பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, January 19, 2020

ஜின் இனம் என்றால் என்ன❓🌎🌎*

*🔴🔴மீள் பதிவு🔵🔵* 

*🌐🌐ஜின் இனம் என்றால் என்ன❓🌎🌎* 

     இறைவனுடைய படைப்பில் ஜின்கள் என்று ஒரு வகையினர் இருப்பதாக திருக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள். மனிதர்களைப் போன்றே இவர்களிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கைக்கொள்பவர்கள் அவனை மறுப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களுடைய செயல்களுக்கு ஏற்ப மறுமை நாளில் இவர்களில் நல்லவர்கள் சொர்க்கத்திற்கும் தீயவர்கள் நரகத்திற்கும் செல்வார்கள். ஆனால் இவர்களை மனிதர்கள் கண்ணால் பார்க்க முடியாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும் (ஷைத்தானும்), அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

 *திருக்குர்ஆன் (7 : 27)* 

ஜின் இனத்தையும் ஜின் இனத்தைச் சார்ந்த ஷைத்தானையும் மனிதன் பார்க்க முடியாது என்று தெளிவாக திருக்குர்ஆன் கூறுகிறது. இதற்கு மாற்றமாக ஜின்களை பார்க்க முடியும் என்று வாதிடுபவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக்காட்டுகிறார்கள். அபூஹ‚ரைரா (ர) அவர்கள் ஷைத்தானைப் பார்த்துள்ளார்கள் என்பதே அவர்களின் வாதம்.

ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே, நான் அவனைப் பிடித்துக் கொண்டேன்; ”உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்” என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்……..) இறுதியில் அவன், ”நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்” என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்கüடம் சொன்ன போது,) ”அவன் பொய்யனாயிருந்தும், உங்கüடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்” என்று கூறினார்கள்.

 *அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (3275)* 

அபூஹ‚ரைரா (ர) அவர்களிடம் வந்தவன் ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த ஹதீஸின் சரியானப் பொருளை நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால் இதுபோன்று அமைந்த மற்ற ஹதீஸ்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத்தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில் அவன் தான் ஷைத்தான்.

 *அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ர) நூல் : புகாரி (3274)* 

(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘அல்அர்ஜ்’ எனுமிடத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று” என்று கூறினார்கள்.

 *அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ர)* 
 *நூல் : முஸ்ம் (4548)* 

தொழுகையின் குறுக்கே செல்பவரையும் கவிதைபாடுபவரையும் நபி (ஸல்) அவர்கள் ஷைத்தான் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவ்விருவரிடமும் ஷைத்தானின் கெட்ட செயல் இருப்பதினால் தான் அவ்விருவரையுமே ஷைத்தான் என்று கூறியுள்ளார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் மனிதர்கள் தான்.
இந்த அடிப்படையில் தான் அபூஹ‚ரைரா (ர) அவர்களிடம் வந்தவன் ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அபூஹ‚ரைரா (ர) அவர்கள் மனிதனைத் தான் பார்த்தார்கள். திருட்டு என்ற தீய குணம் அவனிடம் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அவனை ஷைத்தானுக்கு நிகராக ஒப்பிட்டார்கள். நாம் ஒருவரை திட்டும் போது ஷைத்தானே என்று சொல்வதும் இது போன்று தான். இவ்விளக்கம் திருக்குர்ஆனுக்கு முரண் இல்லாததாகவும் ஹதீஸ்களிருந்து பெறப்பட்டதாகவும் இருப்பதால் இதுவே சரியாகும்.

ஒரு பேச்சிற்கு அபூஹ‚ரைரா (ர) அவர்கள் ஷைத்தானைத் தான் பார்த்தார்கள் என்று ஒப்புக்கொண்டாலும் இவர்களின் வாதத்தை ஏற்க முடியாது. ஏனென்றால் வந்தவன் ஒரு மனிதன் என்றே அபூஹ‚ரைரா (ர) அவர்கள் கருதினார்கள். நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியப் பிறகு அவன் ஷைத்தான் என்ற விஷயம் அபூஹ‚ரைரா (ர) அவர்களுக்குத் தெரியவந்தது.

இன்றைக்கு ஷைத்தான் மனித வடிவில் வருவானா? என்பது ஒருபுறமிருக்க ஒரு வேளை வந்தால் அவன் ஷைத்தான் தான் என்பதை தெளிவுபடுத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நம்மிடம் உயிருடன் இல்லை. எனவே அபூஹ‚ரைரா (ர) அறிவிக்கும் ஹதீஸை வைத்துக்கொண்டு ஜின்களை பார்க்கலாம். கண்டுபிடிக்கலாம் என்று வாதிடுவது தவறாகும்.

மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் தன்னால் இந்த ஜின்களை வசப்படுத்த முடியும் என்று கூறி மக்களிடமிருந்து பணத்தை பிடுங்கும் திருட்டுத் தொழிலை அரங்கேற்றி வருகிறார்கள். ஜின்னை விரட்டுகிறேன் என்று சொல்க்கொண்டு அந்நியப்பெண்ணின் கட்டைவிரலை பிடித்துக்கொண்டு ஹராமான செயலை செய்துவருகிறார்கள். குர்ஆன் ஹதீஸைப் பேசக்கூடியவர்களே இந்த மோசச் செயலை செய்துவருவது தான் வேதனைக்குரிய விஷயமாகும். இவர்களின் மோச வலையில் அறியாத பாமர மக்கள் விழுந்துவிடுகிறார்கள்.

இன்றைக்கு எவராலும் ஜின்களை வசப்படுத்த முடியாது என்று குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது. இதைத் தெளிவாக ஆதாரத்துடன் விளக்கிக் கூறுவதே இந்த பிரசுரத்தின் பிரதான நோக்கம்.

ஜின் என்ற படைப்பை சுலைமான் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் வசப்படுத்திக்கொடுத்திருந்தான். இதை சுலைமான் நபிக்குக் கொடுக்கப்பட்ட சிறப்புத் தகுதியாக அல்லாஹ் கூறுகிறான். இதிருந்து ஜின்களை மற்றவர்கள் எவரும் வசப்படுத்த முடியாது என்பதை அறியலாம்.
ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர்.

 *அல்குர்ஆன் (34 : 12)* 

ஸ‚லைமான் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் வசப்படுத்திக்கொடுத்த விஷயங்கள் அவர்களுக்கு மாத்திரம் பிரத்யேகமானது என்பதை ஸ‚லைமான் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனையிருந்தும் விளங்கலாம்.
”என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல்” என ஸுலைமான் கூறினார்.

 *அல்குர்ஆன் (38 : 34)* 

நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஆராயும் போதும் மனிதனால் ஜின்களை வசப்படுத்த முடியாது என்பதை தெளிவாக அறிந்துகொள்ள இயலும்.
(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள், ”நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது’. பிறகு ”அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும் வரை இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்üவாசலின் தூண்கüல் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நினைத்தேன். அப்போது ”இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காதே ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக” (38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது” என்று கூறினார்கள்.

 *அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரரி)* 
 *நூல் : புகாரி (461) (1210) (3423) (4808)* 

மனிதனால் ஜின்களை பார்க்க முடியாது என்றாலும் நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக இருந்ததால் ஜின்களை பார்க்கும் வாய்ப்பை அல்லாஹ் அவர்களுக்கு ஏற்படுத்தினான். இது அவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட சிறப்பம்சமாகும். இந்த அடிப்படையில் தான் நபி (ஸல்) அவர்களின் தொழுகைக்கு ஜின் ஒன்று இடஞ்சல் கொடுத்த போது அந்த ஜின்னை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். இறைவன் கொடுத்த ஆற்றன் அடிப்படையில் இடஞ்சல் கொடுத்த ஜின்னை பிடித்துக்கொண்டார்கள்.
மக்கள் அனைவரும் அந்த ஜின்னை பார்க்கும் வகையில் அதை கட்டிவைக்க நபி (ஸல்) அவர்கள் நினைத்தார்கள். ஆனால் இவ்வாறு செய்வதற்கு தன்னால் இயலாது என்பதை ஸ‚லைமான் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனையில் தெரிந்துகொண்டார்கள். எனவே ஜின் கொடுத்த இடஞ்சலை மட்டும் நீக்கிக்கொண்டு அதை வசப்படுத்தும் செயல் ஈடுபடாமல் ஜின்னை விட்டுவிட்டார்கள்.

நம்மையெல்லாம் விட பன்மடங்கு உயர்ந்த நபி (ஸல்) அவர்களாலேயே ஜின்னை வசப்படுத்த இயலவில்லை என்கிறபோது வேறு எவராலும் நிச்சயமாக ஜின்னை வசப்படுத்த முடியவே முடியாது.

மக்களே இனியும் யாராவது ஜின்களை தான் வசப்படுத்தி வைத்திருப்பதாக நம் காதில் பூசுற்ற நினைத்தால் ஏமாற வேண்டாம். ஒரு நாட்டிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்ல விமானத்தைப் பயன்படுத்தாமல் ஜின்களை பயன்படுத்தி இதை செய்யச் சொல்லுங்கள். உங்கள் கையில் இருக்கும் பொருளை ஜின்களை பயன்படுத்தி கண்ணுக்கு முன்னால் எடுத்து வரச் சொல்லுங்கள். இப்படியெல்லாம் ஜின்கள் செய்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது.
”பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?” என்று (ஸுலைமான்) கேட்டார்.

”உங்கள் இடத்திருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வமையுள்ளவன்” என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது.

கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது. தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் ”நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா?” என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ என் இறைவன் தேவையற்றவன்; கண்ணியமிக்கவன்.

 *அல்குர்ஆன் (27 : 38)* 

மேலும் ஜின் என்ற அத்தியாயத்தை 40 நாட்களுக்கு தொடர்ந்து ஓதிக்கொண்டே வந்தால் ஜின்களை வசப்படுத்தலாம் என்று சில பொய்யர்கள் கூறிவருகிறார்கள்.
ஜின் என்று ஒரு அத்தியாயம் இருப்பது போல் யானை எறும்பு தேனீ சிலந்தி மாடு மனிதன் பெண்கள் என்றெல்லாம் குர்ஆனில் அத்தியாயங்கள் உள்ளன. இந்த அத்தியாயங்களை ஓதினால் இவற்றையெல்லாம் வசப்படுத்த முடியுமா?

ஜின் என்றப் படைப்பு மனிதனைப் போன்று அறிவு கொண்டதும் மனிதனை விட பலமிக்கதுமாகும். பகுத்தறிவும் பலமும் கொண்ட ஒரு இனத்தை அதை விட பலத்தில் குறைந்தவர்கள் எப்படி அடிக்க முடியும்?

எனவே நம்மிடம் ஒருவேளைச் சோற்றுக்கும் ஒண்ணேகால் ரூபாய்க்கும் கையேந்தி நிற்பவர்களிடம் ஜின்கள் வசப்படுத்தப்பட்டிருப்பதாக நம்பி நம் ஈமானையும் அறிவையும் பொருளையும் இழந்துவிட வேண்டாம்.

 நம் அனைவருக்கும் நேர்வழிகாட்ட அல்லாஹ் போதுமானவன்

 *ஜஸாகல்லாஹ் ஹைரன்* .

No comments:

Post a Comment