் எனக்கு ளஅழகிலும் நபி (ஸல்) அவர்களின் அன்பிலும்ன போட்டியாக இருந்தவர். ஆயினும், அல்லாஹ் அவரை (இறையச்சமுடைய) பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான். ஆனால், ஸைனபுக்காக அவருடைய சகோதரி ஹம்னா (என்னுடன்) மோதிக் கொள்ள லானார். (என் விஷயத்தில்) அவதூறு பேசி அழிந்துபோனவர்களுடன் அவரும் அழிந்து போனார்✍️✍️✍️.* 


 *30. 🧕மனைவி விபச்சாரத்தில்👹 ஈடுப்பட்டால் ☪️ஹிலால்🛑 பின்⚫ உமய்யா❤️ கூறுய 🟡போது📚* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள் (கர்ப்பவதியான) தம் மனைவியை ஷரீக் பின் சஹ்மா என்பவருடன் இணைத்து (இருவருக் குமிடையே தகாத உறவு இருப்பதாகக்) குற்றம் சாட்டினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (உன்) ஆதாரத்தைக் கொண்டு வா! இல்லையென்றால், உன் முதுகில் கசையடி வழங்கப்படும் என்று சொன்னார்கள். அதற்கு அவர், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தம் மனைவியுடன் ஓர் அன்னிய ஆடவன் இருப்பதைக் கண்டாலுமா ஆதாரம் தேடிக் கொண்டு செல்லவேண்டும்? என்று கேட்டார்கள். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், (உன்) ஆதாரத்தைக் கொண்டு வா! இல்லையென் றால், உன் முதுகில் கசையடி கொடுக்கப்படும் என்று சொன்னார்கள். அதற்கு ஹிலால்* 
 *(ரலி) அவர்கள், தங்களைச் சத்திய(மார்க்க)த் துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! நான் உண்மையே சொல்கிறேன். எனது முதுகைக் கசையடியிலிருந்து காப்பாற்றும் செய்தியை அல்லாஹ் நிச்சயம் அருள்வான் என்று சொன்னார்கள். உடனே (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி, நபி (ஸல்) அவர்களுக்கு யார் தம் துணைவியர் மீது அவதூறு கூறி என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:6-9) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.5🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்து ஹிலால் (ரலி) அவர்களுடைய மனைவிக்கு ஆளனுப்பினார்கள். (இதற்கிடையே) ஹிலால் (ரலி) அவர்களும் வந்து (தாம் சொன்னது உண்மையே என நான்கு முறை) சத்தியம் செய்து சாட்சியமளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் அறிவான். ஆகவே, உங்கள் இருவரில் பாவ மன்னிப்புக்கோரி (தவறு தன்னுடயது தான் என்று ஒப்புக் கொண்டு, இறைவன் பக்கம்) திரும்புகின்றவர் யார்? என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு, ஹிலால் (ரலி) அவர்களின் மனைவி எழுந்து நின்று (நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியம் அளித்தார். ஐந்தாம் முறையாக (சாப அழைப்புப் பிரமாணம்) செய்யச் சென்றபோது மக்கள் அவரை நிறுத்தி இது (பொய்யான சத்திய மாயிருந்தால் இறை தண்டனையை) உறுதிப்படுத்திவிடும். (எனவே, நன்கு யோசித்துச் செய்!) என்று கூறினார்கள். ஹிலால் அவர்களின் மனைவி சற்றே தாமதித்து, பிரமாணம் செய்யத் தயங்கினார். நாங்கள் அவர் தம் பிரமாணத்திலிருந்து பின்வாங்கி விடுவார் என்றே எண்ணினோம். ஆனால் பிறகு அவர், காலமெல்லாம் என் சமுதாயத் தாரை நான் இழிவுக்குள்ளாக்கப் போவ தில்லை என்று கூறி (சாப அழைப்புப் பிரமாணத்தைச்) செய்துமுடித்தார்.* 
 *அப்போது நபி (ஸல்) அவர்கள் இவளைக் கவனித்து வாருங்கள். இவள் கரிய விழிகளும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையைப் பெற்றெடுத்தால், அது ஷரீக் பின் சஹ்மாவுக்கே உரியதாகும்என்று சொன்னார்கள். அப்பெண் நபியவர்கள் வர்ணித்தவாறே குழந்தை பெற்றெடுத்தார். இதையறிந்த நபி (ஸல்) அவர்கள், இது பற்றிய இறைச்சட்டம் (-ஆன் விதி) மட்டும் வந்திருக்காவிட்டால் நான் அவளைக் கடுமையாகத் தண்டித்திருப்பேன் என்று சொன்னார்கள்.✍️✍️✍️* 

 *(புகாரி 4747)* 


 *31. 🕋🕋🕋விளிம்பில்☪️☪️ நின்று🙋‍♂️🙋‍♂️ கொண்டு🙋‍♀️🙋‍♀️ அல்லாஹ்வை☪️☪️ வழிபடுகின்றனர்🔰🔰 என்ற 🟣🟣வசனம்🟠🟠 இறங்கியது📚📚📚* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 109* 


 *🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰