பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, March 10, 2020

அல்குர்ஆன் *வசனமும் - 2

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*📖அல்குர்ஆன்*
                     *வசனமும்📖*
                                  ⤵️
           *📖இறங்கியதற்க்கான*
                             *காரணங்களும்📖*

                    *✍🏻....தொடர் : 02*

*☄️உதாரணம் இரண்டு:*
          *(கேள்வி*
                  *காரணமாயிருத்தல்)*

ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﺑﻦ ﺃﺑﻲ ﺷﻴﺒﺔ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﺒﻴﺪﺓ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻲ، ﻋﻦ اﻷﻋﻤﺶ، ﻋﻦ ﺗﻤﻴﻢ ﺑﻦ ﺳﻠﻤﺔ، *ﻋﻦ ﻋﺮﻭﺓ ﺑﻦ اﻟﺰﺑﻴﺮ، ﻗﺎﻝ: ﻗﺎﻟﺖ ﻋﺎﺋﺸﺔ: " ﺗﺒﺎﺭﻙ اﻟﺬﻱ ﻭﺳﻊ ﺳﻤﻌﻪ ﻛﻞ ﺷﻲء، ﺇﻧﻲ ﻷﺳﻤﻊ ﻛﻼﻡ ﺧﻮﻟﺔ ﺑﻨﺖ ﺛﻌﻠﺒﺔ ﻭﻳﺨﻔﻰ ﻋﻠﻲ ﺑﻌﻀﻪ، ﻭﻫﻲ ﺗﺸﺘﻜﻲ ﺯﻭﺟﻬﺎ ﺇﻟﻰ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﻫﻲ ﺗﻘﻮﻝ: ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، ﺃﻛﻞ ﺷﺒﺎﺑﻲ، ﻭﻧﺜﺮﺕ ﻟﻪ ﺑﻄﻨﻲ، ﺣﺘﻰ ﺇﺫا ﻛﺒﺮﺕ ﺳﻨﻲ، ﻭاﻧﻘﻄﻊ ﻭﻟﺪﻱ، ﻇﺎﻫﺮ ﻣﻨﻲ، اﻟﻠﻬﻢ ﺇﻧﻲ ﺃﺷﻜﻮ ﺇﻟﻴﻚ، ﻓﻤﺎ ﺑﺮﺣﺖ ﺣﺘﻰ ﻧﺰﻝ ﺟﺒﺮاﺋﻴﻞ ﺑﻬﺆﻻء اﻵﻳﺎﺕ: {§ﻗﺪ ﺳﻤﻊ اﻟﻠﻪ ﻗﻮﻝ اﻟﺘﻲ ﺗﺠﺎﺩﻟﻚ ﻓﻲ ﺯﻭﺟﻬﺎ ﻭﺗﺸﺘﻜﻲ ﺇﻟﻰ اﻟﻠﻪ} [اﻟﻤﺠﺎﺩﻟﺔ: 1] "*

_*🍃கவ்லா பின்த் ஸஃலபா(ரலியல்லாஹீ அன்ஹா) அவர்களை அவரது கணவர் அவ்ஸ் பின் அஸ்ஸாமித்(ரலி) “ளிஹார்” செய்தார். (அச்சமூகத்தில் ளிஹார் என்பது கணவன் தன் மனைவியைப் பார்த்து, “நீ எனக்கு என் தாயின் முதுகு போல் ஹராம் ஆவாய்” என்று கூறி பிரிவது, இது தலாக்கைப் போல் முழுமையான பிரிவை ஏற்படுத்தாததினால் பெண்ணிற்கு கொடுமை புரிவதாக அமையும்). இந்த ளிஹாருக்க எதிராக நியாயம் கேட்டு தன்னிலையை விளக்கி கவ்லா(ரலி) அவர்கள் நபியிடம் தர்க்கம் செய்தார். அதற்கு தீர்வு கூறி சூரத்துல் முஜாதலாவின்*_

_*நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்தித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் – மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன், (எல்லாவற்றையும்) பார்ப்பவன்.*_

_*“உங்களில் சிலர் தம் மனைவியரைத் “தாய்கள்” எனக் கூறிவிடுகின்றனர், அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்” (ஆகிவிடுவது) இல்லை இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் – எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் – ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன், மிகவும் மன்னிப்பவன்…*_

_*எனத் தொடரும் ஆரம்பப்பகுதிகளை அல்லாஹ் இறக்கினான்.*_
(ஹதீஸின் கருத்து) 

*🎙️ அறிவிப்பவர்:*
               *ஆயிஷா(ரலி)*

*📚 நூல்: இப்னுமாஜா 2063 📚*

*🏮🍂கவ்லா(ரலி) தனக்கொரு முடிவைக்கேட்டு நபியிடம் தர்க்கம் செய்த நிகழ்ச்சி, சூரத்துல் முஜாதலாவின் துவக்கம் பகுதிக்கு “ஸபபுன்னுஸுல்” ஆகும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment