பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, February 17, 2021

மறுமையில் அல்லாஹ் - 1

*🌺மறுமையில் அல்லாஹ்*
             *பார்க்காத பேசாத*
                           *நபர்கள்🌺*

           *✍🏻... தொடர் ➖0️⃣1️⃣*

*🏮🍂இந்தப் பூமியில் மனிதன் ஏராளமான பாவங்களைச் செய்கிறான். அவன் தன்னால் முடிந்த அளவு இப்பாவங்களை விட்டு விலகி அல்லாஹ்வைப் பயந்து நல்லவனாக வாழ்வதற்காக, அவனது பாவங்களுக்குத் தண்டனை இருப்பதாக அல்லாஹ்வும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்களும் நமக்குத் தெளிவு படுத்தியுள்ளனர்.* இவ்வாறு மனிதன் செய்யும் பாவங்களில் சில சிறியவையாகவும் சில பாவங்கள் மிகப் பெரியவையாகவும் அமைந்துள்ளன.

*🏮🍂பெரிய பாவங்கள் எவை❓ என்பதை அதற்குரிய தண்டனைகளை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம். இந்த வகையில் மிகப் பெரும் பாவங்களில் உள்ளவையாகக் கருதப்படும் சில குற்றங்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் தண்டனை அவன் நம்மைப் பார்க்காமலும் நம்மிடம் பேசாமலும் நமது பாவக் கறைகளைச் சுத்தம் செய்யாமலும் இருப்பதாகும்.* இவர்களைப் பற்றி அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் கூறுகிறான்.

_*🍃அவ்வாறில்லை! அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப் படுவார்கள் என்று குறிப்பிடுகிறான்.*_

*📖 (அல்குர்ஆன் 83:15)*

إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلَ اللَّهُ مِنَ الْكِتَابِ وَيَشْتَرُونَ بِهِ ثَمَنًا قَلِيلًا ۙ أُولَٰئِكَ مَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ إِلَّا النَّارَ *وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ*

_*🍃கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு*_

*📖 (அல்குர்ஆன் 2:174)*

حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حُسَيْنٌ الْجُعْفِيُّ، عَنْ زَائِدَةَ، حَدَّثَنَا بَيَانُ بْنُ بِشْرٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، *حَدَّثَنَا جَرِيرٌ، قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةَ الْبَدْرِ فَقَالَ ‏‏ إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ كَمَا تَرَوْنَ هَذَا، لاَ تُضَامُّونَ فِي رُؤْيَتِهِ ‏"*

_*🍃‘மறுமை நாளில் நல்லவர்கள் அனைவரும் அல்லாஹ்வை கண் கூடாகக் காண்பார்கள். பௌர்ணமி நிலவை நாம் எப்படி அனைவரும் கண்கூடாகப் பார்க்கிறோமோ அது போன்று அல்லாஹ்வைக் காண்போம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.*_

*🎙️அறிவிப்பாளர்:*
             *ஜரீர் இப்னு*
                  *அப்துல்லாஹ் (ரலி)*

      *📚 நூல்: புகாரீ 7435 📚*

*🏮🍂அல்லாஹ்வைப் பார்ப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல. மிகப்பெரிய பாக்கியம்.*

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، *عَنْ صُهَيْبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏‏ إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ - قَالَ - يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى تُرِيدُونَ شَيْئًا أَزِيدُكُمْ فَيَقُولُونَ أَلَمْ تُبَيِّضْ وُجُوهَنَا أَلَمْ تُدْخِلْنَا الْجَنَّةَ وَتُنَجِّنَا مِنَ النَّارِ - قَالَ - فَيَكْشِفُ الْحِجَابَ فَمَا أُعْطُوا شَيْئًا أَحَبَّ إِلَيْهِمْ مِنَ النَّظَرِ إِلَى رَبِّهِمْ عَزَّ وَجَلَّ ‏"*

_*🍃சொர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழையும் போது, ‘இன்னும் உங்களுக்கு நான் எதையாவது அதிகப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா❓’ என்று அல்லாஹ் கேட்பான். ‘நீ எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சுவர்க்கத்தில் நுழையச் செய்ய வில்லையா❓ எங்கள் முகங்களை நீ வெண்மையாக்கவில்லையா❓’ என்று சுவர்க்கவாசிகள் கூறுவார்கள். பிறகு அல்லாஹ் திரையை அகற்றுவான். அல்லாஹ்வை அவர்கள் காண்பதை விட அவர்களுக்கு விருப்பமானதாக வேறு எதுவும் இருக்காது.*_

*🎙️அறிவிப்பாளர்:*
               *ஸுஹைப் (ரலி)*

      *📚நூல்: முஸ்லிம் 266📚*

*🏮🍂அல்லாஹ் திருக்குர்ஆனில் பேச மாட்டான் என்று கூறுவதன் பொருள், நல்ல வார்த்தைகளால் அன்போடு பேச மாட்டான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அல்லாஹ் நரக வாசியைப் பார்த்து வேதனையைச் சுவை என்று கூறுவதாக திருக்குர்ஆன் கூறுகிறது.*

*ذُقْ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْكَرِيمُ إِنَّ هَٰذَا مَا كُنتُم بِهِ تَمْتَرُونَ*

_*🍃சுவைத்துப் பார்! நீ மிகைத்தவன் மரியாதைக்குரியவன். நீங்கள் சந்தேகம் கொண்டிருந்தது இதுவே (என்று அல்லாஹ் கூறுவான்)*_

*📖 (அல்குர்ஆன் 44:49)*

*🏮🍂இன்னும் கேலி செய்யும் விதமாக அல்லாஹ் நரகவாசியிடம் பேசுவதை குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. மறுமை நாளில் பாவிகளை அல்லாஹ் விசாரிப்பான் என்று பல நபிமொழிகளும் கூறுகின்றன.* அல்லாஹ் தூய்மைப்படுத்த மாட்டான் என்றால் பாவத்திலிருந்து தூய்மைப் படுத்தி குற்றமற்றவர்களாக ஆக்க மாட்டான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

*🏮🍂குர்ஆனிலும் நம்பத் தகுந்த நபிமொழியிலும் 12 நபர்கள் இந்தத் தண்டனைக்கு உரியவர்கள் என்று கூறப்படுகிறது. இதில் மூன்று நபர்கள் பற்றி வரும் செய்திகள் பலவீனமானவை ஆகும். மீதமுள்ள 9 நபர்கள் பற்றிய செய்தி ஆதாரப் பூர்வமானதாகும்.* அவற்றின் விவரத்தைக் தொடராக காண்போம்.

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment