பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, January 31, 2020

ஜின்களும் - 48

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ஜின்களும் 🔥*
                        ⤵
           *🔥ஷைத்தான்களும்🔥*

            *✍🏻...... தொடர் ➖4⃣8⃣*

*☄முதன் முதலில்*
           *ஷைத்தான் வலையில்*
                    *விழுந்தவர்கள்*

*🏮🍂ஷைத்தானுடைய சதியில் முதன் முதலில் ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா (அலை) அவர்களும் விழுந்தார்கள். சொர்க்கத்தில் இன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்த இவ்விருவருக்கும் பொய்யான தகவலை ஷைத்தான் தந்தான்.*

*🏮🍂அதை நம்பி அவ்விருவரும் இறைவனுடைய கட்டளையை மீறினார்கள். இதனால் இறைவன் அவ்விருவரையும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிவிட்டான்.*

*فَقُلْنَا يَا آدَمُ إِنَّ هَٰذَا عَدُوٌّ لَّكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقَىٰ إِنَّ لَكَ أَلَّا تَجُوعَ فِيهَا وَلَا تَعْرَىٰ وَأَنَّكَ لَا تَظْمَأُ فِيهَا وَلَا تَضْحَىٰ فَوَسْوَسَ إِلَيْهِ الشَّيْطَانُ قَالَ يَا آدَمُ هَلْ أَدُلُّكَ عَلَىٰ شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَّا يَبْلَىٰ فَأَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ الْجَنَّةِ ۚ وَعَصَىٰ آدَمُ رَبَّهُ فَغَوَىٰ*

_*🍃ஆதமே! இவன் உமக்கும், உமது மனைவிக்கும் எதிரியாவான். அவன் உங்களை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி விட வேண்டாம். அப்போது நீர் துர்பாக்கியசாலியாவீர் இங்கே உமக்குப் பசிக்காது! நிர்வாணமாக மாட்டீர்! இங்கே உமக்குத் தாகமும் ஏற்படாது. உம்மீது வெயிலும் படாது! (என்று கூறினோம்). அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான்.*_

_*ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப் பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா❓ (என்றான்.) அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.*_

*📖அல்குர்ஆன் (20 : 117)📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

ஜும்ஆவின் சட்டங்கள்

ஜும்ஆவின் சட்டங்கள்

வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுக்குரிய நாள்

3486- حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا وُهَيْبٌ ، قَالَ : حَدَّثَنِي ابْنُ طَاوُوسٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ بَيْدَ كُلُّ أُمَّةٍ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا وَأُوتِينَا مِنْ بَعْدِهِمْ فَهَذَا الْيَوْمُ الَّذِي اخْتَلَفُوا فَغَدًا لِلْيَهُودِ وَبَعْدَ غَدٍ لِلنَّصَارَى.
”இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி),

நூல்கள்: புகாரி 3486, முஸ்லிம் 1414

மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை

1049 – حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِىٍّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ عَنْ أَبِى الأَشْعَثِ الصَّنْعَانِىِّ عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
« إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ قُبِضَ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَىَّ مِنَ الصَّلاَةِ فِيهِ فَإِنَّ صَلاَتَكُمْ مَعْرُوضَةٌ عَلَىَّ ». قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تُعْرَضُ صَلاَتُنَا عَلَيْكَ وَقَدْ أَرِمْتَ يَقُولُونَ بَلِيتَ. فَقَالَ « إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَرَّمَ عَلَى الأَرْضِ أَجْسَادَ الأَنْبِيَاءِ ».
“உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே!” என்று நபித்தோழர்கள் கேட்ட போது, ”நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்” என்று பதிலளித்தார்கள்.

அறி: அவ்ஸ் பின் அவ்ஸ்,

நூல்: அபூதாவூத் 883

ஜும்ஆ தொழுகைக்காகக் குளித்தல்

858- حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، قَالَ : حَدَّثَنِي صَفْوَانُ بْنُ سُلَيْمٍ ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தில் குளிப்பது, பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

அறி: அபூசயீத் அல்குத்ரீ (ரலி),

நூல்: புகாரி 858

ஜும்ஆ தொழுகைக்கு ஒரு பாங்குதான்

தவ்ஹீத் பள்ளிவாசல்களைத் தவிர உள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளிகள் என்று கூறப்படுபவற்றில் ஜும்ஆ தொழுகைக்கு இரண்டு பாங்குகள் கூறுகின்றனர். இது நபிவழிக்கு எதிரான செயலாகும். அனைத்து தொழுகைகளுக்கும் ஒரு பாங்கு கூறுவதைப் போல் ஜும்ஆ தொழுகைக்கும் ஒரு பாங்குதான் கூற வேண்டும்.

912- حَدَّثَنَا آدَمُ قَالَ : حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ
كَانَ النِّدَاءُ يَوْمَ الْجُمُعَةِ أَوَّلُهُ إِذَا جَلَسَ الإِمَامُ عَلَى الْمِنْبَرِ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَلَمَّا كَانَ عُثْمَانُ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، وَكَثُرَ النَّاسُ زَادَ النِّدَاءَ الثَّالِثَ عَلَى الزَّوْرَاءِ.
நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் ஜுமுஆ நாளின் முதல் பாங்கு இமாம் சொற்பொழிவு மேடை மீது அமர்ந்ததும் சொல்லப்பட்டு வந்தது.

அறி: சாயிப் பின் யஸீத் (ரலி),

நூல்: புகாரி 912

ஜும்ஆ பாங்கு கூறப்பட்டால் வியாபாரம் கூடாது

ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல் முஸ்லிமல்லாத நபர்கள் மூலமோ ஜும்ஆ கடமையாகாத பெண்கள் மற்றும் சிறுவர்கள் மூலமோ வியாபாரத்தை தொடர்ந்து கொண்டு தாங்கள் மட்டும் தொழுகைக்கு வந்து விடுகின்றனர். இதுவே அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்ப்பது என்றும் இவர்கள் கருதுகின்றனர்.ஆனால் இந்தக் கருத்து முற்றிலும் தவறாகும். இது குறித்து அல்லாஹ் கூறுவது இது தான்.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

(திருக்குர்ஆன் 62:9,10)

பாங்கு சொல்லப்பட்டவுடன் தொழுகைக்கு விரைந்து வாருங்கள் என்று மட்டும் அல்லாஹ் கூறினால் மற்றவர் மூலம் நம் வியாபாரத்தை நடத்தச் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்ய முகாந்திரம் உண்டு. ஆனால், அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள் என்று இரண்டு கட்டளைகளை அல்லாஹ் விதிக்கிறான். அல்லாஹ்வை நினைப்பதற்கு விரைவது ஒரு கட்டளை. வியாபாரத்தை விட்டுவிடுவது மற்றொரு கட்டளை. இரண்டையும் நாம் கடைப்பிடிப்பது கடமையாகும். மற்றவர் மூலம் கூட அந்த நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது.

மேலும் தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான். தொழுகை முடிக்கப்பட்ட பிறகு தான் பொருளீட்ட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். தொழுகை முடிக்கப்படும் முன்னர் நமது வியாபார நிறுவனம் இயங்கினால் அப்போது நாம் பொருளீட்டுவதாகத் தான் பொருள்.

ஜும்ஆவுக்கு பாங்கு சொன்னது முதல் தொழுகை முடியும் வரை தொழுகைக்கு விரையவும் வேண்டும். எல்லாவிதமான வியாபாரத்தையும் நிறுத்திக் கொள்ளவும் வேண்டும்.

நான் வியாபாரம் செய்யவில்லையே; எனது நிறுவனத்தில் மற்றவர்கள் தானே வியாபாரம் செய்தார்கள் என்று கூறும் காரணம் ஷைத்தானின் ஊசலாட்டமாகும். இதில் இறையச்சம் சிறிதும் இல்லை. மனசாட்சிக்கும் உலக நடைமுறைக்கும் இது எதிரானதாகும்.

நம்முடைய நிறுவனத்தில் மற்றவர்கள் செய்த வியாபாரம் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபத்துக்கும் வருமானத்துக்கும் நான் வரி செலுத்த மாட்டேன் என்று அரசாங்கத்திடம் இது போல் கூறுவார்களா? கூறினால் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா? அல்லது அந்த வருமானம் எங்களுடையது அல்ல எனக் கூறுவார்களா?

நாம் இல்லாத போது நம்முடைய ஊழியர் நம் அனுமதியுடன் கலப்படமோ மோசடியோ செய்தால் அதை நான் செய்யவில்லை என்று கூறுவதை யாருடைய மனசாட்சியாவது ஒப்புக் கொள்ளுமா?

நாமே செய்வதும் நம்முடைய அனுமதியின் பேரிலும் உத்தரவின் பேரிலும் மற்றவர் செய்யும் காரியங்களும் நாம் செய்ததாகத் தான் பொருள். நமக்குச் சொந்தமான நிறுவனத்தில் மற்றவர்களை வைத்து நடத்தும் வியாபாரமும் நாம் செய்ததாகத் தான் அர்த்தம்.

எனவே முற்றிலுமாக வியாபாரத்தை ஜும்ஆ பாங்கு முதல் ஜும்ஆ தொழுகை முடியும் வரை நிறுத்தியாக வேண்டும்.

ஜும்ஆ தொழுதால் பாவங்கள் மன்னிக்கப்படும்

572 – حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِىُّ بْنُ حُجْرٍ كُلُّهُمْ عَنْ إِسْمَاعِيلَ – قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ – أَخْبَرَنِى الْعَلاَءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ مَوْلَى الْحُرَقَةِ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ «
الصَّلاَةُ الْخَمْسُ وَالْجُمُعَةُ إِلَى الْجُمُعَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُنَّ مَا لَمْ تُغْشَ الْكَبَائِرُ ».
”ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும் பாவங்களாக அவை இருக்கலாகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி), 

நூல்கள்: முஸ்லிம் 342, திர்மிதி 198

ஜும்ஆ தொழுகைக்கு முன் செய்ய வேண்டியவை

883- حَدَّثَنَا آدَمُ قَالَ : حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ قَالَ : أَخْبَرَنِي أَبِي ، عَنِ ابْنِ وَدِيعَةَ عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم :
لاَ يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ ، أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ ثمَّ يَخْرُجُ فَلاَ يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الإِمَامُ إِلاَّ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الأُخْرَى.
”ஜும்ஆ நாளில் குளித்து விட்டு இயன்ற வரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணையைத் தேய்த்துக் கொண்டு தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (வரிசையில் நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்து விடாமல், தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: ஸல்மான் பார்ஸி (ரலி),

நூல்: புகாரி 883

முஸ்லிமில் அபூஸயீத் (ரலி) அறிவிக்கும் 1400வது ஹதீஸில், இதே கருத்துடன் ‘பல் துலக்குதல் என்ற வார்த்தை இடம் பெறுகின்றது. அபூதாவூதில் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அறிவிக்கும் 293வது ஹதீஸில் இதே கருத்துடன், ‘நல்லாடை அணிதல்’ என்ற வார்த்தையும் இடம் பெறுகின்றன.

 

 ஜும்ஆவின் ஒழுங்குகள்

1. ஜும்ஆ நாளில் பல் துலக்குதல் 2. இயன்ற வரை நன்றாகச் சுத்தமாகக் குளித்தல் 3. தலைக்கு எண்ணை தேய்த்தல் 4. நறுமணத்தை பூசிக் கொள்ளுதல் 5. நம்மிடம் இருக்கும் ஆடைகளில் சிறந்த ஆடையை அணிதல் 6 பள்ளிவாசலில் நெருக்கமாக இருக்கும் இரண்டு நபர்களை பிரிப்பது கூடாது 7. இமாம் உரையாற்ற ஆரம்பிக்கும் வரை தம்மால் இயன்ற அளவு இரண்டிரண்டு ரக்அத்துகளாகத் தொழுதல் 8. இமாம் உரையாற்றும் போது மவுனமாக இருத்தல்.

முன்கூட்டியே பள்ளிக்கு வருவதன் சிறப்புகள்

881- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ قَالَ : أَخْبَرَنَا مَالِكٌ ، عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ
: مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً فَإِذَا خَرَجَ الإِمَامُ حَضَرَتِ الْمَلاَئِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ
”ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 881
முந்தி வருபவரை பதிவு செய்யும் மலக்குமார்கள்

2021 – وَحَدَّثَنِى أَبُو الطَّاهِرِ وَحَرْمَلَةُ وَعَمْرُو بْنُ سَوَّادٍ الْعَامِرِىُّ قَالَ أَبُو الطَّاهِرِ حَدَّثَنَا وَقَالَ الآخَرَانِ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِى يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِى أَبُو عَبْدِ اللَّهِ الأَغَرُّ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
« إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ كَانَ عَلَى كُلِّ بَابٍ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ مَلاَئِكَةٌ يَكْتُبُونَ الأَوَّلَ فَالأَوَّلَ فَإِذَا جَلَسَ الإِمَامُ طَوَوُا الصُّحُفَ وَجَاءُوا يَسْتَمِعُونَ الذِّكْرَ وَمَثَلُ الْمُهَجِّرِ كَمَثَلِ الَّذِى يُهْدِى الْبَدَنَةَ ثُمَّ كَالَّذِى يُهْدِى بَقَرَةً ثُمَّ كَالَّذِى يُهْدِى الْكَبْشَ ثُمَّ كَالَّذِى يُهْدِى الدَّجَاجَةَ ثُمَّ كَالَّذِى يُهْدِى الْبَيْضَةَ ».
”ஜும்ஆ நாள் வந்ததும் பள்ளியின் பாகங்களில் உள்ள ஒவ்வொரு வாசலிலும் மலக்குகள் நிற்கின்றனர். முதன் முதலில் வருபவரை – அடுத்து வருபவரைப் பதிவு செய்கின்றனர். இமாம் (மிம்பரில்) உட்கார்ந்ததும் தங்கள் ஏடுகளைச் சுருட்டிக் கொண்டு உரையைக் கேட்க வந்து விடுகின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 1416

நம்முடைய பெயர்கள் வெள்ளியன்று பள்ளிக்கு வரும் மலக்குகளின் பதிவேட்டில் பதியப்பட வேண்டுமெனில் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்பே பள்ளிக்கு வந்தாக வேண்டும்.

ஓராண்டு நோன்பு நோற்று, நின்று வணங்கிய கூலி

1381- أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ ، وَهَارُونُ بْنُ مُحَمَّدِ بْنِ بَكَّارِ بْنِ بِلاَلٍ ، وَاللَّفْظُ لَهُ ، قَالاَ : حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ ، قَالَ : حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ ، عَنْ يَحْيَى بْنِ الْحَارِثِ ، عَنْ أَبِي الأَشْعَثِ الصَّنْعَانِيِّ ، عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، قَالَ :
مَنْ غَسَّلَ وَاغْتَسَلَ ، وَغَدَا وَابْتَكَرَ ، وَدَنَا مِنَ الإِمَامِ وَلَمْ يَلْغُ كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ عَمَلُ سَنَةٍ صِيَامُهَا وَقِيَامُهَا.
“யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு, அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி), 

நூல்: நஸயீ 1381

இமாம் உரையாற்றும் போது பேசக்கூடாது

934- حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ : حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ عُقَيْلٍ ، عَنِ ابْنِ شِهَابٍ قَالَ : أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ :
إِذَا قُلْتَ لِصَاحِبِكَ يَوْمَ الْجُمُعَةِ أَنْصِتْ وَالإِمَامُ يَخْطُبُ فَقَدْ لَغَوْتَ.
“இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம், ‘வாய் மூடு’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 934

இமாம் உரையாற்றும் போது விளையாடக்கூடாது

1419 – و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الْآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَاسْتَمَعَ وَأَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ وَزِيَادَةُ ثَلَاثَةِ أَيَّامٍ وَمَنْ مَسَّ الْحَصَى فَقَدْ لَغَا
“யார் (தரையில் கிடக்கும்) கம்பைத் தொ(ட்டு விளையா)டுகின்றாரோ அவர் (ஜும்ஆவை) பாழாக்கி விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 1419

ஜும்ஆவிற்கு வரும் நல்லவர்களும் கெட்டவர்களும்

1113- حَدَّثَنَا مُسَدَّدٌ ، وَأَبُو كَامِلٍ ، قَالاَ : حَدَّثَنَا يَزِيدُ ، عَنْ حَبِيبٍ الْمُعَلِّمِ ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
يَحْضُرُ الْجُمُعَةَ ثَلاَثَةُ نَفَرٍ ، رَجُلٌ حَضَرَهَا يَلْغُو وَهُوَ حَظُّهُ مِنْهَا ، وَرَجُلٌ حَضَرَهَا يَدْعُو ، فَهُوَ رَجُلٌ دَعَا اللَّهَ عَزَّ وَجَلَّ إِنْ شَاءَ أَعْطَاهُ ، وَإِنْ شَاءَ مَنَعَهُ ، وَرَجُلٌ حَضَرَهَا بِإِنْصَاتٍ وَسُكُوتٍ ، وَلَمْ يَتَخَطَّ رَقَبَةَ مُسْلِمٍ ، وَلَمْ يُؤْذِ أَحَدًا فَهِيَ كَفَّارَةٌ إِلَى الْجُمُعَةِ الَّتِي تَلِيهَا ، وَزِيَادَةِ ثَلاَثَةِ أَيَّامٍ ، وَذَلِكَ بِأَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ : {مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا}.
மூன்று பேர்கள் ஜும்ஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜும்ஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜும்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும். இன்னொருவர் ஜும்ஆவிற்கு வந்து பிரார்த்திக்கின்றார். இவர் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராவார். அவன் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கின்றான். மூன்றாமவர் ஜும்ஆவிற்கு வந்து மவுனத்துடன் வாய் பொத்தியுமிருந்தார். எந்த ஒரு முஸ்லிமின் பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. இந்த ஜும்ஆ அதை அடுத்து வரும் ஜும்ஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள் வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும். ஏனெனில் மகத்துவமும், கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், “நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர் தீமை செய்த அளவே தண்டிக்கப்படுவார்” என்று (6:160 வசனத்தில்) கூறுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),

நூல்: அபூதாவூத் 939

இந்த மூன்று பேர் பட்டியலில் நாம் முதலாமவர் பட்டியலில் இடம் பெற்று ஜும்ஆவின் பலனை இழந்து விடக் கூடாது.

 

ஜும்ஆ தொழாதவர்களுக்கான தண்டனை

2039 – وَحَدَّثَنِى الْحَسَنُ بْنُ عَلِىٍّ الْحُلْوَانِىُّ حَدَّثَنَا أَبُو تَوْبَةَ حَدَّثَنَا مُعَاوِيَةُ – وَهُوَ ابْنُ سَلاَّمٍ – عَنْ زَيْدٍ – يَعْنِى أَخَاهُ – أَنَّهُ سَمِعَ أَبَا سَلاَّمٍ قَالَ حَدَّثَنِى الْحَكَمُ بْنُ مِينَاءَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ وَأَبَا هُرَيْرَةَ حَدَّثَاهُ أَنَّهُمَا سَمِعَا رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ عَلَى
أَعْوَادِ مِنْبَرِهِ « لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمُ الْجُمُعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ ثُمَّ لَيَكُونُنَّ مِنَ الْغَافِلِينَ ».
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் படிகள்மீது நின்றபடி “மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும்! அல்லது அவர்களின் இதயங்கள் மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்; பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர்” என்று கூறியதை நாங்கள் கேட்டோம்.

அறி: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),

நூல்: முஸ்லிம் 1570

502 – حَدَّثَنَا عَلِىُّ بْنُ خَشْرَمٍ أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ عَبِيدَةَ بْنِ سُفْيَانَ عَنْ أَبِى الْجَعْدِ يَعْنِى الضَّمْرِىَّ وَكَانَتْ لَهُ صُحْبَةٌ فِيمَا زَعَمَ مُحَمَّدُ بْنُ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
« مَنْ تَرَكَ الْجُمُعَةَ ثَلاَثَ مَرَّاتٍ تَهَاوُنًا بِهَا طَبَعَ اللَّهُ عَلَى قَلْبِهِ ».
“அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அபுல் ஜஃது (ரலி),

நூல்: திர்மிதி 460

ஜும்ஆ தொழுகைக்கு வராதவர்களுக்கு எச்சரிக்கை

1517 – وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ عَنْ أَبِى الأَحْوَصِ سَمِعَهُ مِنْهُ عَنْ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ
لِقَوْمٍ يَتَخَلَّفُونَ عَنِ الْجُمُعَةِ « لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ رَجُلاً يُصَلِّى بِالنَّاسِ ثُمَّ أُحَرِّقَ عَلَى رِجَالٍ يَتَخَلَّفُونَ عَنِ الْجُمُعَةِ بُيُوتَهُمْ ».
நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுகையில் கலந்துகொள்ளாத சிலர் குறித்து, “நான் ஒரு மனிதரிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறிவிட்டு, பின்னர் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொள்ளாமல் (வீட்டில்) இருப்பவர்களை (நோக்கிச் சென்று அவர்களை) வீட்டோடு சேர்த்து எரித்து விட வேண்டும் என எண்ணியதுண்டு” என்று கூறினார்கள்.

அறி: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),

நூல்: முஸ்லிம் 1156

பெண்களும் ஜும்ஆவிற்கு வருதல்

2049 – وَحَدَّثَنِى عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِىُّ أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَسَّانَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أُخْتٍ لِعَمْرَةَ قَالَتْ
أَخَذْتُ (ق وَالْقُرْآنِ الْمَجِيدِ) مِنْ فِى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- يَوْمَ الْجُمُعَةِ وَهُوَ يَقْرَأُ بِهَا عَلَى الْمِنْبَرِ فِى كُلِّ جُمُعَةٍ.
நான் வெள்ளிக்கிழமை அன்று “காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.

அறி: அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரலி) அவர்களின் சகோதரி

நூல்: முஸ்லிம் 1580

மேற்கண்ட ஹதீஸில் ஒரு பெண்மனி ஜும்ஆவில் கலந்து கொண்டு, நபியவர்கள் ஜும்ஆ பயானில் என்ன பேசினார்கள் என்பதைக் கேட்டுள்ளார். இதிலிருந்து பெண்களும் ஜும்ஆ தொழுகைக்கு வரலாம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஜின்களும் - 49

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ஜின்களும் 🔥*
                        ⤵
           *🔥ஷைத்தான்களும்🔥*

            *✍🏻...... தொடர் ➖4⃣9⃣*

*☄ மனிதர்களின் விரோதி ☄*

*🏮🍂மனிதர்களை வெற்றியடைய விடாமல் நரகத்திற்கு அழைப்பது ஷைத்தானுடைய குறிக்கோள் என்பதால் அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் ஷைத்தானைப் பற்றி நமக்கு எச்சரிக்கை செய்கிறான். அவன் மனிதர்களுக்கு பகிரங்கமான விரோதி என்றும் குறிப்பிடுகிறான்.*

*إِنَّ الشَّيْطَانَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوهُ عَدُوًّا ۚ إِنَّمَا يَدْعُو حِزْبَهُ لِيَكُونُوا مِنْ أَصْحَابِ السَّعِيرِ*

_*🍃ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.*_

*📖 அல்குர்ஆன் (35 : 6) 📖*

_*🍃மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.*_

*📖 அல்குர்ஆன் (2 : 168) 📖*

قَالَ يَا بُنَيَّ لَا تَقْصُصْ رُؤْيَاكَ عَلَىٰ إِخْوَتِكَ فَيَكِيدُوا لَكَ كَيْدًا ۖ *إِنَّ الشَّيْطَانَ لِلْإِنسَانِ عَدُوٌّ مُّبِينٌ*

_*🍃ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.*_

*📖அல்குர்ஆன் (12 : 5)📖*

*لَّقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي ۗ وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا*

_*🍃ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான்.*_

*📖அல்குர்ஆன் (25 : 29)📖*

*يَا بَنِي آدَمَ لَا يَفْتِنَنَّكُمُ الشَّيْطَانُ كَمَا أَخْرَجَ أَبَوَيْكُم مِّنَ الْجَنَّةِ يَنزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْآتِهِمَا ۗ إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ ۗ إِنَّا جَعَلْنَا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ*

_*🍃ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பிவிட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.*_

*📖 அல்குர்ஆன் (7 : 27) 📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Friday, January 24, 2020

நன்மைகளை - 6

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

    *🍃நன்மைகளை*
               *நாசமாக்கும்*
                     *நச்சுப் பண்புகள்!🍃*

            *✍🏻....தொடர் { 06 }*

                *🥀 இறுதி பாகம் 🥀*

*☄தீமைகளோடு*
                    *கலந்திருத்தல்*

*🏮🍂அழைப்புப்பணி செய்வது அனைத்து முஃமின்கள் மீதும் மறுக்க முடியாத தவிர்க்க இயலாத அரும்பணியாகும். தரணியிலே சிறப்புமிகு சமுதாயமென்ற நற்சான்றைப் பெற அன்றாடம் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமான பணியாகும். இதை அல்லாஹ் கூறுகிறான்.*

_*🍃நீங்கள் மனித குலத்திற்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள். நன்மையை ஏவுகிறீர்கள். தீமையை தடுக்கிறீர்கள்.*_

*📖 (அல்குர்ஆன் 3:110) 📖*

*🏮🍂திருமறையிலே நன்மையை ஏவுமாறு கட்டளையிடும் போதெல்லாம் தீமை யைத் தடுக்குமாறும் வலியுறுத்திக் கூறுகிறான். ஆனால், சிலர் தாங்கள் தவறான தடுக்கப்பட்ட காரியங்களைச் செய்தாலும் அதன் மூலம் பெறுகின்றவற்றை நற்காரியங்களுக்காகவே பயன்படுத்துகிறோம் என்று அற்பக் கார ணத்தை கூறுகிறார்கள்.* ஆனால், பின்வருமாறு திருமறையிலே அல்லாஹ் ஏவுகிறான்.

_*🍃நல்லதைக் கொண்டு கெடுதியைத் தடுப்பீராக. அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம்.*_

*📖 (அல்குர்ஆன்: 23:96) 📖*

_*🍃நன்மையும் தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டு (பகைமையைத்) தடுப்பீராக. எவருக்கும் உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகிவிடுவார்.*_

*📖 (அல்குர்ஆன்:41:34) 📖*

*🏮🍂திருட்டுப் பணத்திலே தர்மம் செய்வது மோசடி செய்து குடிசைப் போட்டுத் தருவது, வட்டிப் பணத்திலே விருந்து வைப்பது, விபச்சாரம் செய்து ஊரே மெச்சுமளவிற்கு நற்செயல் செய்வது போன்ற தடுக்கப்பட்ட வழிகளிலே நிறைவேற்றப்படுகின்ற அனைத்து நற்காரியங்களும் நன்மைகளைப் பெற்றுத் தருவதற்கு தகுதியற்றவைகளாகும்.*

_*🍃உமர் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது. மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தான தர்மமும் ஏற்கப்படாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.*_

*📚 நூல்: முஸ்லிம் 329 📚*

*🏮🍂ஆகவே, மறுமை நாளிலே நம்மைக் காப்பாற்றக்கூடியதாக நமது அமல்கள் இருக்க வேண்டுமெனில், அவை அனுமதிக்கப்பட்ட வழிகளிலே ஆக்கம் பெற்றதாக இருக்க வேண்டும்.அப்படி அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட அமல்களை செய்து வாழும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *தொடர் முடிந்தது*
                            ⤵⤵⤵
                   அல்ஹம்துலில்லாஹ்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Monday, January 20, 2020

ஜின்களும் - 39

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ஜின்களும் 🔥*
                        ⤵
           *🔥ஷைத்தான்களும்🔥*

            *✍🏻...... தொடர் ➖3⃣9⃣*

*☄ஜின் இனத்தைச் சார்ந்தவன்*

*🏮🍂ஷைத்தான் ஜின் இனத்தைச் சார்ந்தவனாவான் என்று குர்ஆன் கூறுகிறது.*

*وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ ۗ أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ مِن دُونِي وَهُمْ لَكُمْ عَدُوٌّ ۚ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلًا*

_*🍃“ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்.*_

*📖அல்குர்ஆன் (18 : 50)📖*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄ஷைத்தான் நெருப்பால்*
               *படைக்கப்பட்டவன்*

*قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ ۖ قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِي مِن نَّارٍ وَخَلَقْتَهُ مِن طِينٍ*

*🏮🍂“நான் உனக்குக் கட்டளையிட்ட போது பணிவதை விட்டும் உன்னைத் தடுத்தது எது❓” என்று (இறைவன்) கேட்டான். “நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்! அவரைக் களிமண்ணால் படைத்தாய்!” என்று கூறினான்.*_

*📖 அல்குர்ஆன் (7 : 12) 📖*

*قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ ۖ خَلَقْتَنِي مِن نَّارٍ وَخَلَقْتَهُ مِن طِينٍ*

_*🍃“நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்” என்று அவன் கூறினான்.*_

*📖அல்குர்ஆன் (38 : 76)📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

நன்மைகளை - 3

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

    *🍃நன்மைகளை*
               *நாசமாக்கும்*
                     *நச்சுப் பண்புகள்!🍃*

            *✍🏻....தொடர் { 03 }*

          *☄இறையச்சமின்மை☄*

*🏮🍂இறை நம்பிக்கையாளர்களை, இறையச்சமுடையவர்களாக மாற்றுவதற்காகவும் அவர்கள் பெற்றிருக்கின்ற இறையச்சத்தின் தரத்தை பரிசோதிப்பதற்காகவும் அல்லாஹ் பல கடமையான விஷயங்களை கொடுத்துள்ளான்.* அவற்றை நிறைவேற்ற பல்வேறு விதமான விதிமுறைகளையும் வரம்புகளையும் விதித்துள்ளான்.

*🏮🍂இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றான நோன்பைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.*

*يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ*

_*🍃‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது’.*_

*📖 (அல்குர்ஆன் 2:183) 📖*

*🏮🍂நமக்கு சொந்தமான ஆகாரத்தை விட்டும் அடுத்தவர்கள் நம்மை தடுக்க முடியாத போதிலும் மற்றவர்களை விட்டும் மறைவாக தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற போதிலும் ஒரு அடியான் படைத்தவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று சாப்பிடாமலும் பருகாமலும் இருக்கிறான்.* இத்தகைய இறையச்சவாதிகளாக நம்மை மாற்றுவதற்குத்தான் நோன்பை கடமையாக்கியுள்ளான். *இன்னும் முஃமின்கள் தங்களது சக்திக்கேற்ப ஆடு, மாடு, ஒட்டகம் என்று கொடுக்கின்ற குர்பானியைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.*

*لَن يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَٰكِن يَنَالُهُ التَّقْوَىٰ مِنكُمْ ۚ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ ۗ وَبَشِّرِ الْمُحْسِنِينَ*

_*🍃அவற்றின் மாமிசங்களோ அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக, உங்களிடம் உள்ள இறையச்சமே அவனைச் சென்றடையும்.*_

*📖 (அல்குர்ஆன் 22:37) 📖*

*🏮🍂இவ்வுலகிலே தரப்பட்ட பொருளாதாரத்தைப் பற்றி தீர்ப்பு நாளிலே விசாரிக் கப்படுவோம் என்று இறைவழியிலே செல்வத்தைச் செலவிட நாம் தயாராக இருக்கிறோமா என்று சோதிப்பதற்காகவே குர்பானியை வலியுறுத்தியுள்ளான். கண்டிப்பாக நமது அமல்களிலே நகமும் சதையுமாக இறையச்சம் பின்னிப் பிணைந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு அற்புதமான சம்பவத்தை அருள்மறையிலே கூறுகிறான்.*

*وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ ۖ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ*

_*🍃ஆதமுடைய இரு புதல்வர்களில் உண்மை வரலாற்றை அவர்களுக்கு கூறு வீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. ‘நான் உன்னைக் கொள்வேன்’ என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். ‘(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்’ என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்’.*_

*📖 (அல்குர்ஆன் 5:27) 📖*

*🏮🍂ஆதம்(அலை) அவர்களுடைய இரு புதல்வர்களில் இறையச்சத்தோடு ஒருவர் வணக்கத்தை புரிந்ததால் அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்கிறான். மற்றொரு வருடைய வணக்கத்திலே இறையச்சம் இல்லாததால் அதை அல்லாஹ் மறுத் துவிடுகிறான். ஆகவே எந்த அமலைச் செய்தாலும் இறையச்சத்தோடு செய்வோமாக!*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

சூடான உணவு சாப்பிடலாமா❓

*🏓🏓மீள் பதிவு🏓🏓* 

 *🌎இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்🌎* 

*🔥🔥🔥சூடான உணவு சாப்பிடலாமா❓🔥🔥🔥*

 *🌙🌙🌙இஸ்லாம் கூறுவது என்ன ❓ ❓ ❓*

 *📚📚📚அல்குர்ஆனும் மற்றும்📗📗📗 ஹதீஸ்கள் ஆதாரம் இல்லை அதை உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇* 

 *🔥சூடான உணவு சாப்பிடலாமா?🔥* 

 *🌹சாப்பிடலாம்🌹* 

 *✍உணவுப் பொருட்களை சூடான நிலையில் உண்ணக்கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இந்தக் கருத்தில் வரும் அனைத்து செய்திகளும் பலவீனமாகவே இருக்கின்றன.✍* 

 *1958* حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ قُرَّةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا كَانَتْ إِذَا أُتِيَتْ بِثَرِيدٍ أَمَرَتْ بِهِ فَغُطِّيَ حَتَّى يَذْهَبَ فَوْرَةُ دُخَانِهِ وَتَقُولُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ هُوَ أَعْظَمُ لِلْبَرَكَة روا ه الدارمي

 *✍✍அஸ்மா (ரலி) அவர்களிடம் தக்கடி கொண்டு வரப்பட்டால் அதன் ஆவி அடங்கும் வரை மூடி வைக்குமாறு உத்தரவிடுவார்கள். மேலும் அவர்கள் இவ்வாறு உண்ணுவது அதிக பரகத்தைப் பெற்றுத் தரும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.✍✍* 

 *அறிவிப்பவர் : உர்வா* 

 *நூல் : தாரமீ (1958)* 

இந்த அறிவிப்பில் *குர்ரத் பின் அப்துர்ரஹ்மான்* என்பவர் இடம் பெற்றுள்ளார். *இவர் பலவீனமானவர்* என்று யஹ்யா பின் மயீன், அபூ சுர்ஆ, நஸாயீ, அபூஹாதிம் ஆகியோர் கூறியுள்ளனர்.

 *இதே செய்தி அஹ்மதில் பின்வருமாறு பதிவாகியுள்ளது.* 

 *25720* حَدَّثَنَا حَسَنٌ قَالَ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ قَالَ حَدَّثَنَا عُقَيْلُ بْنُ خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا كَانَتْ إِذَا ثَرَدَتْ غَطَّتْهُ شَيْئًا حَتَّى يَذْهَبَ فَوْرُهُ ثُمَّ تَقُولُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّهُ أَعْظَمُ لِلْبَرَكَةِ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ عَنْ عُقَيْلٍ و حَدَّثَنَا عَتَّابٌ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَنْبَأَنَا ابْنُ لَهِيعَةَ قَالَ حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا كَانَتْ إِذَا ثَرَدَتْ غَطَّتْهُ فَذَكَرَ مِثْلَهُ رواه أحمد

 *இந்த அறிவிப்பில் இப்னு லஹீஆ என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர். இவர் பலவீனமானவர் என்று இமாம் நஸாயீ, இமாம் யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், யஹ்யா பின் சயீத், அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, இமாம் இப்னு ஹஜர், இமாம் ஹைஸமீ ஆகியோர் கூறியுள்ளனர்* .

இது குறித்த மற்றொரு செய்தி தப்ரானியில் பின்வருமாறு பதிவாகியுள்ளது.

المعجم الصغير لسليمان الطبراني – ( *2 / 144* )

 *934* – حدثنا محمد بن يعقوب بن إسحاق أبو الحسين حدثنا هشام بن عمار حدثنا عبد الله بن يزيد البكري حدثنا محمد بن يعقوب بن محمد بن طحلاء المديني حدثنا بلال بن أبي هريرة عن أبي هريرة قال أن النبي صلى الله عليه و سلم أتى بصفحة تفور فرفع يده منها فقال اللهم لا تطعمنا نارا إن الله لم يطعمنا نارا لم يروه عن بلال بن أبي هريرة إلا يعقوب بن محمد ولا عنه إلا عبد الله بن يزيد تفرد به هشام وبلال قليل الرواية عن أبيه

 *நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உணவுத் தட்டு கொண்டுவரப்பட்டது. அதில் ஆவி வெளியேறிக்கொண்டிருந்தது. அதில் கையை வைக்காமல் எடுத்து விட்டார்கள். அப்போது அவர்கள் இறைவா நெருப்பை எங்களுக்கு உண்ணக் கொடுத்து விடாதே என்று பிரார்த்தித்துவிட்டு அல்லாஹ் நமக்கு நெருப்பை உண்ணக் கொடுக்கவில்லை என்று கூறினார்கள்.* 

 *அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)* 

 *நூல் : தப்ரானீ (934)* 

இந்த செய்தியில் *அப்துல்லாஹ் பின் யஸீத் அல்பக்ரீ என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர்* என்று இமாம் அபூஹாதிம் அவர்களும் இமாம் ஹைஸமீ அவர்களும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

 *இது குறித்த இன்னொரு அறிவிப்பு அல்முஸ்தத்ரக் நூலில் பதிவாகியுள்ளது.* 

المستدرك على الصحيحين للنيسابوري – ( *4* / *132* )

 *7125* – أخبرناه أبو إسحاق إبراهيم بن محمد بن حاتم الفقيه البخاري بنيسابور ثنا صالح بن محمد بن عبيد الله بن العزرمي حدثني أبي عن عطاء عن جابر رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه و سلم : ابردوا الطعام الحار فإن الطعام الحار غير ذي بركة

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

 *சூடான உணவைக் குளிர வையுங்கள். ஏனென்றால் சூடான உணவு பரகத் இல்லாத உணவாகும்.* 

 *அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)* 

 *நூல் : ஹாகிம் (7125)* 

இந்தச் செய்தியில் *முஹம்மது பின் உபைதுல்லாஹ் அல்அஸ்ரமீ என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர்* என்று வகீஉ, அஹ்மது பின் ஹம்பள், யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், நஸாயீ, ஹாகிம் ஆகியோர் கூறியுள்ளனர்.

இது குறித்து மற்றொரு ஹதீஸ் ஹில்யதுல் அவ்லியா என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

حلية الأولياء – يوسف بن أسباط

حديث : ‏ *12396‏16726* 

حدثنا إبراهيم بن محمد ، ثنا محمد بن المسيب ، ثنا عبد الله بن خبيق ، ثنا يوسف بن أسباط ، عن العرزمي ، عن صفوان بن سليم ، عن أنس بن مالك ، قال : ” كان رسول الله صلى الله عليه وسلم يكره الكي والطعام الحار , ويقول : ” عليكم بالبارد فإنه ذو بركة ألا وإن الحار لا بركة فيه , وكانت له مكحلة يكتحل منها عند النوم ثلاثا ثلاثا ” غريب من حديث صفوان لم نكتبه إلا من حديث يوسف *

 *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மருத்துவத்திற்காக) சூடுபோடுவதையும், சூடான உணவையும் வெறுப்பவர்களாக இருந்தார்கள். மேலும் அவர்கள் ”’’குளிர்ந்த உணவையே உண்ணுங்கள். ஏனென்றால் அதில் தான் பரகத் உள்ளது. அறிந்து கொள்ளுங்கள் சூடான உணவில் பரகத் இல்லை’ என்று கூறினார்கள்* .

 *அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)* 

 *நூல் : ஹில்யதுல் அவ்லியா* 

இந்தச் செய்தியிலும் *முஹம்மது பின் உபைதுல்லாஹ் அஸ்ரமீ இடம் பெற்றுள்ளார்.* எனவே இதுவும் பலவீனமான செய்தியாகும்.

மற்றொரு ஹதீஸ் ஷுஅபுல் ஈமான் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

شعب الإيمان للبيهقي – التاسع والثلاثون من شعب الإيمان

أكل اللحم – حديث : ‏ *5636‏* 

أخبرنا أبو عبد الرحمن السلمي ، أنا عبد الله بن محمد بن علي ، ثنا علي بن سعيد العسكري ، ثنا العباس بن أبي طالب ، ثنا أبو المسيب سلم بن سلام الواسطي ، عن إسماعيل بن عياش ، عن أبي بكر بن أبي مريم الغساني ، عن ضمرة بن حبيب ، عن صهيب قال : ” نهى رسول الله صلى الله عليه وسلم ، عن أكل الطعام الحار ، حتى يسكن ” *

 *சூடான உணவு ஆறும் வரை அதை உண்ணக்கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.* 

 *அறிவிப்பவர் : சுஹைப் (ரலி)* 

 *நூல் : பைஹகீ (5636)* 

இந்த செய்தியில் *அபூபக்ர் பின் அபீ மர்யம் என்பவரும் சலாம் பின் சல்லாம் என்பவரும் அபூ அப்திர் ரஹ்மான் சுலமீ என்பவரும் இடம்பெற்றுள்ளனர். இம்மூவரும் பலவீனமானவர்கள் ஆவர்.* 

எனவே சூடான உணவை உண்ணக்கூடாது என்று கூறும் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை.

 *பொதுவாக உணவுப் பொருட்கள் சூடாக இருந்தால் தான் அதை மக்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். காபி டீ போன்ற பானங்களைச் சூடில்லாமல் யாரும் குடிப்பதில்லை. எனவே மேற்கண்ட பலவீனமான ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டு மக்கள் விரும்பாத விஷயத்தை வலியுறுத்தக் கூடாது* .


அல்லாஹுவே மிகவும் அறிந்தவன்

 *ஜஸாகல்லாஹ் ஹைரன்*

வயிறு நிரம்ப சாப்பிடலாமா

*🌐🌐மீள் பதிவு🌎🌎* 

*🏓🏓வயிறு நிரம்ப சாப்பிடலாமா❓🏓🏓*

 *🌐உணவுக் கட்டுப்பாடு (Diet Control) - ஒரு இஸ்லாமியக் கண்ணோட்டம்🌐* 

 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈* 

 *✍✍✍மிகை உடற்பருமன் (Obesity) - ஒரு பிரதானமான நோய்* *ஆபத்துக்காரணியாகும். மிகை உடற்பருமன் (Obesity) உள்ளவர்கள்* *பெரும்பாலும் மன அழுத்தம், மூட்டு வியாதி, சில* *வகையான புற்று நோய்கள், நீரிழிவு நோய், உயர்* *குருதியமுக்கம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல* *நோய்களுக்கு ஆளாகக் கூடிய ஆபத்தினை எதிர்நோக்குகின்றனர். உடற்பருமனின்* *அதிகரிப்பானது உடல் நிறைச் சுட்டி {BMI = உடல் நிறை (Kgஇல்) ÷ (உயரம் × உயரம்)* *(mஇல்)} இனால் கணிக்கப்படும். தென்னாசிய மக்களைப் பொறுத்தவரையில் BMI>23 எனில் அளவை மீறிய உடற்பருமன்* *(Overweight) என்றும் BMI>27.5 எனில் மிகை உடற்பருமன் (Obesity) என்றும் கருதப்படும். 18.5 தொடக்கம் 23 வரையிலான BMI நிலையே* *ஆரோக்கியமான நிலையாகும்.✍✍✍*

குறைவாகச் சாப்பிடுவதன் மூலம் உடற்பருமனை (உயரத்துக்கேற்ற நிறையை)ப் பேணிக் கொள்ளுங்கள்.
கூடுதலாகச் சாப்பிடுவது, கொழுப்பான உணவுகளை அதிகம் சாப்பிடுவது, குறைவாக வேலை செய்வது போன்றன நமது உடற்பருமனை (உயரத்துக்கேற்ற நிறையை) அதிகரிக்கச் செய்து நமது ஆரோக்கியத்துக்குக் கேடானதாக மாறுகிறது. ஆனால் உணவு விடயத்தில் இஸ்லாத்தின் வரையறைகளைப் பேணி வாழும் இறைநம்பிக்கையாளர்கள் இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகமே. நாம் உணவு விடயத்தில் எந்தளவு கட்டுப்பாடாக இருக்க வேண்டும் எனவும், குறைத்துச் சாப்பிடுவதே ஆரோக்கியமானதாகும் எனவும், வயிறு புடைக்கச் சாப்பிடுவது ஒரு இறைநம்பிக்கையாளரின் பண்பாக அமைய முடியாது எனவும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் கீழே விரிவாகப் பார்ப்போம்.

 *அளவை மீறிச்சாப்பிடாதீர்கள்அல்-குர்ஆன்வசனத்தின் ஒளியில்: "உண்ணுங்கள்;* *பருகுங்கள்; 'இஸ்ராஃப்' செய்யாதீர்கள்; நிச்சயமாக (அல்லாஹ்வாகிய)* *அவன் 'இஸ்ராஃப்' செய்வோரை நேசிப்பதில்லை."*

 *(அல்-குர்ஆன்-7:31).*

 இங்கே 'இஸ்ராஃப்' என்பதன் நேரடிப் பொருள் 'எல்லையை மீறுதல்' என்பதாகும். எல்லையை மீறுதல் பல வகைப்படும். அதில் அளவை மீறிச் சாப்பிடுதலும் ஒரு வகையாகும். இதன் காரணமாகவே அளவை மீறிச் சாப்பிடுதல் அனுமதிக்கத் தக்கதல்ல என மார்க்க அறிஞர்கள் சிலர் எழுதியிருக்கிறார்கள்* .

 *(பார்க்க: மஆரிபுல் குர்ஆன்-7:31)* 

வயிறு புடைக்கச் சாப்பிடுவது ஒரு முஃமினுக்கு உகந்த செயல் அல்ல.
வயிறு புடைக்கச் சாப்பிடுவது விரும்பத்தக்கது அல்ல. மேலும் அண்ணலார் (ஸல்) அவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை பல்வேறு சமயங்களில் வலியுறுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: "ஆதமின் மகன் (மனிதன்) இட்டு நிரப்பக் கூடிய பைகளில் வயிறை விட மோசமானது வேறெதுவுமில்லை. ஆதமின் மகனுக்கு அவனது முதுகை நிமிர்த்தக் கூடிய சில கவளங்களே போதும். அதற்கு மேலும் அவன் உண்டே ஆக வேண்டுமானால் (வயிற்றின்) மூன்றில் ஒரு பாகத்தை தனது உணவுக்காகவும், இன்னொரு மூன்றில் ஒரு பாகத்தை தனது பானத்திற்காகவும், மற்றொரு மூன்றில் ஒரு பாகத்தை தனது சுவாசத்திற்காகவும் அவன் ஒதுக்கிக் கொள்ளவும்."

 *அறிவிப்பவர்: மிக்தாம் இப்னு மஅதீகரிப் (ரலி); நூல்: திர்மிதீ (2380),* *இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத்; இது ஒரு ஸஹீஹான ஹதீஸ் ஆகும். (பார்க்க: தப்ஸீர் இப்னு கசீர்-7:31)* 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சபையிலே ஒரு மனிதர் ஏப்பம் விட்டார். அதற்கு (நபி) அவர்கள் "உமது ஏப்பத்தை எங்களை விட்டும் தடுத்து வைப்பீராக. ஏனெனில், இவ்வுலகில் அதிகம் தனது வயிற்றை நிரப்புபவர்களே மறுமையில் நீண்ட நேரம் பசிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்" எனக் கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி); நூல்: திர்மிதீ (2015); இது ஒரு ஸஹீஹான ஹதீஸ் ஆகும்.* 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வயிறு நிரம்ப உண்டார்களா?
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயுள் முழுவதும் தமது மரணம் வரை எப்பொழுதும் இரண்டு தினங்கள் தொடர்ந்து கேழ்வரகு ரொட்டியையும் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை."

 *அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: திர்மிதீ; (பார்க்க: மௌலானா ஸகரிய்யாவின் சதகாவின் சிறப்பு-பாகம்-6)* 

"அபூஹுரைரா (ரலி) அவர்கள் (ஒரு நாள்) தம் முன்னே பொறிக்கப்பட்ட ஓர் ஆட்டை(ச் சாப்பிடுவதற்காக) வைத்திருந்த ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றார்கள். அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களை(த் தம்முடன் சாப்பிட வருமாறு) அழைத்தார்கள். ஆனால் அன்னார் அவர்களுடன் சாப்பிட மறுத்து "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொலி நீக்கப்படாத கோதுமை ரொட்டியால் வயிறு நிரம்பாத நிலையிலேயே இந்த உலகிலிருந்து சென்று விட்டார்கள்" என்று கூறினார்கள்."

 *அறிவிப்பவர்: சயீத் (ரஹ்); நூல்:புகாரி-5414* 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: "நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு உண்டான முதல் பித்அத் வயிறு நிறையச் சாப்பிடுவதுதான். மனிதர்களின் வயிறு நிரம்பி விடும் போது அவர்களின் உள்ளங்கள் உலகின் பக்கம் சாயத் துவங்கி விடுகின்றன."

 *(பார்க்க: சதகாவின் சிறப்பு - பாகம்-6)* 

 *வயிறு புடைக்கச் சாப்பிடுவது உடல் நலத்துக்குக் கேடே*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: "வயிறுதான் உடலின் தடாகம் போன்று இருக்கிறது. உடலின் அனைத்து குருதிக் குழாய்களும் நரம்புகளும் அதிலிருந்து பருகுகின்றன. வயிறு சீராக இருக்குமானால் அனைத்து நாளங்களும் அதிலிருந்து ஆரோக்கியமான உணவைப் பருகிச் செல்லும். வயிறு சீர்குலைந்து இருக்குமானால் அனைத்து நாளங்களும் நோய்களைக் காவிக் கொண்டு உடல் முழுதுக்கும் பரவிச் செல்லும்."

 *அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: பைஹகீயின் ஷுஃபுல் ஈமான் (பார்க்க: மஆரிபுல் குர்ஆன்-7:31)* 

நபி (ஸல்) அவர்கள் விரும்பியது ஒரு நாள் சாப்பிட்டால் மறு நாள் பசித்திருப்பதையே.
அல்லாஹு தஆலா நபி (ஸல்) அவர்களுக்கு மக்கமா நகரத்தின் பூமி முழுவதையும் தங்கமாக்கித் தரப் படும் எனக் கூறிய போது நபியவர்கள்: "யாஅல்லாஹ்! அது வேண்டாம். மாறாக நான் விரும்புவதெல்லாம் ஒரு நாள் சாப்பிட்டால் மறு நாள் பசித்திருப்பதையே. ஏனெனில் பசியோடிருக்கும் அன்று பொறுமை கொண்டு, உனக்கு முன்னால் பணிவு காட்டவும் (உன்னிடம் இறைஞ்சவும்), சாப்பிட்ட அன்று உனக்கு நன்றி செலுத்தவும் செய்வேன்."

 *(பார்க்க: சதகாவின் சிறப்பு - பாகம்-6)* 

பசியின் பத்து பலன்கள்:
நாம் உணவு விடயத்தில் இப்படியெல்லாம் கட்டுப்பாடாக இருந்து குறைத்துச் சாப்பிடுவது எப்படி? அடிக்கடி பசிக்குமே. பசியைத் தாங்கிக் கொண்டு எப்படி வாழ்வது? என உங்களுக்குள் கேள்வி வரலாம். ஆனால், பசியுடன் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். பசியின் பலன்கள் பல உண்டு. இதற்குப் பயிற்சியாகவே இஸ்லாம் நமக்கு ரமழானில் ஒரு மாத காலம் பகல் காலங்களில் பசியுடன் இருக்கப் பயிற்சியளிக்கிறது. இது நமது உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமல்ல; உள்ளத்துக்கு ஒளியும் கூட. அதற்குக் கூலியாக சுவர்க்கத்தில் பதவிகளை அளிக்க அல்லாஹு தஆலா ஏற்பாடு செய்கிறான். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை பூரா பசியுடன் கலந்தே கழிந்திருக்கிறது. பசியின் இன்பத்தை அனுபவ ரீதியாகக் கண்டு வாழ்ந்த பெரியார்களின் வரலாறுகளை நீங்கள் படித்ததில்லையா?

இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் பசித்திருப்பத்தால் கிடைக்கும் பத்து பலன்கள் பற்றி கூறுகிறார்கள். அதன் சுருக்கமாவது: பட்டினியால் வாடும் ஏழைகளின் பக்கம் மறதி உண்டாவதில்லை; நோய்களை விட்டும் தவிர்த்து, ஆரோக்கியத்தை அளிக்கிறது; உள்ளம் பரிசுத்தம் அடைந்து, புத்தி கூர்மையடைகிறது; உள்ளம் இளகி நெகிழ்ந்து திக்ரிலும், துஆவிலும் இன்பம் உருவாகிறது; பணிவு, தாழ்மை போன்ற அருங் குணங்கள் உருவாகி அகந்தை, மமதை போன்ற குணங்கள் அகழ்கின்றன; இச்சைகளை முறியடித்து, பாவங்களிலிருந்து தடுக்கிறது; குறைவாகவே உறக்கம் ஏற்படும்; சோம்பல் நீங்குகிறது; செலவில் சிக்கனம் ஏற்படுகிறது; பிறரை முற்படுத்தல், இரக்கம் காட்டுதல், தர்மம் அளித்தல் போன்றனவற்றுக்கு வழிவகுக்கிறது.

 *(பார்க்க: சதகாவின் சிறப்பு - பாகம்-6)* 

உணவுக் கட்டுப்பாட்டுக்கு சுவர்க்கத்தில் பதவிகள் உண்டு.
ஒரு ஹதீஸில் வருவதாவது, "ஒரு மனிதன் உலகில் உணவு குடிப்பின் அளவைக் குறைத்துக் கொள்வானேயானால் அல்லாஹு தஆலா பெருமையாக மலக்குகளிடம் "பாருங்கள்! நான் இவனை உணவிலும், பானத்திலும் நெருக்கடியில் ஆழ்த்தினேன். அதன் மீது இவன் பொறுமையைக் கைகொண்டான். எந்தக் கவளத்தை இவன் குறைத்துக் கொண்டானோ அதற்குப் பதிலாக சுவர்க்கத்தில் பதவிகளை அளிக்க ஏற்பாடு செய்துள்ளேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்" என்று கூறுகிறான்."

 *(பார்க்க: சதகாவின் சிறப்பு - பாகம்-6)* 

மற்றொரு ஹதீஸில் வருவதாவது, "எவர்கள் உலகில் பசித்திருப்பார்களோ அவர்கள்தாம் மறுமையில் வயிறு நிரம்ப உண்ணக் கூடியவர்கள். அஜீரணமாகும் அளவு வயிறு புடைக்க சாப்பிடும் மனிதனே அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானவன். ஒருவர் தனது மனம் சாப்பிட விரும்பும் ஒரு வஸ்துவை சாப்பிடாமல் தவிர்ப்பாரானால் அவருக்காக சுவர்க்கத்தில் பதவிகள் இருக்கின்றன."

 *(பார்க்க: சதகாவின் சிறப்பு - பாகம்-6)*


 *உணவுக் கட்டுப்பாட்டுக்கான சிறந்த வழி - நோன்பு ஆகும்.*

ரமலான் மாதம் என்றால் அது உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம் ஆகும். இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் மூலம் வென்றுள்ளோம் என்றால் அது மிக சொற்பமே. நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாகத் திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம். நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொறுமையிழந்து தவறு செய்யும் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான். அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்து தனது ஆசைகளை அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கண்ட கண்ட உணவுகளையும் கட்டுப்பாடில்லாமல் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.

கடமையான மற்றும் சுன்னத்தான நோன்புகள் மூலம் உணவுக் கட்டுப்பாடு - ஒரு சிறந்த யுக்தியாகும்.
அவையாவன: வருடாந்தம் ரமழான் மாத நோன்புகள், முஹர்ரம் மாதத்தில் நோன்பு வைத்தல், ஷஃபான் மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில் நோன்பு வைத்தல், துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் நோன்பு வைத்தல், ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் வைத்தல், திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்பு வைத்தல், ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நோன்புகள் வைத்தல், அய்யாமுல் பீல் நோன்புகள் *(ஒவ்வொரு மாதத்திலும் பிறை 12,13,14 அல்லது 13,14,15), அரபா நோன்பு (துல்ஹஜ் பிறை 9), தாஸூஆ, ஆஷூரா நோன்பு (முஹர்ரம் பிறை 9,10) (பார்க்க: ரியாளுஸ் ஸாலிஹீன் - 1246-1263)* 

நோன்பின் சிறப்பு:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹு தஆலா கூறுகிறான்: "ஆதமுடைய மகனின் அமல்கள் அனைத்தும் நோன்பைத் தவிர அவனுக்குரியவையாக உள்ளன. நிச்சயமாக நோன்பு எனக்குரியதாக இருக்கிறது. நானே அதற்குக் கூலி கொடுக்கிறேன்."

 *அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி, முஸ்லிம்; (ரியாளுஸ் ஸாலிஹீன் - 1215)* 

சுருங்கக்கூறின் நம் ஆரோக்கியமான வாழ்விற்கும் இறை வழிபாட்டை இலகுவாக நிறைவேற்றுவதற்கும் அண்ணலார் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றி வாழ வேண்டும். பசிக்காக சாப்பிட வேண்டும்; சாப்பிடுவதற்காக பசிக்கக் கூடாது. பசி அடங்கிவிட்டால் உண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கு சில கவள உணவுகள் நமக்கு போதுமாகும்; உண்பதற்காகத்தான் வாழ்க்கை என்றாகி விடக் கூடாது. அண்ணலார் (ஸல்) அவர்களின் அருமையான வாழ்வுதனை பின்பற்றி ஆரோக்கிய வாழ்வு வாழ்வதோடு அளவற்ற முறையில் இபாதத் செய்யக் கூடியவர்களாகவும் அல்லாஹ் நம்மை ஆக்குவானாக.

 *என்ன சாப்பிடலாம் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்:* 

உடலுக்கு எதாவது பிரச்னை வருகின்ற சமயத்தில்தான் பலருக்கு என்ன உணவுப் பொருட்களைச் சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது  என்கிற அக்கறை வரும். எல்லா காலங்களிலும் உணவைப்பற்றிய அக்கறை உள்ளவர்களுக்கும் கூட, என்னென்ன உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்ற எதிர்பார்ப்புதான் இருக்கிறது.

ஆனால் சத்தான உணவு, நோய்க்கான உணவு என்ற இந்த இரண்டையும் தாண்டி, எப்படி உணவை பொதுவாக  எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற புரிதல் அவசியம்.உணவைப் பற்றிய சில அடிப்படையான தகவல்களைத் தருவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

 *உணவைத் தீர்மானிக்கும் காரணிகள்:* 

அவரவர் ‘பசி’யின் அளவுக்கு ஏற்ற உணவு.
வயதுக்கு ஏற்ற உணவு.
உடல் உழைப்புக்கு ஏற்ற உணவு.
ஆண் பெண் வேறுபாட்டிற்கு ஏற்ற உணவு.
சுவை அடிப்படையில் உணவு.
எதிர் வினை செய்யாத உணவு.
உங்களுக்கு ஒத்துவராத உணவு.
கால நிலைகளுக்கு ஏற்ற உணவு.
நீங்கள் என்ன உணவு சாப்பிட்டாலும் சரி, மேற்கூறிய காரணிகளை மனதில் கொண்டு கடைப்பிடித்து வந்தால் ஆரோக்கியமான உடலைப் பெறலாம். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

 *‘பசி’யின் அளவுக்கு ஏற்ற உணவு.* 

உடலுக்கு எரிபொருள் தேவை என்பதை உணர்த்தும் ஒரு உணர்ச்சிதான் பசி. எனவே பசித்து சாப்பிடுவதே மிகவும், அடிப்படையான உணவு விதி. உணவு பசிக்காக என்ற நிலையிலிருந்து ருசிக்காக என மாறுவதால் தான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. அப்படியே ருசிக்காக என மாறினாலும் மீண்டும் பசியின் அளவுக்குத் தான் சாப்பிட வேண்டும். பசியின் அளவைத்தான் ‘தீ’ அளவு எனக் கூறுகிறோம்.

 *‘‘தீயளவின்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்’’* 

பசியின் அளவுக்கு அதிகமாக உண்டு வருவதால் நோய்களும் அதிகமாகி வரும் என்பது இதன் பொருள். சரி, ஒவ்வொரு முறையும் சாப்பிடும்போது பசியின் அளவையும் உணவின் அளவையும் அளந்து கொண்டிக்க முடியுமா? அதற்கு ஏதும் கருவி உள்ளதா என யோசிக்கக்கூடாது இதற்கான வழிமுறை சுலபமானது.

வயிறு நிறைய உண்டால் நாம் எவ்வளவு உண்போம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எவ்வளவு உணவும் எவ்வளவு நீரும் குடித்தால் வயிறு நிரம்பும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எப்போதுமே வயிறு நிரம்பும் அளவுக்குச் சாப்பிடக்கூடாது. உணவுப் பொருள்கள் அரை வயிறும், திரவப்பொருட்கள் கால் வயிறும் சாப்பிட வேண்டும். ஆக முக்கால் பாகம் வயிறு நிரம்பும் அளவுதான் சாப்பிட வேண்டும். இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமே என தோன்றும்போதே உணவை நிறுத்திக் கொள்வது உடலுக்கு நல்லது. கால் வயிறு காலியாக இருக்கும் போதுதான் சீரணம் இலகுவாக நடக்கும்.

 *வயதுக்கு ஏற்ற உணவு:*

பிறந்தது முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலே முக்கிய உணவாக இருக்க வேண்டும். அதன்பிறகு பருவ வயது வரை ஆண், பெண் இருபாலாரும் ஒரே மாதிரியான உணவு எடுத்துக் கொள்ளலாம்.அதன் பிறகு பெண்களுக்கு மாதவிடாய், கர்ப்பகாலம், பாலூட்டும் காலம், மாதவிடாய் முடிவுற்ற பிறகு என பல சூழ்நிலைகளில் பலவிதமான உணவு மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். பொதுவாக ஒரு மனிதரின் வாழ்நாளை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டால் முதல் மூன்றில் ஒரு பங்கு காலத்தில் (சுமாராக முதல் 20_30 ஆண்டுகள்) கபத்தின் ஆட்சி இருக்கும் கடைசி மூன்றில் ஒரு பங்கு காலத்தில் வாதத்தின் ஆட்சி இருக்கும். உடல்நிலை மட்டுமல்லாது நோய் நிலைகளும் இதன் அடிப்படையிலேயே இருக்கும். எனவே உணவும் இதன் அடிப்படையிலேயே இருக்க வேண்டும்.

சிறுவயதில் கபத்தினைப் பெருக்கும் உணவுகளை அதிகமாக சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். நடு வயதில் பித்தத்தினைப் பெருக்கும் உணவுகளை அதிகமாக சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். முதிர்ந்த வயதில் வாதத்தைப் பெருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். எந்தெந்த உணவுகள் கபத்தினைப் பெருக்குபவை. எந்தெந்த உணவுகள் பித்தத்தினைப் பெருக்குபவை. எந்தெந்த உணவுகள் வாதத்தினைப் பெருக்குபவை. என்பதை வரும் கட்டுரைகளில் விளக்குகிறேன்.

 *உடல் உழைப்புக்கு ஏற்ற உணவு* 

இதுவும் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படையான ஒரு விதி. நீங்கள் உடல் உழைப்பு உள்ளவரா அல்லது உடல் உழைப்புக்கே இடமில்லாத வாழ்க்கை வாழ்கிறீர்களா? எந்த வகைப்பாட்டில் வருகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். என்ன சாப்பிடலாம் என்பதைத் தீர்மானிக்கக் கூடிய மிகவும் அடிப்படையான விசயம் இது. இதன் அடிப்படையிலேயே எல்லா உணவுகளையும் தீர்மானிக்க வேண்டும். ஒரு சிறிய உதாரணம் கொடுக்க வேண்டும் என்றால் பாலை எடுத்துக் கொள்வோம். பால் ஒரு நல்ல உணவு, உடல் உழைப்பு உள்ளவர்கள் எருமைப் பால் சாப்பிடலாம். உடல் உழைப்பு இல்லாதவர்களுக்குத்தான் எருமைப் பால் அஜீரணம் தரும். எனவே உடல் உழைப்பு இல்லாதவர்கள் பசும்பால் சாப்பிடுவதே நல்லது. ஆக இந்த புரிதலோடு இப்போது இதை யோசித்துப் பாருங்கள்.

நீங்கள் ஒரு மருத்துவரிடம் செல்கிறீர்கள், அவரிடம் ‘‘டாக்டர் பால் சாப்பிடலாமா எனக் கேட்கிறீர்கள் அவர் என்ன பதில் கூற வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என நீங்களே பதிலை கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்படி பாலில் துவங்கி எல்லாப் பொருட்களையுமே உடல் உழைப்பின் அடிப்படையில் தீர்மானித்துக் கொள்வதே உடலுக்கு நல்லது.

 *ஆண், பெண் வேறுபாட்டிற்கு ஏற்ற உணவு*

நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல வயது வந்த பிறகு பெண்களுக்கான மாதவிடாய் காலத்திலும் கர்ப்ப காலத்திலும் பாலூட்டும் காலத்திலும் மாதவிடாய் முடிந்த காலத்திலும் அந்தந்த காலத்திற்கு ஏற்ற உணவை எடுத்துக் கொள்வது அவசியம். குறிப்பாக பாலூட்டும் காலத்தில் தாய் உண்ணும் உணவின் காரணமாக குழந்தைக்கு அஜீரணம் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. கர்ப்ப காலத்தில் பிரத்யேகமான உணவுகளை தீர்மானிக்க வேண்டியிருக்கும். ஆண்களை பொறுத்தவரை உடல் உழைப்பின் அடிப்படையில் உணவைத் தீர்மானித்து எடுக்க வேண்டும்.

 *சுவை அடிப்படையில் உணவு:* 

ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் ஒரு சுவை உள்ளது. சுவை என்றால் என்ன? ஏன் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு சுவை உள்ளது என எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அப்படியே யோசித்தாலும் அதில் உள்ள வேதிப்பொருள் அந்த சுவையை தருகிறது என்ற முடிவுக்கு வருவீர்கள். சரி அப்படியே வைத்துக் கொண்டாலும் ஒவ்வொரு வேதிப்பொருளுக்கும் ஒரு செய்கை இருக்கும் அல்லவா? அது போலத்தான் ஒவ்வொரு சுவைக்கும் ஒரு செய்கை உண்டு. இதைப்பற்றி ஏற்கனவே என்ன சுவைக்கு என்ன செய்கை உண்டு என்பதை ஏற்கனவே ஒரு கட்டுரையில் விவரம் எழுதியிருக்கிறேன்.

ஆனால் இங்கு குறிப்பிட விரும்புவது சாப்பிடும்போது என்ன சுவைகள் எந்த வரிசையில் எடுத்துக் கொண்டால் பொதுவாக உடலுக்கு நல்லது என்பதைப் பற்றித் தான். முதலில் இனிப்புச்சுவை உள்ள உணவைச் சாப்பிட வேண்டும். அதன்பிறகு உப்பு, புளி, காரம் ஆகிய மூன்று சுவைகளையும் மத்தியில் எடுத்துக் கொள்ளலாம் பிறகு கசப்பு இறுதியாக துவர்ப்பு சுவையுள்ள பொருட்களை எடுப்பது நல்லது. எல்லா உணவிலும் ஆறு சுவைகளும் இருக்கும்படி எடுப்பதே சிறந்தது.


அல்லாஹுவே மிகவும் அறிந்தவன்

 *ஜஸாகல்லாஹ் ஹைரன்*

நிய்யத் (எண்ணம்)மற்றும்கடமையான குளிப்பும்

*🌐🌎மீள் பதிவு🌎🌐* 


*📚📚📚நபி வழியில் தொழுகை சட்டங்கள் என்ற நூலில் இருந்து📚📚📚* 


 *👉👉👉இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்👈👈👈* 


*👩‍🦰👨‍🦰நிய்யத் (எண்ணம்)மற்றும்கடமையான குளிப்பும்👩‍🦰👨‍🦰* 


 *📚📚📚ஆதாபூவமான நபிமொழியில் இருந்து📚📚📚* 


 *✍✍✍முஸ்லிம்கள் எந்த வணக்கத்தைச் செய்வதாக இருந்தாலும் வணக்கம் செய்கின்றோம் என்ற எண்ணத்துடன் தான் செய்ய வேண்டும். இந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது.✍✍✍* 


📕📕📕உடற்பயிற்சி என்பதற்காகவோ, அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவோ தொழுகையில் கடைப்பிடிக்கும் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்கின்றார்; ஆனால் தொழுகின்றோம் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்றால் இவர் தொழுகையை நிறைவேற்றியவராக மாட்டார்.எல்லா வணக்கங்களுக்கும் நிய்யத் எனும் எண்ணம் அவசியம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.
‘அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📕📕📕

 *அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)* 

 *நூல்கள்: புகாரீ 1, முஸ்லிம் 3530* 


 *✍✍✍நிய்யத் என்பதை முஸ்லிம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். குறிப்பிட்ட வார்த்தைகளை அரபு மொழியில் வாயால் மொழிவது தான் நிய்யத் என்று எண்ணுகின்றனர்.* 
 *உஸல்லீ ஸலாத்தஸ் ஸுப்ஹி… என்பன போன்ற சில அரபிச் சொற்களைக் கூறுவது தான் நிய்யத் என்று கருதுகின்றனர். இதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.✍✍✍* 


📘📘📘நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும்.
மேலும் உளூச் செய்யும் போதோ, தொழும் போதோ, நோன்பு நோற்கும் போதோ நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாயால் மொழிந்து விட்டுச் செய்ததில்லை.
ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மட்டுமே வாயால் மொழிந்துள்ளனர். மற்ற எந்த வணக்கத்திற்கும் வாயால் மொழிந்ததில்லை.
நான் இப்போது தொழப் போகின்றேன் என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. அவ்வாறு மொழிவது பித்அத் ஆகும். இது அவசியம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வாயால் மொழிந்து நமக்கு வழி காட்டியிருப்பார்கள்.📘📘📘


 *🌐கடமையான குளிப்பு🌎*


 *✍✍✍உளூச் செய்யும் அவசியம் ஏற்படும் போது உளூச் செய்து விட்டுத் தான் தொழ வேண்டும் என்பது போல, குளிக்கும் அவசியம் ஏற்பட்டால் குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும். குளிப்பு கடமையானவர்கள் குளிக்காமல் தொழக் கூடாது.* 
 *ஒரு மனிதன் குளிப்பது எப்போது கடமையாகும்? குளிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் யாவை?என்பதைக் காண்போம்✍✍✍* .


 *🌐உடலுறவு குளிப்பைக் கடமையாக்கும்🌐* 


📙📙📙ஆணும், பெண்ணும் உடலுறவு கொண்டால் இருவர் மீதும் குளிப்பது கடமையாகி விடும். குளித்து விட்டுத் தான் அவர்கள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.
‘ஒரு ஆண் தனது மனைவியின் கால்களுக்கிடையே அமர்ந்து பின்னர் முயற்சி செய்தால் குளிப்பு கடமையாகி விடும்’என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📙📙📙

 *அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)* 

 *நூல்கள்: புகாரீ 291, முஸ்லிம் 525* 


 *👆👆👆முஸ்லிமின் 525 அறிவிப்பில் விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பது கடமை என்ற வாக்கியம் மேலதிகமாக இடம் பெற்றுள்ளது.👈👈👈* 

 *🌐தூக்கத்தில் விந்து வெளிப்படுதல்🌐* 


 *✍✍✍பெரும்பாலும் ஆண்களுக்கும் மிகச் சில பெண்களுக்கும் தூக்கத்தின் போது விந்து வெளிப்படுவதுண்டு. சில நேரங்களில் விந்து வெளிப்படுவது போன்ற கனவுகள் ஏற்படும். ஆனால் விழித்துப் பார்த்தால் விந்து வெளிப்பட்டதற்கான எந்த அடையாளமும் ஆடையில் இருக்காது.* 
 *விந்து வெளிப்பட்டது உறுதியாகத் தெரிந்தால், ஆடையில் அதற்கான அடையாளம் இருந்தால் குளிப்பது கடமையாகி விடும். குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும்✍✍✍* .


📗📗📗விந்து வெளிப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டு அதற்கான எந்த அடையாளமும் தெரியாவிட்டால் குளிப்பது கடமையில்லை.
‘அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசுவதில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் விந்து வெளிப்பட்டால் அவள் குளிப்பது அவசியமா?’ என்று உம்மு சுலைம் (ரலி) என்ற பெண்மணி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘விந்து வெளிப்பட்டதை அவள் கண்டால் குளிப்பது அவசியம்’ என்று விடையளித்தார்கள். இதைக் கேட்ட உம்மு ஸலமா (ரலி) அவர்கள், ‘பெண்களுக்கும் விந்து வெளிப்படுமா?’ என்று கேட்டு விட்டுச் சிரித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘சில நேரங்களில் தாயைப் போல் குழந்தை எப்படிப் பிறக்கின்றது?’ என்று திருப்பிக் கேட்டார்கள்.📗📗📗

 *அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)* 

 *நூல்கள்: புகாரீ 3328, முஸ்லிம் 471* 


 *✍✍✍நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு அருகில் நான் வசித்தேன். அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவேன். நபி (ஸல்) அவர்கள் உள்ளே வந்த போது, ‘அல்லாஹ்வின் தூதரே! தன் கணவன் தன்னுடன் உடலுறவு கொள்வது போல் ஒரு பெண் கனவு கண்டால் அவள் குளிக்க வேண்டுமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘விந்து வெளிப்பட்டதைக் கண்டால் அவள் குளிக்க வேண்டும்’ என்று விடையளித்தார்கள்.✍✍✍* 

 *அறிவிப்பவர்: உம்மு சுலைம் (ரலி)* 

 *நூல்: அஹ்மத் 25869* 


📒📒📒விந்து வெளிப்பட்டால் தான் குளிப்பது கடமை என்பதையும், விந்து வெளிப்படுவது போல் தோன்றினால் குளிப்பது கடமையில்லை என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.📒📒📒


 *🌎மாதவிடாய் நின்றதும் குளிப்பது அவசியம்🌎*


 *✍✍✍மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழக் கூடாது என்பதை நாம் அறிவோம். மாதவிடாய் நின்றவுடன் அவர்கள் குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும்.* 
 *அபூஹுபைஷ் என்பாரின் மகள் ஃபாத்திமா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். ‘அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர் இரத்தப் போக்கிலிருந்து சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(தொழுகையை விடக்) கூடாது. அது ஒரு நோய் தானே தவிர மாதவிடாய் அல்ல! எனவே மாதவிடாய் வரும் போது (மட்டும்) தொழுகையை விட்டு விடு! மாதவிடாய் நின்றதும் குளித்து விட்டுத் தொழு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍✍✍* 

 *அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)* 

 *நூல்: புகாரீ 320* 


 *👆👆👆மாதவிடாய் நின்றதும் குளித்து விட்டுத் தொழ வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.👈👈👈* 


 *🌐🌐ஜும்ஆவுக்கு முன் குளிப்பது அவசியம்🌎🌎* 


📓📓📓வெள்ளிக்கிழமை குளிப்பது கட்டாயக் கடமையாகும். இது பற்றி மிகத் தெளிவான கட்டளை நபி (ஸல்) அவர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘பருவ வயது அடைந்த ஒவ்வொருவர் மீதும் வெள்ளிக்கிழமை குளிப்பது (வாஜிப்) கட்டாயக் கடமை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📓📓📓

 *அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)* 

 *நூல்கள்: புகாரீ 858, 879, 880, 895, 2665, முஸ்லிம் 1397* 


📔📔📔வெள்ளிக்கிழமை குளிப்பது அவசியம் என்று பொதுவாகக் கூறப்படுவதால் வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆவுக்குப் பின்னர் கூட குளிக்கலாம் என்று கருதக் கூடாது. ஏனெனில் வேறு ஹதீஸ்களில் ஜும்ஆவுக்கு முன்னரே குளித்து விட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
‘உங்களில் ஒருவர் ஜும்ஆவுக்கு வருவதாக இருந்தால் அவர் குளித்து விடட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📔📔📔

 *அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)* 

 *நூல்: புகாரீ 877* 


 *👉👉👉எனினும், குளிக்க இயலாவிடில் தொழுகை கூடும்.👈👈👈* 


 *🌐🌎குளிக்கும் முறை🌎🌐*


 *👉👉👉மர்மஸ்தானத்தையும், உடலில் பட்ட அசுத்தத்தையும் கழுவுதல்👈👈👈* 


 *✍✍✍கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது, தாம்பத்தியத்தின் மூலம் உடலில் பட்ட அசுத்தங்களையும், மர்ம ஸ்தானத்தையும் முதலில் கழுவ வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்* .
*நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது (முதலில்) தங்கள் மர்மஸ்தானத்தைக் கையினால் கழுவினார்கள். பின்னர் கையைச் சுவற்றில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் தொழுகைக்குரிய உளூவைச் செய்தார்கள். குளித்து முடித்து, இரு கால்களையும் கழுவினார்கள்✍✍✍* .

 *அறிவிப்பவர்: மைமூனா (ரலி)* 

 *நூல்கள்: புகாரீ 260, முஸ்லிம் 476* 


🕋🕋🕋வலது கையால் இடது கையில் தண்ணீர் ஊற்றி, இடது கையால் மர்மஸ்தானத்தைக் கழுவுவார்கள் என்று *புகாரீ259* வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.🕋🕋🕋


 *உளூச் செய்தல்* 


📕📕📕கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது, அதற்கு முன்னர் உளூச் செய்வது நபிவழியாகும். அவ்வாறு உளூச் செய்யும் போது, கால்களை மட்டும் கடைசியாக (குளித்து முடிக்கும் போது) கழுவுவதும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்.
நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தமது கைகளைக் கழுவிக் கொண்டு, தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்வார்கள்.📕📕📕

 *அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)* 

 *நூல்கள்: புகாரீ 248, முஸ்லிம் 475* 


 *✍✍✍குளித்து முடித்ததும் தாம் நின்ற இடத்தை விட்டு சற்று விலகி, இரு கால்களையும் நபி (ஸல்) அவர்கள் கழுவுவார்கள்.✍✍✍* 

 *அறிவிப்பவர்: மைமூனா (ரலி)* 

 *நூல்கள்: புகாரீ 249, முஸ்லிம் 476* 


 *🌐தலையைக் கோதி விட்டுப் பின்னர் குளித்தல்🌐* 


📘📘📘நபி (ஸல்) அவர்கள் கைகளைத் தண்ணீரில் நனைத்து, ஈரக் கையால் தலையின் அடிப் பாகத்தைக் கோதி விட்டுப் பின்னர் மூன்று தடவை தலையில் தண்ணீரை ஊற்றுவார்கள்.📘📘📘

 *அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)* 

 *✍நூல்கள்: புகாரீ 248, முஸ்லிம் 474                                      ….பின்னர் தமது கையால் தலை முடியைக் கோதுவார்கள். முடியின் அடிப்பாகம் நனைந்து விட்டது என்று அவர்கள் நினைக்கும் போது மூன்று தடவை தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள்.✍* 

 *அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)* 

 *நூல்கள்: புகாரீ 273, முஸ்லிம் 474* 


 *👉👉👉இரண்டு, மூன்று தடவை தண்ணீர் ஊற்றுவது போதும்👈👈👈* 


📙📙📙கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்கு மணிக் கணக்கில் தண்ணீரில் ஊற வேண்டும் என்பது அவசியமில்லை. மாறாக மூன்று தடவை தலையில் தண்ணீர் ஊற்றிய பின்னர் உடல் முழுவதும் ஊற்றிக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது இரு கைகளிலும் தண்ணீரைச் சாய்த்து இரண்டு தடவைகள் அல்லது மூன்று தடவைகள் கைகளைக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையால் இடது கை மீது தண்ணீரைச் சாய்த்து தமது மர்மஸ்தானத்தைக் கழுவினார்கள். பின்னர் தமது கையைத் தரையில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தார்கள். பின்னர் முகத்தையும், கைகளையும் கழுவினார்கள். தமது தலையை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் உடலில் ஊற்றினார்கள். பின்னர் தாம் நின்ற இடத்திலிருந்து விலகி கால்களைக் கழுவினார்கள்.📙📙📙

 *அறிவிப்பவர்: மைமூனா (ரலி)* 

 *நூல்கள்: புகாரீ 257, முஸ்லிம் 476* 


 *✍✍✍நமது முடிகளில் ஒன்றிரண்டு நனையாமல் இருக்குமோ என்று சில பேர் எண்ணிக் கொண்டு குடம், குடமாகத் தண்ணீரை ஊற்றுவார்கள். இவ்வாறு அதிகம் அலட்டிக் கொள்வது தேவையில்லை.* 
 *நபி (ஸல்) அவர்கள் செய்தது போல் ஈரக் கையால் தலையின் அடிப் பாகத்தில் தடவிக் கோதிய பின் மூன்று தடவை தலையின் மீது தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும். இதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறியலாம். இது பற்றி இன்னும் தெளிவாக ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.✍✍✍* 


📗📗📗நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் குளிக்கும் முறை பற்றி சிலர் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சிலர், ‘நான் என் தலையை இப்படி, இப்படியெல்லாம் (தேய்த்துக்) கழுவுவேன்’ என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘நான் மூன்று கை தண்ணீர் எடுத்து என் தலையில் ஊற்றிக் கொள்வதோடு சரி’ என்று குறிப்பிட்டார்கள்.📗📗📗

 *அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)* 

 *நூல்: முஸ்லிம் 493* 


‘ *✍✍✍நானோ இரண்டு கைகளாலும் தண்ணீர் எடுத்துத் தலையில் ஊற்றிக் கொள்வதோடு சரி’ என்று நபி (ஸல்) கூறியதாக புகாரீ 254 அறிவிப்பில் உள்ளது.* 
 *கடமையான குளிப்பு அல்லாத சாதாரண குளிப்பைப் பற்றியதாக இது இருக்குமோ என்று சிலர் நினைக்கக் கூடும். முஸ்லிமில் இடம் பெற்ற (494வது) ஹதீஸில் கடமையான குளிப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாகக் கூறப்பட்டுள்ளது✍✍✍* .

 *👆👆👆எனவே கடமையான குளிப்புக்கும் இவ்வாறு செய்யலாம் என்பதில் ஐயமில்லை.👈👈👈* 


 *🌐பெண்கள் சடைகளை அவிழ்க்க வேண்டுமா❓🌎*


📒📒📒பின்னப்பட்ட சடைகளை அவிழ்த்து விட்டுத் தான் கடமையான குளிப்பை நிறைவேற்ற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அது தவறாகும். ஹதீஸ்களை ஆராயும் போது முடிக்குக் கீழே உள்ள தோல் தான் கட்டாயமாக நனைய வேண்டுமே தவிர ஒவ்வொரு முடியும் நனைய வேண்டும் என்பது கட்டாயமில்லை என்பதை அறியலாம்.📒📒📒


 *✍✍✍நபி (ஸல்) அவர்கள் ஈரக் கையால் தலையின் அடிப்பாகத்தைத் தேய்ப்பார்கள் என்றும் அடிப்பாகம் நனைந்து விட்டது என்று நினைக்கும் போது தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள் என்றும் கூறப்பட்ட விளக்கத்திலிருந்து இதை அறியலாம்.* 
 *இதை இன்னும் தெளிவாகவே விளக்கும் ஹதீஸ்களும் உள்ளன.✍✍✍* 


📓📓📓‘அல்லாஹ்வின் தூதரே! நான் தலையில் சடை போட்டிருக்கிறேன். கடமையான குளிப்புக்காக நான் சடையை அவிழ்க்க வேண்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘வேண்டியதில்லை; உன் தலையில் மூன்று தடவை தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும்; பின்னர் உன் மீது தண்ணீரை ஊற்றிக் கொள்; நீ தூய்மையாகி விடுவாய்’ என்று கூறினார்கள்.📓📓📓

 *அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)* 

 *நூல்: முஸ்லிம் 497* 


 *✍✍✍எனவே தலையின் அடிப்பாகம் நனைவது தான் கட்டாயமானது. மேலே உள்ள முடிகள் நனையாமல் இருப்பதால் குளிப்புக்கு எந்தக் குறைவும் ஏற்படாது.* 
 *சடையை அவிழ்க்காமல் குளிக்கும் போது, பாதிக்கு மேற்பட்ட முடிகள் நனைவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தும் சடையை அவிழ்க்கத் தேவையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.✍✍✍* 

அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்

 *ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

நன்மைகளை - 2

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

    *🍃நன்மைகளை*
               *நாசமாக்கும்*
                     *நச்சுப் பண்புகள்!🍃*

              *✍🏻....தொடர் { 02 }*

          *☄ பித்அத் ☄*

*🏮🍂அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பழுக்கற்ற விதத்திலே வாழ்ந்து வியப்பிற்குரிய வாழ்வியல் திட்டத்தை நம்மிடத்திலே சமர்பித்துச் சென்றுள்ளார்கள். அவர்களுடைய வாழ்வின் அடிப்படையில் நமது அமல்களை அமைத்துக்கொண்டால் தான் மறுமையிலே அவை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அருகதையானதாக இருக்கும்.* இல்லையெனில் அல்லாஹ்விடத்திலே அவை மதிப்பற்றதாக கருதப்பட்டு தூக்கியெறியப்பட்டுவிடும்.

_இதை நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:_

*عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ*

_*🍃நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப் பட்டதாகும்.*_

*🎙அறிவிப்பவர்:*
                *ஆயிஷா (ரலி),*

       *📚 நூல்: புகாரி (3697) 📚*


3243 *قَالَ أَخْبَرَتْنِي عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ* رواه مسلم

_*🍃நம்முடைய கட்டளையின்றி எவரேனும் அமலைச் செய்தால் அது மறுக்கப் பட்டதாகிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
                *ஆயிஷா (ரலி),*

*📚நூல்: முஸ்லிம் (3243)📚*

*🏮🍂அநேகமான முஸ்லிம்கள் அண்ணலாரின் வழிமுறையை சரியான முறையில் அறியாமல் அவருக்கு நேர்மாற்றமாக பல வணக்கவழிபாடுகளை செய்வதோடு அவர்களுடைய சொல் செயல் அங்கீகாரமின்றி பல காரியங்களை நன்மை கிடைக்குமெனக் கருதி செய்து கொண்டிருக்கிறார்கள்.*

*🏮🍂உதாரணமாக மவ்லூது மீலாது விழா, பாத்திஹா, ஹுஸைன் (ரலி) நோன்பு, கந்தூரி விழா மற்றும் பஞ்சா எடுத்தல் இதுபோன்ற காரியங்களை மார்க்கத்தின் பெயரால் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மறுமையிலே இந்த நூதனமான காரியங்களுக்கு நன்மை கிடைக்காததோடு இவை நரகத்திலே தள்ளக் கூடிய வழிகேடுகள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.*

*وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ* رواه النسائي

_*🍃செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மதின் வழியாகும். காரியங்களில் மிகக் கெட்டது புதிதாக ஏற்படுத்தப்பட்டதாகும். புதிதாக ஏற்படுத்தப்பட்டவை அனைத்தும் வழிகேடாகும் வழிகேடு அனைத்தும் நரகத்திற்குரியவையாகும்.*_

*🎙அறிவிப்பவர்:*
                  *ஜாபிர் (ரலி),*

   *📚 நூல்: நஸயீ (1560) 📚*

*🏮🍂எனவே, நமது அமல்கள் மகிழ்ச்சியான சுவர்க்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடியதாக இருக்க வேண்டுமெனில் அவற்றை நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி அமைத்துக் கொள்ளவேண்டும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Sunday, January 19, 2020

நன்மைகளை - 2

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

    *🍃நன்மைகளை*
               *நாசமாக்கும்*
                     *நச்சுப் பண்புகள்!🍃*

              *✍🏻....தொடர் { 02 }*

          *☄ பித்அத் ☄*

*🏮🍂அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பழுக்கற்ற விதத்திலே வாழ்ந்து வியப்பிற்குரிய வாழ்வியல் திட்டத்தை நம்மிடத்திலே சமர்பித்துச் சென்றுள்ளார்கள். அவர்களுடைய வாழ்வின் அடிப்படையில் நமது அமல்களை அமைத்துக்கொண்டால் தான் மறுமையிலே அவை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அருகதையானதாக இருக்கும்.* இல்லையெனில் அல்லாஹ்விடத்திலே அவை மதிப்பற்றதாக கருதப்பட்டு தூக்கியெறியப்பட்டுவிடும்.

_இதை நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:_

*عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ*

_*🍃நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப் பட்டதாகும்.*_

*🎙அறிவிப்பவர்:*
                *ஆயிஷா (ரலி),*

       *📚 நூல்: புகாரி (3697) 📚*


3243 *قَالَ أَخْبَرَتْنِي عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ* رواه مسلم

_*🍃நம்முடைய கட்டளையின்றி எவரேனும் அமலைச் செய்தால் அது மறுக்கப் பட்டதாகிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
                *ஆயிஷா (ரலி),*

*📚நூல்: முஸ்லிம் (3243)📚*

*🏮🍂அநேகமான முஸ்லிம்கள் அண்ணலாரின் வழிமுறையை சரியான முறையில் அறியாமல் அவருக்கு நேர்மாற்றமாக பல வணக்கவழிபாடுகளை செய்வதோடு அவர்களுடைய சொல் செயல் அங்கீகாரமின்றி பல காரியங்களை நன்மை கிடைக்குமெனக் கருதி செய்து கொண்டிருக்கிறார்கள்.*

*🏮🍂உதாரணமாக மவ்லூது மீலாது விழா, பாத்திஹா, ஹுஸைன் (ரலி) நோன்பு, கந்தூரி விழா மற்றும் பஞ்சா எடுத்தல் இதுபோன்ற காரியங்களை மார்க்கத்தின் பெயரால் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மறுமையிலே இந்த நூதனமான காரியங்களுக்கு நன்மை கிடைக்காததோடு இவை நரகத்திலே தள்ளக் கூடிய வழிகேடுகள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.*

*وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ* رواه النسائي

_*🍃செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மதின் வழியாகும். காரியங்களில் மிகக் கெட்டது புதிதாக ஏற்படுத்தப்பட்டதாகும். புதிதாக ஏற்படுத்தப்பட்டவை அனைத்தும் வழிகேடாகும் வழிகேடு அனைத்தும் நரகத்திற்குரியவையாகும்.*_

*🎙அறிவிப்பவர்:*
                  *ஜாபிர் (ரலி),*

   *📚 நூல்: நஸயீ (1560) 📚*

*🏮🍂எனவே, நமது அமல்கள் மகிழ்ச்சியான சுவர்க்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடியதாக இருக்க வேண்டுமெனில் அவற்றை நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி அமைத்துக் கொள்ளவேண்டும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

பெண்களுக்கு ஸீமந்தம்

*⛱⛱மீள் பதிவு⛱⛱* 

*🧕🧕🧕பெண்களுக்கு ஸீமந்தம் ஒரு பிதாஅத் வழிகேடு🧕🧕🧕* 


*பெண்ணுக்கு வளைகாப்பு(ஸீமந்தம்) மாற்று மத கலாச்சாரம்*


கருவுற்ற பெண்ணுக்கு சீமந்தம் (வளைகாப்பு) என்பது ஏன் செய்கின்றார்கள் என்ற கேள்வி என் மனதில் எழுந்ததுண்டு. அதற்கான ஒரு விளக்கம் கீழே உள்ள தினமலரில் வெளியான ஒரு கட்டுரையின் மூலம் எனக்கு கிடைத்தது.
 
முழுக்க முழுக்க இந்துகளின் மாத நம்பிக்கையின் ஒரு பங்காக தோன்றிய இந்த ஒரு சடங்கு, ஓர் இறை கொள்கையை முன்வைக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் மக்கள் சிலரிடமும் வந்தது எப்படி என்பது மட்டும் தான் எனக்கு இன்னும் தெரியவில்லை.
 
முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஒரு சிலரும் இந்த வளைகாப்பு விஷயத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகவும், இந்த சடங்கை நிறைவேற்றினால் தான் குழந்தை நல்லாவிதமாக பிறக்கும் என்று நம்பிக்கை கொண்டவர்களாகவும், இது நாள்வரையும் இந்த சடங்கை செய்கின்றனர்.

இவைகள் அனைத்தும் மாற்று மதத்தினருடைய கலாச்சாரம் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும். எனவே மாற்று மதக்காலச்சாரத்தை நாம் செய்யக்கூடாது காரணம் :

யார் மாற்று மத கலாச்சாரத்திற்கு ஒப்பாகிறாரோ அவர் நம்மைச்சார்ந்தவரல்ல என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

 *அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி) நூல் : அபூதாவூது (3515)* 

 
 *இத்தகையோர் சிந்திக்க வேண்டும்.............................* 

 
நன்மையும் தீமையும் அல்லாஹுவை அன்றி வேறு எதனை கொண்டும் நடப்பதில்லை என்று முழங்கிவிட்டு , வளைகாப்பு செய்வது தான் குழந்தையை நல்ல முறையில் பிறக்க வைக்கும் என்று நம்பினால், அடிப்படையிலேயே தவறு இருப்பது தெரியவில்லையா ???
 
 
ஒரு வேலை " *லா ஹவ்ல வாலா கூவத இல்லா பில்லாஹ்"* என்று அரபியில் அர்த்தம் விளங்காமல் சொல்வதால் தான் இந்த தடுமாற்றமோ??
 
இதுவரை எந்த நோக்கத்தில் செய்திருந்தாலும், வளைகாப்பின் உண்மை அர்த்தமும் தோற்றமும் தெளிவாக தெரிந்த பின்பாவது இந்த சமுதாயம் இந்த தவறில் இருந்து விலகி தவ்பா செய்தால் அல்லாஹுவின் அருளை பெற்ற நல்லதொரு சமுதாயமாக நாம் மாறமுடியும். எல்லாம் வல்ல இறைவன் அத்தகைய அருளை பெற்ற நல்ல மக்களாக உங்களையும் என்னையும் ஆக்கி, ஷிர்க் என்னும் கொடும் பாவத்தில் இருந்து விலகி வாழக்கூடியவர்களாக நாம் அணைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!!!!!!

அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்

 *ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

நேர்ச்சையின் சட்டங்கள் ஓர் ஆய்வு🔰🔰🔰*

*🏓🏓மீள் பதிவு🏓🏓* 


 *🌐இது ஒரு நீண்ட கட்டுரை🌎* 


 *🔰🔰🔰நேர்ச்சையின் சட்டங்கள் ஓர் ஆய்வு🔰🔰🔰*


 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஆதாபூர்வமான📚📚📚 நபிமொழியில் இருந்து📚📚📚*


 *நேர்ச்சையின் சட்டங்கள்!* 

நேர்ச்சை செய்வது, சத்தியம் செய்வது குறித்த சட்டங்கள் பற்றி முஸ்ம் சமுதாயத்தில் அதிக அளவில் அறியாமை நிலவுகின்றது.

இஸ்லாத்தில் நேர்ச்சை செய்வதும், சத்தியம் செய்வதும் ஏறக் குறைய ஒரே விதமான சட்டங்களைக் கொண்டுள்ளன. ஆயினும் சில விஷயங்களில் இவ்விரண்டின் சட்டங்களும் வேறுபடுகின்றன.

 *நேர்ச்சையைத் தவிர்ப்பது நல்லது* 

‘இறைவா! எனக்கு ஏற்பட்டுள்ள இந்தத் துன்பம் விலகினால், அல்லது இது வரை கிடைக்காமல் இருக்கின்ற பாக்கியம் எனக்குக் கிடைத்தால் உனக்காக நான் தொழுகிறேன்; நோன்பு நோற்கிறேன்; ஏழைகளுக்கு உதவுகிறேன்’ என்றெல்லாம் மனிதர்கள் நேர்ச்சை செய்கின்றனர்.

இவ்வாறு நேர்ச்சை செய்வதை இஸ்லாம் அனுமதித்தாலும் நேர்ச்சை செய்யாமல் இருப்பதே உயர்ந்த நிலை என்று அறிவிக்கிறது.

‘இறைவா! நீ எனக்காக இதைச் செய்தால் நான் உனக்காக இதைச் செய்வேன்’ என்று கூறுவது இறைவனிடம் பேரம் பேசுவது போல் அமைந்துள்ளது. நாம் இறைவனுக்காக எதைச் செய்வதாக நேர்ச்சை செய்கிறோமோ அது இறைவனுக்குத் தேவை என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

‘உனக்காக நான் இதைச் செய்கிறேன்’ என்று இறைவனிடம் நாம் கூறும் போது ‘அதற்கு ஆசைப்பட்டு நமது கோரிக்கையை இறைவன் நிறைவேற்றுவான்’ என்ற மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் இது தோற்றமளிக்கின்றது.

எனவே தான் நேர்ச்சை செய்வதைத் தவிர்க்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

நேர்ச்சை செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (இறைவன் விதித்த) எதனையும் நேர்ச்சை மாற்றியமைத்து விடப் போவதில்லை. இதனால் கஞ்சர்களிடமிருந்து (செல்வம்) வெளியே கொண்டு வரப்படும் (என்பதைத் தவிர வேறு பயன் இல்லை) என்றும் கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி). நூல்: புகாரி 6608, 6693* 

நேர்ச்சை எந்த ஒன்றையும் முற்படுத்தவோ, பிற்படுத்தவோ செய்யாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 6692* 

நாம் செய்யும் நேர்ச்சையில் மயங்கி இறைவன் நமது கோரிக்கையை நிறைவேற்ற மாட்டான். அவன் ஏற்கனவே எடுத்திருக்கும் முடிவை நாம் செய்த நேர்ச்சையின் காரணமாக மாற்றவும் மாட்டான் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.

நேர்ச்சையினால் ஏற்படும் ஒரே நன்மை கஞ்சர்களின் பொருளாதாரம் நல்வழியில் செலவிடப்படுவது தான். இறைவனுக்காக தமது பொருளாதாரத்தை வாரி வழங்கும் வழக்கமில்லாத கஞ்சர்கள், நேர்ச்சை செய்து விட்டதால் விபரீதம் ஏதும் ஏற்படக் கூடாது என்ற அச்சத்தினால் பணத்தைச் செலவிட முன் வருவார்கள். இது தான் நேர்ச்சையினால் கிடைக்கும் ஒரே பயன் என்பதையும் மேற்கண்ட நபிமொழிகள் விளக்குகின்றன.

நேர்ச்சை செய்வதைத் தவிர்க்குமாறு இன்னும் ஏராளமான நபிமொழிகள் உள்ளன.


 *🤲🤲🤲பிரார்த்தனை தான் சிறந்த வழி🤲🤲🤲*


அப்படியானால் நமக்கு நேர்ந்துள்ள துன்பங்கள் விலகவும், நமக்குக் கிடைக்காத பேறுகள் கிடைக்கவும் நாம் என்ன தான் செய்ய வேண்டும்?

இது போன்ற சந்தர்ப்பங்களில் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது தான் சிறந்த வழியாகும்.

‘இறைவா! எனக்கு ஏற்பட்ட இந்தத் துன்பத்தை நீ தான் நீக்க வேண்டும். உன்னைத் தவிர நான் வேறு யாரிடம் முறையிடுவேன்?’ என்று கோரிக்கை வைப்பதில் தான் பணிவு இருக்கிறது. இறைவனைப் பற்றிய அச்சமும் இதில் தான் வெளிப்படுகின்றது.

உதாரணமாக இரண்டு ரக்அத்கள் தொழுது, அல்லது நோன்பு நோற்று, அல்லது எழைகளுக்கு உதவி செய்து விட்டு ‘இறைவா! உனக்காக நான் செய்த இந்த வணக்கத்தை ஏற்றுக் கொண்டு எனது துன்பத்தை நீக்குவாயாக’ என்பது போல் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது நேர்ச்சை செய்வதை விடச் சிறந்ததாகும்.

வணக்க வழிபாடுகள் மூலம் தன்னிடம் உதவி தேடுமாறு இறைவன் நமக்கு வழி காட்டுகிறான்.

பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும். 

 *(அல்குர்ஆன் 2:45)* 

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

 *(அல்குர்ஆன் 2:153)* 

 

 *⛱⛱நேர்ச்சையை நிறைவேற்றுவது அவசியம்🌈🌈* 

‘நேர்ச்சை செய்வதால் எந்த நன்மையும் ஏற்படாது’ என்றும் ‘நேர்ச்சை செய்யாதீர்கள்’ என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் நேர்ச்சை செய்வது அறவே கூடாது என்று புரிந்து கொள்ளக் கூடாது. அது சிறந்ததல்ல என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததாக வரும் அறிவிப்புகளை இரண்டு வகையாக நாம் பிரிக்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றைத் தடை செய்து விட்டு அதை அனுமதிப்பது போன்ற சொற்கள் எதனையும் பயன்படுத்தாமல் இருந்தால் அந்தத் தடை கண்டிப்பான தடை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் ஒன்றைத் தடை செய்து விட்டு அதை அனுமதிப்பது போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருந்தால் ‘அந்தத் தடை கண்டிப்பானது அல்ல; அதைச் செய்யாமல் இருப்பது சிறந்தது’ என்று அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நேர்ச்சையைப் பொருத்த வரை அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தாலும் அதை அனுமதித்ததற்கும் சான்றுகள் கிடைக்கின்றன. எனவே நேர்ச்சை செய்வது அறவே தடை செய்யப்பட்டது அல்ல என்று தான் முடிவு செய்ய வேண்டும்.

மேலும் நேர்ச்சை செய்து விட்டால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.

நீங்கள் எதையேனும் (நல் வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை. 

 *(அல்குர்ஆன் 2:270)* 

அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள்.

 *(அல்குர்ஆன் 76:7)* 

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.

 *(அல்குர்ஆன் 22:29)* 

‘உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் மோசடி செய்வார்கள். நாணயமாக நடக்க மாட்டார்கள். சாட்சி கூற அழைக்கப்படாமலே சாட்சி கூறுவார்கள். நேர்ச்சை செய்து விட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பார்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல்: புகாரி 2651, 3650, 6428, 6695* 

மேற்கண்ட வசனங்களும் நபிமொழியும் நேர்ச்சையை அனுமதிக்கும் வகையில் அமைந்துள்ளன. மேலும் நேர்ச்சை செய்தால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் மேற்கண்ட வணக்கங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

 
 *🕋🕋🕋நேர்ச்சைகள் யாவும் அல்லாஹ்வுக்கே!🕋🕋🕋*


 *நேர்ச்சை என்பது இஸ்லாத்தில் ஓர் வணக்கமாகும்.* 

மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனங்களில் நேர்ச்சையை நிறைவேற்றுமாறு இறைவன் வலியுறுத்துவதாலும், மறுமையை நம்புவோர் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள் என்று கூறுவதாலும், கஅபாவைத் தவாஃப் செய்வதுடன் இணைத்து நேர்ச்சை குறிப்பிடப்படுவதாலும் நேர்ச்சை ஓர் வணக்கம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

எல்லாவிதமான வணக்கங்களையும் இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். இறைவனைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

தமிழக முஸ்லிம்களில் பலர் நேர்ச்சையை இறை வணக்கம் என்று விளங்காத காரணத்தால் இறந்து போன மனிதர்களுக்கு நேர்ச்சை செய்து வருகின்றனர்.

இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையான எச்சரிக்கை செய்துள்ளனர்.

புவானா என்ற இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிடு வதாக நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரு மனிதர் நேர்ச்சை செய்தார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! நான் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன்’ என்று தெரிவித்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அறியாமைக் காலத்தில் வழிபாடு நடத்தப்படும் சிலைகள் ஏதும் அங்கே உள்ளனவா?’ எனக் கேட்டார்கள். இல்லை’ என்று நபித்தோழர்கள் விடையளித்தனர். ‘அறியாமைக் கால திருவிழாக்கள் ஏதும் அங்கே நடக்குமா?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். நபித்தோழர்கள் இல்லை’ என்று விடையளித்தனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக! ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விஷயத்திலும், தன் கைவசத்தில் இல்லாத விஷயத்திலும் நேர்ச்சை இல்லை’ என்று கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி) நூல்: அபூதாவூத் 2881* 

இந்த நிகழ்ச்சியில் சம்மந்தப்பட்ட மனிதர் அல்லாஹ்வுக்காகத் தான் நேர்ச்சை செய்தார். ஆனால் குறிப்பிட்ட இடத்தில் அந்த வணக்கத்தை நிறைவேற்றுவதாக நேர்ச்சை செய்தார். அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்த எடுப்பிலேயே இதை அனுமதிக்கவில்லை. அல்லாஹ்வுக்குச் செய்த நேர்ச்சையானாலும் மற்றவர்களுக்காகச் செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் கூட ஏற்படக் கூடாது என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.

நாகூரில் அடக்கம் செய்யப்பட்டுள்ள பெரியாருக்காக நேர்ச்சை செய்வது கூடாது என்பதைப் போலவே அல்லாஹ்வுக்காகச் செய்யப்பட்ட நேர்ச்சையைக் கூட நாகூரில் வைத்து நிறைவேற்றக் கூடாது என்பதை இந்த நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். ஏனெனில் நாகூர் எனும் ஊர் அறியாமைக் கால வழிபாடு நடக்கும் இடமாக அமைந்துள்ளது.

அங்கே போய் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிட்டாலும் அது நாகூரில் அடக்கம் செய்யப்பட்டவருக்கு பலியிடப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும்.

‘நான் எனது மூன்று ஒட்டகங்களை அறுத்துப் பலியிடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கூறினேன். அதற்கவர்கள் ‘அறியாமைக் காலத்தவர் ஒன்று கூடும் இடமாக அது இருந்தால், அல்லது அறியாமைக் காலத்தவர் பண்டிகை கொண்டாடும் இடமாக இருந்தால், அல்லது வழிபாடு செய்யப்படுபவை அமைந்துள்ள இடமாக இருந்தால் அந்த இடத்தில் உன் நேர்ச்சையை நிறைவேற்றாதே! அவ்வாறு இல்லாதிருந்தால் உனது நேர்ச்சையை நிறைவேற்று’ என்று கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: கர்தமா (ரலி) நூல்: அஹ்மத் 16012, 22112* 

அல்லாஹ்வுக்காக மட்டும் தான் நேர்ச்சை செய்ய வேண்டும் என்பதையும் அல்லாஹ் அல்லாதவருக்குச் செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுத்தும் இடத்தில் அதை நிறைவேற்றக் கூடாது என்பதையும் இந்த நிகழ்ச்சி நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய நேர்ச்சையை மற்றவர்களுக்குச் செய்தால் ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை’ என்ற உறுதிமொழியை மீறுவதாகும். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதுமாகும்.

அந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் மறுமையில் அறவே வெற்றி பெற முடியாது என்பதை மனதில் வைக்க வேண்டும்.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

 *(அல்குர்ஆன் 4:48)* 

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.

 *(அல்குர்ஆன் 4:116)* 

மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்’ எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். ‘இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் கூறினார். 

 *(அல்குர்ஆன் 5:72)* 

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும். (அல்குர்ஆன் 6:88)

‘நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!’ என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

 *(அல்குர்ஆன் 39:65, 66)* 


 *🌐🌎அறியாமல் செய்த நேர்ச்சைகள்🌐🌎* 

மார்க்கத்தைச் சரியாக அறிந்து கொள்ளாத நிலையில் ஒருவர் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு நேர்ச்சை செய்திருந்தால் என்ன செய்ய வேண்டும்? என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.

இதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக நமக்கு வழி காட்டியுள்ளனர்.

‘அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு வழிப்படட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்தாக நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்ய வேண்டாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)* 

 *நூல்: புகாரி 6696, 6700* 

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு ஒருவர் நேர்ச்சை செய்தால் அதை விடப் பெரிய பாவம் ஏதும் இருக்க முடியாது. எனவே இவ்வாறு நேர்ச்சை செய்தவர்கள் அதை நிறைவேற்றக் கூடாது.


 *🔴🔵எவற்றை நேர்ச்சை செய்யலாம்❓🔵🔴* 

‘நாம் எந்த நேர்ச்சை செய்வதாக இருந்தாலும் அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்ய வேண்டும்’ என்பதைச் சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் நினைக்கின்ற எந்தக் காரியத்தை வேண்டுமானாலும் நேர்ச்சை செய்ய இஸ்லாத்தில் அனுமதியில்லை.

இறைவனுக்காக நாம் செய்யும் நேர்ச்சைகள் இரண்டு தன்மைகளில் அமைந்திருக்க வேண்டும்.

 *1. இறைவன் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்ற வணக்கங்களில் ஒன்றாக அது அமைந்திருக்க வேண்டும்.* 

 *2. அல்லது மனித சமுதாயத்துக்கு உதவும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.* 

இந்த இரண்டு தன்மைகளில் இல்லாத எந்தக் காரியத்தையும் நாம் நேர்ச்சை செய்ய முடியாது.

உதாரணமாக இரண்டு ரக்அத் தொழுதல், ஐந்து நாட்கள் நோன்பு நோற்றல் போன்ற காரியங்களை நேர்ச்சையாகச் செய்யலாம். ஏனெனில் இவை மார்க்கத்தில் வணக்கம் என்று கூறப்பட்டுள்ளன.

அது போல் ஏழைக்கு உணவு அளித்தல், மக்களின் குடிநீர்ப் பஞ்சத்தை நீக்க கிணறு வெட்டுதல் போன்ற காரியங்களையும் நேர்ச்சை செய்யலாம். ஏனெனில் இவை மனித குலத்துக்கு நன்மை தரக் கூடியவையாகும்.

இவ்வாறு இல்லாத எந்த ஒன்றையும் நேர்ச்சை செய்யக் கூடாது. இவ்விரு அம்சங்களில் அடங்காத பல நேர்ச்சைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.


 *🌎🌎மௌன விரதம்🌎🌎*


‘எனக்கு இந்தக் காரியம் நிறைவேறினால் நான் இரண்டு நாட்களுக்கு எதையும் பேச மாட்டேன்’ என்று மௌன விரதம் இருக்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது.

ஒருவர் மௌனமாக இருப்பது வணக்க முறையில் ஒன்றாக அமைந்திருக்கவில்லை. மேலும் இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

முந்தைய சமுதாய மக்களுக்கு மௌன விரதம் என்பது ஒரு வணக்கமாக ஆக்கப்பட்டிருந்தது. மர்யம் (அலை) அவர்கள் மௌன விரதம் இருந்ததாகப் பின் வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் ‘நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்’ என்று கூறுவாயாக!

 *(அல்குர்ஆன் 19:26)* 

இவ்வாறு மௌன விரதம் இருப்பது நமக்குத் தடை செய்யப்பட்டு விட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கள் மத்தியில் ஒரு நாள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பற்றி விசாரித்தனர். ‘அவர் பெயர் அபூ இஸ்ராயீல். அவர் உட்காராமல் நின்று கொண்டிருப்பதாகவும், வெயிலில் நிற்பதாகவும், பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பதாகவும் நேர்ச்சை செய்துள்ளார்’ என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அவரைப் பேசுமாறும், நிழலுக்கு வருமாறும், உட்காருமாறும் நோன்பை (மட்டும்) முழுமைப்படுத்துமாறும் அவருக்குக் கூறுங்கள்’ என்று கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 6704* 

பேசாமல் இருப்பது ஓர் வணக்கமல்ல. அவ்வாறு நேர்ச்சை செய்யக் கூடாது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.


 *👺👺தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்ளுதல்👺👺* 

‘இன்ன காரியம் எனக்கு நிறைவேறினால் நான் ஒற்றைக் காலில் நிற்பேன்; தரையில் புரளுவேன்; செருப்பணியாமல் கொளுத்தும் வெயிலில் நடப்பேன்’ என்றெல்லாம் சிலர் நேர்ச்சை செய்கின்றனர்.

இப்படி தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்ளும் எந்தக் காரியத்தையும் நேர்ச்சை செய்யக் கூடாது. இதை மேற்கண்ட ஹதீஸிலிருந்தும் அறியலாம். மேலும் பல சான்றுகளும் உள்ளன.

ஒரு முதியவர் தனது இரு மகன்கள் தாங்கிக் கொள்ள நடந்து செல்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தனர். ‘இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று விசாரித்தனர். ‘நடந்தே செல்வதாக இவர் நேர்ச்சை செய்து விட்டார்’ என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அந்த மனிதர் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது’ என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு அவருக்குக் கட்டளையிட்டனர்.

 *அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 1865, 6701* 

ஒரு முதியவர் தனது இரண்டு புதல்வர்கள் மீது சாய்ந்து கொண்டு நடந்து செல்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தனர். ‘இவரது நிலைக்கு என்ன காரணம்?’ என்று விசாரித்தனர். ‘இவர் (இவ்வாறு) நேர்ச்சை செய்து விட்டார்’ என்று அவரது இரண்டு மகன்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘பெரியவரே வாகனத்தில் ஏறுவீராக! நீரும், உமது நேர்ச்சையும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை’ என்று கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 3101* 

எனவே நேர்ச்சையின் பெயரால் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்ளக் கூடாது.

வெறுமனே நடப்பதை நேர்ச்சை செய்யாமல் ஒரு வணக்கத்தை நடந்து சென்று நிறைவேற்றுவதாக ஒருவர் நேர்ச்சை செய்தால், நடந்து செல்ல அவருக்குச் சக்தியும் இருந்தால் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பின்வரும் நபிவழியிலிருந்து நாம் அறியலாம்.

என் சகோதரி கஅபா ஆலயத்துக்கு நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இது பற்றி விளக்கம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அவர் (சிறிது தூரம்) நடந்து விட்டு வாகனத்தில் ஏறிக் கொள்ளட்டும்’ என்று விடையளித்தார்கள்.

 *அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: புகாரி 1866* 

அதிக நன்மையை நாடி மூன்று பள்ளிவாசலுக்கு மட்டும் பயணம் செய்வது சிறப்புக்குரியது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். கஅபா, மஸ்ஜிதுன்னபவி, பைத்துல் முகத்தஸ் ஆகியவையே அந்த மூன்று பள்ளிவாசல்கள்.

 *(புகாரி 1189, 1197, 1864, 1996)* 

கஅபா ஆலயம் அந்த மூன்று ஆலயங்களில் ஒன்றாக இருப்பதால் அதற்காகப் பயணம் மேற்கொள்வது மார்க்கத்தில் புனிதமானதாகும்.

ஆயினும் மதீனாவிலிருந்து நடந்தே கஅபா ஆலயம் செல்வது சாதாரணமாக இயலக் கூடிய காரியமல்ல.

எனவே தான் சிறிது தூரம் நடந்து விட்டு பின்னர் வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு கட்டளையிடுகிறார்கள்.


கஅபா ஆலயத்திற்கு நடந்து செல்வதாகச் செய்த நேர்ச்சையைக் கூட அப்படியே நிறைவேற்ற வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) வழிகாட்டுகின்றனர். ஒரு அடையாளத்திற் காகச் சிறிது தூரம் நடப்பதே போதுமானது எனக் கூறி மக்களின் சிரமத்தைக் குறைத்து விட்டனர்.

ஒரு வணக்கத்தை நடந்து சென்று நிறைவேற்றுவதாக நேர்ச்சை செய்தால் சிறிது நடந்து விட்டு பின்னர் வாகனத்தில் ஏறிச் செல்லலாம்.


 *🏓🏓தன் கைவசம் இல்லாததை நேர்ச்சை செய்தல்🏓🏓* 

ஒருவர் நேர்ச்சை செய்வதாக இருந்தால் தனக்கு உடமையான பொருட்களிலும், தன் வைகசம் உள்ள பொருட்களிலும் தான் நேர்ச்சை செய்ய வேண்டும். தன் வைகசம் இல்லாத விஷயங்களில் நேர்ச்சை செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் அது நேர்ச்சையாகாது.

‘தன் கைவசம் இல்லாதவற்றில் ஆதமுடைய மகன் மீது நேர்ச்சை இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)* 

 *நூல்: புகாரி 6047* 

ஒருவன் அன்றாடம் தனது உணவுக்கே சிரமப்படுகிறான் என்றால் நான் நூறு ஏழைகளுக்கு உணவளிப்பேன் என்று நேர்ச்சை செய்யக் கூடாது. இவ்வாறு அவன் நேர்ச்சை செய்யும் போது நூறு ஏழைகளுக்கு உணவளிப்பதற்குத் தேவையான உணவோ, பணமோ கைவசம் இருந்தால் மட்டுமே இவ்வாறு நேர்ச்சை செய்ய வேண்டும்.

ஒருவன் இவ்வாறு நேர்ச்சை செய்யும் போது அவனிடம் நூறு ஏழைகளுக்கு உணவளிக்கும் வசதி இல்லாவிட்டால் அது நேர்ச்சையாகாது. அதை நிறைவேற்றும் அவசியம் இல்லை.

எனக்கு இந்தக் காரியம் நிறைவேறினால் நூறு ஏழைகளுக்கு உணவளிக்கிறேன் என்று ஒருவர் நேர்ச்சை செய்கிறார். இவர் நேர்ச்சை செய்யும் போது அதற்கான வசதிகளுடன் இருக்கிறார். ஆனால் அவர் நினைத்த காரியம் நிறைவேறும் போது வசதியை இழந்து விட்டார் என்றால் இவர் மீது நேர்ச்சையை நிறைவேற்றும் கடமை உண்டு. அதைச் செய்ய இயலாத போது அதற்கான பரிகாரத்தை அவர் செய்ய வேண்டும்.

 *👺செருப்பணியாமல் நடப்பதாக நேர்ச்சை செய்தல்👺* 

இறைவனைத் திருப்திபடுத்துவதாக எண்ணிக் கொண்டு தம்மைத் தாமே வேதனைப்படுத்திக் கொள்வோர் செருப்பணியாமல் இருப்பதையும் நேர்ச்சையாகச் செய்து வருகின்றனர். இதுவும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

என் சகோதரி கஅபா ஆலயத்துக்கு செருப்பு அணியாமல் நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்குமாறு என்னிடம் கூறினார். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டேன். அதற்கவர்கள் (சிறிது நேரம்) நடந்தும் (சிறிது நேரம்) வாகனத்தில் ஏறியும் செல்லட்டும் என்றார்கள்.

 *அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)  நூல்: முஸ்லிம் 3102* 


 *🔴🔴பாவமான காரியங்களைச் செய்வதாக நேர்ச்சை செய்தல்⚫⚫* 


மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியங்களை ஒருவர் நேர்ச்சை செய்தால் அந்த நேர்ச்சையை நிறைவேற்றக் கூடாது. அது நேர்ச்சையாகவும் ஆகாது.

‘அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் விஷயமாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்குக் கட்டுப்படட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்யக் கூடாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்: புகாரி 6696, 6700* 

‘அல்லாஹ்வுக்காக திருடுவேன்; கொள்ளையடிப்பேன்; விபச்சாரம் செய்வேன்’ என்றெல்லாம் யாரும் நேர்ச்சை செய்ய மாட்டார்கள்.

ஆனாலும் நன்மை போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள பல தீமைகள் சமுதாயத்தில் நிலவுகின்றன. இவற்றைச் செய்வ தாக நேர்ச்சை செய்வோர் சமுதாயத்தில் உள்ளனர். இவ்வாறு ஒருவர் நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றக் கூடாது.

மவ்லூது, ஹல்கா, மீலாது, இருட்டு திக்ரு, கத்தம் பாத்திஹாக்கள், கந்தூரி விழாக்கள், கூடு, கொடிமரம் போன்ற காரியங்கள் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும். நபிகள் நாயகம் (ஸல்) காட்டித் தராமல் அவர்களின் காலத்துக்குப் பின் இந்தச் சமுதாயத்தில் நுழைந்து விட்ட அனாச்சாரங்களாகும்.

மேற்கண்ட காரியங்களை அல்லாஹ்வுக்காகச் செய்வதாக ஒருவர் நேர்ச்சை செய்திருந்தால் இக்காரியங்களைச் செய்யக் கூடாது. பாவமான காரியங்களில் நேர்ச்சை கிடையாது என்ற நபிமொழியிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

 *🌎🌎வணக்கமாக இல்லாததை நேர்ச்சை செய்தல்🌎🌎* 

வணக்க வழிபாடுகளையும், மனிதர்களுக்கு நன்மை பயக்கும் காரியங்களையும் தான் நேர்ச்சை செய்ய வேண்டும் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம்.

வணக்கமாக இல்லாத காரியங்களையும் நேர்ச்சை செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். அதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ்களை எடுத்துக் காட்டுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போரிலிருந்து திரும்பி வந்தனர். அப்போது கறுப்பு நிறமுடைய பெண் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களை நல்லபடியாகத் திருப்பிக் கொண்டு வந்து சேர்த்தால் உங்கள் முன்னால் கொட்டு’ அடித்து பாட்டுப் பாடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன்’ எனக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘நீ நேர்ச்சை செய்திருந்தால் அவ்வாறு செய்! இல்லாவிட்டால் செய்ய வேண்டாம்’ எனக் கூறினார்கள். உடனே அப்பெண் கொட்டு அடிக்கலானார். அபூபக்ர் (ரலி) வந்தார்கள். அப்போதும் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் அலீ (ரலி) வந்தார்கள். அப்போதும் அவர் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் உஸ்மான் (ரலி) வந்தார் கள். அப்போதும் அவர் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் உமர் (ரலி) வந்தார்கள். உடனே அவர் கொட்டை கீழே போட்டார். 

 *அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: திர்மிதீ 3623* 

 *இதே கருத்து அபூதாவூத் 2880, அஹ்மத் 21911, 21933 ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.* 

கொட்டு அடிப்பது வணக்க வழிபாடுகளில் ஒன்றல்ல. இதனால் மனிதர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை அனுமதித்துள்ளதால் இது போன்ற காரியங்களையும் நேர்ச்சை செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர்.

இதைச் சரியான முறையில் புரிந்து கொள்ளாததால் இவ்வாறு வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போருக்குச் சென்றனர். போருக்குச் சென்ற நபியவர்கள் உயிருடனும், காயமின்றியும் திரும்ப வேண்டும் என்பதற்காக அந்தப் பெண் நேர்ச்சை செய்கிறார். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மகிழ்விப்பதற்காகவும் இவ்வாறு நேர்ச்சை செய்கிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) உலகில் வாழும் போது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதும் வணக்கமாகும். அந்த அடிப்படையில் தான் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள்.

இது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்களால் மட்டும் நிறைவேற்ற இயன்ற வணக்கமாகும். மற்றவர்களுக்காக கொட்டு அடிப்பதோ, பாட்டுப் பாடுவதோ வணக்க வழிபாட்டில் சேராது.

எனவே வணக்க வழிபாடுகள் அல்லாத காரியங்களை நேர்ச்சை செய்யக் கூடாது என்பதற்கு எதிரானதாக இதைக் கருதக் கூடாது.

 
 *🏵🏵சொத்துக்கள் முழுவதையும் நேர்ச்சை செய்தல்🏵🏵* 


நான் நினைக்கின்ற காரியம் நிறைவேறினால் எனது சொத்துக்கள் முழுவதையும் அல்லாஹ்விற்காக வழங்குவேன்’ என்று ஒருவர் நேர்ச்சை செய்தால் அதை அவர் அப்படியே நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை.

ஏனெனில் எந்த மனிதருக்கும் தனது சொத்துக்கள் முழுவ தையும் தர்மம் செய்யும் அதிகாரம் அளிக்கப்படவில்லை. தனது சொத்துக்களில் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கோ, அதை விட குறைந்த அளவுக்கோ தான் தர்மம் செய்யும் அதிகாரம் உண்டு.

தனது முழுச் சொத்தையும் தர்மம் செய்வதாக ஒருவர் முடிவு செய்தால் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தர்மம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தனது நேர்ச்சையை அவர் முழுமையாக நிறைவேற்றியவராக ஆவார்.

கஅபு பின் மாலிக் (ரலி) அவர்கள் தபூக் போரில் கலந்து கொள்ளவில்லை. இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை சமூகப் புறக்கணிப்புச் செய்தனர். பின்னர் அவர்களை அல்லாஹ் மன்னித்தான் என்பது பிரபலமான வரலாற்று நிகழ்ச்சியாகும்.

 *புகாரி 4418, 4676, 4677, 4678, 6690, 2758, 6255, 7225 ஆகிய ஹதீஸ்களில் இந்த வரலாற்றைக் காணலாம்.* 

அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னை மன்னித்ததற்காக என் செல்வம் அல்லாஹ்விற்காக நான் செய்யும் தர்மமாகும்’ என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘மூன்றில் ஒரு பங்கு (தர்மம் செய்வது) உமக்குப் போதுமானதாகும்’ என்று கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: அப்துல் முன்திர். நூல்: அஹ்மத் 15190, 15000* 


 *🌐🌐நேர்ச்சையை முறிப்பதன் பரிகாரம்🌐🌐*


மார்க்கம் அனுமதிக்கின்ற வகையில் ஒருவர் நேர்ச்சை செய்து அவரால் அதை நிறைவேற்ற இயலாது போனால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

‘சத்தியம் செய்து விட்டு அதை நிறைவேற்றத் தவறினால் என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ அதுவே நேர்ச்சைக்கும் பரிகாரமாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: முஸ்லிம் 3103* 

நேர்ச்சையை முறிப்பதற்கான பரிகாரம் சத்தியத்தை முறிப்பதற்கான பரிகாரமே என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். சத்தியத்தை முறிப்பதற்கு என்ன பரிகாரம் என்பதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் விளக்குகிறான்.

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள்! நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் இவ்வாறே தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.

 *(அல்குர்ஆன் 5:89)* 


 *🔴🔵நேர்ச்சை செய்ததை விடச் சிறந்ததை நிறைவேற்றலாம்⚫⚫* 

நாம் ஒரு நல்லறம் செய்வதாக நேர்ச்சை செய்தால் அதையே நிறைவேற்ற வேண்டும் என்றாலும் நாம் விரும்பினால் அதை விடச் சிறந்ததை நிறைவேற்றலாம்.

‘மக்காவை வெற்றி கொள்ளும் வாய்ப்பை அல்லாஹ் உங்களுக்கு வழங்கினால் பைத்துல் முகத்தஸில் இரண்டு ரக்அத் தொழுவதாக நான் நேர்ச்சை செய்திருந்தேன்’ என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இங்கே தொழு’ என்றார்கள். அந்த மனிதர் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். ‘இங்கேயே தொழு’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீண்டும் கூறினார்கள். அவர் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அப்படியானால் உன் விருப்பப்படி செய்து கொள்’ என்றார்கள்.

 *நூல்: அபூதாவூத் 2875, அஹ்மத் 14390* 

ஒரு பெண் நோய்வாய்ப்பட்டார். ‘அல்லாஹ் எனது நோயை நீக்கினால் நான் பைத்துல் முகத்தஸ் சென்று தொழுவேன்’ என்று அவர் நேர்ச்சை செய்தார். நோய் குணமானதும் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்து புறப்பட ஆயத்தமானார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி மைமூனா (ரலி) அவர்கள் அப்பெண்ணிடம் வந்தார்கள். அப்பெண் தனது நேர்ச்சை பற்றி அவர்களிடம் தெரிவித்தார். அதற்கு மைமூனா (ரலி) அவர்கள் ‘பயணத்திற்காகத் தயார் செய்த உணவைச் சாப்பிட்டு முடி! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் தொழு! ஏனெனில் அங்கே ஒரு தடவை தொழுவது கஃபாவைத் தவிர மற்ற பள்ளி வாசல்களில் ஆயிரம் தடவை தொழுவதை விடச் சிறந்தது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன்’ என்றார்கள்.

 *அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 2474* 

பைத்துல் முகத்தஸ் ஆலயத்தில் தொழுவதாக நேர்ச்சை செய்தவர் அதை விடச் சிறந்த பள்ளியான மஸ்ஜிதே நபவியில் அத்தொழுகையை நிறைவேற்றலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

நாம் செய்த நேர்ச்சையை விடச் சிறந்ததை நிறைவேற்றினால் நேர்ச்சை நிறைவேறும் என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஒரு கோழியைத் தர்மம் செய்வதாக நேர்ச்சை செய்தவர் ஒரு ஆட்டைத் தர்மம் செய்யலாம். பத்து ஏழைகளுக்கு உணவளிப்பதாக நேர்ச்சை செய்தவர் இருபது ஏழைகளுக்கு உணவளிக்கலாம்.

சாதாரண சோறு வழங்குவதாக நேர்ச்சை செய்தவர் பிரியாணியை வழங்கலாம்.

 *🕋🕋சிறந்ததைக் கண்டால் நேர்ச்சையை முறிக்கலாம்🕋🕋* 

நாம் ஒரு காரியத்தைச் செய்வதாக நேர்ச்சை செய்த பின் ‘அந்த நேர்ச்சையைச் செய்யாமல் இருப்பது தான் நல்லது’ என்று நமக்குத் தெரிய வந்தால் நேர்ச்சையை முறித்து விடுவது நல்லது. நேர்ச்சையை நிறைவேற்றாததற்காகப் பரிகாரம் செய்து விட வேண்டும்.

‘ஒரு காரியத்தைச் செய்வதாக நீ சத்தியம் செய்த பின் அது அல்லாத காரியத்தைச் சிறந்ததாக நீ கண்டால் உன் சத்தியத்தை முறித்து, அதற்கான பரிகாரத்தைச் செய்து விட்டு, அந்தச் சிறந்த காரியத்தைச் செய்து விடு’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் சமூரா (ரலி) நூல்: புகாரி 6622* 

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து எங்க ளுக்கு வாகனம் (ஒட்டகம்) வேண்டும் எனக் கேட்டோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்து விட்டனர். மீண்டும் கேட்டோம். ‘அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்து விட்டனர். பின்னர் சில ஒட்டகங்கள் (மூன்று அல்லது ஐந்து) வந்து சேர்ந்தன. அதை எங்களுக்குத் தருமாறு கட்டளையிட்டனர். ‘அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கு வாகனம் தருவதில்லை என்று சத்தியம் செய்தீர்களே’ என்று கூறினோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘நான் ஏதாவது சத்தியம் செய்து விட்டு அது அல்லாததைச் சிறந்ததாக நான் கருதினால் அந்தச் சிறந்ததை செய்து விட்டு, சத்தியத்திற்குப் பரிகாரமும் செய்து விடுவேன்’ எனக் கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி) நூல்: புகாரி 6623* 


 *🌎🌎தீர்மானமில்லாத நேர்ச்சை🌎🌎* 

எனக்கு இது நிறைவேறினால் நான் இதைச் செய்வேன் என்று தீர்மானமாக முடிவு செய்வது தான் நேர்ச்சையாகும்.

தீர்மானம் இல்லாமலும், செய்வதா வேண்டாமா’ என்ற குழப்பத்திலும் இருந்தால் அது நேர்ச்சையாகாது. அதை நிறைவேற்ற வேண்டிய அவசியம் கிடையாது.

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

 *(அல்குர்ஆன் 2:225)* 

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான்.

 *(அல்குர்ஆன் 5:89)* 

‘எனது சமுதாயத்தினரின் உள்ளங்களில் தோன்றும் ஊசலாட்டங்களுக்குச் செயல் வடிவம் கொடுக்காத வரை அல்லது வாயால் அதை மொழியாத வரை அல்லாஹ் மன்னித்து விட்டான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

 *அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 2528, 5269* 

நேர்ச்சை செய்யும் போது இதைச் செய்வேன் என்று நிச்சயித்துக் கூறினால் தான் அதை நிறைவேற்றுவது அவசியமாகும். ‘எனது இந்தத் தேவை நிறைவேறினால் இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) நான் இதைச் செய்வேன்’ என்று ஒருவர் கூறினால் அவர் அதை நிறைவேற்ற வேண்டியது அவசியம் இல்லை. நிறைவேற்றத் தவறியதற்காகப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை.

‘ஒருவர் சத்தியம் செய்யும் போது இன்ஷா அல்லாஹ் என்பதையும் சேர்த்துக் கூறினால் அவர் மீது எந்தப் பரிகாரமும் அவசியம் இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

 *அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: திர்மிதீ 1451* 

 *இதே கருத்துடைய ஹதீஸ்கள் நஸயீ 3768, 3769, 3770, 3795 வது இலக்கத்திலும், அபூதாவூத் 2838, அஹ்மத் 7742 இலக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.* 

 *மற்றொரு அறிவிப்பில்* 

‘உங்களில் ஒருவர் சத்தியம் செய்யும் போது இன்ஷா அல்லாஹ் எனக் கூறினால் அவர் விரும்பினால் அதை நிறைவேற்றலாம். அவர் விரும்பினால் நிறைவேற்றாது விட்டு விடலாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 *(அஹ்மத் 5108, 5814, 5830)* 


 *🔵🔵ஒருவரின் நேர்ச்சையை மற்றவர் நிறைவேற்றுதல்⚫⚫*


ஒருவர் ஒரு நேர்ச்சை செய்து விட்டு அதை நிறைவேற்றாமல் மரணித்து விட்டால் அவரது நெருங்கிய இரத்த சம்மந்தமுள்ள வாரிசுகள் அவர் சார்பில் அதை நிறைவேற்றலாம். அவ்வாறு நிறைவேற்றினால் நேர்ச்சை செய்தவர் மீது இருந்த அந்தக் கடமை நீங்கி விடும்.

ஆனால் அவர் செய்த நேர்ச்சை மார்க்கத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதாக இருப்பது அவசியம் என்பதை மறந்து விடக் கூடாது.

‘என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து விட்டு அதைச் செய்யாமலேயே மரணித்து விட்டார். அவர் சார்பில் நான் ஹஜ் செய்யலாமா’ என்று ஜுஹைனா குலத்துப் பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஆம். அவர் சார்பில் நீ ஹஜ் செய்யலாம். உன் தாய் மீது கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று. நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ்வின் கடனே அதிகத் தகுதியுடையது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

 *அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 1852, 6699, 7315* 

ஸஃது பின் உபாதா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘என் தாயார் ஒரு நேர்ச்சை செய்திருந்த நிலையில் மரணித்து விட்டார்’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அவர் சார்பில் அதை நிறைவேற்று’ என்றார்கள்.

 *அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 2761, 6698* 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். ‘அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் மீது ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்து விட்டார். அவர் சார்பில் அதை நான் நிறைவேற்றலாமா?’ எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஆம், அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது’ என்றார்கள். மற்றொரு அறிவிப்பில் பதினைந்து நோன்பு எனக் கூறப்பட்டுள்ளது.

 *அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1953* 


அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்


 *ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*