*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*📖அல்குர்ஆன்*
*வசனமும்📖*
⤵️
*📖இறங்கியதற்க்கான*
*காரணங்களும்📖*
*✍🏻....தொடர் : 05*
*☄️ஸபபுன்னுஸுலைக் குறிக்கும் வாசக அமைப்பு: ☄️*
*🏮🍂ஸபபுன்னுஸுலை விளக்கும் அறிவிப்புகளில் சில தெளிவாக இருக்கும் இன்னும் சில மூடலாக இருக்கும். அதாவது ஸபபுன்னுஸுலை அறிவிக்கும் சஹாபி இன்ன நிகழ்ச்சி நடந்தது அப்போது இன்ன வசனம் இறங்கியது என்று குறிப்பிட்டாலோ அல்லது இன்ன கேள்வி நபியிடம் கேட்கப்பட்டது அதற்கு பதிலாக இன்ன வசனம் இறங்கியது என்று குறிப்பிட்டாலோ தெளிவான வாசகமாகும்.* ஆகையினால் அதனை ஸபபுன்னுஸுல் என்று உறுதியாக குறிப்பிடலாம்.
*🏮🍂ஆனால் அறிவிக்கும் சஹாபி ஒரு ஆயத்தைப்பற்றி, இன்ன விஷயமாக அந்த வசனம் இறங்கியது என்றோ அல்லது இன்ன வசனம் இன்ன விஷயமாக இறங்கியது என்று தான் நான் கருதுகிறேன் என்றோ குறிப்பிட்டால் அதனை ஸபபுன்னுஸுல் என்று உறுதியாக குறிப்பிட முடியாது.* ஸபபுன்னுஸுலாகவும் இருக்கலாம். அல்லது அந்த சஹாபி அந்த வசனத்துக்குக் கூறுகிற விளக்கம் மற்றும் அவர் யூகித்துச் சொல்கிற கருத்து என்றும் எடுத்துக் கொள்ளலாம். *முதல் வகையான தெளிவான ஸபபுன்னுஸுலுக்கு உதாரணமாக நாம் இப்பாடத்தில் முன்பு கூறியுள்ள பல்வேறு ஸபபுன்னுஸுல்களை எடுத்துக் கொள்ளலாம்.*
*🏮🍂மூடலான, தெளிவற்ற ஸபபுன்னுஸுல் வாசக அமைப்புக்கு உதாரணம், சூரத்துல் பக்கராவின் 223வது வசனம் பெண்களிடம் பின்பக்கத்தில் அமர்ந்து தாம்பத்ய உறவு கொள்வது பற்றி இறங்கியது என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகிற கூற்று.*
*🏮🍂இங்கு இப்னு உமர்(ரலி) அவர்கள் இதுதான் காரணம் என்று புரிகிற விதத்தில் தெளிவாக கூறவில்லை, மேலும் இதே வசனத்துக்கு வேறொரு ஸபபுன்னுஸுல் இன்னொரு ஹதீஸில் தெளிவாக இடம் பெற்றுள்ளது (அது பின்பு வரும்) ஆகையால் இப்னு உமர்(ரலி) அவர்களின் இக்கூற்றை ஒரு விளக்கம் என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்- தவிர ஸபபுன்னுஸுல் அல்ல.*
*👇மற்றொரு உதாரணம்,👇*
ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻳﻮﺳﻒ، ﺣﺪﺛﻨﺎ اﻟﻠﻴﺚ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﻲ اﺑﻦ ﺷﻬﺎﺏ، ﻋﻦ ﻋﺮﻭﺓ، *ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ اﻟﺰﺑﻴﺮ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ، ﺃﻧﻪ ﺣﺪﺛﻪ: ﺃﻥ ﺭﺟﻼ ﻣﻦ اﻷﻧﺼﺎﺭ ﺧﺎﺻﻢ اﻟﺰﺑﻴﺮ ﻋﻨﺪ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ ﺷﺮاﺝ اﻟﺤﺮﺓ، اﻟﺘﻲ ﻳﺴﻘﻮﻥ ﺑﻬﺎ اﻟﻨﺨﻞ، ﻓﻘﺎﻝ اﻷﻧﺼﺎﺭﻱ: ﺳﺮﺡ اﻟﻤﺎء ﻳﻤﺮ، ﻓﺄﺑﻰ ﻋﻠﻴﻪ؟ ﻓﺎﺧﺘﺼﻤﺎ ﻋﻨﺪ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻟﻠﺰﺑﻴﺮ: «ﺃﺳﻖ ﻳﺎ ﺯﺑﻴﺮ، ﺛﻢ ﺃﺭﺳﻞ اﻟﻤﺎء ﺇﻟﻰ ﺟﺎﺭﻙ»، ﻓﻐﻀﺐ اﻷﻧﺼﺎﺭﻱ، ﻓﻘﺎﻝ: ﺃﻥ ﻛﺎﻥ اﺑﻦ ﻋﻤﺘﻚ؟ ﻓﺘﻠﻮﻥ ﻭﺟﻪ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﺛﻢ ﻗﺎﻝ: «اﺳﻖ ﻳﺎ ﺯﺑﻴﺮ، ﺛﻢ اﺣﺒﺲ اﻟﻤﺎء ﺣﺘﻰ ﻳﺮﺟﻊ ﺇﻟﻰ اﻟﺠﺪﺭ»، ﻓﻘﺎﻝ اﻟﺰﺑﻴﺮ: " ﻭاﻟﻠﻪ ﺇﻧﻲ ﻷﺣﺴﺐ ﻫﺬﻩ اﻵﻳﺔ ﻧﺰﻟﺖ ﻓﻲ ﺫﻟﻚ: {ﻓﻼ ﻭﺭﺑﻚ ﻻ ﻳﺆﻣﻨﻮﻥ ﺣﺘﻰ ﻳﺤﻜﻤﻮﻙ ﻓﻴﻤﺎ ﺷﺠﺮ ﺑﻴﻨﻬﻢ} [اﻟﻨﺴﺎء: 65] "*
_அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்._
_*🍃ஸுபைர்(ரலி) அவர்களுக்கும் அவர்களின் பக்கத்து நிலத்துக்காரரான அன்சாரி ஸஹாபிக்கும் பேரீச்சமரங்களுக்கு தண்ணீர் விடுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் இருவருக்கும் நன்மையான ஒரு முடிவை நபி(ஸல்) அவர்கள் கூறியபோது அதை விரும்பாத அன்சாரி சஹாபி நபி(ஸல்) அவர்களைப் பார்த்து, ஸுபைர் உங்கள் மாமி மகன் என்பதாலா இப்படி ஒரு முடிவைக் கூறுகிறீர்கள் என்றார். அப்போது நபி(ஸல்) அவர்களின் முகம் சிவந்தது…*_
_*இந்த நிகழ்ச்சியை கூறிய ஸுபைர்(ரலி) அவர்கள், “உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்”. என்ற சூரத்துன்னிஸா 65-வது வசனம் இந்த நிகழ்ச்சிக்காகத்தான் இறங்கியதாக நான் கருதுகிறேன் என்றார்கள்.*_
*📚 (ஹதீஸ் சுருக்கம் புகாரி 2359)*
*🏮🍂இந்த ஹதீஸில் ஸுபைர்(ரலி) அவர்கள், நான் கருதுகிறேன் என்ற வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளதால், இந்நிகழ்ச்சி இந்த ஆயத்தின் ஸபபுன்னுஸுலாக இருக்கவும், இல்லாமலிருக்கவும் வாய்ப்புள்ளது.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
✍🏼...தொடரும்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment