பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, January 20, 2020

நன்மைகளை - 2

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

    *🍃நன்மைகளை*
               *நாசமாக்கும்*
                     *நச்சுப் பண்புகள்!🍃*

              *✍🏻....தொடர் { 02 }*

          *☄ பித்அத் ☄*

*🏮🍂அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பழுக்கற்ற விதத்திலே வாழ்ந்து வியப்பிற்குரிய வாழ்வியல் திட்டத்தை நம்மிடத்திலே சமர்பித்துச் சென்றுள்ளார்கள். அவர்களுடைய வாழ்வின் அடிப்படையில் நமது அமல்களை அமைத்துக்கொண்டால் தான் மறுமையிலே அவை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அருகதையானதாக இருக்கும்.* இல்லையெனில் அல்லாஹ்விடத்திலே அவை மதிப்பற்றதாக கருதப்பட்டு தூக்கியெறியப்பட்டுவிடும்.

_இதை நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:_

*عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ*

_*🍃நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப் பட்டதாகும்.*_

*🎙அறிவிப்பவர்:*
                *ஆயிஷா (ரலி),*

       *📚 நூல்: புகாரி (3697) 📚*


3243 *قَالَ أَخْبَرَتْنِي عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ* رواه مسلم

_*🍃நம்முடைய கட்டளையின்றி எவரேனும் அமலைச் செய்தால் அது மறுக்கப் பட்டதாகிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
                *ஆயிஷா (ரலி),*

*📚நூல்: முஸ்லிம் (3243)📚*

*🏮🍂அநேகமான முஸ்லிம்கள் அண்ணலாரின் வழிமுறையை சரியான முறையில் அறியாமல் அவருக்கு நேர்மாற்றமாக பல வணக்கவழிபாடுகளை செய்வதோடு அவர்களுடைய சொல் செயல் அங்கீகாரமின்றி பல காரியங்களை நன்மை கிடைக்குமெனக் கருதி செய்து கொண்டிருக்கிறார்கள்.*

*🏮🍂உதாரணமாக மவ்லூது மீலாது விழா, பாத்திஹா, ஹுஸைன் (ரலி) நோன்பு, கந்தூரி விழா மற்றும் பஞ்சா எடுத்தல் இதுபோன்ற காரியங்களை மார்க்கத்தின் பெயரால் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மறுமையிலே இந்த நூதனமான காரியங்களுக்கு நன்மை கிடைக்காததோடு இவை நரகத்திலே தள்ளக் கூடிய வழிகேடுகள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.*

*وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ* رواه النسائي

_*🍃செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மதின் வழியாகும். காரியங்களில் மிகக் கெட்டது புதிதாக ஏற்படுத்தப்பட்டதாகும். புதிதாக ஏற்படுத்தப்பட்டவை அனைத்தும் வழிகேடாகும் வழிகேடு அனைத்தும் நரகத்திற்குரியவையாகும்.*_

*🎙அறிவிப்பவர்:*
                  *ஜாபிர் (ரலி),*

   *📚 நூல்: நஸயீ (1560) 📚*

*🏮🍂எனவே, நமது அமல்கள் மகிழ்ச்சியான சுவர்க்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடியதாக இருக்க வேண்டுமெனில் அவற்றை நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி அமைத்துக் கொள்ளவேண்டும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment