*💐அஸ்ஸலாமு அலைக்கும்*
*🌺 மறுமை வெற்றிக்காக*
⤵️
என்ன செய்திறுக்கிறோம்
*✍🏻....தொடர் : [ 02 ]*
*🌺நம்பிக்கையின்*
*பிரதிபலிப்பு🌺*
*🏮🍂உலக வாழ்வின் நோக்கத்தை ஒருபோதும் நாம் மறந்துவிடக் கூடாது. இதை பசுமரத்தாணி போல் மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டு நற்காரியங்கள் செய்வதிலும் தீமைகளை விட்டு விலகுவதிலும் மிகவும் அக்கறையோடு செயல்பட வேண்டும்.*
_اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ_
_*🍃நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைத் தவிர! அவர்களுக்கு முடிவில்லாத கூலி உண்டு.*_
*📖(திருக்குர்ஆன் 84:25)📖*
_وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَـنَّةِ ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ_
_*🍃நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்பவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.*_
*📖(திருக்குர்ஆன் 2:82)📖*
*🏮🍂நம்பிக்கை கொள்வதைப் பற்றியும், நம்பிக்கை கொண்ட மக்களைப் பற்றியும் திருக்குர்ஆனில் கூறும் இடங்களில் பெரும்பாலும் நல்ல அமல்கள் செய்வதையும் சேர்த்தே அல்லாஹ் குறிப்பிடுகிறான்.* இதன் மூலம், மறுமையில் பரிபூரணமான வெற்றி பெறுவதற்கு வெறும் *நம்பிக்கை மட்டும் போதாது நற்காரியங்களையும் செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment