பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, February 6, 2020

மண்ணறை வாழ்க்கை - 2

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 02 ]*

*☄மண்ணறை*
           *வாழ்க்கை*
                 *உண்மையானது*

*🏮🍂 மண்ணறை வாழ்க்கை என்பது கிடையாது என்று சிலர் நினைக்கின்றனர்.மண்ணறை வாழ்க்கை உண்டு என்று இறைவனும், இறைத்தூதர் (ஸல்) அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.*

_*النَّارُ يُعْرَضُونَ عَلَيْهَا غُدُوًّا وَعَشِيًّا ۖ وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ أَدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ*-

_*☄ஃபிர்அவ்னின் ஆட்களை தீய வேதனை சூழ்ந்து கொண்டது. காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள். யுகமுடிவு நேரம் வரும் போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்)*_

*📖திருக்குர்ஆன் 40:46📖*

*🏮🍂 ஃபிர்அவ்னின் கூட்டத்தினர் தினமும் காலையிலும்,மாலையிலும் நரக நெருப்பில் காட்டப்படுகிறார்கள் என்பது மறுமையில் வழங்கப்படும் தண்டனைக்கு முன் வேறொரு தண்டனை உள்ளது என்பதை நிரூபிக்கிறது.* ஏனென்றால் இவ்வசனத்தில் (40:46) யுக முடிவு நாளில் இவர்களை கடும் தண்டனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறப்படுகிறது. *இது தான் கப்ரின் வேதனை என்று நபிமொழிகள் கூறுகின்றன.*

- ﺣﺪﺛﻨﺎ ﻋﺜﻤﺎﻥ ﺑﻦ ﺃﺑﻲ ﺷﻴﺒﺔ، ﺣﺪﺛﻨﺎ ﺟﺮﻳﺮ، ﻋﻦ ﻣﻨﺼﻮﺭ، ﻋﻦ ﺃﺑﻲ ﻭاﺋﻞ، ﻋﻦ ﻣﺴﺮﻭﻕ، _*ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ، ﻗﺎﻟﺖ: ﺩﺧﻠﺖ ﻋﻠﻲ ﻋﺠﻮﺯاﻥ ﻣﻦ ﻋﺠﺰ ﻳﻬﻮﺩ اﻟﻤﺪﻳﻨﺔ، ﻓﻘﺎﻟﺘﺎ ﻟﻲ: ﺇﻥ ﺃﻫﻞ اﻟﻘﺒﻮﺭ ﻳﻌﺬﺑﻮﻥ ﻓﻲ ﻗﺒﻮﺭﻫﻢ، ﻓﻜﺬﺑﺘﻬﻤﺎ، ﻭﻟﻢ ﺃﻧﻌﻢ ﺃﻥ -[79]- ﺃﺻﺪﻗﻬﻤﺎ، ﻓﺨﺮﺟﺘﺎ، ﻭﺩﺧﻞ ﻋﻠﻲ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻓﻘﻠﺖ ﻟﻪ: ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، ﺇﻥ ﻋﺠﻮﺯﻳﻦ، ﻭﺫﻛﺮﺕ ﻟﻪ، ﻓﻘﺎﻝ: «ﺻﺪﻗﺘﺎ، ﺇﻧﻬﻢ ﻳﻌﺬﺑﻮﻥ ﻋﺬاﺑﺎ ﺗﺴﻤﻌﻪ اﻟﺒﻬﺎﺋﻢ ﻛﻠﻬﺎ» ﻓﻤﺎ ﺭﺃﻳﺘﻪ ﺑﻌﺪ ﻓﻲ ﺻﻼﺓ ﺇﻻ ﺗﻌﻮﺫ ﻣﻦ ﻋﺬاﺏ اﻟﻘﺒﺮ*_

_*🍃மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக் கொண்டிருந்தபோது) “மண்ணறை வாசிகள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுகின்றனர்“ என்று கூறினர்.*_ _*அவர்கள் கூறியதை நம்புவது எனக்குச் சரியாகப் படவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்.*_ _*அப்போது நான், “இறைத்தூதர் அவர்களே! இரண்டு மூதாட்டிகள் (என்னிடம் வந்து இப்படி இப்படிச் சொன்னார்கள்) என்று அவர்களிடம் தெரிவித்தேன்.*_
_*அதற்கு நபி(ஸல்) அவர்கள், “இருவரும் உண்மையே சொன்னார்கள். (மண்ணறையிலிருக்கும் பாவிகள்) கடுமையாக வேதனை செய்யப்படுகிறார்கள். அந்த வேதனை(யால் அவதியுறும் அவர்களின் அலறல்)தனை எல்லா மிருகங்களும் செவியேற்கின்றன“ என்றார்கள். அதற்குப் பின் நபி(ஸல்) அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை.*_

*🎙அறிவிப்பவர்-ஆயிஷா (ரலி)*

*📕நூல்-புகாரி-(6366)📕*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment