*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🌸 நபிகளாரின் 🌸*
⤵️
*🌸 வஸியத் 🌸*
*✍🏻....தொடர் ➖0️⃣1️⃣*
*☄️ இரவுத் தொழுகை ☄️*
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبَّاسٌ الْجُرَيْرِيُّ ـ هُوَ ابْنُ فَرُّوخَ ـ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، *عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ أَوْصَانِي خَلِيلِي بِثَلاَثٍ لاَ أَدَعُهُنَّ حَتَّى أَمُوتَ صَوْمِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَصَلاَةِ الضُّحَى، وَنَوْمٍ عَلَى وِتْرٍ.*
_*🍃ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோற்பது, இரண்டு ரக்அத் ளுஹா தொழுகை தொழுவது, வித்ர் தொழுதுவிட்டு உறங்குவது ஆகிய மூன்று விஷயங்களை என் உற்ற தோழர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள். நான் இறக்கும் வரை அவற்றை விடமாட்டேன்.*_
*🎙️அறிவிப்பவர்:*
*அபூஹுரைரா (ரலி)*
*📚நூல்கள்: புகாரி (1178),*
*முஸ்லிம் (1330)📚*
*🏮🍂இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு மூன்று முக்கியமான விஷயங்களை வலியுறுத்திச் சொல்லியுள்ளார்கள்.*
*☄️மாதம் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது.*
*☄️ளுஹா தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுவது.*
*☄️வித்ரு தொழுவது.*
*🏮🍂இந்த மூன்றும் நபிகளாரால் வலியுறுத்திச் சொல்லப்பட்ட, நன்மைகள் அதிகம் கிடைக்கும் நல்லறங்களாகும்.மாதம் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதன் நன்மைகள் மாதம் மூன்று நாட்கள் நோன்பு நோற்றால் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மைகளைப் பெறலாம்.*
_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீங்கள் இரவில் நின்று வணங்கு வதாகவும் பகலில் நோன்பு நோற்பதாகவும் எனக்குச் செய்தி கிடைத்ததே’’ என்று கேட்டார்கள். நான், ஆம் (உண்மைதான்!) என்றேன். அவர்கள், ‘‘நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் கண்கள் பஞ்சடைந்து விடும்; மனம் களைப்படைந்து விடும். ஆகவே, ஒவ்வொரு மாதத்திலிருந்தும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அது காலமெல்லாம் நோன்பு நோற்றதாகும்’’ அல்லது ‘‘காலமெல்லாம் நோன்பு நோற்றதைப் போன்றதாகும்’’ என்று சொன்னார்கள்.*_
*🎙️அறிவிப்பவர்:*
*அப்துல்லாஹ் பின்*
*அம்ர் பின்ஆஸ் (ரலி)*
*📚நூல்கள்: புகாரி (3419),*
*முஸ்லிம் (2136)📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment