பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, June 8, 2020

உடலுறவுக்கு முன் என்ன துஆ ஓதவேண்டும்?*

*☪️மீள்☪️ பதிவு☪️* 


*🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *உடலுறவுக்கு முன் என்ன துஆ ஓதவேண்டும்?*


 *உடலுறவுக்கு முன்னதாக ஒழு செய்து கொள்ளவேண்டுமா?* 

 *தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்* 

بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنَاالشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

 *பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B]னா வஜன்னிபி(B]ஷ் ஷைத்தான மா ரஸக்தனா* 

 *இதன் பொருள் :* 

அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து எங்களைக் காப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.

 *ஆதாரம்: புகாரி141, 3271, 6388, 7396* 

 *அல்லது* 

بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنِيَ الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

 *பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B]னியஷ் ஷை(த்)தான வஜன்னிபிஷ் ஷை(த்)தான மாரஸக்(த்)தனா* 

 *இதன் பொருள் :* 

அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து என்னைக் காப்பாயாக. எனக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.


 *ஆதாரம்: புகாரி5165, 3283* 

உடலுறவுக்கு முன்னதாக ஒளுச்செய்யச் சொல்லி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதாக எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை.

உடலுறவு கொண்ட பிறகு உறங்குவதாக இருந்தால் ஒளுச்செய்யச் சொல்லி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்..

 *குளியல்* கடமையானவர் (உறங்க நாடினால்) உளூ செய்து விட்டு உறங்கலாம். விரும்பினால் குளித்துக்கொள்ளவும் செய்யலாம்.

288 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குளியல் கடமையாகி (பெருந்துடக்குடன்) இருக்கும் நிலையில் உறங்க நினைத்தால் தமது மர்மஸ்தானத்தைக் கழுவிட்டு தொழுகைக்குரிய உளூ செய்வார்கள். (அதன் பின்னர் உறங்குவார்கள்.)
289 அப்துல்லாஹ்பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள், எங்களில் ஒருவர் குளியல் கடமையானவராக இருக்கும் நிலையில் (குளிக்காமல்) உறங்கலாமா? என கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்; உளூ செய்து விட்டு (உறங்கலாம்.) என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம்: முஸ்லிம்

 *1225* حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ قَالَ سَأَلْتُ عَائِشَةَ كَيْفَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ أَكَانَ يُسِرُّ بِالْقِرَاءَةِ أَمْ يَجْهَرُ فَقَالَتْ كُلُّ ذَلِكَ قَدْ كَانَ يَفْعَلُ رُبَّمَا أَسَرَّ بِالْقِرَاءَةِ وَرُبَّمَا جَهَرَ فَقُلْتُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ رواه أبو داود


நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ருத் தொழுகையைப் பற்றி வினவினேன். அதற்கு அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில சமயம் இரவின் ஆரம்பத்திலும் சில சமயம் அதன் இறுதியிலும் வித்ருத் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள். அவர்கள் ஓதும் முறை எவ்வாறு இருந்தது? அவர்கள் மவுனமாக ஓதுவார்களா? அல்லது சப்தமிட்டு ஓதுவார்களா?என்று வினவினேன். அதற்கு இவ்விரண்டு முறையையும் கடைப்பிடிப்பார்கள். சில சமயம் மவுனமாகவும் சில சமயம் சப்தமாகவும் ஓதுவார்கள். (குளிப்புக் கடமையான நிலையில் அவர்கள் இருக்கும் போது) சில சமயம் குளித்து விட்டும் சில சமயம் உளூச் செய்து விட்டும் உறங்குவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீ கைஸ்

 *நூல் : அபூதாவுத் (1225)* 


அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்


 *ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment