பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, February 12, 2020

ஜின்களும் - 62

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ஜின்களும் 🔥*
                        ⤵
           *🔥ஷைத்தான்களும்🔥*

            *✍🏻...... தொடர் ➖6️⃣2️⃣*

*☄️ஷைத்தான்*
              *உருமாறுவானா❓*

*🏮🍂ஷைத்தான் தான் விரும்பும் போது விரும்பிய வடிவில் உருவமாறும் ஆற்றல் கொண்டவன் என்று பரவலாக பலரால் நம்பப்படுகிறது. சில ஆதாரங்களை தவறாக புரிந்து கொண்டதின் விளைவாக இப்படியொரு தவறான கருத்து பரவியுள்ளது.*

*🏮🍂ஆனால் உண்மையில் இவ்வாரு நம்புவதற்கு ஏற்கத்தக்க எந்த ஆதாரமும் இல்லை. விரும்பிய வடிவில் உருமாறும் ஆற்றல் ஷைத்தானிற்கு வழங்கப்படவுமில்லை.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄️மனிதனாக*
            *உருமாறுவானா❓*

*🏮🍂ஷைத்தான் மனித வடிவில் உருவெடுப்பான் என்று கூறுபவர்கள் கீழ்கண்ட ஹதீஸை ஆதாரமாக காட்டுவார்கள்.*

_*🍃அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவன் இரவில் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானான். அவனை நான் பிடித்து, “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!” என்று கூறுகிறேன். அதற்கவன், “நான் ஒரு ஏழை! எனக்குக் குடும்பம் இருக்கிறது; கடும் தேவையும் இருக்கிறது!” என்று கூறினான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், “அபூஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! தான் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தனக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவன் முறையிட்டான்; ஆகவே, இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்!” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்!” என்றார்கள். “மீண்டும் வருவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக (அவனைப் பிடிப்பதற்காகக்) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கிய போது அவனைப் பிடித்தேன். “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்!” என்று கூறினேன். அதற்கவன், “என்னை விட்டுவிடு! நான் ஒரு ஏழை! எனக்கு குடும்பமிருக்கிறது; இனி நான் வரமாட்டேன்!” என்றான். அவன்மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன். விடிந்ததும், நபி (ஸல்) அவர்கள் “அபூஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள்.*_

_*நான், அல்லாஹ்வின் தூதரே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; ஆகவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்!” என்றேன். நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான்; திரும்பவும் உம்மிடம் வருவான்!” என்றார்கள். மூன்றாம் தடவை அவனுக்காகக் காத்திருந்தபோது, அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்( (ஒவ்வொரு முறையும்) “இனிமேல் வரமாட்டேன்!’ என்று சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன்.*_

_*அதற்கவன், “என்னை விட்டுவிடும்! அல்லாஹ் உமக்குப் பயளிக்கக்கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!” என்றான். அதற்கு நான், “அந்த வார்த்தைகள் என்ன?” என்று கேட்டேன். “நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்! என்றான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் “நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனை விட்டுவிட்டேன்!’என்றேன். அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற(வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்!” என்று என்னிடம் அவன் கூறினான்” எனத் தெரிவித்தேன். -நபித் தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல்படுத்துவ)தில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தனர்- அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் உம்மிடம் உண்மையைத்தான் அவன் சொல்லியிருக்கின்றான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். தெரியாது! என்றேன். அவன்தான் ஷைத்தான்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*📚நூல் : புகாரி (2311)📚*

*🏮🍂அபூஹுரைரா (ரலி) அவர்களிடத்தில் வந்த மனிதனை நபி (ஸல்) அவர்கள் ஷைத்தான் என்று கூறி இருக்கிறார்கள். எனவே ஷைத்தான் மனித வடிவில் உருவெடுப்பான் என்றக் கருத்தை இந்த ஹதீஸ் தருகிறது என்று சிலர் வாதிடுகிறார்கள்.*

*🏮🍂கெட்ட செயலை செய்பவர்களையும் கெட்ட குணமுள்ளவர்களையும் ஷைத்தான் என்று குறிப்பிடும் போங்கு குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இடம்பெற்றுள்ளது. இந்த அடிப்படையை ஆதாரங்களோடு விளங்கிக்கொண்டால் மேற்கண்ட ஹதீஸையும் இது போன்று அமைந்த இன்ன பிற ஹதீஸ்களையும் சரியான பொருளில் விளங்கிக்கொள்ள முடியும்.*

*🏮🍂கெட்ட குணம் மற்றும் கெட்ட செயல் உள்ளவர்களுக்கு ஷைத்தான் என்று கூறப்படும்*

_*🍃நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது “நம்பிக்கை கொண்டுள்ளோம்” எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது “நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே” எனக் கூறுகின்றனர்.*_

*📖 அல்குர்ஆன் (2 : 14) 📖*

*🏮🍂கெட்ட மனிதர்களை ஷைத்தான்கள் என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.*

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன் தான் ஷைத்தான்.*_

*🎙️அறிவிப்பவர் :*
              *அபூஹுரைரா (ரலி)*

      *📚 நூல் : புகாரி (3275) 📚*

_*🍃(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “அல்அர்ஜ்’ எனுமிடத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று” என்று கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர் :*
           *அபூசயீத் அல்குத்ரீ (ரலி)*

*📚நூல் : முஸ்லிம் (4548)📚*

*🏮🍂தொழுபவரின் குறுக்கே செல்பவரையும் கவிதை பாடித்திரிபவரையும் ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இங்கு சொல்லப்பட்டுள்ள ஷைத்தான் என்ற வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் விளங்கமாட்டோம்.*

*🏮🍂நேரடிப் பொருளில் விளங்கினால் தொழுபவரின் குறுக்கே செல்பவரையும் கவிதை பாடுபவரையும் ஷைத்தான் என்று கூற வேண்டிய நிலை வரும்.* இவர்களிடம் கெட்ட செயல் உள்ளது என்ற அடைப்படையில் தான் இவர்களை ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று எல்லோரும் புரிந்துகொள்கிறோம்.

*🏮🍂அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் சொல்லப்பட்ட ஷைத்தான் என்ற வார்த்தையும் இது போன்றே நேரடிப்பொருளில் பயன்படுத்தப்படாமல் கெட்டவன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.* திருடவந்தவனை பொய்யன் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருப்பது இதையே உணர்த்துகிறது.

*🏮🍂ஸகாத் பொருளை திருடுவதற்காக வந்தவன் அபூஹுரைரா (ரலி) அவர்களை ஏமாற்றி திருட்டு வேளையில் ஈடுபட்டதால் அவனை ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.* ஆனால் உண்மையில் அவன் மனிதனாகத் தான் இருந்தான்.

*🏮🍂மனிதர்களின் கண்களுக்குப்படாமல் வாழும் நிலையை ஷைத்தான்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.* வந்தது ஷைத்தானாக இருந்தால் அவனை அபூஹுரைரா (ரலி) அவர்களால் பார்த்திருக்க முடியாது.

*🏮🍂ஆனால் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அவனை பார்த்ததோடு மட்டுமல்லாமல் அவனை தன் கைகளால் பிடித்தும் கொள்கிறார்கள். வந்தவன் உண்மையான ஷைத்தானாக இருக்கவில்லை. கெட்ட மனிதனாகவே இருந்தான் என்பதை இதன் மூலம் அறியலாம்.*

*🏮🍂மேலும் மனிதர்கள் யாரும் பார்க்க முடியாத வகையில் ஷைத்தானால் வர இயலும். இது தான் ஷைத்தான்களின் எதார்த்த தன்மையும் கூட. அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்தவன் உண்மையான ஷைத்தானாக இருந்தால் அவன் அபூஹுரைரா (ரலி) அவர்களின் கண்களுக்குத் தெரியாமல் வந்து திருடிச் சென்றிருப்பான்.*

*🏮🍂திருடக்கூடியவன் யாரும் கண்டிராத வகையில் திருடிச் செல்லத் தான் விரும்புவான். ஆனால் அவனால் அவ்வாரு செய்ய இயலவில்லை. திருட வந்தவன் அபூஹுரைராவிடம் மாட்டிக் கொண்டு கெஞ்சுவதிலிருந்து அவன் சாதாரண மனிதன் தான் என்பதை சந்தேகமற அறியலாம்.*

*🏮🍂ஷைத்தான்களின் உணவு முறையும் மனிதர்களின் உணவு முறையும் முற்றிலும் வேறுபட்டதாகும். கால்நடைகளின் சாணங்களும் எலும்புகளும் கரிக்கட்டைகளும் தான் ஜின்களின் உணவு என்று ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.*

*🏮🍂அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்தவன் முன்பு கூறிய பொருட்களை திருடுவதற்காக வரவில்லை. மனிதர்களின் உணவாக இருக்கக்கூடிய பொருட்களையே திருடுவதற்காக வந்துள்ளான். வந்தவன் சாதாரண மனிதன் தான் என்பதை இக்கருத்து மேலும் வலுவூட்டுகிறது.*

*🏮🍂எனவே இந்த செய்தியை வைத்துக்கொண்டு ஷைத்தான் மனித வடிவத்தில் வருவான் என்று வாதிடுவது தவறாகும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment