பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, June 29, 2018

இமாம்களின் வரலாறு - ஹாகிம்

*இமாம்களின் வரலாறு*

*அபூ அப்தில்லாஹ் அல் ஹாகிம்*

இயற்பெயர் : முஹம்மத் பின் அப்தில்லாஹ்

குறிப்புப்பெயர் : அபூ அப்தில்லாஹ்

பட்டப்பெயர் : இவர் குறிப்பிட்ட காலம் நீதிபதியாக இருந்ததால் ஹாகிம் (நீதிபதி) என்றழைக்கப்பட்டார்.

தந்தைபெயர் : அப்துல்லாஹ்

குலம் : அள்ளப்பீ குலத்தைச் சார்ந்தவர்

பிறப்பு : நைசாபூர் என்ற ஊரில் ஹிஜ்ரீ 321 வது வருடம் பிறந்தார்.

கல்வி 9 வது வயதிலே கற்க ஆரம்பித்தார். 20 வது வயதை அடைந்திருக்கும் போது ஈராக் குராஸான் இன்னும் நதிகள் பல கடந்து கற்றுள்ளார். நைசாபூர் போன்ற ஊர்களில் 2000 ஆசிரியர்களிடமிருந்து ஹதீஸைக் கற்றுள்ளார்.

ஆசிரியர்கள் : இப்னு ஹிப்பான், முஹம்மத் பின் யஃகூப், அஹ்மத் பின் சுலைமான், தஃலஜ் பின் அஹ்மத் இன்னும் பல ஆசிரியர்கள் இவருக்கு உள்ளனர். ஹதீஸ்கலை அறிஞர்களின் ஆசிரியர் என்று இமாம் தஹபி அவர்கள் கூறியுள்ளார். இவர் மார்க்கப் பற்று மற்றும் பேணுதல் உள்ளவராக இருந்தார் என இப்னு கசீர் கூறியுள்ளார்.

மாணவர்கள் : இமாம் பைஹகி, அபூ யஃலா, அபூதர் அல்ஹர்வீ போன்ற கல்விச் செம்மல்கள் இன்னும் பலர் இவருடைய மாணவர்கள் ஆவார்கள்.

அறிஞர்களின் கூற்று : இவர் சிறப்புக்குரியவர். கல்வி ஞானம் வழங்கப்பட்டவர். ஹதீஸ் கலையில் பல தொகுப்புகள் இவருக்கு உள்ளது என்று இமாம் ஹதீப் பஹ்தாதீ கூறியுள்ளார். இவர் தன்னுடைய காலத்தில் ஹதீஸ் கலை இமாமாகவும் அதை உண்மையான அடிப்படையில் விளங்கியவராகவும் இருந்தார் என அப்துல் ஹஃப்பார் என்பார் கூறியுள்ளார்.

குறைகள் : இமாம் ஹாகிம் அவர்கள் அறிவிப்பாளர்களை எடைபோடும் போது பல பலஹீனமான அறிவிப்பாளர்களை நம்பகமானவர்கள் என்று கவனக் குறைவாக கூறியுள்ளார்கள். பல பலஹீனமான ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமான செய்தி என்று குறிப்பிடுவதால் இவர் அலட்சியப் போக்குடையவர் என்ற அறிஞர்களால் வர்ணிக்கப்படுகிறார்.

படைப்புகள் : கிதாபுல் அர்பயீன், அல்அஸ்மாஉ வல்குனா, அல்இக்லீலு ஃபீ தலாயிலுன் நுபுவ்வா, அமாலில் அஷிய்யாத், அல்அமாலி தாரீஹு நய்சாபூர், கிதாபுத் துஆ, அல்லுஅஃபா, இலலுல் ஹதீஸ், ஃபளாயிலு ஃபாத்திமா, ஃபவாயிது ஷுயூஹ், அல்மத்ஹல், அல்முஸ்தத்ரக், மஃரிஃபது உலூமில் ஹதீஸ், மனாகிபுஷ் ஷாஃபி இன்னும் பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

மரணம் : இவர் ஹிஜ்ரீ 405 வது வருடத்தில் மரணித்தார்.

Fatwa - பத்வா TNTJ

Fatwa . பத்வா


Thursday, June 28, 2018

விழிப்புணர்வு பதிவு! 📢📢📢

நண்பர்களுக்கு!  ஒரு விழிப்புணர்வு பதிவு!  📢📢📢

தங்களது வீட்டில் இருக்கும் செல்லக்குட்டி பிள்ளைகளை நாம் பதியப்பட்ட புகைப்படங்களில் சொல்லப்படும்! ஆபத்தான செயல்களை விட்டு தவிர்த்து வைப்பது, மற்றும் அதை உணர்த்தும் விதமாக செல்லக்குட்டிகளுக்கு எடுத்து சொல்லுங்கள்!

*குழந்தைகளும் இறைவன் கூடுத்த வரம்*

அந்த வரத்தை பாதுகாப்பதும் இறைவன் தான்! அந்த பாதுகாப்பான சிந்தனை நம்மிடத்தில் உள்ளது. அதனால் தங்களது பிள்ளைகளை தக்கமான முறையில் பாதுகாப்பீர்!

👆👆👆


Saturday, June 23, 2018

Islamic #


தூக்கமின்மை 😵😵😱

#உலகை_அச்சுறுத்தும்_தூக்கமின்மை_ஓர் #அறிவியல், #ஆன்மீகப்_பார்வை.

✍ _ஷப்னா கலீல் (மாளிகாவத்தை)_

பகலில் ஓடியாடி திரியும் மனிதன் இரவிலே தூக்கத்தினால் சுருங்கி விடுகின்றான். இயங்கிக் கொண்டிருக்கும் உடம்பிற்கு ஓய்வு என்பது தேவையான ஒன்றாகும். பகலில் கடன் சுமையால் அல்லல் படுபவன் கூட, இரவில் தன்னை மறந்து நிம்மதியாக தூங்குகின்றான். சுருக்கமாகச் சொன்னால் தூக்கம் என்பது இறைவன் நமக்களித்த அருளாகும்.

_அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும்,பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான்._

(அல்குர்ஆன் – 25: 47)

_அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன், இரவை அமைதிக் களமாகவும், சூரியனையும்,சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான்._

(அல்குர்ஆன் – 6 :96)

#ஓய்வை_தரக்கூடிய_தூக்கம்_எவ்வாறு_உருவாகின்றது?

மனித மூளையில் மெலடொனின் (Melatonin) என்ற ஹோர்மோன் ஒன்று சுரக்கின்றது. இந்த ஓமோன் உறக்கத்தைத் தூண்டும் ஒரு சுரப்பியாகும். இது வெளிச்சத்தில் குறைவாகவும், இருளில் கூடுதலாகவும் சுரக்கின்றது. அதனால் தான் இரவு என்றாலே உலகமே தூக்கத்தில் அயர்ந்து விடுவதுடன் பகலில் கூட மனிதன் இருட்டு மூலையைத் தேடி சென்று தூங்குவதற்கு எத்தனிக்கின்றான்.

#தூக்கமின்மை-(Insomnia)

சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரங்கள் தூங்க வேண்டும் என்று மருத்துவ உலகம் சிபாரிசு செய்வதாக லன்டன் பி.பி.சி இணையதள செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

ஆனால் எம்மில் சிலருக்கு எவ்வளவு தான் புரண்டு படுத்தாலும் தூக்கம் வராமல் இருப்பதுண்டு. அதே நேரத்தில் தூக்கத்தை தாமாகவே இல்லாமல் செய்வதுமுண்டு. உதாரணமாக இரவு நேரத்தில் நாம் விழித்திருப்பதைக் கூறலாம்.

மூளையில் சுரக்கும் Serotin என்ற சுரப்பியின் அளவு குறையும் போதே தூக்கமின்மை ஏற்படுகின்றது. இதுவொரு நோயல்ல. ஆனால் இதுவொரு நோயின் அறிகுறியாகும். இதனால் ஏற்படும் விளைவுகள் பாரிய அளவில் நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

தூக்கமின்மையினால் மனிதனுக்குள் சுமார் 80 வகையான பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன என்றும், முறையான தூக்கமின்மையினால் மனிதனின் உடல் செயல்பாடுகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என்றும், மரபநணுவில் பாரிய மாற்றத்தையும் உண்டாக்குகின்றது என்றும் ஐக்கிய இராச்சியத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். (மாலை மலர், பி.பி.சி)

தூக்கமின்மையினால் உயிரனுக்கள் (விந்தனுக்கள்) குறைகின்றது. என்று மருத்துவ உலகம் வாதிக்கின்றது. குறைந்த தூக்கத்தை உடையவர்களுக்கு இல்லறத்தில் நாட்டமில்லாமல் போவதுடன், நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்து மன அழுத்தமும் ஏற்படுகின்றது என்று தெரிவிக்கின்றார்கள். (தினமலர், பி.பி.சி)

#தூக்கமின்மைக்கான_காரணங்களும், #தீர்வுகளும்.

#பெருகிவரும்_இணையதள_பாவனை.

தூக்கமின்மைக்கான மிக முக்கிய காரணம் இணையதளத்திற்கு மனிதன் அடிமையாகிவிட்டான் என்பதேயாகும். அதிலும் குறிப்பாக சமூக வலை தளங்களில் தனது காலத்தை கழிப்பதுதான். பொன்னான தூக்கத்தை ஒதுக்கி வைத்துக் கொண்டு இரவு முழுதும் மேலதிகமான வணக்கத்தை நிறைவேற்றுவதே மார்க்கத்தில் வரம்பு மீறிய செயலாக கருதப்படுகின்றது. ஆனால் இன்று மார்க்கம் தெரிந்தவர்கள் கூட தன் உடம்பை கவனிக்காமலும், தன் மனைவியின் உணர்வுகளை புரியாமலும் இணையதளங்களில் தங்கள் நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இது மார்க்கத்தில் மிகவும் வெறுக்கத்தக்க செயலாக கருதப்படுகின்றது.

_அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:_

_என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அப்துல்லாஹ்வே! நீ பகல் எல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்குதாகக் கேள்விப்பட்டேனே! (உண்மைதானா?)” என்று கேட்டார்கள். நான், “ஆம் (உண்மைதான்) அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்யாதே! (சில நாள்) நோன்பு நோற்றுக்கொள். (சில நாள்) நோன்பை விட்டு விடு! (இரவில் சிறிது நேரம்) நின்று வணங்கு! (சிறிது நேரம்) உறங்கு! உன் உடலுக்கென (நீ செய்ய வேண்டிய) கடமைகள் உனக்கு உண்டு. உன்னுடைய கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உனக்கு உண்டு. உன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உனக்கு உண்டு” என்று சொன்னார்கள்._

(புகாரி – 5199)

#இரவில்_ஆரம்ப_நேரத்தில்_உறங்கிப்_பழக #வேண்டும்.

_அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் ஆரம்ப நேரத்தில் தான் உறங்குவார்கள_்.

_அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:_

_நான் அயிஷா (ரலி) அவர்களிடம், “நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது?”என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இரவின் ஆரம்பப் பகுதியில் நபி (ஸல்) அவர்கள் உறங்குவார்கள். இரவின் இறுதிப் பகுதியில் எழுந்து தொழுவார்கள். பிறகு தமது படுக்கைக்குத் திரும்புவார்கள். முஅத்தின் தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொன்னதும் விரைவாக எழுந்து குளிக்க வேண்டிய அவசியம் இருந்தால் குளிப்பார்கள். இல்லாவிட்டால் அங்கசுத்தி (உளூ) செய்துவிட்டு (தொழுகைக்காகப்) புறப்பட்டுவிடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்._

(புகாரி – 1146)

ஆயிஷா (ரலி) அவர்கள் தன் கணவர் முஹம்மது (ஸல்) அவர்கள் உறங்கும் நேரத்தை அறிந்தே வைத்திருந்தார்கள். இன்று பெரும்பாலானவர்களின் மனைவியர்கள் தம் கணவர்கள் தூங்குகின்றார்களா? விழித்திருக்கின்றார்களா? என்பது கூட தெரியாத நிலையில் இருக்கின்றார்கள். இதனால் அவர்களின் குடும்ப வாழ்வில் நிறைய சிக்கல்களும், சங்கடங்களுமே ஏற்படுகின்றன.

நன்மைக்காக விழித்திருக்கின்றார்களோ இல்லையோ, வீணான காரியங்களில் ஈடுபடுவதற்கு மனிதன் தனது பொன்னான இரவு நேரத்தை வீணடிக்கின்றான். அல்லாஹ்வின் தூதரவர்கள் இதனை வன்மையாக கண்டிக்கின்றார்கள்.

_அபூபர்ஸா (நள்லா பின் உபைத்) (ரலி) அவர்கள் கூறியதாவது:_

_அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப்பின் (உறங்காமல் வீணாக) பேசிக்கொண்டிருப்பதையும் வெறுப்பவர்களாக இருந்தார்கள்._ (புகாரி – 568)

ஆரம்ப நேரத்தில் உறங்குவதுதான் சிறந்தது என மருத்துவ உலகமும் இன்று இஸ்லாத்தின் செய்தியை உறுதிப்படுத்துகின்றது.

நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை மருத்துவப் பேராசிரியர் ஜேம்ஸ் காங்விஸ்க் தலைமையிலான ஆய்வுக் குழு, மொத்தம் 15,659 வளரிளம் பருவ மாணவ மாணவியரிடம் ஆய்வு மேற்கொண்டது. இரவில் சீக்கிரமாகவே தூங்குவதால் போதுமான அளவில் தூங்கமுடிகிறது. இதனால் மன அழுத்தத்துக்கு முக்கிய காரணியாக இருக்கும் தூக்கமின்மை பிரச்சனை நீங்குவதோடு, மன அழுத் பாதிப்பில் இருந்து வெகுவாக பாதுகாத்துக் கொள்ளவும் வழிவகுக்கப்படுகிறது என ஆய்வு முடிவுகள் பரிந்துரைக்கின்றன. நள்ளிரவு அல்லது 12 மணி நேரத்துக்குப் பிறகு படுக்கைக்கு செல்பவர்களுக்கு இரவு பத்து மணி அல்லது அதற்கு முன்பு உறங்கச் செல்பவர்களைக் காட்டிலும் 24 சதவீதத்துக்கும் அதிகமான மன அழுத்தமும், அதன் விளைவாக 20 சதவீதத்துக்கும் அதிகமாக தற்கொலை எண்ணமும் ஏற்படுவதற்கான அபாயம் உண்டு என்று எச்சரிக்கிறது, அந்த ஆய்வு.

(http://youthful.vikatan.com/youth)

#மனக்_குழப்பம்.

எம்மில் பலர் படுக்கை அறைக்குள் கூட கவலையுடனேயே நுழைகின்றோம். பகலில் நிகழ்ந்த மனத் தாக்கங்களுக்கு இரவில் வாடி வருந்துகின்றோம். இதனால் அன்றிரவு முழுதும் தூக்கமின்மையால் தவிக்கின்றோம்.

மருத்துவ உலகம் இதற்கு ஒரு தீர்வை சொல்கின்றது. அதாவது தூக்கம் வராதவர்கள் தூங்க செல்லும் போது அவர்களின் மன நிலையை மாற்ற வேண்டும் என்று சொல்கின்றது.

நபியவர்கள் கூட இதற்கு தெளிவானதொரு வழிகாட்டலை தந்துள்ளார்கள். தூங்குவதற்கு செல்லும் போது ஒவ்வொரு மனிதனும் நபியவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகளை ஓதும் போது அவர்களின் மன நிலை இறைவனின் பக்கமும், மரண சிந்தனையின் பக்கமும் சென்று விடுகின்றது. இப்படியொரு மனிதன் தனது சிந்தனையை இறை நினைவின் பக்கம் கொண்டு செல்லும் போது தூக்கம் தானாக ஏற்படுவதற்கான சிந்தனை மாற்றம் அங்கு நடை பெறுகின்றது.

உதாரணமாக தூங்குவதற்கு முன்பு ஓதுவதற்காக பல பிரார்தனைகளை கற்றுத் தந்த இறைத் தூதர் அவர்கள் இப்படியொரு பிரார்த்தனையும் கற்றுத் தருகின்றார்கள். இப் பிரார்த்தனை மனிதனை இறை சிந்தனையின் பால் இட்டுச் செல்லக் கூடியதாகும்.

_பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:_

_என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்து கொள். பிறகு உன் வலப் பாகத்தின் மீது சாய்ந்து படுத்துக்கொள். பிறகு இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத்தேன். எனது காரியத்தை உன் பொறுப்பில் விட்டுவிட்டேன். என் முதுகை உன்னளவில் சார்ந்திருக்கச் செய்தேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னை விட்டும் தப்பிச் செல்லவும் உன்னை விட்டும் ஒதுங்கிவிடவும் உன்னிடம் தவிர வேறு போக்கிடமில்லை. நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன் “நபியை நான் நம்பினேன்.”என்று பிராத்தித்துக்கொள்! (இவ்வாறு நீ பிராத்தனை செய்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ இயற்கை நெறியில் (இஸ்லாத்தின் தூய வழியில்) ஆகிவிடுகிறாய். இந்தப் பிராத்தனையை உன் (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக்கொள்!_ (புகாரி – 247)

#அமுக்குப்_பேய்_என்பது_உண்மையா?

சிலர் தூங்கிக் கொண்டிருக்கும் போது தன்னை அமுக்குப் பேய் அமுக்கியதாக பயந்து விளித்துக் கொள்வதுடன், அன்றிரவு முழுவதும் மனம் குழம்பி தூக்கத்தை கெடுத்துக் கொள்கின்றார்கள். தூக்கத்தின் போது மூளை ஓய்வு அடைகின்றது என்பது முற்றிலும் உண்மையல்ல. தூக்கத்தின் போது மூளையானது ஏனைய உறுப்புகள் ஓழுங்காக இயங்குகின்றதா? என்று சரிபார்த்துக் கொள்கின்றது. அந்த வகையில் தான் காலை தூக்கு, கையைத் தூக்கு என்ற சில கட்டளைகளை மூளை கை, கால் போன்ற உறுப்புகளுக்கு பிரப்பிக்கின்றது. சில சமயங்களில் அக்கட்டளை செயல் வடிவம் பெற வாய்ப்பிருந்தும் எம்மால் கை, கால்களை தூக்க முடியாமல் அல்லது திருப்பக் கூட முடியாமல் போயிருக்கலாம். இந்நேரம் நமது செயல்பாடுகள் அற்றுப் போவதினால் தான் கை, கால்களை யாரோ கட்டிப் போட்டதைப் போல் தோன்றுமே தவிர அமுக்குப் பேய் வந்துவிட்டதென்று அர்த்தமல்ல.

#தூக்கத்தைக்_கெடுக்கும்_அசுத்தம்.

பகல் முழுவதும் ஓடியாடித் திரிந்த களைப்பினால் பெரும்பாலானவர்கள் கட்டிலைப் பார்த்ததும் மல்லாக்க விழுந்து தூங்க முற்படுகின்றார்கள். ஆனால் இது அவர்களுக்குரிய ஆரோக்கியமான தூக்கத்தை பெற்றுத்தராது. தூக்கமின்மையினால் அவதியுறுபவர்களுக்கு தூங்கச் செல்வதற்கு முன்பாக குளித்து சுத்தமாகுமாறு நவீன மருத்துவம் அறிவுரை வழங்குகின்றது. (www.OneIndia)

மருத்துவ உலகம் இன்றைக்கு வழங்கும் அறிவுரைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் வழங்கிவிட்டது.

_பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:_

_என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்து கொள்._ (புகாரி – 247)

ஆகவே நாம் தூங்கச் செல்லும் முன்பு நம்மை சுத்தம் செய்து கொள்வது சிறந்த தூக்கத்தை பெற்றுத் தரும்.

#தூங்குவதற்கு_முன்_எண்ணுதல். – Counting Sleep.*

தூக்கமின்மையினால் அவதிப்படுபவர்களுக்கு Counting Sleep செய்யுமாறு அதாவது தூங்குவதற்கு முன் இலக்கங்களை எண்ணுமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றார்கள். இன்றைக்கு உலகில் பல பாகங்களிலும் நடை முறையில் உள்ள ஒரு மருத்துவ செயல்பாடாக இது மாறியிருக்கின்றது. உதாரணமாக இங்கிலாந்தை சேர்ந்த மக்கள் தூங்கச் செல்லும் போது சுமார் 37 நிமிடங்கள் வரை எண்ணுவதற்கு நேரத்தை செலவு செய்கின்றார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. (Amarkkalam.com)

இன்றைக்கு மருத்துவ உலகம் சொல்லும் செய்தியை இஸ்லாமியர்கள் 1400 வருடங்களாகவே நடை முறைப்படுத்தி வருகின்றார்கள்.

_நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள்  படுக்கைக்குச் செல்லும் போது, “அல்லாஹு அக்பர் – அல்லாஹ் பெரியவன்‘ என்று முப்பத்து நான்கு முறையும், “அல்ஹம்து லில்லாஹ் – புகழனைத்தும் அல்லாஹ்விற்கே‘ என்று முப்பத்து மூன்று முறையும், “சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்‘ என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள்_ (புகாரி – 3113) (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)

தூங்கச் செல்லும் முன்பு இலக்கங்களை எண்ணுவதினால் வெறும் தூக்கம் மாத்திரம் ஏற்படும். ஆனால் இஸ்லாம் சொல்வதைப் போல் சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று சொல்லும் போது எண்ணிய வகையில் தூக்கமும் ஏற்படும். அதே நேரம் இறைவனிடம் நன்மையும் கிடைக்கும். என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

#தூக்க_மாத்திரைகள்_தீர்வாகுமா?

தூக்கத்தை தேடும் பலர் தூக்க மாத்திரைகளுக்கு அடிமையாகின்றார்கள். அனைத்து தூக்க மாத்திரைகளும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையே! தூக்க மாத்திரையின் உபயோகம் வேறு விதமான பல நோய்களுக்கும் நம்மை ஆளாக்கிவிடக் கூடியதாகும். ஆனால் இஸ்லாம் சொல்வதைப் போல் நமது வாழ்வை நாம் மாற்றி அமைத்து, தூங்குவதற்கு முன்னர் நபியவர்கள் காட்டிய வழிமுறைகளை பின்பற்றும் போது நிம்மதியான, ஆரோக்கியமான தூக்கத்தை நாம் நம்வாழ்வில் பெற்றுக் கொள்ள முடியும்.


அல்லாஹ்வை_தவிர_வேறு_யார்_தான்

#அல்லாஹ்வை_தவிர_வேறு_யார்_தான் #திருந்துவதற்க்கு_அவகாசம்_கொடுக்க #முடியும் ?

وَلَيْسَ أَحَدٌ أَحَبَّ إِلَيْهِ الْعُذْرُ مِنَ اللَّهِ مِنْ أَجْلِ ذَلِكَ أَنْزَلَ الْكِتَابَ وَأَرْسَلَ الرُّسُلَ….

رواة مسلم

...அல்லாஹ்வைவிட அதிகமாகத் திருந்துவதற்கு வாய்ப்பு அளிப்பதை விரும்பக்கூடியவர் வேறெவருமிலர். அதனால்தான், அவன் வேதங்களை அருளினான்; தூதர்களை அனுப்பினான்.( முஸ்லிம் 5328)


கோபம் கோபம் கோபம் கோபம்❗

✍கோபம்   கோபம்   கோபம்   கோபம்❗

👉உணர்வுகள் மிதிக்கப்படும் போது, உரிமைகள் பறிக்கப்படும் போது நியாயங்கள் மீறப்படும் போது ஆத்திரமும் கோபமும் ஆர்ப்பரித்து எழுவது இயற்கை தான்.❗

👉இது போன்ற காரணத்திற்கு மட்டும் தான் கோபம் வருகிறதா? இல்லை. இதுவல்லாத பல காரணங்களுக்காக நாம் எல்லை மீறிக் கோபப்படுகிறோம்.❗

➡ஒரு சிறிய வார்த்தைக்காகக் கோபப்பட்டு அதன் காரணமாக பகை உணர்வை மலை போல் உயர்த்தி விடுகிறோம். இதனால் அன்போடும் பாசத்தோடும் இருந்தவர்கள் பாம்பும் கீறியும் போல் மாறி விடுகிறார்கள்.❗

➡நல்ல நட்பு சிதறி, அன்புள்ளங்கள் தீக்கங்குகளாக மாறிவிடுகின்றன. தேவையில்லாமல் கோபப்பட்டு பகை உணர்வை ஏற்படுத்துபவர்களுக்கு அழகிய ஒரு போதனையை நபிகளார் கூறியுள்ளார்கள்.❗

➡மக்களைத் தனது பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், #கோபத்தின் #போது_தன்னைக்_கட்டுப்படுத்திக் #கொள்பவனே_ஆவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.❗

🗣அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),✅

📚நூல்: புகாரி (6114)📗

➡கோபம் ஏற்படும் போது எவ்வளவு பெரிய மனிதர்களும் தன் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறார்கள். இதனால் விபரீதமான முடிவுக்குச் சென்று பின்னர் வருத்தப்படுவார்கள். ❗

👉இவர்கள் உண்மையிலேயே பெரிய மனிதர்கள் தான் என்றால் முதலில் கோபம் வரும் போது அதைத் தடுத்து நிறுத்தி சமநிலைக்குக் கொண்டு வர வேண்டும்.❗

➡அடிக்கடி கோபப்படும் மனிதருக்கு நாம் செய்ய வேண்டிய முதல் உபதேசம், கோபப்படாதே! என்பது தான். இவ்வாறு தான் நபிகளார் ஒரு மனிதருக்கு தொடர்ந்து அறிவுரை கேட்டபோது. கோப்பப்படாதே என்றே அறிவுரை வழங்கினார்கள்.❗

➡ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கடம், #எனக்கு_அறிவுரை_கூறுங்கள்_என்றார். நபி (ஸல்) அவர்கள், #கோபத்தைக்_கைவிடு_என்று (அறிவுரை) #கூறினார்கள்.❗

➡அவர் #பல_முறை_கேட்ட_போதும்_நபி (ஸல்) #அவர்கள்_கோபத்தைக்_கைவிடு #என்றே_சொன்னார்கள்.❗

🗣அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),✅

📚நூல்: புகாரி (6116)📗

➡நல்ல மனிதர்களைப் பற்றி திருக்குர்ஆன் கூறும் போது, அவர்கள் கோபத்தை மென்று விழுங்குவார்கள் என்று குறிப்பிடுகிறது.❗

📖➡அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல் வழியில்) செலவிடுவார்கள். #கோபத்தை_மென்று_விழுங்குவார்கள். #மக்களை_மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.❗

📖(அல்குர்ஆன் 3:134)📖

➡கோபத்தை உண்டாக்கும் வண்ணம் யாரும் நடந்து கொண்டால் அவர்களை மன்னித்து, கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.❗

➡உங்களுக்கு எந்தப் பொருள் கொடுக்கப்பட்டாலும் அது இவ்வுலக வாழ்க்கையின் வசதிகளே. அல்லாஹ்விடம் இருப்பதே நம்பிக்கை கொண்டு தம் இறைவனையே சார்ந்திருப்போருக்கும், பெரும் பாவங்களையும், வெட்கக்கேடான வற்றையும் தவிர்த்துக் கொள்வோருக்கும், கோபம் கொள்ளும் போது மன்னிப்போருக்கும், தமது இறைவனுக்கு பதிலளித்து தொழுகையை நிலை நாட்டி தமது காரியங்களில் தமக்கிடையே ஆலோசனை செய்வோருக்கும் நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவோருக்கும், தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் (இறைவனிடம்) உதவி தேடுவோருக்கும் சிறந்ததும் நிலையானதுமாகும்.❗

📖(அல்குர்ஆன் 42:36-39)📖

➡கோபத்தை மனிதர்களிடம் ஷைத்தான் ஏற்படுத்துகின்றான். இவ்வாறு தேவையில்லாமல் கோபத்தை ஏற்படுத்தினால் ஷைத்தானிடமிருந்து அந்நேரத்தில் பாதுகாப்பு தேடிக் கொள்ளுங்கள்.❗

➡நபி (ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தோம்.❗

➡அவர்கல் ஒருவரது முகம் சிவந்து விட்டிருக்கக் கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். ❗

➡அப்போது நபி (ஸல்) அவர்கள், எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும். ❗

#அவூது_பில்லாஹி_மினஷ்_ஷைத்தானிர் #ரஜீம் (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும் என்று கூறினார்கள்.❗

🗣அறிவிப்பவர்: சுலைமான் பின் ஸுரத் (ரலி),✅

📚நூல்: புகாரி (6115)📗