பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, January 5, 2020

ஜனாஸா தொழுகை சட்டங்கள் பாகம் 1

*🍇🍇🍇மீள் பதிவு 🍇 🍇 🍇* 

 *👉 👉 👉 ஜனாஸா தொழுகை 👈👈👈* 

 *📚📚📚ஜானாஸா தொழுகை சட்டங்கள் என்ற நூலில் இருந்து உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇*

 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்👇👇👇👇👇👇👇*

 *👉 👉 👉 ஜனாஸா தொழுகை சட்டங்கள் பாகம் 1👈👈👈* 

 *👉 👉 👉 ஜனாஸா தொழுகை எப்படி தொழுவது 👈👈👈* 

மரணித்தவரின் மறுமை நன்மைக்காக முஸ்லிம்கள் செய்ய வேண்டிய காரியங்களில் ஜனாஸாத் தொழுகை முக்கியமானதாகும்.

 *இறந்தவரின் பாவங்களை மன்னிக்குமாறும் மறுமையில் அவருக்கு சொர்க்கத்தை அளிக்குமாறும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையைக் கற்றுத் தந்துள்ளனர்.* 

ஆனாலும் இறந்தவரை தூக்கிச் செல்வதிலும், அடக்கம் செய்வதிலும் ஈடுபடும் முஸ்லிம்களில் பலர் ஜனாஸாத் தொழுகையின் போது ஒதுங்கி விடுகின்றனர்.
நெருக்கமான உறவினர்கள் கூட ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்காத நிலை உள்ளது. தந்தைக்காகவும், தாய்க்காகவும் நடத்தப்படும் ஜனாஸா தொழுகையில் பெற்ற மகன் கூட பங்கேற்காத அவல நிலையைக் காண்கிறோம்.

ஆண்கள் மட்டுமின்றி *பெண்களும் ஜனாஸா தொழுகை நடத்துவது நபிவழியாக இருந்தும்* எந்தப் பெண்களும் ஜனாஸாத் தொழுகை நடத்துவதில்லை.

 *ஜனாஸாத் தொழுகை யார் நடத்த வேண்டும்? எப்படி நடத்த வேண்டும்?* 

 *யாருக்கு நடத்தக் கூடாது?* 

 *எந்த இடத்தில் வைத்து நடத்த வேண்டும்?* 

அதில் என்ன ஓத வேண்டும்? என்பன போன்ற ஜனாஸாத் தொழுகையின் சட்டங்கள் தெரியாததே இதற்குக் காரணம்.

 *இத்தகையவர்களுக்காக தக்க சான்றுகளின் அடிப்படையில் கையடக்கமான இந்த நூலை வெளியிடுகிறோம்.*

 ஜனாஸா தொழுகை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இந்நூல் போதுமானதாகும் என்று நம்புகிறோம்.

 *ஜனாஸா தொழுகை: கட்டாயக் கடமை:* 


 *ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்துவது ஒவ்வொரு தனி நபர்கள் மீதும் கடமையில்லை. மாறாக சமுதாயக் கடமையாகும்.* 

ஒரு ஊரில் உள்ளவர்களில் யாராவது சிலர் இத்தொழுகையை நடத்திவிட்டால் போதுமானதாகும்.
கடன்பட்டவரின் உடல் கொண்டு வரப்பட்ட போது இவருக்கு நீங்கள் தொழுகை நடத்துங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; மற்றவர்கள் தொழுத இத்தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பங்கேற்கவில்லை.

 ( *புகாரி 2297, 5371)* 

 *அபூ தல்ஹாவின் மகன் இறந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், இறந்தவரின் பெற்றோரும் மட்டுமே தொழுதனர். ஒட்டு மொத்த சமுதாயமும் தொழவில்லை.*

 *(ஹாகிம் 1/519)* 

இப்படி ஏராளமான சான்றுகள் உள்ளன.
தொழுகை நடத்தத் தகுதியானவர்கள்:
ஒருவர் இறந்து விட்டால் அவரது வாரிசுகளே அவருக்குத் தொழுகை நடத்த உரிமை படைத்துள்ளனர். அவர்களாக விட்டுக் கொடுத்தால் மற்றவர்கள் தொழுகை நடத்தலாம். நான் தான் தொழுகை நடத்துவேன் என்று வாரிசுகள் உரிமை கோரினால் அதை யாரும் மறுக்க முடியாது.

' *எந்த மனிதரின் குடும்பத்தினர் விஷயத்திலும், அவரது அதிகாரத்திலும் அவருக்கு நீ இமாமாக - தலைவனாக ஆகாதே!' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.* 

 *அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் (ரலி) நூல்: முஸ்லிம் 1079, 1078* 

நபிகள் நாயகத்தின் இந்தப் பொதுவான அறிவுரையில் திருமணம் நடத்தி வைத்தல், ஜனாஸா தொழுகை நடத்துதல் உள்ளிட்ட அனைத்துமே அடங்கும் என்பதால் இறந்தவரின் குடும்பத்தினரே ஜனாஸா தொழுவிக்க உரிமை படைத்தவர்கள் என்பதை அறியலாம்.

 *ஜனாஸாவை முன்னால் வைத்தல்:* 

 *ஜனாஸா தொழுகை நடத்தும் போது இறந்தவரின் உடலை முன்னால் வைக்க வேண்டும். 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தொழும் போது அவர்களின் எதிரில் குறுக்கு வசமாக ஜனாஸாவை வைப்பது போல் நான் படுத்துக் கிடப்பேன்' என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.* 

 *நூல்: புகாரி 383* 

 *இமாம் நிற்க வேண்டிய இடம்:* 

இறந்தவர் ஆணாக இருந்தால் உடலை முன்னால் குறுக்கு வசமாக வைத்து இறந்தவரின் தலைக்கு நேராக இமாம் நிற்க வேண்டும்.
இறந்தவர் பெண்ணாக இருந்தால் அவரது வயிற்றுக்கு நேராக இமாம் நிற்க வேண்டும்.

 *ஒரு பெண் வயிற்றுப் போக்கில் இறந்து விட்டார். அவருக்குத் தொழுகை நடத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள்.* 

 *_அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)நூல்: புகாரி 332, 1331, 1332_* 

ஒரு ஆண் ஜனாஸாவுக்கு நடத்தப்பட்ட தொழுகையில் அனஸ் (ரலி) அவர்களுடன் நான் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் ஜனாஸாவின் தலைக்கு நேராக நின்றார்கள். பின்னர் குரைஷ் குலத்துப் பெண்ணின் ஜனாஸாவைக் கொண்டு வந்தனர். 'அபூ ஹம்ஸாவே! நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று மக்கள் கேட்டனர். அப்போது கட்டிலின் மையப் பகுதிக்கு நேராக நின்றார்கள். 'நபிகள் நாயகம் அவர்கள் பெண் ஜனாஸாவுக்கு நீங்கள் நின்ற இடத்திலும், ஆண் ஜனாஸாவிற்கு நீங்கள் நின்ற இடத்திலும் நின்றதைப் பார்த்தீர்களா?' என்று அலா பின் ஸியாத் கேட்டார். அதற்கு அனஸ் அவர்கள் ஆம் என்றனர். தொழுகை முடிந்ததும் 'இதைக் கவனத்தில் வையுங்கள்' என்றார்கள்.

 *நூல்கள்:திர்மிதீ955,அபூ தாவூத் 2779, இப்னுமாஜா1483, அஹ்மத் 11735, 12640*
 
 *இமாம் எந்த இடத்தில் நிற்கிறார் என்பதை வைத்து இறந்தவர் ஆணா பெண்ணா என்பதை மக்கள் அறிந்து கொண்டு, அதற்கேற்ப துஆச் செய்யும் வாய்ப்பு இதனால் மக்களுக்குக் கிடைக்கிறது என்பது மேலதிகமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.* 

 *உளூ அவசியம்:*

ஜனாஸா தொழுகையில் ருகூவு, ஸஜ்தா இல்லாததால் இதற்கு உளூ அவசியம் இல்லை என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். இதற்கு நபிவழியில் ஆதாரம் இல்லை.

' *தொழுகையின் திறவு கோல் தூய்மை (உளூ) ஆகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர் கூறுவது) அதனை முடிப்பது தஸ்லீம் (ஸலாம் கொடுப்பது)' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.* 

 *அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்கள்: அபூ தாவூத் 56, 523 திர்மிதி 3, 221, இப்னு மாஜா 271, அஹ்மத் 957, 1019* 

ஜனாஸா தொழுகையை தக்பீரில் துவக்கி ஸலாமில் முடிக்கிறோம். எனவே இதுவும் தொழுகை தான். இதற்கும் உளுச் செய்வது அவசியமாகும்.

 *கிப்லாவை முன்னோக்குதல்:* 

 **மற்ற தொழுகைகளை எவ்வாறு கிப்லாவை நோக்கித் தொழவேண்டுமோ அது போல்ஜனாஸாத் தொழுகையையும்* **கிப்லாவை நோக்கித் தான் தொழ வேண்டும்.*  *நீ தொழுகைக்கு நின்றால் முழுமையாக உளூச்* *செய்துவிட்டு கிப்லாவை* *நோக்கு!' என்று* *நபிகள்*நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.** 

 *அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6251, 6667* 

 *தக்பீர் கூறுதல்:* 

ஜனாஸா தொழுகையில் ருகூவு, ஸஜ்தா போன்றவை கிடையாது. நின்ற நிலையில் சில பிரார்த்தனைகளைச் செய்வது தான் ஜனாஸா தொழுகையாகும்.

 *அதில் முக்கியமானது அல்லாஹு அக்பர்' என்று கூறி மற்ற தொழுகைளைத் துவக்குவது போலவே அல்லாஹு அக்பர்' எனக் கூறி துவக்க வேண்டும்.* 

'தொழுகையின் திறவு கோல் தூய்மை (உளூ) ஆகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர் கூறுவது) அதனை முடிப்பது தஸ்லீம் (ஸலாம் கொடுப்பது)' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்கள்: அபூ தாவூத் 56, 523 திர்மிதி 3, 221,இப்னு மாஜா 271, அஹ்மத் 957, 1019* 

 *நான்கு தடவை தக்பீர் கூறுதல்* 

நஜ்ஜாஷி மன்னருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்திய போது அவருக்காக நான்கு தடவை தக்பீர் கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1245, 1318, 1319, 1328, 1334, 1333, 3881, 3879* 

 *ஐந்து தடவை தக்பீர் கூறுதல்:* 

 *இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 2*

No comments:

Post a Comment