பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, June 22, 2020

நபிகளார் சந்தித்த* ⤵️ *உயிரிழப்புகள் - 9

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

    *☄️நபிகளார் சந்தித்த*
                               ⤵️
                   *உயிரிழப்புகள்*

              *✍🏻....தொடர் : [ 09 ]*

*☄️பேரப்பிள்ளைகளின்*
                   *மரணம் { 02 }☄️*

                 *🌸 இறுதி பாகம் 🌸*

*☄️ருக்கையாவின் மகன்*
                 *அப்துல்லாஹ் (ரலி)*

_*🍃நபிகளாரின் மகள் ருக்கையா (ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ் ஆறு வயதை எட்டியபோது ஒரு சேவல் அவரது முகத்தில் கொத்தியது. அதனால் முகம் வீங்கியது. சிகிச்சைகள் பலனளிக்காமல் ஹிஜ்ரி நான்காம் ஆண்டு ஜமாதுல் அவ்வல் மாதம் மரணித்தார்கள். அவரது ஜனாஸாவிற்கு நபி(ஸல்) தொழுகை நடத்தினார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் கப்ரில் இறங்கி அடக்கம் செய்தார்கள்.*_

*📚அல் இஸ்திஆப்: 3343📚*

*🏮🍂இவர்கள் மட்டுமல்லாமல் நபிகளாரின் பெரிய தந்தை அபூதாலிப், சிறிய தந்தை ஹம்ஷா மற்றும் வளர்ப்பு மகன் ஸைத் பின் ஹாரிஸா ஆகியோர் நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே மரணித்து விட்டார்கள். அதே போன்று பல சஹாபாக்கள் போரில் கொல்லப்பட்டார்கள்.*

*🏮🍂இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நபிகளாருடைய மனைவிகள் மரணிக்கிறார்கள், மகள்கள் மரணிக்கிறார்கள் மகன்கள் மரணிக்கிறார்கள், பேரப்பிள்ளைகள் மரணிக்கிறார்கள்.* இன்னும் நெருங்கிய உறவினர்கள் என்று சங்கிலித் தொடராக மரணம் ஏற்படுகின்றது. அதை சிந்தித்து பார்க்கும் போது தொடர்ச்சியாக உயிர்கள் சென்றவண்ணம்      இருந்துள்ளது.

*🏮🍂இத்துனை மரணங்களையும் சந்தித்த நபியவர்கள் வரம்பு மீறியதில்லை. மடத்தனமான வார்த்தைகளை பேசியதில்லை மாறாக பொறுமையாக இருக்கின்றார்கள் எதையும் தாங்கும் இதயமாக திகழ்ந்தார்கள்.*

_நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்…_

_*🍃முஃமினான எனது அடியானுக்கு உலக மக்களில் விருப்பமான வரை நான் கைப்பற்றி பின்பு அவன் (பொறுமையாக இருந்து) நல்லதை எதிர்பார்த்திருந்தால் அவனுக்கு என்னிடம் கூலி சொர்க்கத்தை தவிர வேறில்லை.*_

*🎙️அறிவிப்பாளர்:*
               *அபூஹுரைரா (ரலி),*

      *📚நூல்: புகாரி 6424📚*

*🏮🍂எனவே நாமும் இது போன்ற இழப்புகளைச் சந்தித்தால் பொறுமையோடு அதை எதிர் கொள்ள வேண்டும் அப்படிப்பட்ட மனவலிமையை அல்லாஹ் நமக்கு தந்தருள்வானாக!*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

*தொடர் முடிந்தது*
 
                   ⤵️⤵️⤵️
              *அல்ஹம்துலில்லாஹ்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment