*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*📖அல்குர்ஆன்*
*வசனமும்📖*
⤵️
*📖இறங்கியதற்க்கான*
*காரணங்களும்📖*
*✍🏻....தொடர் : 07*
*☄️ஒரே வசனத்திற்க்கு*
*ஒன்றுக்கும் மேற்பட்ட*
*ஸபபுன்னுஸுல்*
*வருதல் [ 02 ]*
*🏮🍂ஒரு வசனத்துக்கு இரண்டு ஸபபுன்னுஸுல்கள் அறிவிக்கப்பட்டு அவ்விரண்டுமே தெளிவாக ஸபபுன்னுஸுல்தான் என்று குறிப்பிடுமானால் அப்போது இரண்டு அறிவிப்புக்களுடைய அறிவிப்பாளர் வரிசையை பார்க்கவேண்டும் ஒன்று பலவீனமானதாகவும் மற்றொன்று பலமானதாகவும் இருக்குமானால் பலமான அறிவிப்பாளர் வரிசையை உடைய செய்தியையே ஸபபுன்னுஸுலாக முடிவு செய்யவேண்டும்.*
*👇 இதற்கு உதாரணம், 👇*
_*🍃ஜுன்துப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தார்கள். இரண்டு அல்லது மூன்று இரவுகள் நின்று வணங்கவில்லை. அப்போது ஒரு பெண் அவர்களிடம் வந்து, முஹம்மதே உன்னுடைய ஷைத்தான் உன்னை விட்டுவிட்டதாகத்தான் கருதுகிறேன். உன்னை அவன் இரண்டு அல்லது மூன்று இரவுகள் நெருங்கவில்லையே என்றாள். அப்போது அல்லாஹ் “முற்பகல் மீது சத்தியமாக இருள்சூழும் இரவின்மீதும் சத்தியமாக, உம்மை உமது இரட்சகன் விட்டுவிடவில்லை, வெறுக்கவுமில்லை” என்று தொடரும் சூரத்துள்ளுஹாவை இறக்கிவைத்தான்.*_
*📚 (ஆதாரம்: புகாரி 4950, 📚*
*🏮🍂மேற்கூறிய செய்திக்கு மாற்றமாக சூரத்துள்ளுஹா இறங்கியதற்கான காரணம் இன்னொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அது வருமாறு:*
_நபி (ஸல்) அவர்களின் பணியாளராக இருந்த பெண்மனி கவ்லா (ரலி) அவர்கள் கூறினார்கள்:_
_*🍃ஒரு நாய்க்குட்டி நபி (ஸல்) அவர்களின் வீட்டில் நுழைந்து கட்டிலுக்கடியில் சென்று செத்துவிட்டது. அதைத்தொடர்ந்து நான்கு நாட்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வஹி இறங்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வஹி இறங்கவில்லை. அப்போது நபியவர்கள் கவ்லாவே அல்லாஹ்வின் தூதரின் வீட்டில் என்ன நடந்தது, ஜிப்ரீல் என்னிடம் வருவதில்லையே என்றார்கள். அப்போது எனக்குள் நான், வீட்டை சரிபடுத்தி கூட்டி சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டேன். அப்போது துடைப்பத்துடன் கட்டிலுக்கு கீழே குனிந்து, அங்கே கிடந்த நாய்க்குட்டியை கண்டு, வெளியே எடுத்துப் போட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் முகம் நடுக்கத்துடன் வந்தார்கள். – அவர்களுக்கு வஹி இறங்கினால் நடுக்கம் எடுக்கும் – எனவே என்னைப் பார்த்து கவ்லாவே, என்னைப் போர்த்திவிடு என்றார்கள். அப்போது அல்லாஹுத்தஆலா, “வள்ளுஹா” என்று தெடங்கி “ஃபதர்ளா” முடிய உள்ள வசனங்களை இறக்கி வைத்தான்.*_
*📚 (ஆதாரம்: தப்ரானீ, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா)📚*
*🏮🍂மேற்கூறிய இரண்டு செய்திகளிலும், சூரத்துள்ளுஹா இறங்கியதற்கு காரணமாக இரண்டு வெவ்வேறு செய்திகள் கூறப்பட்டுள்ளன.* இரண்டில் முதலாவது செய்தி பலமானதும் இரண்டாவது பலவீனமானதாகும்.
*🏮🍂ஆகையினால் பலமானதையே ஸபபுன்னுஸுல் என கொள்ள வேண்டும்.*
*🏮🍂புகாரியின் விளக்கவுரையில் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள், கூறுவதாவது, “நாய்க்குட்டியின் காரணத்தால் ஜிப்ரீல் வர தாமதமானதாக கூறப்படும் செய்தி பிரபலமானதாகும். எனினும் அதுவே ஸபபுன்னுஸுலாக ஆவதாக கருதுவது விநோதமான கருத்தாகும். மேலும் அதன் அறிவிப்பாளர் வரிசையில் யாரென்று அறியப்படாதோர் இடம் பெறுகின்றனர். எனவே புகாரியிலும் முஸ்லிமிலும் இடம் பெறுவதே ஆதாரப்பூர்வமானதாகும்.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
✍🏼...தொடரும்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment