பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, May 13, 2020

உமர்(ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் எனும் கல்லைப் பார்த்து பேசியது சரியா?

உமர்(ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் எனும் கல்லைப் பார்த்து பேசியது சரியா?

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டு விட்டு, "அல்லாஹ்வின் மீதாணையாக! நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 2435. 
அத்தியாயம் : 15. ஹஜ்

மேற்கண்ட செய்தியில் நீ ஒரு கல் என்று ஒரு கல்லை பார்த்து பேசுவது ஏற்புடையதாக தெரியவில்லை .. இது ஒரு கல் என்று சொன்னால் கூட அதை ஏற்றுக் கொள்ளலாம்..மக்களுக்கு உணர்த்துவதற்காக குறிப்பிட்டார்கள் என்று சொல்லலாம்... ஆனால் நேரடியாக நீ என்று பேசுவது கல் ஏதோ சிந்திக்கிறது என்றுதானே அர்த்தமாகிறது.

இறந்தவர்களிடம் பேசக்கூடாது அவர்களுக்கு கேட்காது என்று இருக்கும்போது ஒரு கல் எப்படி பேசும் அது எப்படி சிந்திக்கும்?

எந்த ஒரு பகுத்தறிவு மற்ற ஒரு கல்லைப் பார்த்து நீ என்ற வார்த்தையை நேரடியாக பயன்படுத்துவது சரியானதுதானா..?

பதில்...

பொதுவாக அரபுகளிடம் இருந்தால் வழக்கமான நடைமுறைதான் இது..

மக்களுக்கு உணர்த்துவதற்காக இந்த கல் சிந்திக்காது பேசாது என்பதை உணர்த்துவதற்காக இதற்கு எந்த ஒரு முக்கியத்துவம் கொடுத்து மக்களிடையே வழிபட்டு விடக்கூடாது என்பதற்காக உமர் ரலியல்லாஹு அவர்கள் இப்படிச் சொன்னார்கள்..

அதேபோன்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கபர்ஸ்தான் களுக்கு சென்று அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லியுள்ளார்கள்..
இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்ற அர்த்தத்தில் நபிகளார் இப்படிச் சொல்லவில்லை..

அஸ்ஸலாமு அலைக்கும் தாரகெளமின் மூமினீன் வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன்"
அதாவது இறை நம்பிக்கை கொண்ட சமுதாயமே உங்கள்மீது அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..
எனக் கூறியுள்ளார்கள்..

உதாரணமாக நாம் ஒரு குழந்தையை கொஞ்சும்போது கண்ணே மணியே சிங்கமே என்றெல்லாம் சொல்லி அதனுடன் பேசி விளையாடுகிறோம்..

குழந்தை நாம் சொன்ன அர்த்தத்தில் சிந்திக்கிறது என்று அப்படி பேசவில்லை..

அதுமாதிரிதான் உமர் ரலியல்லாஹு அவர்கள் கல்லைப் பார்த்து நீ ஒரு கல் என்று தான் சொன்னார்களே தவிர அஸ்வத் கல்லை மிகைப்படுத்தி அதற்கு ஏதாவது ஒரு பெயர் வைத்து பேசியிருந்தால் அதை தவறு என்று சொல்லலாம் ஆனால் கல்லை பார்த்து நீ கல் என்றுதான் உணர்த்துகிறார்கள்..

ஆதலால் இந்த செய்தியில் எந்த ஒரு இணைவைப்பு வார்த்தைகளும் அடங்கவில்லை என்பதை அறியலாம்

சேக்மைதீன்

No comments:

Post a Comment