பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, February 7, 2020

ஜின்களும் -57

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ஜின்களும் 🔥*
                        ⤵
           *🔥ஷைத்தான்களும்🔥*

            *✍🏻...... தொடர் ➖5⃣7️⃣*

*☄️ஷைத்தான்*
           *பைத்தியத்தை*
                     *ஏற்படுத்துவானா❓*

*الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ فَمَن جَاءَهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىٰ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ ۖ وَمَنْ عَادَ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ*

_*🍃வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக்கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.*_

*📖 அல்குர்ஆன் (2 : 275) 📖*

*🏮🍂பைத்தியமாக அவர்கள் எழுவதை ஷைத்தானால் தீண்டப்பட்டவன் என்று இவ்வசனம் (திருக்குர்ஆன் 2:275) கூறுகின்றது.*

*🏮🍂ஷைத்தான் தான் பைத்தியத்தை ஏற்படுத்துகிறான் என்று சிலர் இவ்வசனத்தைச் சான்றாகக் காட்டுகின்றனர்.*

*🏮🍂தீய காரியங்களைப் பற்றிக் கூறும் போது “ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறுவதைத் திருக்குர்ஆன் அனுமதிக்கிறது. இந்த அடிப்படையை முன்பே விரிவாக விளக்கிவிட்டோம்.* மேலும் இதற்கு சிறந்த உதாரணமாக பின்வரும் வசனத்தை எடுத்துக்கொள்ளலாம்.

_*🍃இது சிறந்த தங்குமிடமா❓ அல்லது ஸக்கூம் மரமா❓ அதை அநீதி இழைத்தோருக்குச் சோதனையாக நாம் ஆக்கினோம். அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்படும் மரம். அதனுடைய பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்றது.*_

*📖 அல்குர்ஆன் (37 : 62) 📖*

*🏮🍂நரகத்தில் உள்ள மரத்தின் பாளை ஷைத்தானின் தலைகளைப் போன்று இருக்கும் என்று இந்த வசனத்தில் கூறப்படுகிறது. இங்கு ஷைத்தானின் தலைகளைப் போல் என்று கூறப்பட்டிருப்பதை நேரடிப் பொருளில் விளங்கமாட்டோம்.* மோசமான தோற்றம் கொண்டதாக இருக்கும் என்பதை விவரிப்பதற்காக இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்றே புரிந்துகொள்வோம்.

*🏮🍂இது போன்று தான் ஷைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியமாக எழுப்பப்படுவான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். மோசமான நிலையில் எழுப்பப்படுவான் என்பது தான் இந்த வசனத்தின் பொருளே தவிர ஷைத்தானால் பைத்தியத்தை ஏற்படுத்த முடியும் என்றக் கருத்தில் புரிந்துகொள்ளக்கூடாது.*

*🏮🍂தீயகாரியங்களுக்கு அழைப்பு விடுவதைத் தவிர்த்து வேறெந்த அதிகாரமும் ஷைத்தானிற்கு வழங்கப்படவில்லை என்று குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது.* அவ்வாறிருக்க இதற்கு மாற்றமாக ஷைத்தானிற்கு பைத்தியத்தை ஏற்படுத்த முடியும் என்று விளங்குவது குர்ஆனிற்கு முரணாகும்.

*🏮🍂இஸ்லாமிய நம்பிக்கைப்படி பைத்தியங்கள் எந்தத் தீமை செய்தாலும் அவர்கள் பாவிகளாக மாட்டார்கள். ஷைத்தானின் வேலை அனைவரையும் பாவிகளாக்குவது தான்.*

*🏮🍂பைத்தியமாக்கப்படுவதால் ஷைத்தானுக்கு நட்டமே தவிர லாபம் இல்லை. எனவே ஷைத்தான் யாரையும் பைத்தியமாக்கும் அதிகாரத்தையும் பெறவில்லை. அது அவனது அலுவலும் இல்லை.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment