*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*💁🏻♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
⤵
*மண்ணறை வாழ்க்கை*
*✍🏼...தொடர்- [ 03 ]*
*☄ மறுமையை நினைவூட்டும்*
*மண்ணறை*
*🏮🍂 மண்ணறைகள் இறையச்சத்தையும், மறுமை வாழ்வையும் நினைவூட்டக்கூடியவை என்பதால் மண்ணறைகளுக்குச் சென்று பார்த்து வருமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.*
_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!*_
*🎙அறிவிப்பவர்-அபூஹுரைரா (ரலி)*
*📚 நூல்-முஸ்லிம்-(1777) 📚*
ﺣﺪﺛﻨﺎ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﻣﻨﻴﻊ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻫﺸﻴﻢ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ اﻟﺸﻴﺒﺎﻧﻲ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ اﻟﺸﻌﺒﻲ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﻲ ﻣﻦ ﺭﺃﻯ _*اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، «ﻭﺭﺃﻯ ﻗﺒﺮا ﻣﻨﺘﺒﺬا ﻓﺼﻒ ﺃﺻﺤﺎﺑﻪ ﺧﻠﻔﻪ، ﻓﺼﻠﻰ ﻋﻠﻴﻪ»*_
_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகிறது.*_
*🎙அறிவிப்பவர்-புரைதா (ரலி)*
*📚 நூல்-திர்மிதி (974)*
ﺣﺪﺛﻨﺎ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﺳﻠﻴﻤﺎﻥ، ﺣﺪﺛﻨﺎ اﺑﻦ ﻭﻫﺐ، ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﻲ ﻳﻮﻧﺲ، ﻋﻦ اﺑﻦ ﺷﻬﺎﺏ، ﺃﺧﺒﺮﻧﻲ ﻋﺮﻭﺓ ﺑﻦ اﻟﺰﺑﻴﺮ: ﺃﻧﻪ _*ﺳﻤﻊ ﺃﺳﻤﺎء ﺑﻨﺖ ﺃﺑﻲ ﺑﻜﺮ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ، ﺗﻘﻮﻝ: «ﻗﺎﻡ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺧﻄﻴﺒﺎ ﻓﺬﻛﺮ ﻓﺘﻨﺔ اﻟﻘﺒﺮ اﻟﺘﻲ ﻳﻔﺘﺘﻦ ﻓﻴﻬﺎ اﻟﻤﺮء، ﻓﻠﻤﺎ ﺫﻛﺮ ﺫﻟﻚ ﺿﺞ اﻟﻤﺴﻠﻤﻮﻥ ﺿﺠﺔ»*_
_*🍃ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் உரையாற்றும்போது, மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள்.*_
*🎙 அறிவிப்பவர்-அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)*
*📚 நூல்-புகாரி (1373) 📚*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄பிரதி பலன் கிடைக்குமிடம்☄*
🏮🍂 உலகில் நாம் செய்கின்ற நன்மைகளுக்கு முழுமையான பரிசும் தீமைகளுக்கு முழுமையான தண்டனையும் மறுமையில் தான் கிடைக்கவிருக்கிறது. *மண்ணறை, மறுமை வாழ்வின் முதல் நிலை என்பதால் நல்லவர்களுக்கான பரிசும், தீயவர்களுக்கான தண்டனையும் இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது.*
*இறந்தவர்கள் தாங்கள் செய்த செயல்களுக்கான கூலியை மண்ணறை வாழ்வில் பெற்றுக் கொண்டிருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
ﺣﺪﺛﻨﺎ ﺁﺩﻡ، ﺣﺪﺛﻨﺎ ﺷﻌﺒﺔ، ﻋﻦ اﻷﻋﻤﺶ، ﻋﻦ ﻣﺠﺎﻫﺪ، _*ﻋ ﻦ ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﺎ، ﻗﺎﻟﺖ: ﻗﺎﻝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻻ ﺗﺴﺒﻮا اﻷﻣﻮاﺕ، ﻓﺈﻧﻬﻢ ﻗﺪ ﺃﻓﻀﻮا ﺇﻟﻰ ﻣﺎ ﻗﺪﻣﻮا»*_
_*🍃இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:*_
_*இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்துவிட்டார்கள்.“*_
*🎙 அறிவிப்பவர்-ஆயிஷா(ரலி)*
*📚 நூல்-புகாரி- (1393)*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
✍🏼...தொடரும்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment