பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, January 10, 2020

786 என்றால் என்ன

*🌹🌹🌹மீள் பதிவு🌹🌹🌹* 


*🏓🏓🏓இஸ்லாமிய பார்வையில்* *786 என்றால் என்ன❓❓❓🏓🏓🏓*
                                                   
 *👉👉👉இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதைப் பயன்படுத்தலாமா❓👈👈👈* 

 *👉👉👉📚📚ஹதீஸ்📚📚 ஆதாரங்களுடன் உங்கள் பார்வைக்கு👇👇👇* 

✍✍✍நியுமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவ‌ர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சில‌ர் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயி‌னர்✍✍✍.

 *أبجد* 

 *هوز* 

 *حطي* 

 *كلمن* 

 *سعفص* 

 *قرشت* 

 *ثخذ* 

 *ضظغ* 

 *ا –* *1* 

 *ب –* *2* 

 *ج –* *3* 

 *د –* *4* 

 *ه –* *5* 

 *و –* *6* 

 *ز –* *7* 

 *ح –* *8* 

 *ط –* *9* 

 *ي –* *10* 

 *ك –* *20* 

 *ل –* *30* 

 *م –* *40* 

 *ن –* *50* 

 *س –* *60* 

 *ع –* *70* 

 *ف -* *80* 

 *ص –* *90* 

 *ق –* *100* 

 *ر –* *200* 

 *ش* – *300* 

 *ت* – *400* 

 *ث –* *500* 

 *خ –* *600* 

 *ذ –* *700* 

 *ض –* *800* 

 *ظ –* *900* 

 *غ –* *1000* 

 *👆👆👆👆இப்படி ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணைக் கொடுத்தனர்👇👇👇👇* 

✍✍✍அப்ஜத் எனும் இக்கணக்கின் அடிப்படையில் *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்* என்பதற்குரிய எண்களைக் கூட்டினால் அதன் கூட்டுத் தொகை *786 ஆகும். 786* என்பதைப் பயன்படுத்தினால் அது *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்* பயன்படுத்தியதற்கு ஒப்பாகும் என்ற அடிப்படையில் தான் இவ்வழக்கம் சில முஸ்லிம்களிடம் புகுந்தது.✍✍✍

 *✍✍✍இதற்கும் இஸ்லாத்துக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை என்பதை விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.✍✍✍* 

✍✍✍ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணைக் குறியீடாகப் பயன்படுத்துமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லித் தரவில்லை. அவர்கள் இவ்வாறு பயன்படுத்தியதுமில்லை. அவர்கள் முன்னிலையில் மற்றவர்கள் பயன்படுத்தவும் இல்லை. எனவே இதற்கும், இஸ்லாத்துக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை.👇👇👇

✍✍✍உண்மையில் அப்ஜத் எனப்படும் இக்கணக்கு யூதர்களின் ஹிப்ரு மொழியை அடிப்படையாகக் கொண்டு யூதர்கள் உருவாக்கி வைத்திருந்ததாகும். அதை அப்படியே காப்பியடித்துத் தான் அறிவீனர்க்ள் இதை அரபு மொழியிலும் நுழைத்து விட்டனர்,✍✍✍

 *👉👉👉அரபு மொழியின் அகர வரிசையை நாம் அறிவோம்.👇👇👇*

 *அரபு வரிசைப்படி أ          அப்ஜத் வரிசைப்படி أ* 

 *அரபு வரிசைப்படி ب        அப்ஜத் வரிசைப்படி ب* 

 *அரபு வரிசைப்படி ت        அப்ஜத் வரிசைப்படி ج* 

 *அரபு வரிசைப்படி ث        அப்ஜத் வரிசைப்படி د* 

 *அரபு வரிசைப்படி ج         அப்ஜத் வரிசைப்படி* *ه* 

 *அரபு வரிசைப்படி ح         அப்ஜத் வரிசைப்படி و* 

 *அரபு வரிசைப்படி خ         அப்ஜத் வரிசைப்படி ز* 

 *அரபு வரிசைப்படி د           அப்ஜத் வரிசைப்படி ح* 

 *அரபு வரிசைப்படி ذ           அப்ஜத் வரிசைப்படி ط* 

 *அரபு வரிசைப்படி ر          அப்ஜத் வரிசைப்படி ي* 

 *அரபு வரிசைப்படி ز          அப்ஜத் வரிசைப்படி ك* 

 *அரபு வரிசைப்படி س        அப்ஜத் வரிசைப்படி ل* 

 *அரபு வரிசைப்படி ش        அப்ஜத் வரிசைப்படி م* 

 *அரபு வரிசைப்படி ص      அப்ஜத் வரிசைப்படி ن* 

 *அரபு வரிசைப்படி ض      அப்ஜத் வரிசைப்படி س* 

 *அரபு வரிசைப்படி ط         அப்ஜத் வரிசைப்படி ع* 

 *அரபு வரிசைப்படி ظ         அப்ஜத் வரிசைப்படி ف* 

 *அரபு வரிசைப்படி ع         அப்ஜத் வரிசைப்படி ص* 

 *அரபு வரிசைப்படி غ         அப்ஜத் வரிசைப்படி ق* 

 *அரபு வரிசைப்படி ف       அப்ஜத் வரிசைப்படி ر* 

 *அரபு வரிசைப்படி ق        அப்ஜத் வரிசைப்படி ش* 

 *அரபு வரிசைப்படி ك        அப்ஜத் வரிசைப்படி ت* 

 *அரபு வரிசைப்படி ل         அப்ஜத் வரிசைப்படி ث* 

 *அரபு வரிசைப்படி م          அப்ஜத் வரிசைப்படி خ* 

 *அரபு வரிசைப்படி ن         அப்ஜத் வரிசைப்படி ذ* 

 *அரபு வரிசைப்படி و          அப்ஜத் வரிசைப்படி ض* 

 *அரபு வரிசைப்படி ه           அப்ஜத் வரிசைப்படி ظ* 

✍✍✍அப்ஜத் கணக்கு அரபு மொழி எழுத்தின் வரிசைப்படி அமைக்கப்படவில்லை. மாறாக *ஹிப்ரு மொழி வரிசைப்படியே* அமைக்கப்பட்டுள்ளது என்பதை இதில் இருந்து அறியலாம்✍✍✍.

✍✍✍அரபு மொழியிலும், ஹிப்ரு மொழியிலும் அலிப் முதல் எழுத்தாகவும் பா இரண்டாம் எழுத்தாகவும் உள்ளது.✍✍✍ 

✍✍✍ஆனால் அரபு மொழியில் முன்றாவது எழுத்து தா ஆகும். ஹிப்ரு மொழியில் மூன்றாவது எழுத்து ஜீம் ஆகும்.
மேற்கண்ட அப்ஜத் கணக்கைக் கவனித்தால் மூன்றாவது எழுத்தாக ஜீம், நான்காவது எழுத்தாக தால், ஐந்தாவது எழுத்தாக ஹா இப்படி முழுக்க முழுக்க ஹிப்ரு மொழி வரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்✍✍✍.

✍✍✍யூதர்களின் ஹிப்ரு மொழி வரிசைப்படி இது அமைந்திருப்பதும், மேற்கண்ட ஹிப்ரு மொழியில் வழங்கப்பட்டுள்ள அதே எண்களே அரபு எழுத்துக்களுக்கும் வழங்கி இருப்பதும் இது யூதர்களின் வழிமுறை என்பதற்குப் போதிய சான்றாகும்.✍✍✍

✍✍✍ذ ض ش خ غ ث  ஆகிய எழுத்துக்கள் ஹிப்ரு மொழியில் இல்லாததால் அதற்கு மட்டும் முஸ்லிம் சமுதாய அறிவீனர்கள் எண்கள் அமைத்தனர்.✍✍✍

 *✍✍✍பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் என்பதில்* இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் *மொத்தமாகக் கூட்டினால் 786 வரும்.* *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்* என்பதன் சுருக்கமாகக் கருதி இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.✍✍✍

✍✍✍இஸ்லாமிய அடிப்படையில் இது ஏற்க முடியாததாகும். எண்கள் எழுத்துக்களாக முடியாது. *அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்குப் பதிலாக 238 என்று சொன்னால்* அதை எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.✍✍✍

 *✍✍✍ஒருவ‌ர் 6666 வசனங்களைக் கொண்ட குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதன் கூட்டுத் தொகை எண்ணைப்* பயன்படுத்தினால் அவ‌ர் குர்ஆனை ஓதியவ‌ர் என்று கருதப்பட மாட்டார். *அது போல் 786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவ‌ர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்* சொன்னவராகவும், எழுதியவராகவும் ஆக மாட்டார்✍✍✍.

 *✍✍✍786 என்ற எண் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்* என்பதற்கு மட்டும் தான் வரும் என்று கூற முடியாது. மோசமான அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளுக்கும் கூட இதே எண் வரலாம். ஹரே கிருஷ்னா என்பதை எண்கள் *அடிப்படையில் கூட்டினால் அதன் தொகையும் 786 தான்.* 
அப்துல் கபூர் என்ற பெயருடையவரை *அப்துல் கபூர் என்பதற்குப் பதிலாக 618* என்று அழைத்தால் அதை அப்பெயருடையவ‌ர் விரும்ப மாட்டார். அவ்வாறிருக்க அல்லாஹ்வின் திருப்பெயருக்கு இப்படி எண் குறிப்பது அல்லாஹ்வைக் கேலி செய்வதாகும்✍✍✍.

✍✍✍அவனது திருப்பெயர்களை அப்படியே எழுதுவது தான் உண்மை முஸ்லிமுக்கு அழகாகும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதி அது முஸ்லிமல்லாதவ‌ர்களின் கையில் கிடைத்தால் அதன் புனிதம் கெட்டு விடும் என்றெல்லாம் இதற்குச் சமாதானம் கூறுவது ஏற்க முடியாததாகும்.✍✍✍

👇👇👇ஏனெனில் காஃபிராக இருந்த ஒரு பெண்ணுக்கு ஸுலைமான் (அலை) அவ‌ர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதியுள்ளார்கள்.✍✍✍

 *👉👉👉(பார்க்க 📚📚திருக்குர்ஆன்📚 27.30)👇👇👇*

حدثنا محمد بن مقاتل أبو الحسن أخبرنا عبد الله أخبرنا يونس عن الزهري قال أخبرني عبيد الله بن عبد الله بن عتبة أن ابن عباس أخبره أن أبا سفيان بن حرب أخبره أن هرقل أرسل إليه في نفر من قريش وكانوا تجارا بالشأم فأتوه فذكر الحديث قال ثم دعا بكتاب رسول الله صلى الله عليه وسلم فقرئ فإذا فيه بسم الله الرحمن الرحيم من محمد عبد الله ورسوله إلى هرقل عظيم الروم السلام على من اتبع الهدى أما بعد

✍✍✍நபிகள் நாயகம் (ஸல்) பல நாட்டு மன்னர்களுக்கு எழுதச் செய்த கடிதத்தின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எழுதியுள்ளனர்.✍✍✍

 *👆👆👆பார்க்க : 📚📚நூல் 📚புகாரி 📚 6261👈👈👈* 

✍✍✍நாமும் அது போல் முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எல்லா நேரத்திலும் எழுத வேண்டும்✍✍✍✍.

அல்லாஹூவ மிகவும் அறிந்தவன்

 *ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment