பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, May 24, 2020

பிறை_சாட்சியம்_சட்டம்

#பிறை_சாட்சியம்_சட்டம்

ஒரு பிரச்சனையில் பல விதமான முடிவுகள் எடுக்க வழி இருக்கும் போது சாட்சிகள் மூலம் முடிவு செய்ய இஸ்லாம் வழி காட்டுகிறது.

இந்த சாட்சியச் சட்டம் அனைத்து பிரசனைகளுக்கும் ஒரே மாதிரியானதல்ல. பிரச்சனைகளைப் பொருத்து சாட்சியச் சட்டம் வேறுபடும்.

*உங்கள் பெண்கள் வெட்கக்கேடானதைச் செய்தால் உங்களில் நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்கச் சொல்லுங்கள்! அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை அல்லது அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை வீடுகளில் அவர்களைத் தடுத்து வையுங்கள்!*
திருக்குர்ஆன் 4:15

*ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.*
திருக்குர்ஆன் 24:4

*அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே. அதை உங்களுக்குத் தீங்காக நினைக்காதீர்கள்! மாறாக அது உங்களுக்கு நல்லது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர் செய்த பாவம் உள்ளது. அவர்களில் இந்த விஷயத்தில் பெரும் பங்கு எடுத்தவனுக்குக் கடும் வேதனை உண்டு.*
*12. இதைச் செவியுற்றபோது நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் தமக்குள் நல்லதையே எண்ணியிருக்கக் கூடாதா? "இது தெளிவான அவதூறு'' என்று கூறியிருக்கக் கூடாதா?*
*13. இதற்கு நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்கக் கூடாதா? சாட்சிகளை அவர்கள் கொண்டு வரவில்லையானால் அல்லாஹ்விடம் அவர்களே பொய்யர்கள்.*
*14. இவ்வுலகிலும், மறுமையிலும் அல்லாஹ் வின் அன்பும், அருளும் உங்களுக்கு இல்லாதிருந்தால் நீங்கள் எதில் ஈடுபட்டீர்களோ அதற்காக உங்களுக்குக் கடும் வேதனை ஏற்பட்டிருக்கும்.*
*15. உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது.*
*16. இதைக் கேள்விப்பட்ட போது "இதைப் பற்றிப் பேசுவது எங்களுக்குத் தகாது. (இறைவா) நீயே தூயவன். இது பயங்கரமான அவதூறு'' என்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா?*
*17. நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் ஒருபோதும் இது போன்று மீண்டும் செய்யாதிருக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.*

திருக்குர்ஆன் 24:11-17

இந்த வசனங்கள் நான்கு சாட்சிகள் பற்றிக் கூறுகிறது. இது விபச்சாரக் குற்றச்சாட்டுக்கு மட்டும் தான். கொடுக்கல், வாங்கல், மற்றும் இதர பிரச்சனைகளுக்கு நான்கு சாட்சிகள் தேவை இல்லை. ஏனெனில் அதற்கு அல்லாஹ் வேறு சட்டங்களைக் கூறுகிறான்.
பொதுவான விபச்சாரக் குற்றச்சாட்டாக இல்லாமல் மனைவி மீது கணவன் சொல்லும் குற்றச்சாட்டாக இருந்தால் கணவன் என்ற ஒரு சாட்சியே போதும். ஒருவன் சொன்னதால் அவனுக்கு அவதூறுக்கான தண்டனை கிடையாது. ஆனால் நான்கு தடவை சத்தியம் செய்து சாட்சி கூற வேண்டும்.

*6. தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும்.*
*7. தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்பது ஐந்தாவதாகும்.*
*8. "அவனே பொய்யன்'' என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனையிலிருந்து அவளைக் காக்கும்.*
*9. "அவன் உண்மையாளனாக இருந்தால் என்மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும்'' என்பது ஐந்தாவதாகும்.*
*10. அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாமலும், அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவனாகவும், ஞானமிக்கவனாகவும் இல்லாமலும் இருந்தால் (உங்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கும்)*
திருக்குர்ஆன் 24:6-10

கொடுக்கல் வாங்கல் குறித்து அல்லாஹ் வேறு சட்டம் சொல்கிறான்.

*282. நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்! எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும். எழுதுபவர் அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தது போல் எழுத மறுக்க வேண்டாம். கடன் வாங்கியவர், எழுதுவதற்குரிய வாசகங்களைச் சொல்லட்டும்! தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதில் எதையும் குறைத்திடக் கூடாது. கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ, பலவீனராகவோ, எழுதுவதற்கு ஏற்பச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லாவிட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) அவ்விரு பெண்களில் ஒருத்தி தவறாகக் கூறினால் மற்றொருத்தி நினைவுபடுத்துவாள். அழைக்கப்படும்போது சாட்சிகள் மறுக்கக் கூடாது. சிறிதோ, பெரிதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள்! இதுவே அல்லாஹ்விடம் நேர்மையானது; சாட்சியத்தை நிரூபிக்கத்தக்கது; ஒருவருக்கொருவர் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்றது. உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாரமாக இருந்தால் தவிர. (கடனில்லாத) வியா பாரத்தை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்களுக்குக் குற்றமாகாது. ஒப்பந்தம் செய்யும்போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! எழுத்தருக்கோ, சாட்சிக்கோ எந்த இடையூறும் அளிக்கப்படக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் மீது குற்றமாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தருவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.*
திருக்குர்ஆன் 2:282

கொடுக்கல் வாங்கல் போன்ற மனிதர்களுக்கிடையிலான விஷயங்களுக்கு இரண்டு ஆண்கள், அல்லது ஒரு ஆண் இரு பெண்கள் சாட்சியம் அளிக்க வேண்டும். நான்கு சாட்சிகள் தேவையில்லை.
மனிதர்களுக்கு இடையிலான பிரச்சனைகளுக்குத் தானி இரு சாட்சிகள் தேவை.
மனிதர்களுக்கு இடையிலான பிரச்சனையாக இல்லாமல் மார்க்க சம்மந்தமான பிரச்சனைகளாக இருந்தால் ஒரு சாட்சி போதுமாகும். நான்கு சாட்சிகள் தேவை இல்லை. இரண்டு சாட்சிகளும் தேவை இல்லை. ஒரு சாட்சி போதும்.

உதாரணமாக பாலூட்டும் பிரச்சனை குறித்து நபிகளின் வழிகாட்டல் இதுதான்.!

*صحيح البخاري 
88 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الحَسَنِ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الحَارِثِ، أَنَّهُ تَزَوَّجَ ابْنَةً لِأَبِي إِهَابِ بْنِ عُزَيْزٍ فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ: إِنِّي قَدْ أَرْضَعْتُ عُقْبَةَ وَالَّتِي تَزَوَّجَ، فَقَالَ لَهَا عُقْبَةُ: مَا أَعْلَمُ أَنَّكِ أَرْضَعْتِنِي، وَلاَ أَخْبَرْتِنِي، فَرَكِبَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ فَسَأَلَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ وَقَدْ قِيلَ» فَفَارَقَهَا عُقْبَةُ، وَنَكَحَتْ زَوْجًا غَيْرَهُ*
*உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) கூறியதாவது:
நான் அபூஇஹாப் பின் அஸீஸ் என்பவரின் மகளை மணந்து கொண்டேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து நான், உக்பாவுக்கும் நீ மணந்து கொண்டுள்ள பெண்ணுக்கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) பாலூட்டியிருக்கிறேன்' (இந்த வகையில் நீங்கள் இருவரும் பால்குடிச் சகோதரரர்கள் ஆவீர்கள்) என்று கூறினார். நான் நீங்கள் எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணமுடித்துக் கொண்ட போது) நீங்கள் எனக்கு (இதைத்) தெரிவிக்கவில்லையே! என்று கேட்டேன்.  ஆகவே, (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து) நான் மதீனாவிலிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கிப் பயணம் செய்து, அவர்களிடம் (இது குறித்து) வினவினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நீயும் உம் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால்குடித்ததாகச்) சொல்லப்பட்டுப் போன பிறகு எப்படி (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)? என்று கூறினார்கள். ஆகவே நான் அவளை விட்டுப் பிரிந்துவிட்டேன். அவள் பெண்ணும் வேறொரு கணவனை மணந்து கொண்டாள். *
நூல் : புகாரி 88

பால் ஊட்டியதாக ஒரு பெண் கூறியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியே ஏற்றுள்ளனர். இதற்கு வேறு சாட்சியைக் கொண்டு வருமாறு கூறவில்லை. 
இது மனிதர்கள் சம்மந்தப்பட்டது அல்ல. அல்லாஹ்வின் மார்க்கம் சம்மந்தப்பட்டது. இதில் பொய் சொல்ல மனிதன் துணிய மாட்டான். அப்படி பொய் சொல்லி இருந்தால் அதற்கான தண்டனை அல்லாஹ்விடம் கிடைக்கும்.
பிறை சம்மந்தப்பட்ட விஷயமும் மனிதர்கள் சம்மந்தப்பட்டது அல்ல. இது அல்லாஹ்வின் மார்க்கம் சம்மந்தப்பட்டது என்பதால் இதற்கு இரண்டு சாட்சிகள் அவசியம் இல்லை.
இதற்கான நேரடி ஆதாரம் வருமாறு:
கீழே காட்டப்படும் ஹதீஸ்கள் ஒரே செய்தியைச் சொல்கின்றன. எனவே ஒன்றுக்கு மட்டும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

தாரமி ஹதீஸ்
*سنن الدارمي 
1733 - حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ سَالِمٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «تَرَاءَى النَّاسُ الْهِلَالَ، فَأَخْبَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي رَأَيْتُهُ، فَصَامَ وَأَمَرَ النَّاسَ بِالصِّيَامِ» 
[تعليق المحقق] إسناده صحيح*
*மக்களெல்லாம் பிறை பார்க்க முயன்றனர். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நான் பிறை பார்த்தேன் என்று தெரிவித்தேன். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும் நோன்பு நோற்று மக்களுக்கும் நோன்பு நோற்க கட்டளையிட்டார்கள்.*
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : தாரிமி

ஒரே ஒருவர் சாட்சியத்தை ஏற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை முடிவு செய்தார்கள். இன்னொரு சாட்சி வரட்டும் என்று காத்திருக்கவில்லை

*2170 - حَدَّثَنَا أَبُو مُحَمَّدٍ يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَتِيقٍ الْعَبْسِىُّ بِدِمَشْقَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ الدِّمَشْقِىُّ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَالِمٍ عَنْ أَبِى بَكْرِ بْنِ نَافِعٍ عَنْ أَبِيهِ عَنِ ابْنِ عُمَرَ قَالَ تَرَاءَى النَّاسُ الْهِلاَلَ فَأَخْبَرْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنِّى رَأَيْتُهُ فَصَامَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَأَمَرَ النَّاسَ بِالصِّيَامِ. تَفَرَّدَ بِهِ مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ عَنِ ابْنِ وَهْبٍ وَهُوَ ثِقَةٌ.*
இதை மர்வான் பின் முஹம்மத் மட்டும் தான் அறிவித்துள்ளார். இவர் நம்பகமானவர் ஆவார் என்று தாரகுத்னி அவர்கள் கூடுதலாக சொல்கிறார்கள்.

*السنن الكبرى للبيهقي
7978 - أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ، أنبأ أَبُو بَكْرِ بْنُ دَاسَةَ، ثنا أَبُو دَاوُدَ، ثنا مَحْمُودُ بْنُ خَالِدٍ، وَعَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّمَرْقَنْدِيُّ، وَأَنَا لِحَدِيثِهِ أَتْقَنُ، قَالَا: ثنا مَرْوَانُ هُوَ ابْنُ مُحَمَّدٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللهِ بْنِ سَالِمٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: تَرَاءَى النَّاسُ الْهِلَالَ، فَأَخْبَرْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي رَأَيْتُهُ، فَصَامَ وَأَمَرَ النَّاسَ بِصِيَامِهِ. وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ , قَالَ: قَالَ عَلِيُّ بْنُ عُمَرَ الْحَافِظُ: تَفَرَّدَ بِهِ مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ عَنِ ابْنِ وَهْبٍ وَهُوَ ثِقَةٌ*
தாரகுத்னி கூறுவது போலவே பைஹகி அவர்களும் கூறுகிறார்கள்.

*المستدرك على الصحيحين للحاكم
1541 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ هَانِئٍ، ثنا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ مِهْرَانَ، ثنا هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَالِمٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: تَرَاءَى النَّاسُ الْهِلَالَ، فَأَخْبَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي رَأَيْتُهُ «فَصَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَمَرَ النَّاسَ بِالصِّيَامِ» صَحِيحٌ عَلَى شَرْطِ مُسْلِمٍ، وَلَمْ يُخَرِّجَاهُ "*
மேற்கண்ட ஹதீஸை பதிவு செய்த ஹாகிம் அவர்கள் இது முஸ்லிம் இமாமுடைய நிபந்தனைகள் அடிப்படையில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றும் கூறுகிறார். 

*صحيح بن حبان
3447 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّمَرْقَنْدِيُّ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَالِمٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ:  «تَرَاءَى النَّاسُ الْهِلَالَ، فَرَأَيْتُهُ، فَأَخْبَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَامَ، وَأَمَرَ النَّاسَ بِصِيَامِهِ»
إسناده صحيح على شرط مسلم
المعجم الكبير للطبراني 
481- حَدَّثَنَا عَلِيُّ بن سَعِيدٍ الرَّازِيُّ ، قَالَ : نا إِبْرَاهِيمُ بن عَتِيقٍ الدِّمَشْقِيُّ ، قَالَ : نا مَرْوَانُ بن مُحَمَّدٍ الطَّاطَرِيُّ ، قَالَ : نا عَبْدُ اللَّهِ بن وَهْبٍ ، قَالَ : حَدَّثَنِي يَحْيَى بن عَبْدِ اللَّهِ بن سَالِمٍ ، عَنْ أَبِي بَكْرِ بن نَافِعٍ ، عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : تَرَاءَى النَّاسُ الْهِلالَ ، فَأَخْبَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي رَأَيْتُهُ ، فَصَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَأَمَرَ النَّاسَ بِصِيَامِهِ . لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي بَكْرِ بن نَافِعٍ إِلا يَحْيَى بن عَبْدِ اللَّهِ بن سَالِمٍ ، وَلا عَنْ يَحْيَى إِلا ابْنُ وَهْبٍ ، تَفَرَّدَ بِهِ : مَرْوَانُ الطَّاطَرِيُّ ، وَلا يُرْوَى عَنِ ابْنِ عُمَرَ إِلا بِهَذَا الإِسْنَادِ
المعجم الأوسط 
 3877 - حدثنا علي بن سعيد الرازي قال نا ابراهيم بن عتيق الدمشقي قال نا مروان بن محمد الطاطري قال نا عبد الله بن وهب قال حدثني يحيى بن عبد الله بن سالم عن ابي بكر بن نافع عن ابيه عن بن عمر قال تراءى الناس الهلال فأخبرت رسول الله صلى الله عليه و سلم أني رأيته فصام رسول الله صلى الله عليه و سلم وأمر الناس بصيامه لم يرو هذا الحديث عن ابي بكر بن نافع الا يحيى بن عبد الله بن سالم ولا عن يحيى الا بن وهب تفرد به مروان الطاطري ولا يروى عن بن عمر الا بهذا الإسناد*

தப்ரானி கபீர், தப்ரானி அவ்ஸத், இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு சாட்சிகள் சாட்சி கூறினால் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் ஹதீஸ் உள்ளது.

*سنن النسائي 
2116 - أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ شَبِيبٍ أَبُو عُثْمَانَ، وَكَانَ شَيْخًا صَالِحًا بِطَرَسُوسَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ حُسَيْنِ بْنِ الْحَارِثِ الْجَدَلِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ الْخَطَّابِ، أَنَّهُ خَطَبَ النَّاسَ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ، فَقَالَ: أَلَا إِنِّي جَالَسْتُ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَاءَلْتُهُمْ، وَإِنَّهُمْ حَدَّثُونِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، وَانْسُكُوا لَهَا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا ثَلَاثِينَ، فَإِنْ شَهِدَ شَاهِدَانِ فَصُومُوا، وَأَفْطِرُوا»"*

*பிறை பார்த்து நோன்பு வைத்து, பிறை பார்த்து நோன்பை விடுங்கள். அதன் படி மார்க்கக் கிரியைகளை அமைத்துக் கொள்ளுங்கள். இரண்டு சாட்சிகள் சாட்சி கூறினால் நோன்பு வையுஙகள். நோன்பை விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
நூல் :நஸாயீ

இரண்டு சாட்சிகள் சாட்சி கூறினால் ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதும், ஒரு சாட்சியின் சாட்சியத்தை ஏற்று முடிவு செய்தார்கள் என்பதும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் தான்.
ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுக்கக் கூடாது. 
இரண்டு சாட்சிகள் சிறப்பு; ஒரு சாட்சி போதுமானது என்று தான் இது போல் அமந்த எல்லா ஹதீஸ்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே மார்க்க விஷயத்தில் ஒரே ஒரு சாட்சி இருந்தாலே போதுமாகும்.

பிறை சாட்சியத்துக்கு அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டவில்லை. முஸ்லிமாக இருந்தால் போதும்.
(அவசரமாக வெளியிடும் அவசியம் என்பதால் சுருக்கமாக வெளியிடப்படுகிறது. பின்னர் விரிவாக வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்.)

வெளியீடு:

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு 
மாநிலத் தலைமையகம்

No comments:

Post a Comment