பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 16, 2020

மாற்று மத பண்டிகைக்கு வாழ்த்துக்கள் கூறலாமா❓

*🔥🔥மீள் பதிவு🔥🔥* 

*👩‍👩‍👦👩‍👩‍👦மாற்று மத பண்டிகைக்கு வாழ்த்துக்கள் கூறலாமா❓👨‍👨‍👧👨‍👨‍👧* 

 *மாற்றுமத நண்பர்களுக்கு புது வருடம், கிருஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் மற்றும் பிறந்த நாளின் போது வாழ்த்து  சொல்லலாமா? வாழ்த்து அட்டைகள் அனுப்பலாமா?*

 
 **மாற்று மதத்தவர்களுக்கு கிருஸ்துமஸ் போன்ற அவர்களது* *பெருநாட்களின் போது வாழ்த்துச் சொல்வது கூடாது என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட* *ஒன்றாகும். இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் தமது தமது ‘அஹ்காமு* *அஹ்லித்திம்மா’ என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார். ‘மாற்று மதத்தினரின் விசேஷ நிகழ்ச்சிகளின் போது* *அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது ஹராம் என்பது ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட* *ஒன்றாகும். வாழ்த்துச் சொல்லக் கூடியவர் ‘குப்ர்’ என்னும் இறைநிராகரிப்பு அளவுக்குச்* *செல்லாவிட்டாலும் அவர் ஹராமைச் செய்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. சிலுவையை* *வணங்குவதற்காக ஒருவரை வாழ்த்துவது போன்றே இது. ஏன் அதைவிட பாவம்* *கூடியது என்று கூடச் சொல்லலாம். யார் ஓர் அடியானை அவன் செய்த பாவத்திற்காக அல்லது பித்அத்திற்காக* *அல்லது குப்ருக்காக வாழ்த்துகிறாரோ அவர்* 
 *அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாகிறார்* 

இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவது போல் வாழ்த்துக் கூறுவது ஹராம் என்று சொல்லக் காரணம், வாழ்த்துபவர் 
வாழ்த்தப்படுபவரின் இஸ்லாத்திற்கு புறம்பான காரியங்களை அங்கீகரிக்கின்றார் என்பதனலாகும். 

 *வாழ்த்தப்படுபவர் நம்முடன் தொழில் புரியக்கூடியவராகவோ, கல்லூரித் தோழனாகவோ அல்லது பக்கத்து வீட்டுக்காரனாகவோ  இருப்பினும் சரியே!* 

மாற்று மதத்தவர்கள் அவர்களுடைய பெருநாள் தினங்களில் நமக்கு வாழ்த்துச் சொன்னால் அவர்களுக்கு நாம் பதில் சொல்லவும் 
கூடாது. ஏனெனில் அது நமது பெருநாள் அல்ல. தனை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதுமில்லை. 

 *அவ்வாறே அத்தினங்களில் அவர்களது அழைப்புகளுக்கு பதில் சொல்லவும் கூடாது* . 

மேலும் சில முஸ்லிம்கள் அத்தினங்களை தமது பெருநாள் போன்று கொண்டாடுகின்ற நிலையும் காணப்படுகிறது, அதுவும் 
ஹராமாகும். 

‘ *எவர் பிறசமயத்தவர்களுக்கு ஒப்பாகிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.* (அஹ்மது) 

அஷ்ஷெய்க் முஹம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். ‘மாற்று மதத்தவர்களின் விசேஷ தினங்களில் அவர்களை வாழ்த்துவது அவர்களது வாழ்த்துக்குப் பதில் சொல்வது, அத்தினங்களில் அவர்களது அழைப்பை ஏற்று அவர்களது விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளல் அல்லது அத்தினங்களை கொண்டாடுவது அனைத்தும் கூடாது. அவ்வாறு செய்பவர் பாவியாவார். இவற்றை ஒருவர் முகஸ்துதிக்காகவோ அன்பினாலோ அல்லது வெட்கத்தினாலோ செய்தாலும் அவர் பாவியாவார். ஏனெனில் அல்லாஹ்வுடைய தீனில் காம்ப்ரமைஸ் என்னும் (சமரசத்திற்கு) இடம் இல்லை.


 *இவற்றையெல்லாம் படித்தபிறகு ஈமான் (நம்பிக்கைக்) கொண்ட இஸ்லாமியர் ஒருவர் பிற மதத்தினரின் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்வதே அவர்களின் மதக் கொள்கைக்கு எதிரானதாகும் என்று விளங்கியது, இந்த நிலையில் சிலைவழிபாட்டையும், இஸ்லாம் அடிப்படை மீது நம்பிக்கையற்றவர்களின் வாழ்த்துகளையும் அவர்கள் வரவேற்பதில்லை என்று விளங்கியது. அதிலிருந்தே பொதுவாக அனைத்து இஸ்லாமியர்களுக்கு நல்வாழ்த்து என்னும் சீசன் வாசகங்களை பதிவுகளில் வாழ்த்தாக எழுதுவதைத் தவிர்த்து நெருங்கிய மற்றும் நட்பைப் பெரிதாகவும், வாழ்த்தை அன்புடன் ஏற்றுக் கொள்ளும் நண்பர்களுக்கு மட்டுமே சொல்வது வழக்கமாகியுள்ளது, இப்பதிவின் மூலம் மாற்று மத அன்பர்களின் நல்வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளும் இஸ்லாமிய நண்பர்களுக்கு நோன்புத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்கள் நம் வாழ்த்துகளை புறந்தள்ளும் போது பொதுவாகச் சொல்வதும் தேவையற்றதாகவும், தயக்கத்திற்குரியதாகவும் உணர நேரிடுகிறது* . 

மிகச் சிலரின் கருத்துகளை இஸ்லாமியக் கருத்தாக வைக்கலாமா ? சரிதான், ஆனால் அந்த ஒருசிலரின் கருத்துக்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட மற்ற இஸ்லாமியக் கருத்துகளை நான் அறிந்ததில்லை.


 *யார் மாற்று மத கலாச்சாரத்திற்கு ஒப்பாகிறாரோ அவர் நம்மைச்சார்ந்தவரல்ல என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி) நூல் : அபூதாவூது (3515)* 


 அல்லாஹ் மிக அறிந்தவன்.

 *ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment