பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, June 11, 2020

சாகுல் ஹமீத்* என்று பெயர் வைக்கலாமா❓

*சாகுல் ஹமீத்* என்று பெயர் வைக்கலாமா❓

*சாகுல் ஹமீத்* என்ற பெயர் பரவலாக முஸ்லிம்களிடம் காணப்படுகிறது. *ஹமீத் (புகழுக்குரியவன்)* என்பது படைத்த இறைவனைக் குறிக்கும் சொல். 

*(பார்க்க: அல்குர்ஆன் 22:64, 31:26, 35:15, 42:28, 57:24...)*

இந்தப் பெயருடன் *சாஹ்* என்ற வார்த்தையை இணைக்கின்றனர். சாய் என்றால் மன்னர் என்று பொருள். 

இதை *ஹமீத்* என்ற சொல்லுடன் இணைக்கும் போது *சாகுல் ஹமீத் (புகழுக்குரியவனின் மன்னன்)* என்ற பொருள் ஏற்படுகிறது. அதாவது அல்லாஹ்விற்கு அரசன் என்ற மோசமான பொருள் வருகிறது. 

எனவே இவ்வளவு மோசமான பொருளுள்ள பெயரைச் சூட்டுவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். இந்தப் பெயர் உள்ளவர்கள் அதை மாற்றிக் கொள்ள வேண்டும். *அப்துல் ஹமீத் (புகழுக்குரியவனின் அடிமை)* என்று கூட மாற்றிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமை நாளில்) அல்லாஹ்விடம் மிகவும் கேவலமான பெயர், (உலகில்) ஒரு மனிதன் *மன்னாதி மன்னன்*" என்று பெயர் சூட்டிக்கொண்டதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சயீத் பின் அம்ர் அல்அஷ்அஸீ (ரஹ்) அவர்கள், *சாஹான் சாஹ்" (மன்னாதி மன்னன்)* என்று (பாரசீக மொழியில்) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் (பொருள்) கூறினார்கள்" என்றார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் 4338. 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
மறுமை நாளில் அல்லாஹ்விடம் மிகவும் அருவருப்பான பெயர், (உலகில்) ஒருவர் தமக்கு '*மன்னாதி மன்னன்'* என்று பெயர் சூட்டிக் கொண்டதாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

*ஸஹீஹ் புகாரி 6205. *

இது போன்று பாவம் என்று தெரியாமல் செய்யும் காரியங்களை விட்டும் தவிர்ந்து நடக்க *வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக!*

*ஏகத்துவம் *


www.eagathuvam.com/?p=1213

No comments:

Post a Comment