பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, January 19, 2020

பெண்களுக்கு ஸீமந்தம்

*⛱⛱மீள் பதிவு⛱⛱* 

*🧕🧕🧕பெண்களுக்கு ஸீமந்தம் ஒரு பிதாஅத் வழிகேடு🧕🧕🧕* 


*பெண்ணுக்கு வளைகாப்பு(ஸீமந்தம்) மாற்று மத கலாச்சாரம்*


கருவுற்ற பெண்ணுக்கு சீமந்தம் (வளைகாப்பு) என்பது ஏன் செய்கின்றார்கள் என்ற கேள்வி என் மனதில் எழுந்ததுண்டு. அதற்கான ஒரு விளக்கம் கீழே உள்ள தினமலரில் வெளியான ஒரு கட்டுரையின் மூலம் எனக்கு கிடைத்தது.
 
முழுக்க முழுக்க இந்துகளின் மாத நம்பிக்கையின் ஒரு பங்காக தோன்றிய இந்த ஒரு சடங்கு, ஓர் இறை கொள்கையை முன்வைக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் மக்கள் சிலரிடமும் வந்தது எப்படி என்பது மட்டும் தான் எனக்கு இன்னும் தெரியவில்லை.
 
முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஒரு சிலரும் இந்த வளைகாப்பு விஷயத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகவும், இந்த சடங்கை நிறைவேற்றினால் தான் குழந்தை நல்லாவிதமாக பிறக்கும் என்று நம்பிக்கை கொண்டவர்களாகவும், இது நாள்வரையும் இந்த சடங்கை செய்கின்றனர்.

இவைகள் அனைத்தும் மாற்று மதத்தினருடைய கலாச்சாரம் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும். எனவே மாற்று மதக்காலச்சாரத்தை நாம் செய்யக்கூடாது காரணம் :

யார் மாற்று மத கலாச்சாரத்திற்கு ஒப்பாகிறாரோ அவர் நம்மைச்சார்ந்தவரல்ல என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

 *அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி) நூல் : அபூதாவூது (3515)* 

 
 *இத்தகையோர் சிந்திக்க வேண்டும்.............................* 

 
நன்மையும் தீமையும் அல்லாஹுவை அன்றி வேறு எதனை கொண்டும் நடப்பதில்லை என்று முழங்கிவிட்டு , வளைகாப்பு செய்வது தான் குழந்தையை நல்ல முறையில் பிறக்க வைக்கும் என்று நம்பினால், அடிப்படையிலேயே தவறு இருப்பது தெரியவில்லையா ???
 
 
ஒரு வேலை " *லா ஹவ்ல வாலா கூவத இல்லா பில்லாஹ்"* என்று அரபியில் அர்த்தம் விளங்காமல் சொல்வதால் தான் இந்த தடுமாற்றமோ??
 
இதுவரை எந்த நோக்கத்தில் செய்திருந்தாலும், வளைகாப்பின் உண்மை அர்த்தமும் தோற்றமும் தெளிவாக தெரிந்த பின்பாவது இந்த சமுதாயம் இந்த தவறில் இருந்து விலகி தவ்பா செய்தால் அல்லாஹுவின் அருளை பெற்ற நல்லதொரு சமுதாயமாக நாம் மாறமுடியும். எல்லாம் வல்ல இறைவன் அத்தகைய அருளை பெற்ற நல்ல மக்களாக உங்களையும் என்னையும் ஆக்கி, ஷிர்க் என்னும் கொடும் பாவத்தில் இருந்து விலகி வாழக்கூடியவர்களாக நாம் அணைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!!!!!!

அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்

 *ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment