பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, January 18, 2020

நன்மைகளை - 1

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

    *🍃நன்மைகளை*
               *நாசமாக்கும்*
                     *நச்சுப் பண்புகள்!🍃*

            *✍🏻....தொடர் { 01 }*

*🏮🍂அகிலத்திலே அதிகமான மக்கள் அற்ப வாழ்விற்காக தங்களை அடகு வைத்து அசிங்கமான, அர்த்தமற்ற காரியங்களிலே அடைப்பட்டு இருக்கின்றார்கள்.* ஆனால் நாம் அழிவில்லா மறுமை வாழ்விற்காக நம்மை அர்ப்பணித்து இழிவான செயல்களை விட்டும் விலகி இனிய காரியங்களிலே ஈடுபட்டிக்கொண்டிருக்கிறோம். *எந்தளவிற்கெனில் மார்க்க நெறிமுறைக்கு கட்டுப்படுவது தான் முக்கியம் என்பதால், தடு மாறிக் கொண்டிருக்கின்ற ஊரையும் உறவினர்களையும் பகைத்துக் கொண்டு பல கடமையான சுன்னத்தான மற்றும் அனுமதிக்கப்பட்ட காரியங்களை செய்து கொண்டிருக்கிறோம்.*

*🏮🍂அதே நேரத்தில் நமது அமல்களெல்லாம் அல்லாஹ்விடத்திலே அங்கீகரிக்கப்பட்டு ஆசைப்பட்ட சொர்க்கத்தை அடைய வேண்டுமெனில் சில தன்மைகளை நம்மிடமிருந்து நாம் வேறோடு களைந்தெரிய வேண்டும். அந்த பண்புகளின் அடையாளங்கள் தென்படுகின்ற நிலையிலே காலத்தை ஒதுக்கி வியர்வையை சிந்தி சிறந்த காரியங்களை செய்திருந்தாலும் அவை அல்லாஹ்விடத்திலே எந்த மதிப்பும் இல்லாததாகிவிடும்.*

*🏮🍂வழங்கப்பட்ட அருட்கொடைகளை வாரி இறைத்திருந்தாலும் அக்காரியங்கள் அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படாமல் வீணாகிவிடும். ஆகவே, நமது அமல்களை பாழ்படுத்தக்கூடிய அத்தகைய நச்சுப்பண்புகளை பற்றி இந்த தொடரில் காண்போம்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

      * ☄இணைவைத்தல் ☄*

*🏮🍂நாள்தோரும் இறை நிராகரிப்பாளர்கள் நாடேபோற்றுகின்ற வகையிலே நற்காரியங்களை செய்தாலும் சேவை செய்வதையே தங்களது கொள்கையாக கொண்டிருந்தாலும் மற்றவர்களின் வாழ்விலே மறுமலர்ச்சி ஏற்படுத்துவதையே தங்களது இலட்சியமாகக் கொண்டிருந்தாலும் அல்லாஹ் அவர்களு டைய அனைத்து அமல்கலையும் அழித்துவிடுவான் என்பதை அனைத்து முஸ்லிம்களும் அறிந்துள்ளனர்.*

*🏮🍂அந்த இறைநிராகரிப்பாளர்களிடம் நிறைந்துள்ளதைப் போன்றே பல வழி கேடான செயல்கள் முஸ்லிம்களிடத்திலே மலிந்து காணப்படுகின்றன.* காஃபிர் கள் தங்களது கடவுள்களை மனிதபடைப்பின் தோற்றத்தில் சிலைகளை வடிப் பதை போன்று *பல பெயர் தாங்கி முஸ்லிம்கள், படைப்பினங்களான மனிதர்களை அவ்லியாக்கள், மகான்கள், ஷேகுமார்கள் என்று துதிபாடி அல்லாஹ் வுடைய அந்தஸ்துக்கு உயர்த்தி தர்கா வழிபாட்டிலே வீழ்ந்து கிடக்கின்றனர். தாயத்து, தகடு, ஜோதிடம், குறிபார்த்தல், நல்லநேரம், கெட்டநேரம் போன்ற மூடநம்பிக்கையிலே முழ்கி இணைவைப்பிலே ஊரிப்போய் கிடக்கின்றனர்.*

*🏮🍂முஃமின்களாக நோன்பு, தொழுகை, ஹஜ் மற்றும் பல வழிபாடுகளை புரிந்தாலும் அவர்களது வாழ்விலே இணைவைப்பு என்பது சாக்கடை நீரைப் போன்று இரண்டறக்கலந்து காணப்படுகிறது. இந்நிலையில் இவர்களின் நற்காரியங்கள் ஏற்று கொள்ளபட்டு அதற்குரிய பிரதிபலனை பெற்று கொள்வார்களா?* மாறாக நஷ்டவாளிகளாக மாறிவிடுவார்களா? என்பதை அல்லாஹ் திருமறையிலே கூறுகிறான்.

*مَا كَانَ لِلْمُشْرِكِينَ أَن يَعْمُرُوا مَسَاجِدَ اللَّهِ شَاهِدِينَ عَلَىٰ أَنفُسِهِم بِالْكُفْرِ ۚ أُولَٰئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ وَفِي النَّارِ هُمْ خَالِدُونَ*

_*🍃இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.*_

*📖 (அல்குர்ஆன் 9:17) 📖*

*🏮🍂இணை வைப்பாளர்கள், இமயமலையளவிற்கு நல்லமல்களை செய்திருந்தாலும் அல்லாஹ் அவற்றை அற்பமாகக் கருதி அழித்துவிடுவான். இறைப்பணியை பல்வேறு பிரச்சனைகளுக்கிடையே மக்கள் மன்றத்திலே எடுத்து வைத்த நபிமார்களை கூட இணைவைத்தால் உங்களது அனைத்து அமல்களும் நாசமாகிவிடும் என அல்லாஹ் எச்சரித்துள்ளான்.* இதை திருமறையிலே கூறுகிறான்

*وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ بَلِ اللَّهَ فَاعْبُدْ وَكُن مِّنَ الشَّاكِرِينَ*

_*🍃‘நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும் நீர் நஷ்ட மடைந்தவராவீர் மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!’ என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.*_

*📖(அல்குர்ஆன் 39: 65 66)📖*

*🏮🍂ஆகவே, நமது அமல்கள் அங்கீகரிக்கப்பட்டு இன்பமான வாழ்வினை பெற முதலில் இணைவைப்பின் சாயல் கடுகளவு கூட நமது வாழ்விலே பட்டு விடாமல் கவனமாக வாழ வேண்டும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment