பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, March 13, 2020

மண்ணறை வாழ்க்கை - 16

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 16 ]*

*தீயவர்களின் மண்ணறை*
                 *வாழ்க்கை [ 11 ]*

*☄அவசியம் பாதுகாப்புத்*
              *தேட வேண்டும்☄*

*🏮🍂 கப்ரு வாழ்வில் தீயவனுக்கு  கிடைக்கும் கடுமையான தண்டனைகளை நாம் அறிந்துக் கொண்டோம்.*
இப்படிப்பட்ட படு மோசமான வாழ்வு நமக்கு அமைந்து விடாமல் இருப்பதற்காக  நாம் அனைவரும்  முயற்சி செய்வதுடன் 
*கப்ரு வேதனையிலிருந்து இறைவனிடம் பாதுகாப்புத் தேட வேண்டும்.  ஏனென்றால் மண்ணறை வேதனையை விட்டு பாதுகாப்புத் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.*

_*ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﺎ، ﺃﻥ ﻳﻬﻮﺩﻳﺔ ﺟﺎءﺕ ﺗﺴﺄﻟﻬﺎ، ﻓﻘﺎﻟﺖ: ﺃﻋﺎﺫﻙ اﻟﻠﻪ ﻣﻦ ﻋﺬاﺏ اﻟﻘﺒﺮ، ﻓﺴﺄﻟﺖ ﻋﺎﺋﺸﺔ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: ﺃﻳﻌﺬﺏ اﻟﻨﺎﺱ ﻓﻲ ﻗﺒﻮﺭﻫﻢ؟ ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻋﺎﺋﺬا ﺑﺎﻟﻠﻪ ﻣﻦ ﺫﻟﻚ»  1056 - ﺛﻢ ﺭﻛﺐ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺫاﺕ ﻏﺪاﺓ ﻣﺮﻛﺒﺎ، ﻓﻜﺴﻔﺖ اﻟﺸﻤﺲ، ﻓﺮﺟﻊ ﺿﺤﻰ، ﻓﻤﺮ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﻴﻦ ﻇﻬﺮاﻧﻲ اﻟﺤﺠﺮ، ﺛﻢ ﻗﺎﻡ، ﻓﺼﻠﻰ ﻭﻗﺎﻡ اﻟﻨﺎﺱ ﻭﺭاءﻩ، ﻓﻘﺎﻡ ﻗﻴﺎﻣﺎ ﻃﻮﻳﻼ، ﺛﻢ ﺭﻛﻊ ﺭﻛﻮﻋﺎ ﻃﻮﻳﻼ، ﺛﻢ ﺭﻓﻊ، ﻓﻘﺎﻡ ﻗﻴﺎﻣﺎ ﻃﻮﻳﻼ ﻭﻫﻮ ﺩﻭﻥ اﻟﻘﻴﺎﻡ اﻷﻭﻝ، ﺛﻢ ﺭﻛﻊ ﺭﻛﻮﻋﺎ ﻃﻮﻳﻼ ﻭﻫﻮ ﺩﻭﻥ اﻟﺮﻛﻮﻉ اﻷﻭﻝ، ﺛﻢ ﺭﻓﻊ، ﻓﺴﺠﺪ ﺳﺠﻮﺩا ﻃﻮﻳﻼ، ﺛﻢ ﻗﺎﻡ، ﻓﻘﺎﻡ ﻗﻴﺎﻣﺎ ﻃﻮﻳﻼ ﻭﻫﻮ ﺩﻭﻥ اﻟﻘﻴﺎﻡ اﻷﻭﻝ، ﺛﻢ ﺭﻛﻊ ﺭﻛﻮﻋﺎ ﻃﻮﻳﻼ ﻭﻫﻮ ﺩﻭﻥ اﻟﺮﻛﻮﻉ اﻷﻭﻝ، ﺛﻢ ﻗﺎﻡ ﻗﻴﺎﻣﺎ ﻃﻮﻳﻼ ﻭﻫﻮ ﺩﻭﻥ اﻟﻘﻴﺎﻡ اﻷﻭﻝ، ﺛﻢ ﺭﻛﻊ ﺭﻛﻮﻋﺎ ﻃﻮﻳﻼ ﻭﻫﻮ ﺩﻭﻥ اﻟﺮﻛﻮﻉ اﻷﻭﻝ، ﺛﻢ ﺳﺠﺪ ﻭﻫﻮ ﺩﻭﻥ اﻟﺴﺠﻮﺩ اﻷﻭﻝ، ﺛﻢ اﻧﺼﺮﻑ، ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻣﺎ ﺷﺎء اﻟﻠﻪ ﺃﻥ ﻳﻘﻮﻝ ﺛﻢ «ﺃﻣﺮﻫﻢ ﺃﻥ ﻳﺘﻌﻮﺫﻭا ﻣﻦ ﻋﺬاﺏ اﻟﻘﺒﺮ»*_

_*🍃ஒரு யூதப் பெண்மணி என்னிடம் யாசிக்க வந்தாள். அப்போது அவள் 'கப்ருடைய வேதனையிலிருந்து உன்னை அல்லாஹ் காப்பானாக! என்று கூறினாள். நான் நபி(ஸல்) அவர்களிடம் மனிதர்கள் கப்ருகளிலும் வேதனை செய்யப்படுவார்களா❓ என்று கேட்டேன்.*_ _*அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'கப்ருடைய வேதனையைவிட்டும் நானும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்றார்கள்.*_
 _*பிறகு கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு மக்களைப் பணித்தார்கள்.*_

*🎙அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)*

*📚 நூல் : புகாரி (1056) 📚*

_*أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ  صلى الله عليه وسلم ‏"‏ عُوذُوا بِاللَّهِ مِنْ  عَذَابِ اللَّهِ عُوذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ عُوذُوا  بِاللَّهِ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ عُوذُوا بِاللَّهِ مِنْ  فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ ‏"*_

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்கள் கூறினார்கள்:*_
_*நீங்கள் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். சவக்குழியின் வேதனையிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். (பெருங் குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்.*_

*🎙அறிவிப்பவர் :அபூஹுரைரா (ரலி)*

*📚 நூல் : முஸ்லிம் (1034) 📚*

 _*عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَتْ أُمُّ حَبِيبَةَ زَوْجُ النَّبِيِّ  صلى الله عليه وسلم ‏"‏ اللَّهُمَّ أَمْتِعْنِي بِزَوْجِي  رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبِأَبِي أَبِي سُفْيَانَ وَبِأَخِي  مُعَاوِيَةَ ‏.‏ قَالَ فَقَالَ النَّبِيُّ  صلى الله عليه وسلم ‏"‏ قَدْ سَأَلْتِ اللَّهَ لآجَالٍ مَضْرُوبَةٍ  وَأَيَّامٍ مَعْدُودَةٍ وَأَرْزَاقٍ مَقْسُومَةٍ لَنْ  يُعَجِّلَ شَيْئًا قَبْلَ حِلِّهِ أَوْ يُؤَخِّرَ شَيْئًا عَنْ حِلِّهِ  وَلَوْ كُنْتِ سَأَلْتِ اللَّهَ أَنْ يُعِيذَكِ مِنْ عَذَابٍ  فِي النَّارِ أَوْ عَذَابٍ فِي الْقَبْرِ كَانَ خَيْرًا وَأَفْضَلَ ‏"‏  ‏.‏ قَالَ وَذُكِرَتْ عِنْدَهُ الْقِرَدَةُ قَالَ مِسْعَرٌ  وَأُرَاهُ قَالَ وَالْخَنَازِيرُ مِنْ مَسْخٍ فَقَالَ ‏"‏ إِنَّ اللَّهَ  لَمْ يَجْعَلْ لِمَسْخٍ نَسْلاً وَلاَ عَقِبًا وَقَدْ كَانَتِ  الْقِرَدَةُ وَالْخَنَازِيرُ قَبْلَ ذَلِكَ ‏"*_

_*🍃(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள், "இறைவா! என் கணவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் தந்தை அபூசுஃப்யான், என் சகோதரர் முஆவியா ஆகியோர் (நீண்ட நாட்கள் வாழ்வதன்) மூலம் எனக்குப் பயனளிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.*_
_*அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீ (ஏற்கெனவே) நிர்ணயிக்கப்பட்டுவிட்ட ஆயுளையும் குறிக்கப்பட்டுவிட்ட (வாழ்)நாட்களையும் பங்கிடப்பட்டுவிட்ட வாழ்வாதாரத்தையும் அல்லாஹ்விடம் கேட்டிருக்கிறாய். அல்லாஹ் அவற்றில் எதையும், அதற்குரிய நேரத்திற்கு முன்பே ஒருபோதும் கொண்டுவந்துவிடவுமாட்டான்; அவற்றில் எதையும்,அதற்குரிய நேரத்தைவிட்டுத் தாமதப்படுத்தவுமாட்டான். நரக நெருப்பின் வேதனையிலிருந்தோ, அல்லது மண்ணறையின் வேதனையிலிருந்தோ உன்னைக் காக்கும்படி நீ அல்லாஹ்விடம் வேண்டியிருந்தால் நன்றாகவும் சிறந்ததாகவும் இருந்திருக்கும்" என்று சொன்னார்கள்.*_

*🎙அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)*

*📚 நூல் : முஸ்லிம் (5176) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment