பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, March 9, 2020

அல்குர்ஆன்* *வசனமும் - 1

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*📖அல்குர்ஆன்*
                     *வசனமும்📖*
                                  ⤵️
           *📖இறங்கியதற்க்கான*
                             *காரணங்களும்📖*

                    *✍🏻....தொடர் : 01*

*🏮🍂மனிதருக்கு நல்வழிகாட்டுதலான குர்ஆனை அல்லாஹுதஆலா இருபத்து மூன்று வருடகால இடைவெளியில், விரும்பிய பகுதியை தான் விரும்பும் நேரத்தில் நபியவர்களுக்கு இறக்கிவைத்தான்.* இப்படித்தான் குர்ஆனின் பெரும் பகுதி இறக்கப்பட்டது.

*🏮🍂ஆயினும், குர்ஆனின் சில பகுதிகள், குறிப்பிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வாகவோ அல்லது நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாகவோ இறக்கப்பட்டுள்ளன, ஒரு வசனம்(அல்லது சில வசனங்கள்) இறங்குவதற்கு காரணமாயிருந்த பிரச்னையும் கேள்வியும் ஸபபுன் னுஸுல் (இறங்கியதன் காரணம்) என்று கூறப்படும்.*

*☄️உதாரணம்: ஒன்று*
           *(பிரச்சனை*
                *காரணமாகயிருத்தல்)*

ﺣﺪﺛﻨﺎ ﻳﻮﺳﻒ ﺑﻦ ﻣﻮﺳﻰ، ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﺃﺳﺎﻣﺔ، ﺣﺪﺛﻨﺎ اﻷﻋﻤﺶ، ﺣﺪﺛﻨﺎ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﻣﺮﺓ، ﻋﻦ ﺳﻌﻴﺪ ﺑﻦ ﺟﺒﻴﺮ، *ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ، ﻗﺎﻝ: ﻟﻤﺎ ﻧﺰﻟﺖ: {ﻭﺃﻧﺬﺭ ﻋﺸﻴﺮﺗﻚ اﻷﻗﺮﺑﻴﻦ} [اﻟﺸﻌﺮاء: 214] ﻭﺭﻫﻄﻚ ﻣﻨﻬﻢ اﻟﻤﺨﻠﺼﻴﻦ، ﺧﺮﺝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺣﺘﻰ ﺻﻌﺪ اﻟﺼﻔﺎ ﻓﻬﺘﻒ: «ﻳﺎ ﺻﺒﺎﺣﺎﻩ» ﻓﻘﺎﻟﻮا: ﻣﻦ ﻫﺬا؟، ﻓﺎﺟﺘﻤﻌﻮا ﺇﻟﻴﻪ، ﻓﻘﺎﻝ: «ﺃﺭﺃﻳﺘﻢ ﺇﻥ ﺃﺧﺒﺮﺗﻜﻢ ﺃﻥ ﺧﻴﻼ ﺗﺨﺮﺝ ﻣﻦ ﺳﻔﺢ ﻫﺬا اﻟﺠﺒﻞ، ﺃﻛﻨﺘﻢ ﻣﺼﺪﻗﻲ؟» ﻗﺎﻟﻮا: ﻣﺎ ﺟﺮﺑﻨﺎ ﻋﻠﻴﻚ ﻛﺬﺑﺎ، ﻗﺎﻝ: «§ﻓﺈﻧﻲ ﻧﺬﻳﺮ ﻟﻜﻢ ﺑﻴﻦ ﻳﺪﻱ ﻋﺬاﺏ ﺷﺪﻳﺪ» ﻗﺎﻝ ﺃﺑﻮ ﻟﻬﺐ: ﺗﺒﺎ ﻟﻚ، ﻣﺎ ﺟﻤﻌﺘﻨﺎ ﺇﻻ ﻟﻬﺬا؟ ﺛﻢ ﻗﺎﻡ، ﻓﻨﺰﻟﺖ: {ﺗﺒﺖ ﻳﺪا -[180]- ﺃﺑﻲ ﻟﻬﺐ ﻭﺗﺐ} [اﻟﻤﺴﺪ: 1] ﻭﻗﺪ ﺗﺐ، ﻫﻜﺬا ﻗﺮﺃﻫﺎ اﻷﻋﻤﺶ ﻳﻮﻣﺌﺬ*

_*🍃இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “உன் நெருங்கிய உறவினர்களை எச்சரிக்கை செய்” என்ற (சூரத்துஷ்ஷுஅராஃ 214) வசனம் இறங்கியதும் நபி(ஸல்) அவர்கள் ஸஃபா மலை மீது ஏறி நின்று தன் உறவினர்களை சப்தமாட்டு அழைத்தார்கள். எல்லோரும் ஒன்று கூடினார்கள் அப்போது நபியவர்கள், இந்த மலைக்குப் பின்னிருந்து ஒரு குதிரைப்படை (உங்களைத்தாக்க)வருகிறது என்று நான் கூறினால், என்னை நம்புவீர்களா❓ என்று கேட்டார்கள். அதற்கவர்கள் நீங்கள் பொய் சொல்லி நாங்கள் கேட்டதில்லை என்று பதிலளித்தார்கள். அப்போது, கடும் வேதனை வருவதற்கு முன் உங்களுக்கு எச்சரிக்கையாளனாக நான் இருக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூலஹப், “உனக்கு அழிவு உண்டாகட்டும் இதற்குத்தானா எங்களை ஒன்று கூட்டினாய்”, என்று கூறி எழுந்து சென்றான், அப்போது, “தப்பத்யதா அபீலஹபிவ்வதப்” என்ற (சூரத்துல் மஸத்) சூரா இறங்கியது.*_

*📚 ஆதாரம்: புகாரி(4971) 📚*

*🏮🍂அதாவது சூரத்துல் மஸத் இறங்குவதற்கு காரணமாக இருந்தது நபி(ஸல்) அவர்கள் ஸஃபா மலையில் நின்று தம் உறவினர்களுக்கு பிரச்சாரம் செய்த நிகழ்ச்சியாகும். ஆகவே இந்நிகழ்ச்சி சூரத்துல் மஸதிற்கு ஸபபுன்னுஸுல் ஆகும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment