பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, February 17, 2021

மறுமை வெற்றிக்காக - 11

*💐அஸ்ஸலாமு அலைக்கும்*

       *🌺 மறுமை வெற்றிக்காக*
                                   ⤵️
             என்ன செய்திறுக்கிறோம்

                 *✍🏻....தொடர் : [ 11 ]*

                *🏅 இறுதி பாகம் 🏅*

*☄️உயர்வாகக்*
          *கருதிக் கொள்ளாதீர்!*

*🏮🍂இஸ்லாத்தில் பல வகைகளில், பல்வேறு விதமான கோணங்களில் எல்லா விதமான நற்செயல்களும் கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில நற்செயல்களை செய்வதால் திருப்தி அடைந்து அத்துடன் முடங்கிப் போகக் கூடாது. அதல்லாத அமல்களைச் செய்வதற்கும் முயற்சிக்க வேண்டும். இதைப் பின்வரும் செய்தியில் அறியலாம்.*

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، *عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا امْرَأَةٌ، قَالَ: «مَنْ هَذِهِ؟» قَالَتْ: فُلاَنَةُ، تَذْكُرُ مِنْ صَلاَتِهَا، قَالَ: «مَهْ، عَلَيْكُمْ بِمَا تُطِيقُونَ، فَوَاللَّهِ لاَ يَمَلُّ اللَّهُ حَتَّى تَمَلُّوا» وَكَانَ أَحَبَّ الدِّينِ إِلَيْهِ مَادَامَ عَلَيْهِ صَاحِبُهُ*

_🍃‘என்னிடம் ஒரு பெண் அமர்ந்திருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் அங்கே வந்தார்கள். ‘யார் இந்தப் பெண்மணி❓’ என்று கூறிவிட்டு அவள் (அதிகமாக) தொழுவது பற்றிப் புகழ்ந்து கூறினேன்._ _*அப்போது நபி(ஸல்) ‘போதும் நிறுத்து! நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்து வாருங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் சலிப்படையும் வரை அல்லாஹ் சலிப்படைவதில்லை! மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள் தாம்’ என்று கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
               *ஆயிஷா (ரலி)*

       *📚நூல்: புகாரி (43)📚*

*🏮🍂“நீங்கள் சலிப்படையும் வரை அல்லாஹ் சலிப்படைவதில்லை!” என்று நபியவர்கள் சொல்வதில் நமக்கு நிறைய போதனைகள் இருக்கின்றன. தொழுகை, நோன்பு, தர்மம் போன்றவற்றைச் செய்து விட்டால் சிலர் அதன் மூலம் தங்களை உயர்வாக நினைத்துக் கொள்கிறார்கள்.*

*🏮🍂இப்படி நம்மை நாமே பெருமையாக நினைத்துக் கொண்டு மற்ற அமல்களில் அலட்சியம் காட்டுவது நல்லதல்ல! எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அமல்களின் மூலம் நன்மையை அள்ளிக் கொள்ள முனைய வேண்டும்.*

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، *عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّهَا قَالَتْ سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الأَعْمَالِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ قَالَ: «أَدْوَمُهَا وَإِنْ قَلَّ» وَقَالَ: «اكْلَفُوا مِنَ الأَعْمَالِ مَا تُطِيقُونَ»*

_*🍃‘நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது❓’ என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே’ என்று விடையளித்தார்கள். மேலும், ‘நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்’ என்றும் கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
              *ஆயிஷா (ரலி)*

       *📚நூல்: புகாரி (6465)📚*

*🏮🍂குறைவாக இருந்தாலும் நிலையான செயலே அல்லாஹ்வுக்கு விருப்பமானது என்ற வாசகத்தைச் சரியாக விளங்க வேண்டும். எந்தவொரு அமலையும் தொடந்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் அந்த வரிகளை சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்.* மறுமை வெற்றிக்கு சொற்பமான நற்செயல்களைச் செய்தால் மட்டும் போதுமென நினைத்து விடுகிறார்கள்.

*🏮🍂இவர்களின் வாதம் தவறு என்பதை மேலுள்ள நபிமொழியின் இறுதியிலேயே சான்று இருக்கிறது. ‘நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொட முயலுங்கள்’ என்று நபியவர்கள் அறிவுரை சொல்கிறார்கள். எனவே, மறுமை வெற்றிக்காக முடிந்தளவு அதிக நற்காரியங்களை செய்வோமாக! இயன்ற வரை அவற்றைத் தொடர்ந்து செய்து நன்மைகளை அள்ளிக் கொள்வோமாக! அல்லாஹ் அப்படிப்பட்ட நன் மக்களாக நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

*தொடர் முடிந்தது*
                    ⤵️⤵️⤵️
              *அல்ஹம்துலில்லாஹ்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment