பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, February 17, 2021

அல்லாஹ்வின் தூதரே - 1

*💐அஸ்ஸலாமு அலைக்கும்*

*🏅அல்லாஹ்வின் தூதரே 🏅*
                                  ⤵️
         *📚 அழகிய ஆசிரியர் 📚*

             *✍🏻.... தொடர் :  [ 01 ]*

*🏮🍂மனித சமுதாயம் பின்பற்றுவதற்கு ஏற்ற மார்க்கம், இஸ்லாம் மட்டுமே! மனிதனை  சக்திக்கு மீறிய சோதிக்கிற எந்தவொரு சட்டத்தையும் இதில் பார்க்கவே முடியாது. இந்த மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் புரிந்து கொள்ளவும் நடைமுறைப் படுத்தவும் மிகவும் எளிதானது.*

حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ مُطَهَّرٍ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، عَنْ مَعْنِ بْنِ مُحَمَّدٍ الغِفَارِيِّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ المَقْبُرِيِّ، *عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الدِّينَ يُسْرٌ، وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلَّا غَلَبَهُ، فَسَدِّدُوا وَقَارِبُوا، وَأَبْشِرُوا، وَاسْتَعِينُوا بِالْغَدْوَةِ وَالرَّوْحَةِ وَشَيْءٍ مِنَ الدُّلْجَةِ*

_*🍃‘நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’.*_

*🎙️அறிவிப்பவர்:*
             *அபூஹுரைரா (ரலி)*

      *📚 நூல்: புகாரி (39) 📚*

*🏮🍂பாடமும் எளிதானது; ஆசிரியரும் சிறப்பாகப் போதிப்பவர். இந்தப் பாக்கியம் எல்லா மாணவர்களுக்கும் கிடைத்து விடாது. ஆனால், நாம் பெற்றிருக்கிறோம். இஸ்லாம் எளிதாக இருப்பது போன்று, அதன் வழிகாட்டியான முஹம்மது நபி (ஸல்) அவர்களும் எளிதாக எடுத்துச் சொல்லும் தன்மையைப் பெற்றிருந்தார்கள். மார்க்கத்தை எளிமையாக புரியவைத்தார்கள்.* அவ்வாறு அவர்களின் வாழ்கையில் நடந்த சில நிகழ்வுகளை இந்த தொடரில் காண்போம்..

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment