பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, May 8, 2020

அல்குர்ஆன் வசனமும் -49

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*📖அல்குர்ஆன்*
                     *வசனமும்📖*
                                  ⤵️
           *📖இறங்கியதற்க்கான*
                             *காரணங்களும்📖*

                    *✍🏻....தொடர் : { 49 }*
                           
*☄️கொள்கை*
         *விளக்கங்கள் பற்றி*
            *இறங்கிய வசனங்கள்{ 11 }*

*☄️இறைவன் அனைத்தையும்*
        *கண்காணிக்கின்றான்☄️*

_*🍃உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை.*_

_*நீங்கள் செய்தவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறிய மாட்டான் என்று நினைத்தீர்கள்.*_

_*இதுவே உங்கள் இறைவனைப் பற்றி உங்களது எண்ணம். அது உங்களை அழித்து விட்டது. எனவே நட்டமடைந்தோரில் ஆகி விட்டீர்கள். இவர்கள் காத்திருந்தால் நரகமே இவர்களின் தங்குமிடமாகும்.*_

_*🍃இவர்கள் (மீண்டும் உலகுக்கு அனுப்பி) வணக்கங்கள் செய்யும் வாய்ப்பை இவர்கள் கோரினால் அந்தச் சிரமம் அவர்களுக்கு அளிக்கப்படாது.*_

*📖அல்குர்ஆன் 41:22-24📖*

ﺣﺪﺛﻨﺎ اﻟﺤﻤﻴﺪﻱ، ﺣﺪﺛﻨﺎ ﺳﻔﻴﺎﻥ، ﺣﺪﺛﻨﺎ ﻣﻨﺼﻮﺭ، ﻋﻦ ﻣﺠﺎﻫﺪ، ﻋﻦ ﺃﺑﻲ ﻣﻌﻤﺮ، *ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ: " اﺟﺘﻤﻊ ﻋﻨﺪ اﻟﺒﻴﺖ ﻗﺮﺷﻴﺎﻥ ﻭﺛﻘﻔﻲ - ﺃﻭ ﺛﻘﻔﻴﺎﻥ ﻭﻗﺮﺷﻲ - ﻛﺜﻴﺮﺓ ﺷﺤﻢ ﺑﻄﻮﻧﻬﻢ، ﻗﻠﻴﻠﺔ ﻓﻘﻪ ﻗﻠﻮﺑﻬﻢ، ﻓﻘﺎﻝ ﺃﺣﺪﻫﻢ: ﺃﺗﺮﻭﻥ ﺃﻥ اﻟﻠﻪ ﻳﺴﻤﻊ ﻣﺎ ﻧﻘﻮﻝ؟ ﻗﺎﻝ اﻵﺧﺮ: ﻳﺴﻤﻊ ﺇﻥ ﺟﻬﺮﻧﺎ ﻭﻻ ﻳﺴﻤﻊ ﺇﻥ ﺃﺧﻔﻴﻨﺎ، ﻭﻗﺎﻝ اﻵﺧﺮ: ﺇﻥ ﻛﺎﻥ ﻳﺴﻤﻊ ﺇﺫا ﺟﻬﺮﻧﺎ ﻓﺈﻧﻪ ﻳﺴﻤﻊ ﺇﺫا ﺃﺧﻔﻴﻨﺎ، ﻓﺄﻧﺰﻝ اﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ: {ﻭﻣﺎ ﻛﻨﺘﻢ ﺗﺴﺘﺘﺮﻭﻥ ﺃﻥ ﻳﺸﻬﺪ ﻋﻠﻴﻜﻢ ﺳﻤﻌﻜﻢ ﻭﻻ ﺃﺑﺼﺎﺭﻛﻢ ﻭﻻ ﺟﻠﻮﺩﻛﻢ} [ﻓﺼﻠﺖ: 22] اﻵﻳﺔ ﻭﻛﺎﻥ ﺳﻔﻴﺎﻥ ﻳﺤﺪﺛﻨﺎ ﺑﻬﺬا، ﻓﻴﻘﻮﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻣﻨﺼﻮﺭ، ﺃﻭ اﺑﻦ ﺃﺑﻲ ﻧﺠﻴﺢ، ﺃﻭ ﺣﻤﻴﺪ ﺃﺣﺪﻫﻢ ﺃﻭ اﺛﻨﺎﻥ ﻣﻨﻬﻢ، ﺛﻢ ﺛﺒﺖ ﻋﻠﻰ ﻣﻨﺼﻮﺭ ﻭﺗﺮﻙ ﺫﻟﻚ ﻣﺮاﺭا ﻏﻴﺮ ﻣﺮﺓ ﻭاﺣﺪﺓ،*

_அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறியதாவது:_

_*🍃இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் ‘குறைஷியரில் இருவரும் ஸகீஃபியரில் ஒருவரும்’ அல்லது ‘ஸகீஃபியரில் இருவரும் குறைஷியரில் ஒருவரும்’ (ஆக மூவர் ஓரிடத்தில்) ஒன்று கூடினர். அவர்களின் வயிறுகளில் கொழுப்பு நிறைய இருந்தது. உள்ளங்களில் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், ‘நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?’ என்று கேட்டார். மற்றொருவர், ‘நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கிறான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லை’ என்று பதிலளித்தார். (அவர்களில்) இன்னும் ஒருவர், ‘நாம் சப்தமிட்டுப் பேசும்போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும் போதும் அவன் கேட்கத்தான் செய்வான்’ என்று கூறினார்.*_

_*அப்போது அல்லாஹ், ‘உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை’ எனும் வசனங்களை (திருக்குர்ஆன் 41:22-24) அருளினான்.*_

   *📚நூல்: புகாரி (4817, 4816)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment