*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*💁🏻♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
⤵
*மண்ணறை வாழ்க்கை*
*✍🏼...தொடர்- [ 20 ]*
*மண்ணறை தண்டனைக்கான*
*காரணங்கள் [ 03 ]*
*☄இறைவேதத்தை*
*அலட்சியப்படுத்துதல்☄*
*🏮🍂 இறைவன் வகுத்த சட்டதிட்டங்களை அடிப்படையாக கொண்டு நாம் வாழவேண்டும் என்பதற்காக அல்லாஹ் நமக்கு திருக்குர்ஆனையும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் தந்துள்ளான்.* இவ்விரண்டின் அடிப்படையில் வாழ்ந்தவர் மண்ணறையிலும்,மறுமையிலும் வெற்றி பெருவார். *ஆனால் இந்த உபதேசத்தை காதில் வாங்காமல் அலட்சியப்படுத்தி மரணிப்பவருக்கு மண்ணறையிலும் நெருக்கடியான வாழ்க்கை கொடுக்கப்படுகிறது.*
_*وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَىٰ*_
_*🍃எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.*_
*📖திருக்குர்ஆன் 20:124📖*
_*🍃எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். (20 :124) என்ற வசனத்தில் (சொல்லப்பட்ட தண்டனை) மண்ணறை வேதனையை பற்றியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_
*🎙அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)*
*📚 நூல் : இப்னு ஹிப்பான் (3174) 📚*
_*🍃எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். (20 :124) என்ற இந்த வசனம் எது குறித்து இறங்கியது என்று உங்களுக்கு தெரயுமா❓ நெருக்கடியான வாழ்க்கை என்றால் எது என்றும் உங்களுக்கு தெரியுமா❓* _*என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) கேட்டார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்று கூறினார்கள். இறைமறுப்பாளன் அவனுடைய மண்ணறையில் வேதனை செய்யப்படுவதை (இவ்வசனம் குறிப்பிடுகிறது). என் உயிர் எவனது கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீதானையாக அவனுக்கெதிராக தொண்ணூற்றி ஒன்பது பாம்புகள் சாட்டப்படும். அந்த பாம்புகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா❓ ஒவ்வொரு பாம்புகளுக்கும் ஏழு தலைகள் இருக்கும். மறுமை நாள் வரை அவனுடைய உடம்பில் (விஷக்காற்றை) அவை ஊதிக் கொண்டும் அவனை தீண்டிக் கொண்டும் உராய்ந்துக் கொண்டும் இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_
*🎙அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)*
*📚 நூல் : முஸ்னது அபீயஃலா (6504) 📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
✍🏼...தொடரும்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment