பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, June 11, 2020

நபிகளார் சந்தித்த* ⤵️ *உயிரிழப்புகள் - 2

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

    *☄️நபிகளார் சந்தித்த*
                               ⤵️
                   *உயிரிழப்புகள்*

              *✍🏻....தொடர் : [ 02 ]*

*☄️மனைவிமார்களின்*
                          *மரணம் [ 01 ]*

         *🌸 கதீஜா (ரலி) 🌸*

*🏮🍂கதீஜா (ரலி) அவர்கள்தான் நபியவர்களின் முதல் மனைவி ஆவார்கள். இவர்கள் நபியவர்களின் அன்பிற்கு பாத்தியமானவராகத் திகழ்ந்தார்கள் இன்னும் இவர்கள் மூலமாகத் தான் நபியவர்களுக்கு அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளது. கதீஜா (ரலி) அவர்கள் நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே மரணித்துவிட்டார்கள்.*

*🏮🍂கதீஜா (ரலி) அவர்கள் ஹிஜ்ரத் செல்வதற்க்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் மரணித்தார்கள்.*

*🏮🍂நபி (ஸல்) அவர்கள் அன்பிற்குரிய மனைவிமார்களின் முதலிடம் அன்னை கதீஜா (ரலி) அவர்களே ஆவார்கள். நபிகளாரின் அன்பிற் குரிய இன்னொரு மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பெறாமைப்படும் அளவிற்கு* அவர்கள் மீது அன்பு வைத்திருந்தார்கள் நபிகளார்.

ﺣﺪﺛﻨﺎ ﺳﻌﻴﺪ ﺑﻦ ﻋﻔﻴﺮ، ﺣﺪﺛﻨﺎ اﻟﻠﻴﺚ، ﻗﺎﻝ: ﻛﺘﺐ ﺇﻟﻲ ﻫﺸﺎﻡ، ﻋﻦ ﺃﺑﻴﻪ، *ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ، ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﺎ، ﻗﺎﻟﺖ: «ﻣﺎ ﻏﺮﺕ ﻋﻠﻰ اﻣﺮﺃﺓ ﻟﻠﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻣﺎ ﻏﺮﺕ ﻋﻠﻰ ﺧﺪﻳﺠﺔ، ﻫﻠﻜﺖ ﻗﺒﻞ ﺃﻥ ﻳﺘﺰﻭﺟﻨﻲ، ﻟﻤﺎ ﻛﻨﺖ ﺃﺳﻤﻌﻪ ﻳﺬﻛﺮﻫﺎ، ﻭﺃﻣﺮﻩ اﻟﻠﻪ ﺃﻥ ﻳﺒﺸﺮﻫﺎ ﺑﺒﻴﺖ ﻣﻦ ﻗﺼﺐ، ﻭﺇﻥ ﻛﺎﻥ ﻟﻴﺬﺑﺢ اﻟﺸﺎﺓ ﻓﻴﻬﺪﻱ ﻓﻲ ﺧﻼﺋﻠﻬﺎ ﻣﻨﻬﺎ ﻣﺎ ﻳﺴﻌﻬﻦ»*

_*🍃கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷம் கொண்டதைப் போல் நபி (ஸல்) அவர்களின் (இதர) மனைவிமார்களில் வேறெவரின் மீதும் நான் ரோஷப்பட்டதில்லை. ஏனெனில், அவர்களை நபி (ஸல்) அவர்கள் (அடிக்கடி) நினைவு கூர்வதை நான் கேட்டு வந்தேன். என்னை நபி (ஸல்) அவர்கள் மணம் புரிந்து கொள்வதற்கு முன்பே கதீஜா (ரலி) இறந்து விட்டிருந்தார்.*_

_*மேலும், முத்து மாளிகை ஒன்று (சொர்க்கத்தில்) கதீஜாவுக்கு கிடைக்கவுள்ளது என்று அவர்களுக்கு நற்செய்தி சொல்லும்படி அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்டான். இன்னும் நபி (ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்து (அதன் இறைச்சியில்) சிறிது கதீஜா அவர்களின் தோழிகளிடையே அவர்களுக்குப் போதுமான அளவிற்கு அன்பளிப்பாகப் பங்கிட்டு விடுவது வழக்கம் (இதனாலெல்லாம் எனக்குள் ரோஷம் பிறந்தது.)*_

*🎙️அறிவிப்பவர்:*
               *ஆயிஷா (ரலி),*
    
    *📚 நூல்: புகாரி (3816)📚*

ﺣﺪﺛﻨﻲ ﻋﻤﺮ ﺑﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺣﺴﻦ، ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻲ، ﺣﺪﺛﻨﺎ ﺣﻔﺺ، ﻋﻦ ﻫﺸﺎﻡ، ﻋﻦ ﺃﺑﻴﻪ، *ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﺎ، ﻗﺎﻟﺖ: ﻣﺎ ﻏﺮﺕ -[39]- ﻋﻠﻰ ﺃﺣﺪ ﻣﻦ ﻧﺴﺎء اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻣﺎ ﻏﺮﺕ ﻋﻠﻰ ﺧﺪﻳﺠﺔ، ﻭﻣﺎ ﺭﺃﻳﺘﻬﺎ، ﻭﻟﻜﻦ ﻛﺎﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻜﺜﺮ ﺫﻛﺮﻫﺎ، ﻭﺭﺑﻤﺎ ﺫﺑﺢ اﻟﺸﺎﺓ ﺛﻢ ﻳﻘﻄﻌﻬﺎ ﺃﻋﻀﺎء، ﺛﻢ ﻳﺒﻌﺜﻬﺎ ﻓﻲ ﺻﺪاﺋﻖ ﺧﺪﻳﺠﺔ، ﻓﺮﺑﻤﺎ ﻗﻠﺖ ﻟﻪ: ﻛﺄﻧﻪ ﻟﻢ ﻳﻜﻦ ﻓﻲ اﻟﺪﻧﻴﺎ اﻣﺮﺃﺓ ﺇﻻ ﺧﺪﻳﺠﺔ، ﻓﻴﻘﻮﻝ «ﺇﻧﻬﺎ ﻛﺎﻧﺖ، ﻭﻛﺎﻧﺖ، ﻭﻛﺎﻥ ﻟﻲ ﻣﻨﻬﺎ ﻭﻟﺪ»*

_*🍃கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி (ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்ட தில்லை. நான் (நபி -ஸல்- அவர்களிடம்) அவரைப் பார்த்ததில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள். அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள்.*_

_*சில வேளைகளில் நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘உலகில் கதீஜாவைத் தவிர வேறெந் தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களே’ என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள், ‘அவர் (புத்திசாலியாக) இருந்தார் (சிறந்த குண முடையவராக) இருந்தார். (இப்படி, இப்படியெல்லாம் இருந்தார்.) மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது’ என்று பதில் சொன்னார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
                *ஆயிஷா (ரலி),*

        *📚 நூல்: புகாரி (3818) 📚*

*🏮🍂நபிகளார் அவர்கள், அன்னை கதீஜா (ரலி) அவர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார்கள் என்பதற்கு மேற்கூறப்பட்ட நபிமொழிகள் சான்று. இத்தனை அன்பு வைத்திருந்தவர்களையும் நபிகளாரிடம் அல்லாஹ் பிரித்துவிட்டான்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
  
                        *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment