பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, February 17, 2021

மறுமை வெற்றிக்காக - 6

*💐அஸ்ஸலாமு அலைக்கும்*

       *🌺 மறுமை வெற்றிக்காக*
                                   ⤵️
             என்ன செய்திறுக்கிறோம்

                 *✍🏻....தொடர் : [ 06 ]*

*☄️அவகாசம் மீண்டும்*
                    *கிடைக்காது!☄️*

*🏮🍂உலகில் நல்லமல்கள் செய்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணரும் நரகவாசிகள் அப்போது புலம்புவதோடு நிறுத்திக் கொள்ளாமல், மீண்டும் உலகில் வாழும் வாய்ப்பைக் கேட்டுக் கெஞ்சுவார்கள். இன்னொரு முறை அவகாசம் அளிக்குமாறு அல்லாஹ்விடம் கோரிக்கை வைத்து மன்றாடுவார்கள்.* இதோ அல்லாஹ் எச்சரிப்பதைப் பாருங்கள்.

_هَلْ يَنْظُرُوْنَ اِلَّا تَاْوِيْلَهٗ‌ؕ يَوْمَ يَاْتِىْ تَاْوِيْلُهٗ يَقُوْلُ الَّذِيْنَ نَسُوْهُ مِنْ قَبْلُ قَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَـقِّ‌ۚ فَهَلْ لَّـنَا مِنْ شُفَعَآءَ فَيَشْفَعُوْا لَـنَاۤ اَوْ نُرَدُّ فَنَعْمَلَ غَيْرَ الَّذِىْ كُنَّا نَـعْمَلُ‌ؕ قَدْ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ_

_*🍃அந்நாளின் சந்திப்பு நிகழ்வதைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா❓அந்நிகழ்வு நடக்கும் நாளில் இதற்கு முன் அதை மறந்து வாழ்ந்தோர்_ _*“எங்கள் இறைவனின் தூதர்கள் உண்மையே கொண்டு வந்தனர். எங்களுக்குப் பரிந்துரையாளர்கள் எவரும் உள்ளனரா❓ அப்படியிருந்தால் அவர்கள் எங்களுக்குப் பரிந்துரை செய்யட்டும். அல்லது நாங்கள் (உலகிற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா❓ அவ்வாறாயின், நாங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு மாற்றமான (நல்ல) செயல்களைச் செய்வோமே!” என்று கூறுவார்கள்.*_ _அவர்கள் தமக்கே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்துவிட்டன._

*📖(திருக்குர்ஆன் 7:53)📖*

*وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ نَارُ جَهَنَّمَ‌ۚ لَا يُقْضٰى عَلَيْهِمْ فَيَمُوْتُوْا وَلَا يُخَفَّفُ عَنْهُمْ مِّنْ عَذَابِهَا ؕ كَذٰلِكَ نَـجْزِىْ كُلَّ كَفُوْرٍۚ‏ وَهُمْ يَصْطَرِخُوْنَ فِيْهَا ‌ۚ رَبَّنَاۤ اَخْرِجْنَا نَـعْمَلْ صَالِحًـا غَيْرَ الَّذِىْ كُـنَّا نَـعْمَلُؕ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِيْرُؕ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ*

_*🍃இறை மறுப்பாளர்களுக்கு நரக நெருப்பு உள்ளது. அவர்கள் மரணிக்குமாறு முடிவு செய்யப்படாது. அதன் வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. இறைமறுப்பாளர்கள் அனைவருக்கும் இவ்வாறே வேதனை அளிப்போம். “எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி (இனிமேல்) நல்லறங்களைச் செய்கிறோம்’’ என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். “படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித்திருக்கவில்லையா❓ எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா❓ எனவே அனுபவியுங்கள்!*_அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை’’ (என்று கூறப்படும்)_

*📖(திருக்குர்ஆன் 35: 36, 37)📖*

*🏮🍂நற்காரியம் செய்வதன் அவசியத்தை மறுமையில் உணர்வதால் எந்தப் பயனும் இல்லை ஒருமுறை தான் இந்த வாழ்க்கை. மீண்டும் மற்றொரு முறை இங்கு வாழும் வாய்ப்போ, அவகாசமோ கிடைக்காது. எனவே நமக்குரிய அவகாசம் முடிவதற்குள் அதாவது மரணம் வருவதற்குள் முடிந்தளவு நல்ல அமல்களைச் செய்து கொள்ள வேண்டும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment