பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, February 17, 2020

மண்ணறை - 7

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 07 ]*

*தீயவர்களின் மண்ணறை*
                 *வாழ்க்கை[ 02 ]*

*☄பாவமன்னிப்பின் வாசல்*
             *அடைக்கப்படும்☄*

*🏮🍂 மலக்குகள் உயிரை கைப்பற்றுவதற்காக வருவதற்கு முன்பே தாம் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் பாவமன்னிப்பு தேடிக் கொள்ள வேண்டும். இறுதி நேரத்தில் கையேந்தினால் அந்த பிரார்த்தனைக்கு மதிப்பு இருக்காது. எனவே ஒவ்வொருவரும் மரண வேளையை அடைவதற்கு முன்பே பாவமன்னிப்புத் தேடிக்கொள்ள வேண்டும்.*

_*إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٍ فَأُولَٰئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ ۗ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا*_ _*وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّىٰ إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ ۚ أُولَٰئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا*_

_*🍃அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக்கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான்.  அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.*

_*தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் "நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்' எனக் கூறுவோருக்கும், (ஏகஇறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.*_

*📖திருக்குர்ஆன்  4:18📖*

_*هَلْ يَنظُرُونَ إِلَّا أَن تَأْتِيَهُمُ الْمَلَائِكَةُ أَوْ يَأْتِيَ رَبُّكَ أَوْ يَأْتِيَ بَعْضُ آيَاتِ رَبِّكَ ۗ يَوْمَ يَأْتِي بَعْضُ آيَاتِ رَبِّكَ لَا يَنفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِن قَبْلُ أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا ۗ قُلِ انتَظِرُوا إِنَّا مُنتَظِرُونَ*_

_*🍃(முஹம்மதே!) வானவர்கள் அவர்களிடம் வருவதை,அல்லது உமது இறைவன் வருவதை, அல்லது உமது இறைவனின் சில சான்றுகள் வருவதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா❓ உமது இறைவனின் சில சான்றுகள் வரும் நாளில், ஏற்கனவே நம்பிக்கை கொண்டவர்களையும், நம்பிக்கையோடு நல்லறங்களைச் செய்தவர்களையும் தவிர எவருக்கும் அவரது நம்பிக்கை பயன் தராது. "நீங்களும் எதிர்பாருங்கள்! நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்'' எனக் கூறுவீராக!*_

*📖திருக்குர்ஆன்  6:158📖*

*🏮🍂 ஃபிர்அவ்ன் என்ற கொடிய அரசன் மரணிக்கும் தருவாயில் ஈமான் கொண்டுவிட்டதாக கூறினான். மரணம் சம்பவிக்கும் போது இவ்வாறு அவன் கூறுவதால் அல்லாஹ் அவனுடைய நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகையால் அவன் மண்ணறையிலும், மறுமையிலும் தண்டிக்கப்படுகிறான்.*

_*وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا ۖ حَتَّىٰ إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنتُ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ*_ _*آلْآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنتَ مِنَ الْمُفْسِدِينَ*_

_*🍃இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது "இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறினான்.*_

_*இப்போதுதானா❓ (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய்.*_

*📖திருக்குர்ஆன்  10:91📖*

_குற்றம் புரிபவர்கள் மரணிப்பதற்க்கு முன்பே பாவமன்னிப்புத் தேட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்._

_*أَنَّ أَبَا مَالِكٍ  الأَشْعَرِيَّ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏"وَقَالَ ‏"‏ النَّائِحَةُ إِذَا لَمْ  تَتُبْ قَبْلَ مَوْتِهَا تُقَامُ يَوْمَ الْقِيَامَةِ وَعَلَيْهَا  سِرْبَالٌ مِنْ قَطِرَانٍ وَدِرْعٌ مِنْ جَرَبٍ ‏"‏*_

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒப்பாரிவைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தாரால் (கீல்) ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்.*_

*🎙அறிவிப்பவர்:அபூமாலிக் கஅப் பின் ஆஸிம் அல்அஷ்அரீ (ரலி)* 

*📚 நூல்: முஸ்லிம்-1700 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment