பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, March 4, 2020

மண்ணறை - 13

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 13 ]*

*தீயவர்களின் மண்ணறை*
                 *வாழ்க்கை [ 08 ]*

*☄கடுமையான வேதனை☄*

*🏮🍂 இந்த உலகத்தில் யாரும் அனுபவித்திருக்க முடியாத அளவிற்கு மண்ணறையின் வேதனை மிகக் கடுமையானதாகும். மண்ணறை வாழ்க்கை என்பது மறுமையின் முதல் நிலையாகும். மறுமை வாழ்வில் தீயவர்களுக்கு கிடைக்கும் வேதனை எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதைக் குர்ஆன் விவரிக்கிறது.*

_*لَّهُمْ عَذَابٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَقُّ ۖ وَمَا لَهُم مِّنَ اللَّهِ مِن وَاقٍ*_

_*🍃அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனை உண்டு. மறுமையின் வேதனை கடுமையானது. அவர்களை அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பவன் எவனும் இல்லை.*_

*📖திருக்குர்ஆன்  13:34📖*

_*وَأَنَّ عَذَابِي هُوَ الْعَذَابُ الْأَلِيمُ*_

_*🍃"எனது வேதனையே துன்புறுத்தும் வேதனை'' (என்பதையும் கூறுவீராக!)*_

*📖திருக்குர்ஆன்  15:50📖*

_*وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ*_

 _*அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.*_

*📖திருக்குர்ஆன்  22:2📖*

_*وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقَىٰ*_

_*🍃மறுமையின் வேதனை கடுமையானது; நிலையானது.*_

*📖திருக்குர்ஆன்  20:127📖*

*وَلَعَذَابُ الْآخِرَةِ أَخْزَىٰ* 

 _*மறுமையின் வேதனை (இதை விட) மிகவும் இழிவுபடுத்தக் கூடியது.*_

*📖திருக்குர்ஆன்  41:16📖*

_*كَذَٰلِكَ الْعَذَابُ ۖ وَلَعَذَابُ الْآخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ*_

_*🍃இப்படித்தான் (நமது) வேதனை இருக்கும். மறுமையின் வேதனை மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா❓*_

*📖திருக்குர்ஆன்  68:33📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment