*💐அஸ்ஸலாமு அலைக்கும்*
*🌺 மறுமை வெற்றிக்காக*
⤵️
என்ன செய்திறுக்கிறோம்
*✍🏻....தொடர் : [ 09 ]*
*🥙எந்த நற்காரியமும்*
*அற்பமானதல்ல!🥙*
*🏮🍂நமது செயல்களுக்கும் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாம் நற்காரியங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனில் அதைப் பற்றிய சரியான புரிதல் இருப்பது அவசியம். முதலில், நற்செயல்களில் சிறிதோ, பெரியதோ எதையும் அற்பமாகக் கருதக் கூடாது.* இதைப் பின்வரும் செய்திகள் மூலம் விளங்கலாம்.
_«أَرْبَعُونَ خَصْلَةً أَعْلاَهُنَّ مَنِيحَةُ العَنْزِ، مَا مِنْ عَامِلٍ يَعْمَلُ بِخَصْلَةٍ مِنْهَا رَجَاءَ ثَوَابِهَا، وَتَصْدِيقَ مَوْعُودِهَا، إِلَّا أَدْخَلَهُ اللَّهُ بِهَا الجَنَّةَ» قَالَ حَسَّانُ: فَعَدَدْنَا مَا دُونَ مَنِيحَةِ العَنْزِ، مِنْ رَدِّ السَّلاَمِ، وَتَشْمِيتِ العَاطِسِ، وَإِمَاطَةِ الأَذَى عَنِ الطَّرِيقِ، وَنَحْوِهِ فَمَا اسْتَطَعْنَا أَنْ نَبْلُغَ خَمْسَ عَشْرَةَ خَصْلَةً_
_*🍃நாற்பது நல்ல காரியங்கள் உண்டு. அவற்றில் ஒன்றை, அதன் நன்மையை நாடியும், அதற்கென வாக்களிக்கப்பட்டுள்ள (சொர்க்கத்)தை உண்மையென நம்பியும் ஒருவர் கடைப்பிடித்து நடப்பாராயின், அதன் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைத்தே தீருவான். அவற்றில் மிக உயர்ந்தது பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவதாகும்.*_
_இவ்வாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்._
*🎙️அறிவிப்பவர்:*
*அப்துல்லாஹ்*
*இப்னு அம்ர் (ரலி)*
*📚நூல்: புகாரி (2631)📚*
حَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ يَعْنِي الْخَزَّازَ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الصَّامِتِ، *عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ لِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا، وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ»*
_*🍃என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே” என்று கூறினார்கள்.*_
*🎙️அறிவிப்பவர்:*
*அபூதர் (ரலி)*
*📚நூல்: முஸ்லிம் (5122)📚*
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ أَبَانَ بْنِ صَمْعَةَ، حَدَّثَنِي أَبُو الْوَازِعِ، *حَدَّثَنِي أَبُو بَرْزَةَ، قَالَ قُلْتُ: يَا نَبِيَّ اللهِ عَلِّمْنِي شَيْئًا أَنْتَفِعُ بِهِ، قَالَ: «اعْزِلِ الْأَذَى، عَنْ طَرِيقِ الْمُسْلِمِينَ»*
_*🍃“அல்லாஹ்வின் நபியே! நான் பயனடையக் கூடிய (நற்செயல்) ஒன்றை எனக்குக் கற்றுத் தாருங்கள்” என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “முஸ்லிம்கள் நடமாடும் பாதையிலிருந்து தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவீராக” என்று கூறினார்கள்.*_
*🎙️அறிவிப்பவர்:*
*அபூபர்ஸா (ரலி)*
*📚நூல்: முஸ்லிம் (5109)📚*
*🏮🍂சிறுதுளி, பெருவெள்ளம் என்று சொல்வார்கள். சின்னஞ்சிறிய அமல்களை நிறையச் செய்யும் போது அவற்றின் மூலம் பல மடங்கு நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment