*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*📖அல்குர்ஆன்*
*வசனமும்📖*
⤵️
*📖இறங்கியதற்க்கான*
*காரணங்களும்📖*
*✍🏻....தொடர் : 03*
*☄️எல்லா வசனம்களுக்கும்*
*ஸபபுன்னுஸுல்*
*இருக்கிறதா❓*
*🏮🍂குர்ஆனின் ஒவ்வொரு வசனத்துக்கும் ஸபபுன்னுஸுல் இல்லை. ஏனென்றால், இஸ்லாமிய நம்பிக்கையையும் இஸ்லாத்தின் கடமைகளையும் நடைமுறைக் கூட்டங்களையும் விளக்குவதற்காக அல்லாஹ் தன் விருப்பத்தின் படி எந்த நிகழ்ச்சியோடும் பிரச்னையோடும் தொடர்பில்லாமலும்* எந்தக் கேள்வியும் கேட்கப்படாத நிலையிலும் குர்ஆனின் பெரும் பகுதியை இறக்கிவைத்துள்ளான்.
*🏮🍂குர்ஆன் இரண்டு வகையில் இறங்கியது. ஒன்று தானாக இறங்கியது. மற்றொன்று ஏதேனும் நிகழ்ச்சி அல்லது கேள்வியின் பின்னணியில் இறங்கியது என்ற அல்ஜஃபரீயின் கூற்றை இமாம் ஸுயூத்தி அவர்கள் தனது அல் இத்கான் என்ற நூலின் முதல் பாகத்தில் பக்கம் 28ல் குறிப்பிட்டுள்ளார்கள்.*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄️ஸபபுன்னுஸுலை*
*அறிவதால் விளையும் பலன்:*
*🏮🍂வசனம் இறங்கியதன் காரணத்தை அறிவது அதனை தெளிவாக புரிந்து கொள்வதற்கு சிறந்த வழியாகும். சில வசனங்களில் மூடலாக குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை ஸபபுன்னுஸுலை அறிவதனாலேயே விவரமாக புரிந்து கொள்ள முடிகிறது.*
*👇உதாரணமாக, 👇*
*🏮🍂“இன்ன ஸஃபா வல் மர்வத்த மின்ஷஆயிரில்லாஹ்” என்று தொடங்கும் சூரத்துல் பக்கராவின் 158வது வசனத்தின் பொருள், “ஸஃபாவும் மர்வாவும்” அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளவை. எனவே யார் ஹஜ்ஜோ அல்லது உம்ராவோ செய்கிறாரோ அவர் அவ்விரண்டிலும் சுற்றிவருவது (ஸஃயி செய்வது) குற்றமில்லை”.*
*🏮🍂இந்த ஆயத்தில் குற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளதின் படி பார்த்தால் ஸஃபா மர்வாவில் ஸஃயி செய்வது அவசியமில்லை என்று புரியமுடிகிறது, ஆனால் அப்படிப் புரிவது தவறு என்பது ஸபபுன்னுஸுலை அறிந்தால் புலனாகும்.*
_*🍃உர்வா கூறுகிறார்: நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் “இன்ன ஸஃபா வல் மர்வத்த மின்ஷஆயிரில்லாஹ்” (சூரத்துல் பக்கரா 158) என்ற அல்லாஹ்வின் கூற்றுப்படி, ஒருவர் ஸஃபா மர்வாவில் சுற்றிவராவிட்டால் (அதாவது ஸஃயி செய்யாவிட்டால்) குற்றமாகும் என்று நான் கருதவில்லை என்றேன். அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள், “என் சகோதரியின் மகனே நீ சொல்வது தவறு, நீ கூறுகிற விளக்கம் சரியாக இருக்குமென்றால் அந்த ஆயத்தில் “ஸஃபா மர்வாவில் ஸஃயி செய்யாமலிருப்பது குற்றமில்லை” என்று தான் இடம் பெற்றிருக்கும். எனினும் இந்த வசனம் இறங்கக் காரணம், அன்ஸார்கள் இஸ்லாத்திற்கு முன் மனாத் என்கிற கற்பனை தெய்வத்துக்காக ஸஃயி செய்து கொண்டிருந்தார்கள். அப்படிச் செய்து கொண்டிருந்தவர்கள் முஸ்லிமான பின் ஸஃயி செய்ய சங்கடப்பட்டார்கள். எனவேதான் அல்லாஹ் இந்த ஆயத்தை இறக்கினான்”, என்று விளக்கிய ஆயிஷா(ரலி) அவர்கள் தொடர்ந்து, நபி(ஸல்) ஸஃபா மர்வாவில் ஸஃயி செய்வதை தெளிவுபடுத்தி விட்டார்கள் எனவே அதனை விட்டு விடுவதற்கு யாருக்கும் அனுமதியில்லை என்று கூறினார்கள்.*_
*📚 நூல் (புகாரி 1643) 📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
✍🏼...தொடரும்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment