##மனிதர்கள் உணர்ந்து திருந்துவதற்கான ##சோதனை
##மனிதர்கள் இறைவனை மறந்து, அவனின் கட்டளைகளை துறந்து வாழும் போது அவர்கள் உணர்வு பெற்று, இறைவனை ஞாபகப் படுத்தி, அவனின் பால் பணிந்து மீண்டு வருவதற்காகவும் இறைவன் மனிதர்களை சோதிப்பான் என்ற செய்தியை பின்வரும் இறைவசனங்கள் தெளிவு படுத்துகின்றன.
##மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். (அல் குர்ஆன் 30:41)
##நாம் நபிமார்களை அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம் மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை. (அல் குர்ஆன் 7:94)
(நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் அவர்கள் பணிந்து வரும் பொருட்டு. (அல் குர்ஆன் 6:42)
##அவர்களை நாம் பூமியில் பல பிரிவினராகச் (சிதறித்திரியுமாறு) ஆக்கி விட்டோம்; அவர்களில் நல்லவர்களுமிருக்கிறார்கள். அதுவல்லாத கெட்டவர்களும் இருக்கின்றார்கள் – அவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம். (அல் குர்ஆன் 7:168)
##இப்படியாக இறைவன் சோதனைகளை இறக்கியும் உணர்வு பெற்று திருந்தாதவர்களுக்கு உலகின் சில இன்பங்களை அனுபவிக்கச் செய்து விட்டு பிறகு தண்டனையை இறக்கி அவர்களை வேரறுத்து விடுகிறான் என்ற உண்மையை இறைவன் எமக்கு பின்வருமாறு புரிய வைக்கின்றான்.
##நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான். (அல் குர்ஆன் 6:43)
##அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் – பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர். (அல் குர்ஆன் 6:44)
##எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; “எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்.” (அல் குர்ஆன் 6:45)
##இதே அடிப்படையில் தான் தன்னை முற்றிலும் நிராகரித்து வாழ்கிறவர்களுக்கு இறைவன் உலக பாக்கியங்களை வழங்குகிறான். இதனைப் பார்த்து உண்மை விசுவாசிகளான நாம் ஏமார்ந்து விடக் கூடாது.
##அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு நிராகரிப்பாளன் ஏதேனும் ஒரு நனமையை செய்தால், அதன் பிரதி பலனை அவனுக்கு உலகிலேயே அல்லாஹ் கொடுத்து விடுகிறான். அதே நேரத்தில் ஒரு முஃமின் செய்யும் நன்மைகளுக்கான பலனை மறுமைக்காக இறைவன் சேமித்து வைக்கின்றான். மேலும் இவ்வுலகிலே அந்த முஃமினுக்காக இறைவன் அவனை வழிப்படுவதற்கான வாழ்வாதாரத்தையும் (றிஸ்க்) வழங்குகிறான். (முஸ்லிம்)
##இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
##இறை நம்பிக்கையாளரின் நிலையானது, இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும்போது அதைக் காற்று (தன் திசையில்) சாய்த்துவிடும். காற்று நின்றுவிட்டால், அது நேராக நிற்கும். சோதனையின்போது (இறை நம்பிக்கையாளரின் நிலையும் அவ்வாறே). தீயவன், உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதொரு மரத்தைப் போன்றவன். அல்லாஹ், தான் நாடும்போது அதை (ஒரேடியாக) உடைத்து (சாய்த்து) விடுகிறான்.
(அறிவிப்வர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி)
No comments:
Post a Comment