பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, June 11, 2020

நபிகளார் சந்தித்த* ⤵️ *உயிரிழப்புகள் - 1

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

    *☄️நபிகளார் சந்தித்த*
                               ⤵️
                   *உயிரிழப்புகள்*

              *✍🏻....தொடர் : [ 01 ]*

*🏮🍂பூகம்பத்தால் 1000க்கும் மேற்பட்டோர் பலி, சுனாமியில் இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி, இரயில் விபத்தில் 100பேர் பலி, சாலை விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலி, கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் சாவு, வெயிலின் கொடுமைக்கு மூவர் பலி,* இவைகளெல்லாம் அன்றாடம் செய்தித்தாள்களில் இடம் பெறக்கூடிய செய்திகள்.

*🏮🍂இறப்புச் செய்தியை வெளியிடாமல் எந்த நாளும் செய்தித்தாள்கள் வருவதில்லை என்கிற அளவுக்கு உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் அறிகிறோம்.* இப்படி உயிரிழப்புகள் நேரிடும் வேளையில் *உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் கதறல்களையும் உள்ளக் குமுறல்களையும் வார்த்தைகளால் வடிக்க முடிவதில்லை.* அதிலும் இறந்தவர் இளம் வயதுடையவராகவோ அல்லது குழந்தைகளாகவோ இருந்து விட்டால் *குடும்பத்தார் போடும் கூப்பாட்டிற்கு அளவே இருப்பதில்லை.*

*🏮🍂ஒருவரின் உறவினரோ குடும்பத்தாரோ உயிரிழக்கின்ற நேரத்தில் துக்கம் தொண்டையை அடைக்கும் போது மனிதர்கள் நெறிதவறி சென்றுவிடுகிறார்கள் வரம்பு கடந்த வார்த்தைகளை கக்குகிறார்கள்.*

_அவர்கள் புலம்புகின்ற வார்த்தைகளில் சில:_

*🏮🍂‘ஐயோ! இறைவா உனக்கு கண் இல்லையா…❓ உனக்கு என் தம்பி தான் கிடைத்தானா…❓ உனக்கு கருணையே இல்லையா…❓’ இன்னும் சிலர் இப்படி இறைவனையே சபிக்கின்ற அளவுக்கு வரம்பு கடந்து நடந்து கொள்கிறார்கள்.* ஆனால் இத்தகைய நேரங்களில் பொறுமையாக இருக்க வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது.

*🏮🍂இவ்வுலகத்துக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட மாமனிதர் மனிதருள் மாணிக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இதை போதித்துள்ளார்கள். போதித்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் வாழ்க்கையில் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படும்போது எப்படி பொறுமையாக இருப்பது என்று வாழ்ந்தும் காட்டியுள்ளார்கள்.*

*🏮🍂இது போன்றநேரங்களில் அவர்கள் வரம்பு மீறி நடந்து கொண்டதில்லை நெறிதவறி எந்த வார்த்தையையும் கூறியதுமில்லை.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄️நபி (ஸல்) மனைவிமார்களின் மரணம் பற்றிய செய்திகளை  நாளைய தொடரில் காண்போம்)*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
    
                      *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment