🌙ரமலானின் இந்த கடைசி நாட்களில் உங்களால் தொழுக முடியாமல் போனதால் போதிய அளவு இபாதத் செய்யவில்லை என நீங்கள் நினைத்தால், கீழே உள்ளவற்றை முயற்சி செய்யுங்கள்:
1⃣ *சொர்க்கத்தில் ஓர் கருவூலம் பெறுங்கள்*: 💞
கூறுங்கள்:
*لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ*
*_லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லா_*
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள், “அடிக்கடி அல்லாஹ்வின் உதவியில்லாமல் யுக்தியுமில்லை; சக்தியுமில்லை
"(லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்") என்று கூறுங்கள் ஏனெனில் அது ✨சொர்க்கத்தின் கருவூலங்களில் ஓர் கருவூலம் ஆகும்." [திர்மிதி 3601]
2️⃣ *உங்கள் பாவங்களுக்கு மன்னிப்பை பெறுங்கள்* 💞
கூறுங்கள்:
*سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ*
*_ஸுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி_*
(அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்).
*(100 தடவை)*
நபி صلى الله عليه وسلم அவர்கள், "எவர் ஒருவர் ஓர் நாளைக்கு 100 தடவை ஸுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி என்று கூறுகிறாரோ அவருடைய ✨பாவங்கள் அனைத்தும், அவை கடல் நுரையளவு இருந்தாலும் கூட, மன்னிக்கப்படும்." என்று கூறினார்கள் [ புகாரி 6405]
3️⃣ *ஆயிரம் நன்மைகளை பெறுங்கள்* அல்லது செய்த ஆயிரம் தவறுகள் அழியுங்கள் 💞
கூறுங்கள்:
*سُبْحَانَ اللَّهِ*
*_ஸுப்ஹானல்லாஹ் (100 தடவை)_*
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள், “உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா?"
அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், "எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "
_✨அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை ("சுப்ஹானல்லாஹ்" என்று கூறித்) துதிக்க, அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன_"
[முஸ்லிம் 5230]
4️⃣ *தராசை நிரப்புங்கள்* 💞
கூறுங்கள்:
*الْحَمْدُ لِلَّهِ*
*_அல்ஹம்துலில்லாஹ்_* (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!)
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:
தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது,✨ (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும்.
ஸஹீஹ் முஸ்லிம் : 381.
*سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ*
*سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ*
*_சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி_*
(அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்).
*_சுப்ஹானல்லாஹில் அழீம்_*
(கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் தூயவன் எனத் துதிக்கிறேன்)
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:
(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் _நாவுக்கு எளிதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) ✨தராசில் கனமானவை;_ _அளவற்ற அருளாளனுக்குப் பிரியமானவை ஆகும்._
[முஸ்லிம் : 5224]
5️⃣ *வானம் மற்றும் பூமிக்கு இடையே உள்ள இடத்தை நிரப்புங்கள்* 💞
கூறுங்கள்:
*سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ*
*_சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி_*
(அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது)
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:
சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி (அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது _✨வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும்....._
[ முஸ்லிம் : 381]
6️⃣ *ஸூரத்துல் பகராவின் கடைசி இரண்டு ஆயத்துகளை ஓதுங்கள்.* 💞
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்," எவர் ஒருவர் ஸூரத்துல் பகராவின் கடைசி இரண்டு ஆயத்துகளை இரவில் ஓதுகிறாரோ, _✨அதுவே அவருக்கு போதுமானதாகும்._”
[ புகாரி 5051]
இப்னு ஹஜர் கூறினார்கள், أَيْ أَجْزَأَتَا عَنْهُ مِنْ قِيَامِ اللَّيْلِ بِالْقُرْآنِ “அதன் பொருளாவது, அது அவருக்கு _கியாமுல் லைல்க்கு (இரவு தொழுகைக்கு) போதுமானதாக_ இருக்கும் ” [ஃபதுல் பரி]
7️⃣ *ஸதகா கொடுத்த நன்மையை பெறுங்கள்* 💕 கூறுங்கள்:
*سُبْحَانَ اللَّهِ*
*اَلْحَمْدُ لِلَّهِ*
*اللَّهُ أَكْبَرُ*
*لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ.*
*_ஸுப்ஹானல்லாஹ்,_* *_அல்ஹம்துலில்லாஹ்,_*
*_லா இலாஹா இல்லல்லாஹ்,_* *_அல்லாஹு அக்பர்._*
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள், " உங்களில் ஒருவர் ஒவ்வொரு காலையிலும் (தமது உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும்✨ தர்மம் செய்வது கடமையாகும்;இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (✨சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு புகழ்மாலையும் (✨அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு "ஓரிறை உறுதிமொழி"யும் (✨லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (✨அல்லாஹு அக்பர்) தர்மமே! நல்லதை ஏவுதலும் தர்மமே! _✨தீமைகளைத் தடுத்தலும் தர்மமே!_ இவை அனைத்திற்கும் (ஈடாக) முற்பகல் நேரத்தில் (ளுஹா) இரண்டு ரக்அத்கள் தொழுவது போதுமானதாக அமையும்."
[முஸ்லிம் 1302]
8️⃣ *நான்கு துதிச் சொற்களை மூன்று முறைக் கூறி பெரும் நற்க்கூலி பெறுங்கள்* 💞
*سُبْحـانَ اللهِ وَبِحَمْـدِهِ*
*عَدَدَ خَلْـقِه* ،
*وَرِضـا نَفْسِـه* ،
*وَزِنَـةَ عَـرْشِـه* ،
*وَمِـدادَ كَلِمـاتِـه*
நபி (ஸல்) அவர்களின் துணைவியார்)
ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப்பின் அதிகாலையில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், "நான் உன்னிடமிருந்து சென்றது முதல் இதே நிலையில்தான் நீ இருந்துகொண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன்.
நபி (ஸல்) அவர்கள், "நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். _✨அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும்._ (அவை:) சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி (ஆகியவையாகும்)" என்றார்கள்.
(பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.)
[முஸ்லிம் 5272]
9️⃣ *ஹலாலான சம்பாத்தியத்திலிருந்து தர்மம் செய்யுங்கள்* 💞
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்," அல்லாஹ் தூய்மையானதை மட்டுமே ஏற்பான். யார் தூய்மையான சம்பாத்தியத்திலிருந்து தர்மம் செய்கிறாரோ அதை _✨அளவற்ற அருளாள(னான இறைவ)ன் தனது வலக்கரத்தால் வாங்கிக்கொள்கிறான்._ _அது ஒரு பேரீச்சங்கனியாக இருந்தாலும் சரியே!_ அது அந்த அருளாளனின் கையில் வளர்ச்சி அடைந்து மலையைவிடப் பெரியதாகிவிடுகின்றது. உங்களில் ஒருவர் "தமது குதிரைக் குட்டியை" அல்லது "தமது ஒட்டகக் குட்டியை" வளர்ப்பதைப் போன்று."
[ முஸ்லிம் 1842]
1️⃣0️⃣ *இந்த ஹைர்ரை பகிருங்கள்*💕
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள், "யார் இஸ்லாத்தில் (அதன் அடிப்படைக்கு முரண்படாத வகையில்) ஓர் அழகிய நடைமுறையை உருவாக்கி, அவருக்குப்பின் அந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதோ அதன்படி செயல்படுபவர்களின் நன்மை போன்றது அ(ந்த நடைமுறையை உருவாக்கிய)வருக்கு உண்டு. அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது.[ முஸ்லிம் 5193]
*அல்ஹம்துலில்லாஹ்*
இப்பதிவை தொகுத்தவர்களுக்காக துஆச் செய்யுங்கள். இன் ஷா அல்லாஹ்
No comments:
Post a Comment