பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, June 16, 2020

நபிகளார் சந்தித்த* ⤵️ *உயிரிழப்புகள்* - 7

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

    *☄️நபிகளார் சந்தித்த*
                               ⤵️
                   *உயிரிழப்புகள்*

              *✍🏻....தொடர் : [ 07 ]*

*☄️மகன்களின் மரணம் { 02 }*

*☄️இப்ராஹீமின் மரணம்☄️*

*🏮🍂நபி (ஸல்) அவர்களுக்கு மாரியா மூலமாக இப்ராஹீம் என்கிற ஆண் குழந்தை இருந்துள்ளது.*

_*🍃ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு துல்ஹஜ் மாதம் இப்ராஹீம் என்ற ஆண் குழந்தையை அன்னை மாரியா (ரலி) அவர்கள் பெற்றெடுத்தார்கள்.*_

*📚நூல்: ஸஃப்வத்துஸ் ஸஃப்வா, பாகம்: 1, பக்கம் 147📚*

_*🍃இப்ராஹீம் வளர்க்கப்பட்டு வந்த அபூஸைஃப் என்ற கொல்லரின் வீட்டுக்கு நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித்தாயின் கணவர் நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முத்தமிட்டார்கள் மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம் அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழிந்தன. இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள் அல்லாஹ்வின் தூதரே, ‘தாங்களா அழுகிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அவ்ஃ பின் புதல்வரே! இது கருணையில் உள்ளதாகும்’ என்று கூறிவிட்டு தொடர்ந்து அழுதார்கள். பிறகு, ‘கண்கள் நீரைச் சொரிகின்றன உள்ளம் வாடிக்கொண்டிருக்கிறது.*_

_*எனினும் இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் கூற மாட்டோம் இப்ராஹீமே! நிச்சயமாக உனது பிரிவால் நாங்கள் அதிகம் கவலைப்படுகிறோம்’ என்று கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
                     *அனஸ்(ரலி),*

*📚 நூல்கள்: புகாரி 1303,*
                           *முஸ்லிம்: 4634*

_*🍃இப்ராஹீம் 16 அல்லது 18 மாதங்கள் உயிர் வாழ்ந்தார் பகீஃ என்ற பொது மையவாடியில் நபியவர்களின் மற்ற பெண் பிள்ளைகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்.*_

*📚நூல்கள்: ஸஃப்வத்துஸ் ஸஃப்வா, பாகம் 1, பக்கம் 148,📚*

*📚முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 6605📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                  
        *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment