பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, May 7, 2020

பெருநாளைக்கு கட்டாயம் புதிய ஆடை எடுக்க வேண்டுமா❓

*🌙இனிய ரமலான்🤲*



*💁🏻‍♂️பெருநாளைக்கு கட்டாயம் புதிய ஆடை எடுக்க வேண்டுமா❓*



*👉🏻💪🏻இதோ இக்கால கட்டத்திற்கு ஏற்ற நபிகளாரின் மார்க்க வழிகாட்டுதல்*



*🎯புத்தாடை அணிதல்*



➖➖➖➖➖➖➖➖➖➖
          *📚ஹதீஸ்👇🏻*
➖➖➖➖➖➖➖➖➖➖


*📚கடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட பட்டுக் குராடை ஒன்றை உமர் (ரலி) எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! இதை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்; பெருநாளிலும், தூதுக்குழுவினரைச் சந்திக்கும் பொழுதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது (மறுமைப்) பேறு அற்றவர்களின் ஆடையாகும் எனக் கூறினார்கள்.*


*📚நூல்: புகாரி 948, 3054*
➖➖➖➖➖➖➖➖➖➖


🔘பட்டாடை மார்க்கத்தில் தடுக்கப்பட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாங்க மறுக்கின்றார்கள்.


🔘 ஆனால் இந்த ஹதீஸில் பெருநாளைக்குப் புது ஆடை அணியும் நடைமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்திருக்கின்றது என்பதை அறிய முடிகின்றது. 


🔘அதே சமயம் ஒவ்வொரு பெருநாளைக்கும் புது ஆடை எடுக்க வேண்டியதில்லை என்பதை உமர் (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கும் கருத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்


🔘பெருநாளிலும் தூதுக்குழுவைச் சந்திக்கும் போதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம் என்று உமர் (ரலி) கூறும் கருத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் யதார்த்த நிலையைப் பிரதிபலிக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புத்தாடை வாங்கியிருந்தால் உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க முடியாது.


🔘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் வாழ்ந்த பத்தாண்டு காலத்தில் எந்தப் பெருநாளுக்கும் புத்தாடை வாங்கியதாக எந்தக் குறிப்பையும் நாம் பார்க்க முடியவில்லை.


🔘ஒவ்வொரு பெருநாளிலும் புது ஆடை வாங்கி அணிந்தால் தான் பெருநாள்; இல்லையேல் அது பெருநாள் இல்லை என்ற நம்பிக்கை பலமாக மக்களிடத்தில் பதிந்து விட்டது.


🔘 அதனால் பல்லாயிரக்கணக்கான ரூபாயைக் கடன் வாங்கி துணிமணிகள் வாங்கி விட்டு, கடைசியில் அந்தக் கடனை அடைக்க முடியாமல் காலமெல்லாம் கஷ்டப்படும் அவல நிலையைப் பார்க்கின்றோம்.


🔘 இருப்பதில் நல்ல ஆடையை அணிந்து கொண்டால் போதுமானது. கடன் பட்டு அவஸ்தைக்கு நாம் உள்ளாக வேண்டிய அவசியமில்லை.



💐💐💐💐💐💐💐💐💐💐💐

No comments:

Post a Comment