பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 9, 2020

*📚📚📚இரண்டாவது ஜமாஅத் கூடுமா ❓❓❓

*🌹🌹🌹மீள் பதிவு🏓🏓🏓* 

*📚📚📚இரண்டாவது ஜமாஅத் கூடுமா ❓❓❓ஒர் இஸ்லாமிய பார்வை📚📚📚* 

 *👉👉👉இரண்டாம் ஜமாஅத்துக்கு ஆதாரம் உண்டா❓❓❓👇👇👇*

 *👉👉👉நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொன்மொழியில் இருந்து ஒரு பார்வை👇👇👇👇👇* 

✍✍✍ஒரு *தொழுகையின் ஜமாஅத் முடிந்த பின்னர் இரண்டாவது ஜமாஅத் தொழுவதற்கு ஆதாரம் இல்லை என்று சிலர் கூறுகின்றனர்.* *இரண்டாவது ஜமாஅத்திற்கு ஆதாரம் உள்ளதா❓❓❓👇👇👇* 

 *👆அவர்கள் கூறுவது தவறாகும். இதற்கு ஆதாரம் உள்ளது.👇👇👇* 

 *👉நபிகள் நாயகம் ( ஸல்) அவர்களின் பொன்மொழிகள்👇👇👇👇👇* 

سنن الترمذي

 *220* – حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ سُلَيْمَانَ النَّاجِيِّ، عَنْ أَبِي المُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: جَاءَ رَجُلٌ وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَيُّكُمْ يَتَّجِرُ عَلَى هَذَا؟»،  فَقَامَ رَجُلٌ فَصَلَّى مَعَهُ


 *✍✍✍நபிகள் நாயகம் (ஸல்)* அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது *நபிகள் நாயகம் (ஸல்)* அவர்கள், "(இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக் கூடியவர் *யார்❓''* என்று கேட்டார்கள். ஒரு மனிதர் முன் வந்தார். வந்த மனிதர் அவருடன் சேர்ந்து தொழுதார்.✍✍✍✍

 *👆👆👆அறிவிப்பவர் : அபூஸயீத் (ரலி)* 
 *பார்க்க 📚நூல் :      📚திர்மிதி 📚220👈👈👈* 


مسند أحمد بن حنبل

 *11426* – حدثنا عبد الله حدثني أبي ثنا محمد بن جعفر ثنا سعيد عن سليمان عن أبي المتوكل عن أبي سعيد الخدري : ان رجلا دخل المسجد وقد صلى رسول الله صلى الله عليه و سلم بأصحابه فقال رسول الله صلى الله عليه و سلم من يتصدق على هذا فيصلي معه فقام رجل من القوم فصلى معه

تعليق شعيب الأرنؤوط : حديث صحيح


 *✍✍✍நபிகள் நாயகம் (ஸல்)* அவர்கள் தமது *தோழர்களுக்குத் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார்.* அப்போது *நபிகள் நாயகம் (ஸல்)* அவர்கள், " *இவருக்கு தர்மம் செய்யக் கூடியவர் யார்❓ அவர் இவரோடு சேர்ந்து தொழட்டும்'' என்று கூறினார்கள்* . அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.✍✍✍

 *👆👆👆அறிவிப்பவர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)* 

 *👆👆👆பார்க்க       📚நூல் : 📚அஹ்மத்📚 11456👈👈👈* 

 *✍✍✍ஜமாஅத் தொழுகை முடிந்த பின்னர் வந்த மனிதரை தனியாகத் தொழவிடாமல்,* *ஏற்கனவே தொழுத ஒருவரை அவருடன் சேர்ந்து ஜமாஅத்தாக தொழுமாறு நபிகள்* *நாயகம் (ஸல்)* அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். அவ்வாறு தொழுவது தனியாகத் தொழுவதை விட நன்மையானது எனவும் குறிப்பிடுகின்றார்கள். " *இவருக்கு லாபம் அளிக்கக் கூடியவர்* *யார்❓''* *என்ற வாசகத்திலிருந்து இதை அறியலாம்.✍✍✍* 

 *✍✍✍எனவே* *முதல் ஜமாஅத் முடிந்த பின்னர் தாமதமாக வருபவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஜமாஅத்தாகத் தொழுவதே சிறந்தது.* *ஒருவர்* *மட்டும் வந்தால், ஏற்கனவே ஜமாஅத்தில் தொழுதவருடன் சேர்ந்தாவது* *ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது.✍✍✍* 

 *✍✍✍தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு நன்மை உடையது என்று பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன.✍✍✍* 

அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்

 *ஜஸாகல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment